திங்கள், 5 பிப்ரவரி, 2018

நலம் தரும் கரும்புச்சாறு

கரும்புச்சாறு - நன்மைகள்.
நவீன கரும்புச்சாறு-ராமகிருஷ்ணா  மருத்துவமனை,கோவை

மெஷினில் கரும்பு துண்டுகளைப் போட்டவுடன் பட்டனைத் தட்டினால் அருமையான சுவையான சாறு.  எலுமிச்சை, இஞ்சி, ஐஸ் வேண்டுமா என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்றால் கரும்புச்சாறு மட்டும் தருகிறார்கள். ஈ எறும்பு மொய்க்காத கரும்புச்சாறு. சக்கைகள் நம் கண்ணுக்கு தெரியாது.

இதில்தான் வெட்டிய கரும்புத் துண்டுகளை வைத்து இருக்கிறார்கள்.

Image may contain: 3 people
அழகர் கோவில் திருவிழாவில் -
கையால் செய்யும் கரும்புச்சாறு  மெஷின்

இன்று   அனுராதா பிரேம்குமார்   பதிவு கரும்புச்சாறு. அதைப் படித்தவுடன் நான் சமீபத்தில் அத்தை அனுமதிக்கப்பட்டு இருந்த ஆஸ்பத்திரியில் (ராமகிருஷ்ணா  மருத்துவமனை,கோவை) சுவைத்த கரும்புச்சாற்றின் சுவையும், செய்யும் மிஷினை போட்டோ எடுத்ததும்
 நினைவுக்கு வந்தது.  நானும் என் தளத்தில் வலையேற்றி விட்டேன்.
அனுவுக்கு நன்றி.

                                                                       வாழ்க வளமுடன்.

  -----------------------------------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. முதல் புகைப்படத்தில் உள்ள தகவல்கள் ஸூப்பர் தகவலுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  2. என்ன விலைன்னு எழுத விட்டுட்டீங்களே. நான் 86ல் தி.நகர் ரங்கனாதன் தெருவில் 1-2 ரூபாய்க்கு கரும்புச்சார் குடிப்பேன். பெங்களூரில் கனோலா என்ற கம்பெனியே கரும்புச்சார் நிலையங்களை organizedஆ நடத்தறாங்க. நான் 4 வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டப்போ 10 ரூ (நிறைய ஃப்ளேவர்). சென்னையில் 20 ரூபாய்க்கு நல்ல கடை பார்த்தேன்.

    எப்படியோ கருப்பஞ்சாற்றை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    காணொளி திறக்க மாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
    கரும்புச்சாறு வில்லை 24 ரூபாய்.ஐஸ்,
    எலுமிச்சை, இஞ்சி போட்டால் இன்னும் கூடுதல் காசு 30 என்று நினைக்கிறேன்.
    இப்போது இறைவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்வதால் இப்போது நல்ல விற்பனை
    உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும்,
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அக்கா!

    கரும்புச்சாறு எறும்பினை ஈர்ப்பதுபோல என்னையும் உங்கள் பதிவு உடனேயே இங்கிழுத்து வந்துவிட்டது..:)

    கரும்புச் சாறின் அருமை, பெருமைகளை இப்பொழுதான் அறிகிறேன்.
    சாறெடுக்கும் பழைய புதிய முறைகள் படங்களும் சிறப்பு!
    அங்கு நாம் வந்தபோது ஆசைப்பட்டாலும் பழைய முறையில் எடுக்கும் சாற்றினை வாங்கிக் குடிக்க விரும்பவில்லை. நவீன யந்திரமுறை சுத்தம், சுகாதாரமாக இருப்பது கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

    நல்ல பகிர்வு அக்கா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    கரும்புச்சாறு உங்களை இழுத்து வந்து விட்டதா?
    மகிழ்ச்சி.
    பழைய முறைமிகவும் கஷ்டபடுவார்கள் சாறு
    பிழிய. அதை சிலர் சுத்தமாய் வைத்து இருப்பார்கள். சுற்றுப்புற தூய்மை இல்லாத இடமாய் இருந்தால் ஈக்களின் வரவு அதிகமாய் இருக்கும்.

    சுகாதாரமாய் இருக்கிறது நவீனயந்திரம். செய்பவருக்கும் வேலை
    சுலபமாய் இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி.

