அத்தையும், மாமாவும் சிறுவயதில்
வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை. மகனது ஊருக்குப் போய் இருந்தேன். டிசம்பர் 6ம் தேதி அத்தை அவர்களை (மாமியார்) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாய் நாங்கள் அமெரிக்காவில் இருக்கும்போது தகவல் வந்தது . மருத்துவர்கள் காலக்கெடு கொடுத்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து விட வேண்டும் என்று தெய்வங்களை வேண்டி வந்தோம்.
டிக்கட்டை மாற்றி உடனடியாக மகன் ஏற்பாடு செய்து கொடுத்தான் .8ம் தேதி புறப்பட்டு டிசம்பர் 10 தேதி கோவை வந்து விட்டோம்.
ஸ்பெஷல் வார்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள் , ICU விலிருந்து சொந்த பொறுப்பில் . அப்போதான் பேரன் , பேத்திகள், மற்றும் உறவினர்கள் எல்லோரும் பார்க்க முடியும் என்று.
நாங்கள் வந்தவுடன் அத்தை அவர்கள் உங்களைப் பார்க்காமலே போய் விடுவேனோ! என்று எங்களை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆக்ஸிசன் மாஸ்க், உணவுக்கு மூக்கில் டியூப் இத்தனை வேதனையிலும் எங்களைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். இன்று ஞாயிறே ! நீங்கள் உணவு மதியம் தானே சாப்பிடுவீர்கள் குளித்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
சகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் எங்கள் ப்ளாக்கிற்கு கேட்டு வாங்கி போடும் கதை பகுதியில் எழுதிய கதை பாக்கியம் அந்த கதையில் வரும் ஆச்சி போல் பேத்தியின் அன்பான தொடுதல், அன்பான பேச்சால் பிழைத்து கொண்டது போல் என் அத்தையும் பேத்திகள், பேரன்கள். பேரன் மனைவியின் அன்புக் கவனிப்பில் சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..
ஆச்சி ஆச்சி என்று பேரக் குழந்தைகளும், பூட்டி ஆச்சி என்று அழைத்துப் பேத்தி பேரன்களின் குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் ஆச்சியை நோயின் துன்பம் தெரியாமல் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டார்கள். பேரன் பழங்கதைகளைப் பேசச் சொல்லி வீடியோ எடுத்தான்.
சகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கதைக்கு என் பின்னூட்டமும், அவர்களிம் மறுமொழியும் கீழே:-
கோமதி அரசு said..
//அதான் ஆச்சி மறு ஜென்மம் எடுத்துட்டாள்...ல!.. அழுவாதே!..
வாஞ்சையுடன் சுகந்தியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்கள்...//
என்ன ஒரு பாசமும் நேசமும்!
பேத்தியின் அணைப்பில், வருடலில் அன்பின் உயிர்நிலை திரும்பி வந்து விட்டது.
ஆரம்பித்திலிருந்து படிக்க விறு விறுப்பு.
முடிந்தவுடன் கண்ணில் கண்ணீர் துளி.
வாழ்த்துக்கள்.
எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துக்கள்.//
அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்...
அதனால் விளையும் மகிழ்ச்சியே அனைவரையும் வாழ்விக்கும்..//
முதலில் வந்த வரிகளின் பலத்தை நிறைவில் பார்த்து விட்டேன்.
அருமை.//
>>> அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்... <<<
எத்தனை பேருக்கு இப்படியான பேறு கிடைக்கின்றது?..
எல்லாருக்கும் இப்படியான பேத்திகள் கிடைக்க பிரார்த்திப்போம்..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..//
சகோதரர் சொன்னது போல் என் அத்தை அவர்களுக்கு இந்த பேறு கிடைத்தது பேரனின் மனைவிவரை நன்கு கவனித்துக் கொண்டார்கள். எல்லோரும் அன்பாய்ப் பேசினார்கள்.
அத்தையின் தங்கை, தம்பி, அண்ணன் என்று அவர்களின் மகன் , மகள், அவர்களின், பேத்தி, பேரன்கள் என்று வெளியூர்களிலிருந்து வந்து ஆச்சியிடம் அன்பாய் பேசி மகிழ்வித்தனர்.
அருமை தங்க்கையுடன்.
இவர்களும் தன் தள்ளாத வயதில் மகள் , மகளின் பேத்தியுடன் வந்து போனார்கள்பார்க்க திருநெல்வேலியிலிருந்து.
அவர்கள் எட்டாவது படித்த சர்டிபிகட் இன்னும் பத்திரமாய் இருக்கிறது. அவர்கள் படித்த பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அழைத்த அழைப்பும் இருக்கிறது இன்னும்.
அத்தையின் சான்றிதழ்.
ஆஸ்பத்திரி மருத்துவர்களும் அன்பாய் அழைத்துக் கொண்டே வந்து கவனித்துச் செல்வார்கள்.
நர்ஸ்கள் எல்லாம் சின்னம் சிறிய பெண்கள். அவர்கள் எல்லோரும் ஆச்சி ஆச்சி என்று அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அத்தையோடு உரையாடுவார்கள், கேலி கிண்டல் தான். மாலை வசந்த் தொலைக்காட்சியில் 'சஷ்டிகவசம்' ஆலய தரிசனம் எல்லாம் பார்ப்பார்கள்.
அடுத்து என்ன பார்ப்பீர்கள் என்று நர்ஸ் பெண்கள் கேட்பார்கள்.
ஆஸீர்வாதம் செய்யுங்கள் பாட்டி என்று ஆசீர்வாதம் வாங்கிச் செல்வார்கள்.
ஆஸ்பத்திரியில் வெளியிலிருந்து சாப்பாடு கொண்டு போகக் கூடாது அதனால் அங்குள்ள காண்டீனில் எல்லோரும் உணவு சாப்பிடுவோம். சுவையாகப் பலவித உணவுகள் உண்டு. உடம்புக்குக் கெடுதல் செய்யாத உணவுகள்.
இன்று என்ன சாப்பிட்டீர்கள் என்று வந்தவுடன் கேட்டு இப்போது எவ்வளவு வசதி வந்து விட்டது? அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருப்பவருக்கு ஏற்ற உணவு அவரைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு உணவு என்று கஷ்டப்பட்டு சுமந்துவர வேண்டும் , காப்பி, வெந்நீர், பாலுக்கு ப்ளாஸ்க் எல்லாம் அடங்கிய கூடையைத் தூக்கி வர வேண்டும். காலம் மாறி விட்டது என்றும், தொலைக்காட்சியை பார்த்து அரசியல் நிலவரம் எல்லாம் பார்க்க வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி வியந்து போனார்கள்.
மிக நெருங்கிய உறவினர்களிடம் கடைசி வரை என் வேலைகளை நானே பார்த்துக் கொண்டு இறந்து போவேன் என்று நினைத்தேன் , இப்படி வந்து படுப்பேன் எல்லோரையும் தொந்தரவு செய்வேன் என்று நினைக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.
95 வயதிலும் தன்னம்பிக்கை அதிகம் . நவம்பர் 14 தேதி பிறந்தவர். மகன் வீட்டிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது நீ வந்த பின் உன் வீட்டுக்கு வருகிறேன் பேரன் வீட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இறைவன் அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் அழைத்துச் சென்று விட்டான் ஜனவரி 9ம் தேதி.
இறக்கும் வரை தன் குடும்பத்தார் மற்றும் உறவுகள், நட்புகள் நலமாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
நாடு ஏன் இப்படி ஆகி விட்டது? எப்போது சரி ஆகும் என்பதும் கவலை , சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனையும் தான்.
வீட்டுக்கு வந்த திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களுக்குத் தன் கணவர் மாலை போடுவதை மகிழ்ந்து பார்க்கும் அத்தை அவர்கள்.
அத்தை அவர்களின் கோலங்கள்
எங்கள் குடும்பம்
மணி விழாவின் போது எடுத்த படம்
நூற்றாண்டின் போது எடுத்த படம்.
இறைவனிடம் போன பின்
அவர்களின் அன்பான ஆசிகள் குடும்பத்தினரை வாழ வைக்கும்.
வாழ்க வளமுடன்.
நல்லவர்களுக்கு எப்போதுமே நன்மைதான் விளையும். நிறைவாழ்வு வாழ்ந்த அவர்கள், நிறைவாகத்தான் சென்றிருப்பார்கள். உங்களுக்கும் அவரைப் பார்த்த சந்தோஷம் இருக்கும். நெகிழ்ச்சியான பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் அத்தை அவர்களின்
கடைசிகாலத்தில் பக்கத்திலிருந்து கவனித்து கொண்டது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
எல்லோரும் அருகில் இருந்தது அவர்களுக்கு மனநிறைவுதான்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
உங்கள் அத்தையின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்.
பதிலளிநீக்குபடிக்கும்போது மனம் நெகிழ்ச்சியாக இருந்தது.
வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
மிக அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். அதான் அவங்களோட கடைசிக்காலத்தில் ஓடி வந்துட்டீங்க! நிச்சயமா அவங்களுக்கு மறுபிறவியே இல்லாமல் மோக்ஷம் கிட்டி இருக்கும். எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவிரைவில் டிக்கட் ஏற்பாடு செய்து தந்த கம்பெனிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஆஸ்பத்திரியில் இருக்கும் படம், மருத்துவ சான்றிதழ் அனுப்புங்கள் சீக்கீரம் டிக்கட் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். கொழுந்தனார் அனுப்பி வைத்தார்கள். டிக்கட் வாங்கி கொடுத்து அந்த முகம் தெரியாத அன்பர் வாழ்த்தியும் அனுப்பினார். நீங்க்ள் போய் பார்ப்பீர்கள் ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் சொன்னார். நல்ல மனிதர்வாழ்க !
உங்கள் அன்பான ஆறுதலான கருத்துக்கு நன்றி.
பதிவின் .....
பதிலளிநீக்குதனித்தன்மை வாய்ந்த தலைப்பும்,
அபூர்வமான படங்களின் தொகுப்பும்,
உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்திகளும்,
அதைத் தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள விதமும்,
தங்களுக்குக் கிடைத்துள்ள அந்தக் கொடுப்பினையும்
என் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளன.
இவர்களின் இத்தகைய நிறைவான வாழ்க்கை
நமக்கெல்லாம் ஓர் உன்னதமான பாடமாகும்.
ஏறக்குறைய நூறாண்டுகள் வாழ்ந்த பழுத்த பழத்தின்
அருள், நம் எல்லோரையும் இனி ரக்ஷிக்கட்டும்.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//இவர்களின் இத்தகைய நிறைவான வாழ்க்கை
நமக்கெல்லாம் ஓர் உன்னதமான பாடமாகும்.//
ஆமாம், சார் நீங்கள் சொல்வது உண்மைதான். அவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
அன்பு, பாசம், பக்தி, சிக்கனம் என்று எவ்வளவோ!
//ஏறக்குறைய நூறாண்டுகள் வாழ்ந்த பழுத்த பழத்தின்
அருள், நம் எல்லோரையும் இனி ரக்ஷிக்கட்டும்//
எல்லோரையும் காப்பார்.
உங்கள் அன்பான கனிவான கருத்துக்கு நன்றி.
நிறைவான வாழ்வு வாழ்ந்தவரைப் பற்றிப் பேசி இறையருளை வேண்டுவோம். நல்வாழ்வினை நிறைவு செய்த அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து எங்களையும் உங்களில் ஒருவராக ஆக்கிவிட்டீர்கள். கடைசி காலத்தில் அருகாமையில் இருக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
பதிலளிநீக்குநெகிழ்வான பதிவு. உங்களை போன்ற உறவுகளை பெற்றிருக்கும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை உறவாக, மூத்த தலைமுறையாகப் பெற்ற நீங்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்தம் திறமைகள் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. உங்கள் இழப்பின் வலியும் புரிகிறது.
பதிலளிநீக்குஅவரை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநல்வாழ்வினை நிறைவு செய்தார் என்பது உண்மையே!
அயல் நாடு சென்றும் திரும்பி வந்து பார்க்க கிடைத்தது இறைவன் அருள்தான்.
உங்கள் அன்பான ஆறுதலான கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஸ்ரீராம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//உங்களை போன்ற உறவுகளை பெற்றிருக்கும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை உறவாக, மூத்த தலைமுறையாகப் பெற்ற நீங்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.அவர்தம் திறமைகள் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. உங்கள் இழப்பின் வலியும் புரிகிறது.//
நீங்கள் நன்றாக சொன்னீர்கள் ஸ்ரீராம்.
மிகவும் திற்மை வாய்ந்தவர், எல்லா விஷ்யங்களும் பேசுவார், கைவேலை, சமையல்வேலை எல்லாம் நேர்த்தியாக செய்வார்.
உடம்பு முடியவில்லை என்றாலும் நாம் போனால் இது அது இவர்களுக்கு பிடிக்கும் என்று செய்து தருவார்கள்.
நடைபயிற்சி சினேகம், கோவில் சினேகம் என்று நல்ல நட்புகளை பெற்றவர்.
பக்கத்து வீட்டு அக்காவுடன் 30 வருடங்களுக்கு மேல் நல்லா நட்பு அவர்கள் மூத்த பெண் போல்.அவர்கள் மகள் செய்யும் சடங்குகளில் அத்தையின் அக்கா, தங்கை பெண்களுடன் தானும் சேர்ந்து செய்தார்கள்.
அவர்களும் மாமா போல் 100வயதை கடந்து இருப்பார்கள் என்று நினைத்தோம்.
உங்கள் அன்பான கனிவான கருத்துக்களுக்கு நன்றி.
நிறைவான வாழ்க்கை,மகிழ்ச்சி...
பதிலளிநீக்குமுதலில் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநாடு கொட்டு போச்சு உறவுகள் கெட்டு போய்விட்டன என்று எல்லா இடங்களிலும் பார்க்கிறோம் ஆனால் உங்களின் இந்த பதிவை படித்தவுடன் உறவுகள் இன்னும் அன்பாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று அறியமுடிகிறது. மனதை நெகிழவைக்கிறது உங்கள் உறவைப்பற்றிய இந்த பதிவு.. இப்படிப்பட்ட உறவுகள் மேலும் தொடர வாழ்த்துகிறேன்
//அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.///
மனம் திறந்து பேசுதல் மிக அவசியம் அது சிறியவர்களிடமாகவும் இருக்கட்டும் இளம் வயதினர்களாக இருக்கட்டும் அல்லது முதியவர்களாக இருக்கட்டும் மனம் திற்ந்து பேசுதல் மிக அவசியம்
நெகிழ்ச்சியாக இருந்தது அக்கா பதிவு முழுவதும் வாசித்து முடித்ததும் ..அக்கா ஆச்சி அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் உங்களைப்போன்ற அன்பான உறவுகளின் துணை அருகாமை அவருக்கு கிடைத்தது .அவரது புகைப்படங்கள் கோலப்புத்தகம் எல்லாம் பொக்கிஷமாக வைத்திருக்கிறீர்கள் .இறைபக்தி நிறைந்தவர் ஆச்சி என்பது அவரது சந்தோசம் நிறைந்த முகத்தில் அப்படியே பிரதிபலிக்கிறது .
பதிலளிநீக்குஅனைவரையும் மேலிருந்து வாழ்த்துவார் அக்கா அவரது பூரண ஆசீர்வாதம் உங்களுக்கெல்லாம் எப்பவும் இருக்கும் .நிறைவான வாழ்க்கை வாழ்ந்து சென்ற உங்கள் அத்தை அவர்களுக்கு அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்
நிறைவாக வாழ்ந்து, நிறைவாக இறைவனடி போய் விட்டார்கள்... அவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்.
பதிலளிநீக்குநீங்கள் நலமாக இருக்கிறீங்கதானே கோமதி அக்கா?...
வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆமாம், நிறைவான வாழ்க்கைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவீட்டுக்கு அருகில் இருக்கும் அருள்விநாயகர் கோவிலுக்கு
தினம் போவார்கள். பக்கத்து வீட்டு அக்கா பொறுமையாக அழைத்து
செல்வார்கள். அந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிறைய பணம் கொடுத்து
இருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்தநாளுக்கு அங்கு தான் அர்ச்சனை. குடும்பத்தினர் அனைவருக்கும் அவரைத்தான் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்வார்.
கும்பாபிஷேகம் பார்க்காமல் போய் விட்டார்களே !என்பது தான் கோவில் நிர்வாகத்தினர் வருத்தம்.
எனக்கு தனியாக என் கோல நோட்டில் வரைந்து தந்து இருப்பது என்னிடம் இருக்கிறது. இந்த கோலம் அத்தைகோல நோட்டு.
//அனைவரையும் மேலிருந்து வாழ்த்துவார் அக்கா அவரது பூரண ஆசீர்வாதம் உங்களுக்கெல்லாம் எப்பவும் இருக்கும் //.
அதுதான் வேண்டும் ஏஞ்சலின்.
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றிம்மா.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் நலமாக இருக்கிறேன்.
கொஞ்சம் மன்ச்சோர்வும், உடல் சோர்வும் இருக்கிறது,
அதுதான் உங்கள் எல்லோரையும் பார்க்க வந்து விட்டேனே!
சரியாகிவிடும்.
உங்கள் அன்பான விசாரிப்புக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி அதிரா.
நிறை வாழ்வு வாழ்ந்தவர் போற்றுதலுக்கும்
பதிலளிநீக்குவணங்குதலுக்கும் உரியவர்
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//நிறை வாழ்வு வாழ்ந்தவர் போற்றுதலுக்கும்
வணங்குதலுக்கும் உரியவர்
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்///
உண்மை, போற்றுவோம், வணங்க்குவோம் சகோ.
உங்கள் அன்பான கருத்துக்கு
நன்றி..
அன்புடையீர்..
பதிலளிநீக்குஅந்தச் செய்தியினை அறிந்ததுமே மனம் கலங்கிப் போயிற்று..
சிவப்பழமாகிய தங்கள் மாமானார் அவர்களுடன் திருத்தொண்டு புரிந்த பெருமாட்டி ஆயிற்றே..
இந்த ஆத்மா செல்வது திருக்கயிலாயத்திற்குத் தான் என்றாலும் பாழும் மனதின் பதைப்பு அடங்குவதில்லை..
நானும் பரிதவித்துப் போனேன் - எனது உறவினைப் பிரிந்ததைப் போல...
தங்களுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்வது எனத் தவித்திருந்தாலும்
ஜனவரி முதல் வாரத்தில் இடப்பக்கம் சற்றே செயல் குன்றியது..
தெய்வங்களின் நல்லருளும் முன்னோர்களின் தவப்பயனும்
வலையுலக நண்பர்களின் பிரார்த்தனைகளும் என்னை மீட்டெடுத்தன..
தங்களது பதிவில் எனது சிறுகதையின் வரிகளையும் கருத்துரைகளையும் மேற்கோள் காட்டியிருப்பதைக் கண்டதும் மனம் கலங்கி அழுது விட்டேன்..
கண்ணீர் மறைக்கின்றது - பதிவிடும் வேளையில்..
சைவப்பெருமாட்டியாகிய தங்களது அத்தையார்
மீண்டும் தங்கள் குடும்பத்தில் வந்து தோன்றுவார்..
அவர்கள் இயற்ற வேண்டிய நற்காரியங்கள் இன்னும் உள்ளன...
எங்கள் பிளாக்கில் கூட ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள் கூறியிருந்தார்கள்..
தாங்களும் திருக்கயிலாய தரிசனம் செய்தவர்கள் - என்பதை..
ஈசன் எம்பெருமானின் திருவடிகளில் அர்ச்சனைப் பூவாக தங்களது அத்தையார்..
அப்படியிருக்க மனம் கலங்க வேண்டாம்..
தாங்களும் ஐயா அவர்களும் அறியாத விஷயங்களா..
இருப்பினும் மானுட வாழ்வில் உறவைப் பிரிந்த சோகம் என்பதை அனுபவித்துத் தான் தீர வேண்டும்...
ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியே கண் கலங்கவில்லையா..
தங்கள் அனைவருடன் நானும் பிரார்த்திக்கின்றேன்..
நலமே விளைக...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதங்கள் உடல் நலம் இறைவன் அருளால் சரியாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.
தனியாக அங்கு இருக்கும் போது எப்படி சமாளித்தீர்கள்?
ஊருக்கு வந்து விட்டீர்களா?
மருத்துவர் சொன்ன காலக்கெடுவை தாண்டி அவர்கள் கொஞ்ச நாட்கள் வாழ்ந்த போது உங்கள் கதை தான் நினைவுக்கு வந்தது.
பேரன், பேத்திகள் பூட்டன், பூட்டிகள் வரவால் நாட்கள் நீடித்தன. அவர்கள் தொடர்ந்து இருக்க முடியாத பணி சூழல் அதனால் போய் போய் வந்தார்கள்.
மாமா , அத்தை அவர்களின் ஆசியால் திருக்கைலாய தரிசனம் கிடைத்தது.
தினம் அத்தை அவர்கள்ப்பற்றி பேசி வருத்தபடதான் செய்கிறார்கள்.
காலம் மனசஞ்சலத்தை மாற்றும் நீங்கள் சொன்னது போல்.
உங்கள் ஆறுதலான, அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி.
சார் எல்லோர் கருத்துக்கும் தன் நன்றியை சொல்ல சொன்னார்கள்.
மிக நிறைவான வாழ்க்கை...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்த ஒரு உயரிய உள்ளம்....
படிக்கும் போது மனம் நெகிழ்கிறது...அம்மா...
என்றும் அவரின் நினைவுகளும் ஆசிகளும் நம்முடன் இருக்கும்..
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அனு.
உங்கள் நினைவில் நிலைத்து இருக்கும் உங்கள் அத்தையின்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதி, இத்தனை பல்கலை வித்தகராக, இறைவன்
பதிலளிநீக்குபக்தியுடன் ஒன்றி விட்டவர் நம் மோக்ஷம் பெறு வார் .
நிறைவாழ்வு வாழ்ந்த திருமகள், அருமையான் மகனை
ஈன்ற தாய், பொறுமையே உருவான் மருமகள்
இதெல்லாம் பெரிய கொடுப்பினை இல்லையா அம்மா
வாழ்க வளமுடன்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கனிவான பேச்சு ஆறுதல் அளிக்கிறது.
அத்தைக்கு கொடுப்பினை தான். இறுதி காலத்தில்
பிள்ளைகள் பக்கத்தில் இருப்பதே கொடுப்பினை தான்.
உங்கள் அன்பான கருத்துக்கு ந்ன்றி.
என்னுடைய அனுதாபங்கள். நிறைகுடமாக வாழ்ந்தவர். அவரைப்பற்றி ஒவ்வொரு வரி வாசிப்பிலும், ஏராளமான விஷயங்களை அறிய முடிந்தது. பிறருக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருக்கும்வரை தானாகஸுயகாரியங்களைச் செய்து கொள்ள வேண்டும். இது வயதானவர்களின் பிரார்த்தனை. சுற்றம் சூழ ,எல்லோரையும் ஆசீர்வதித்து ,அளவளாவி, நற்கதியை அடைந்துள்ளார். அவர்பெற்றபேறு. ஆசிகள் நிலைத்திருக்கும். இப்படிப்பட்ட அத்தையை இழந்தது கஷ்டம்தான். யாவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய அவருக்கு என் அஞ்சலிகள். சில சின்னவிஷயங்கள் எனக்கும் ஒத்துப் போவது போன்ற ஒரு பிரமை. அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அக்கா , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களை போல் ருசியாக சமைப்பார். எங்கு வந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.
உங்கள் அருமையான அழகான ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு இதம் தருகிறது.
நன்றி அன்புடன்.
வணக்கம் அக்கா!
பதிலளிநீக்குநெகிழ்வான பதிவு!
நெஞ்சில் நிறைந்த அவர்தம் நினைவுகளைப் பகிர்ந்தபோதே அவர் எத்தகைய ஒரு நல்ல உள்ளம்மிக்கவர் என்று புலனாகிறது. இத்தகையோரின் இழப்பை ஜீரணிப்பது இலகுவானதல்ல...
ஆயினும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதனை மனதில் நிறுத்தி நீங்களும் ஆறுதல் அடையுங்கள் அக்கா!
அவரின் ஆத்ம சாந்திக்காய் நானும் வேண்டுகிறேன்!
வணக்கம் அக்கா!
பதிலளிநீக்குநெகிழ்வான பதிவு!
நெஞ்சில் நிறைந்த அவர்தம் நினைவுகளைப் பகிர்ந்தபோதே அவர் எத்தகைய ஒரு நல்ல உள்ளம்மிக்கவர் என்று புலனாகிறது. இத்தகையோரின் இழப்பை ஜீரணிப்பது இலகுவானதல்ல...
ஆயினும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதனை மனதில் நிறுத்தி நீங்களும் ஆறுதல் அடையுங்கள் அக்கா!
அவரின் ஆத்ம சாந்திக்காய் நானும் வேண்டுகிறேன்!
வணக்கம் இளமதி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅவர் ஒரு மாத காலம் கஷடபட்டார். அதைப் பார்த்துதான் எல்லோரும் மனது வேதனை பட்டோம்.
உங்கள் அன்பு மொழிகளுக்கு நன்றி இளமதி.
மனம் நெகிழ்ந்து விட்டது சகோதரி/கோமதிக்கா....
பதிலளிநீக்குபதிவு முழுவதும் அன்பு அன்பு அன்பு!! அது ஒன்றுதான் தெரிந்தது! ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் அன்பும், நல்ல மனங்களின் பிரதிபலிப்பும்தான் எதிரொலிக்கிறது.
பளிச்சிடுகிறது. தங்களின் அத்தை மற்றும் மாமாவின் முகத்தில் ஒரு களை! அன்பும், ஆன்மீகமும் கலந்த களை தெரிகிறது.
95 வயது! பேரக் குழந்தைகளின் குழந்தைகள் முதல் அத்தையின் தங்கை குழந்தைகள் என்று அனைவரும் வந்து கண்டு பேசிச் சென்றதே அவர்களுக்கு மிகவும் நிறைவாக இருந்திருக்கும். பேரன் வீடியோ எடுக்க, குழந்தைகள் கதைகள் கேட்க என்றால் அனைவரது உள்ளங்களிலும் அன்பு இருப்பதால்தானே இப்படி!! வாழ்க அனைவரும்!
நல்ல நிறைவான வாழ்க்கை இல்லையா தங்களின் அத்தைக்கும் மாமாவிற்கும்!! இப்படிக் கிடைப்பதற்கும் அந்த இறைவனின்அருள் மிகவும் வேண்டும்!
அத்தையின் திருவடிகளில் எங்களின் வணக்கங்கள்! மனம் நெகிழ்ந்துவிட்டது. இறைவனிடம் நிம்மதியாகத் துயில் கொள்ளட்டும் ஆன்மா சாந்தியுடன்! பிரார்த்தனைகள்!
துளசிதரன், கீதா
கீதா: அக்கருத்துடன் இன்னும் என்னவெல்லாமோ சொலல்த் தோன்றுகிறது கோமதிக்கா. உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் இருப்பதும் தாங்கள் அதை மிக மிக அழகான நேர்மறை எண்ணங்களுடன் எழுதுவதும் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை அக்கா.
எங்களின் அஞ்சலிகளுகம் வணக்கங்களும்..
பாவம் இறுதியில் கஷ்டப்பட்டதுதான் வேதனை இல்லையா?!
பதிலளிநீக்குஎல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும்!
கீதா
கோலப்புத்தகம் ரொம்ப அழகாக இருக்கிறது கோமதிக்கா....பாவம் ஆசிரியப்பயிற்ச்சி கிடைக்காதது சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்....மென்மையான மனது என்பதும் தெரிகிறது உங்கள் வார்த்தைகளில். அந்தக் கஷ்டத்திலும் உங்களை எல்லாம் எப்படி நினைவுகூர்ந்து விசாரித்திருக்கிறார் இல்லையா...ரொம்ப நெகிழ்ச்சி
பதிலளிநீக்குகீதா
வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅத்தையின் உறவினர் மட்டும் அல்ல. மருமகள் அத்தனை பேரின் உடன்பிறப்புகளும் வந்து ஆசி பெற்று சென்றனர். எல்லோரும் அத்தையிடம் பாசமாக இருப்பார்கள். அனைவர் குடும்பத்தைப பற்றியும் வந்தவர்களிடம் விசாரித்தார்கள். அவர்கள் எல்லாம் இறந்து போனவர்களை பார்க்க வந்த போது அதை சொல்லி நினைவு கூர்ந்தார்கள்.
கோலம் அழகாய் போடுவார்கள். தலையணை உரைகள் அழகாய் கையில் தைத்து விடுவார்கள், மெஷின் தையல் போலவே இருக்கும். பின்னல், வேலை தெரிந்தவர்.
உங்கள் இருவரின் அன்பான கருத்துக்கும், ஆறுதலான வார்த்தைகளைக்கும் நன்றி, நன்றி
.
பேரக்குழந்தைகள் ஆச்சியிடம் மிக ஒட்டுதல் அதிகம். வேறு யாருக்கும் அத்தைக்கு கிடைத்தது போல் கிடைக்காது .
நெகிழ்வான பகிர்வு. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்!
பதிலளிநீக்குதங்கள் அத்தைக்கு என் வணக்கங்களும் அஞ்சலிகளும்!
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.