    பதிலளிநீக்கு
  8. தஞ்சையிலும் இதைப் போன்ற நவீன இயந்திரங்கள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன..
    சுத்தம் சுகாதாரம் என்பதைத் தவிர இதே போன்ற நடுத்தர கப் தான்... விலை ரூ 20/-..

    ஆனால், பழைமையான கரும்புச் சாறு கடைகளில் 15ரூ.. பெரிய கிளாஸ்.. அளவு அதிகம்..

    இப்போதெல்லாம் ஈக்கள் மொய்க்காதபடிக்கு சக்கைகளை பெரிய தொட்டிகளில் போட்டு மூடி அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுகின்றார்கள்..

    சுவையான பதிவு கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
    நான் முதன் முதலில் இந்த ஆஸ்பத்திரியில் தான் பார்த்தேன்.
    சுத்தமாய் வைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் தான்.
    கைமிஷின் வைத்து இருப்பவர்கள் பெரிய கிளாஸில் தான் தருகிறார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அட ..இனிப்பான பதிவு...

    நல்ல தகவல்கள் அம்மா...நானும் இது போல் அதன் பயன்களை போட தான் நினைத்தேன்..ஆனால் ஒரு நாள் குடிப்பதால் ஏதும் பெரும் பயன் இல்லாததால் போட வில்லை...

    இங்கு எல்லா மால்களிலும் இது போல் விற்பனை செய்கிறார்கள்..ஆனால் விலை தான் அதிகம்...

    எனது கரும்பு சாறு பதிவு உங்கள் நினைவுகளை மீட்டத்தில் மிகவும் மகிழ்ச்சி அம்மா...

    பதிலளிநீக்கு
  11. பொதுவாக கையால் எடுக்கப்படும் கரும்புச் சாறு சுகாதார்மில்லாமல் இருகிறது சாறு பிடித்திருந்தாலும் குடிக்கத் தயக்கம்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    அனு, விற்பனை செய்பவர் இதை எல்லாம் போட்டு இருந்ததை போட்டோ எடுத்தேன் அதனால் போட்டேன். கிராம பகுதியில் தினம் வயகாட்டில் பிடுங்கி குழந்தைகள் எல்லாம் தினம் சாப்பிடுகிறார்கள் இந்த ஆலை கரும்பை.அவர்கள் எல்லாம் உடல் உறுதியுடன் இருக்கிறார்கள். அதனால்தான் கிராம மக்கள் அதிகம் வரும் அந்த ஆஸ்பத்திரியில் இதை வைத்து இருக்கிறார்கள். எல்லோரும் பழமைக்கு மாறி கொண்டு இருப்பதால் நல்ல விற்பனை.

    உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என் நினைவை பகிர சந்தர்ப்பம் அளித்தமைக்கு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் , சில இடங்களில் சுகாதாரமில்லாமல்தான் இருக்கும்.
    வாங்கி பருக தயக்கமாய் தான் இருக்கும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மருத்துவ மனையின் கரும்புச் சாறு மிஷினும் அந்த இடத்தின் தூய்மையும் பிடித்திருந்தது.

    மருத்துவ மனையில் இந்த மிஷினை நிருவியிருப்பதால், யார் யார் கரும்புச் சாறு சாப்பிடக் கூடாது என்ற குறிப்பும் இருந்திருந்தால், அப்படியான நோய் உள்ளவர்கள் கரும்புச் சாறை அருந்தாமல் இருக்க பாதுகாப்புடன் கூடிய உதவியாக இருந்திருக்கும்.

    கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் அறவே தவிர்க்க வேண்டியவர்களும், மீறினால் ஆபத்தாகி விடும் என்பதினால் இதைக் குறிப்பிட்டேன்.

    கடைசி படம் திருஷ்டிப் பரிகாரம். அந்தப் படத்தைப் போட்டதால், மேலே உள்ள சுத்தமான கரும்புச்சாறின் அருமை கூடுதலாகத் தெரிகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆசையா இருக்கு எனக்கும் கரும்புஜூஸ் குடிக்க :)

    இங்கே லண்டனில் cane press னு கடை இருக்காம் நெக்ஸ்ட்டைம் பார்க்கணும் :) ஆனா மேனகா வீட்லயே செய்முறை செஞ்சு சாப்பிட வசதியா ரெசிப்பி சொல்லிட்டதால் நானும் கடைகளில் கரும்பை தேடிக்கிட்டிருக்கேன் ..அந்த லண்டன் ஷாப் காரங்க ஜூஸை குச்சி ஐஸாவும் ஆக்கியிருக்காங்க :) படமும் பதிவும் நாவூறவைக்கிறது
    எங்கூரில் கரும்பு ஜூஸ் ஒரு ஸ்மூத்தி க்ளாஸ் விலை ..£ 5
    இந்திய மதிப்பில் 448 ரூபாய்


    பதிலளிநீக்கு
  16. பலமுறை அருந்தி மகிழ்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. சுத்தமான கரும்புச் சாறு. நல்லதொரு பகிர்வு. சாலையோரக் கடைகளில் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஈக்களைத் தவிர்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    //மருத்துவ மனையில் இந்த மிஷினை நிருவியிருப்பதால், யார் யார் கரும்புச் சாறு சாப்பிடக் கூடாது என்ற குறிப்பும் இருந்திருந்தால், அப்படியான நோய் உள்ளவர்கள் கரும்புச் சாறை அருந்தாமல் இருக்க பாதுகாப்புடன் கூடிய உதவியாக இருந்திருக்கும்.

    கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் அறவே தவிர்க்க வேண்டியவர்களும், மீறினால் ஆபத்தாகி விடும் என்பதினால் இதைக் குறிப்பிட்டேன்.//

    நீங்கள் சொல்வது போல் குறிப்பிட்டு இருக்கலாம்.

    நோயாளிகளுக்கு டாக்டர் சொல்லி இருப்பார். உள் இருப்பு நோயாளிக்கு ரூமுக்கு உணவு வருகிறது.

    பார்வையாளர்கள் தான் இங்கு வந்து உணவு, ஜீஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் குறிப்பிடவில்லை போலும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    டின்னில் அடைத்த கரும்பு கிடைக்குமே!
    மகன் ஆலை கரும்பை வீட்டில் பயிர்செய்தான்.
    அங்கு உள்ள நர்ஸ்ரியில் கிடைக்குமே .

    அந்த லண்டன் ஷாப் காரங்க ஜூஸை குச்சி ஐஸாவும் ஆக்கியிருக்காங்க :)//
    ஓ ! புதிய செய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது கேட்க.
    உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    தஞ்சையில் கிடைக்காமல் இருக்குமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //சாலையோரக் கடைகளில் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஈக்களைத் தவிர்க்க முடிவதில்லை.//

    உண்மை நீங்கள் சொல்வது.

    அவர்கள் என்ன முயன்றாலும் ஈக்களை கட்டுபடுத்த முடியாது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நான்கு வருடங்களுக்கு முன்னர் மதுரை சென்றிருந்தபோது அங்கே இதைப் பார்த்து வாங்கிக் குடித்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தேன், பிளாக்கில் பகிரவேண்டும் என்று. அப்படியே விட்டுப் போய்விட்டது. இடம்- சொக்கிக்குளம் லேடி டோக் காலேஜ், இரட்டைப்பிள்ளையார் சிலைக்கு முன்னால்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஓ! நீங்களும் பிளாக்கில் பகிர வேண்டும் என்று நினைத்தீர்களா?
    மீண்டும் படங்கள் கிடைத்தால் போடுங்கள்.
    ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  24. இங்கே தில்லியிலும் கிடைக்கிறது என்றாலும் சுத்தம் போதாது.... அதனால் குடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் சுத்தம் இல்லையென்றால்
    குடிக்க தோன்றாது தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அட! கரும்பு ஜூஸ் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறதா!!!! இனிப்பான செய்தி!!!

    ரொம்பப் பிடிக்கும்...முதல் படங்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்படுவதைக் காட்டுகிறது ராமகிருஷ்ணா மருத்துவமனை....

    வெளியில் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. வாங்கிச் சாப்பிட...நாங்கள் இருவருமே ரொம்ப இனிமையானவர்கள் ஹா ஹா ஹா சர்க்கரை வியாதி...குடிக்கலாம் என்றால் ஆஹா...

    படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு