திங்கள், 12 பிப்ரவரி, 2018

ஹாலிவுட் பூங்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் போது வழியில்    ஹாலிவுட்  என்று மலையின் மீது  அடையாளப்படுத்தி இருக்கும் இடத்திற்கும் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவிற்கும் 06/11/2017ல்போய் வந்தோம். 

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.


    மேலும் ஹாலிவுட் செய்திகள் படிக்கலாம்.வார இறுதி நாளில் இது போன்ற இடங்களுக்கு நல்ல கூட்டம் வருகிறது . குடும்பத்தினருடனும் , தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் (நாய்கள்)
வருகிறார்கள்.
நாய்களுடன் விளையாடிக் களிக்கிறார்கள்.   நாய் செய்யும் அசுத்தங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் அன்பு வேண்டுகோளையும் அறிவிப்பு பலகையாக வைத்து இருக்கிறார்கள்.
தூரத்திலிருந்து  மலை அழகு 
வீடுகள் அழகாய் இருந்தன மலையடிவாரத்தில்பார்க்கில்  அமெரிக்க நச்சுபாம்பு இருப்பதாய் 
 எச்சரிக்கை  போட்டு இருந்தார்கள்
தாத்தாவும் பேரனும்  குழாய் போனில் பேசி மகிழ்கிறார்கள்
எங்கே இருக்கே?

மலைகளை அடுக்கி வைத்தது போல் படி

குட்டிப் பிள்ளைகள் சறுக்கி விளையாடுவது 
நான் குட்டி பிள்ளை இல்லையே !
மரம் ஊஞ்சலைக் காவடி சுமந்து கொண்டு இருக்கிறது

சறுக்கு விளையாட நிழல்தரும் குடைக்குக் கீழ்
நானும் விளையாட வருகிறேன்
நம் ஊர் பாண்டி போல் இருக்கு
பழைய டயரை வைத்தும் அழகு படுத்தி இருக்கிறார்கள்.

சதுரங்கக் காய்கள் கொண்டு வந்து விளையாடலாம்
அமர்ந்து விளையாட வசதியாக ஆசனங்கள்


காளான் போல ஆசனங்கள்
பயண அனுபவங்கள் தொடரும்.
வாழ்க வளமுடன்.
=======================

34 கருத்துகள்:

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ 1ஸ்ட்டூ இல்லயோ:(.. சரி சரி நில்லுங்கோ போஸ்ட் படிச்சிட்டு வாறேன்...

  பதிலளிநீக்கு
 2. வாவ் !ஒரு விஷயத்தில் அமெரிக்கா எனக்கு பொறாமை வரவைக்கும் :) அது இந்த சுட்டெரிக்கும் வெயில்தான் !! எவ்ளோ நல்லா இருக்கும் எங்களுக்கும் இப்படி வெயில் அடிச்சா .
  rattle ஸ்நேக்ஸ்சா !! அவ்வ் முன்பு உறவினர் ஒருவர் சொன்னாங்க பாம்பு வீட்டு தோட்டத்தில் அடிக்கடி விசிட் விடும்னு
  தாத்தாவும் பேரனும் குழாய் போனில் பேசுவது அழகான காட்சி .
  இந்த பாண்டி டிசைன் அநேகமா எல்லா பிள்ளைங்களுக்கு புடிச்ச ஒன்று மகள் குழந்தையா இருந்தப்போ ஒரு குட்டி foot கார்பெட் அவ பெட் ரூமுக்கு கட்டிலருகில் வாங்கினோம் இதே டிசைனில் இன்னும் வீச மனமில்லாம பத்திரமா இருக்கு :)
  அந்த ஹாலிவுட் பேர் பலகை பல அனகில படங்களில் பார்த்தது அது இப்படி பிக்கினிக் ஸ்பாட்ன்னு தெரியாது உங்கள் பதிவினூடாக அறிந்த்து கொண்டேன் படங்கள் எல்லாம் அழகுக்கா

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோ கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
  நலமா?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. கோமதி அக்கா, செட்டிங்ஸ் இல் போய் உங்கள் கொமெண்ட் செட்டிங்கை தனி பொக்ஸ் இல் வரும் செட்டிங்காக மாத்தி விடுங்கோ.. இது கொமெண்ட்டை கிளிக் பண்ணினால், அப்படியே போஸ்ட் மாறிடுது கொமெண்ட்ஸ் பொக்ஸ் ஆக.. திரும்ப போஸ்ட்டை இன்னொரு தடவை ஓபின் பண்ணியே படிச்சுப் போட வேண்டி இருக்கு.. அல்லது அனைத்தையும் பாடமாக்கி எடுத்திட்டு வந்துதான் போடுகிறேன் ஒரேயடியாக.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  கொஞ்ச தாமதம் இரண்டு நிமிடங்களுக்கு முன்பு சகோ கலியபெருமாள் வந்து விட்டார்.

  படிப்பதற்கு நிறைய இல்லை.வாங்க வாங்க

  பதிலளிநீக்கு
 6. மிக அழகிய பூங்கா.. மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தரும் இடமாக இருக்கு. அதிலும் அந்த வெதர் பார்க்க பொறாமை வருது எனக்கு.. குளிரோடு சேர்ந்த வெயில்.

  பேரனோடு சேர்ந்து தாத்தாவும் குழந்தையாகிட்டார்.

  பேரனுக்கு கோமதி அக்காவின் தலைமயிர் வந்திருக்கு நல்ல அழகிய சுருட்டை.

  அன்றே சொல்ல நினைச்சேன் உங்கள் சாறியில் இருக்கும் அந்தப் பிங் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என்னிடமும் முன்பு இப்படி நீலமும் பிங்கும் கலந்து ஒரு சாறி இருந்துதே.

  பதிலளிநீக்கு
 7. ///Blogger Angel said...
  வாவ் !ஒரு விஷயத்தில் அமெரிக்கா எனக்கு பொறாமை வரவைக்கும் :) அது இந்த சுட்டெரிக்கும் வெயில்தான் !! ///

  ஹா ஹா ஹா இருவரும் ஒரே புலம்பல்:)) என்னா பொருத்தம்:)

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  உங்களை காணோம் என்று எல்லோரும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
  வெளியூருக்கு போய் இருந்தீர்களா?
  மகன் ஊரில் மலை பாதைகளில் பாம்பு ஊர்ந்து போவதை பார்த்து இருப்பதாய் சொல்வான்.
  ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  அமைதியான அழகான பூங்காதான்.
  பேரகுழந்தைகளுடன் நாமும் குழந்தையாகி விடுவோம்தான்.
  என் முடி சுருட்டையாக தெரிகிறதா இப்போதும்? நிறைய முடி கொட்டி விட்டது, சுருட்டையும் போய்விட்டது.
  புடவைகலர் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
  குளிர்பிரதஷேத்தில் இருப்பவர்கள் கருத்து ஒரே மாதிரிதானே இருக்கும்!
  பனி விழும் நேரம் வெயில் இனிமை, வெயிலின் கொடுமையின் போது நிழல் , மிதமான குளிர் அருமை இல்லையா?

  கருத்துக்கு நன்றி அதிரா.

  பதிலளிநீக்கு
 10. ஏஞ்சலின் இதற்கு முன்பு போட்ட பதிவில்
  (மலிபு கடற்கரை )
  உங்களை காணவில்லையே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
  திடீர் பயணமாய் எங்கும் சென்று விட்டீர்களோ அதிராவும், நீங்களும் இல்லாமல் இருந்தால் வலைஉலகம் போர் அடிக்கிறதாம் எல்லோருக்கும்.
  சேர்ந்து வாருங்கள் இருவரும்.


  பதிலளிநீக்கு
 11. மலையடிவாரத்தில் மிகக் குறைந்த வீடுகளே காணப்படுகின்றன!

  பா.........ம்...........பா.......? அப்படியுமா கூட்டம் வருகிறது?

  மரம் - ஊஞ்சல் - காவடி! அருமை.

  பதிலளிநீக்கு
 12. // பேரனுக்கு கோமதி அக்காவின் தலைமயிர் வந்திருக்கு நல்ல அழகிய சுருட்டை.//

  அதிரா சொன்ன உடன் நான் மறுபடி போய் செக் செய்து வந்தேன்.. எல்லாம் கவனிக்கறாங்கப்பா....!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  பாம்பு, தேள் எல்லாம் மகன் இருக்கும் ஊரில் அதிகம்.
  அதை கொல்லகூடாது என்ற வேண்டுகோள் உண்டு.

  மர ஊஞ்சல் காவடியை ரசித்தமைக்கு நன்றி.

  அதிரா கவனிப்பை மீண்டும் சரி பார்த்தீர்களா?
  அதிரா நம் மனதையே நம் எழுத்தில் புரிந்து கொள்வார், அவர் கண்ணில், கருத்திலிருந்து தப்ப முடியுமோ!

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. // அதிரா நம் மனதையே நம் எழுத்தில் புரிந்து கொள்வார்,//

  ஆச்சர்யம்... உண்மை. உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டா?

  பதிலளிநீக்கு
 15. உண்மை ஸ்ரீராம், பல பதிவுகளில் அவரை அறிந்து கொண்டேன்.
  ஆச்சர்யமான உண்மைதான். நானும் உணர்ந்து இருக்கிறேன்.
  அற்புதமான பெண் அதிரா.

  பதிலளிநீக்கு
 16. ஹாலிவுட் பற்றிய படங்களும் செய்திகளும் அருமை..

  ஆனாலும் அங்கே rattlesnake - இவைகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன் என்றதும்
  நடுக்கமாயிற்று..

  வாலை கிலுகிலுப்பை மாதிரி ஆடிக்கொண்டிருக்கும்..
  கடும் நஞ்சுடைய இந்தப் பாம்பை முதன் முதலாக சிங்கப்பூரில் பார்த்தது...

  மற்றபடி - அதிரா நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்..

  பல்லழகும் சொல்லழகும் முடியழகும் சடையழகும் - அவருடைய கண்களில் இருந்து தப்பிக்க முடியாது...

  வருடம் கழித்து ஊருக்கு வரும் பேரனைப் பார்த்து -
  என்னடா எளைச்சிப் போய்ட்டே!... இதென்னா கண்ணுக்கிட்டே காயம்?... - என்றெல்லாம் அன்புடன் விசாரிக்கும் ஆச்சியைப் போல!...

  ஆனா- அவங்க இன்னும் குழந்தை என்றே சொல்லிக் கொள்வார்கள்...

  தங்களுடைய கல்யாண போட்டோவைப் பார்த்திருக்கின்றார்களா!.. - தெரியவில்லை..

  ஒருவேளை ஆதிரா அவர்கள்
  இதைப் படித்தால் கல்யாண போட்டோவைப் பற்றி ஏதாவது எழுதுவார் ... பாருங்கள்!..

  ஆதிராவும் அவர்தம் அன்பும் பண்பும் வாழ்க...

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.


  //வாலை கிலுகிலுப்பை மாதிரி ஆடிக்கொண்டிருக்கும்..
  கடும் நஞ்சுடைய இந்தப் பாம்பை முதன் முதலாக சிங்கப்பூரில் பார்த்தது//

  பார்த்து இருக்கிறீர்களா?

  //மற்றபடி - அதிரா நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்..//

  உண்மை .


  //வருடம் கழித்து ஊருக்கு வரும் பேரனைப் பார்த்து -
  என்னடா எளைச்சிப் போய்ட்டே!... இதென்னா கண்ணுக்கிட்டே காயம்?... - என்றெல்லாம் அன்புடன் விசாரிக்கும் ஆச்சியைப் போல!..

  ஆனா- அவங்க இன்னும் குழந்தை என்றே சொல்லிக் கொள்வார்கள்...//

  அன்பிலும் ஆதரவான பேச்சிலும் ஆச்சிதான்.

  சிரிக்க வைத்து நம்மை சிரிக்க வைக்கும் குழந்தை தான்.
  என்றும் இளமையான முருகனை போல் என்றும் குழந்தைதான்.

  பழைய படங்களை பார்த்து இருக்கலாம்.
  நான் பதிவில் போட்டு இருக்கிறேன்.

  அதிராவின் அன்பையும், பண்பையும் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.

  உங்கள் அன்பான கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 18. கோமதிக்கா படங்கள் ரொம்ப அழகு!!! ஹாலிவுட்! பலரது ஆசைகளில் இருக்கும் இடம்..

  பார்க் பிரமாதம்..ஆமாம் அக்கா அங்கு குறிப்பாகக் கலிஃபோர்னியா வில் ராட்டில் ஸ்னேக்...அந்தச் சத்தம் கிலுகிலுப்பை போல் இருக்கும்...அந்தச் சத்தம் கேட்டால் அங்கு பாம்பிருக்கு அதாவது நமது மணம் அறிந்தால் அது எச்சரிக்கை விடும் சவுன்ட்..கொடிய விஷப்பாம்பு...நம்ம ஊர் விரியன் போல...

  தாத்தா பேரன் செம!!! அங்கு பாத்தீங்களா ஒரு இருக்கை கூட ரொம்ப அழ்கா ரசித்து கட்டுறாங்க...மெயின்டெய்னும் பண்ணுவாங்க...பேரன் அழகு...பேரன் உங்கள் சாடையில் இருபப்து போன்று தெரியுது...

  கோமதிக்கா உங்கள் சாரி கலர் செம...ப்ளூ ல பிங்க் டிசைன்..பிங்க் அண்ட் ப்ளூ ஐ லவ் யு!!!

  அதிரா கண்ணுல இந்தப் பிங்க் பட்டுச்சா தெரியலை...பார்க்கறென் அவங்க கமென்ட்...

  அருமை அக்கா...இன்னும் வரும் இல்லையோ...ரேட்டில் ஸ்னேக் கண்ணுல தென்பட்டுதா..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. ராட்டில் ஸ்னேக் வாலை ஆட்டி சவுன்ட் விடும் சொல்ல விட்டுபோய்விட்டது...நாம் அதன் அருகில் வருகிறோம் என்றால் எச்சரிக்கை மணி அது...முதலில் எனக்கும் தெரியலை கூட வந்தவர் ஹையோ வந்துருங்க...அங்க பாம்பு இருக்கு அதான் சத்தம்...கிலுகிலுப்பை மாதிர் கேக்குதா அது ராட்டில் ஸ்னெக் என்று சொல்லவும்...பா....பா...பா....பா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பூஊஊஊஊஊஉ நு ஓடி வந்துட்டேன்...ஹா ஹா ஹா...கவனமாக இருக்கணும்...

  //மற்றபடி - அதிரா நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்..

  பல்லழகும் சொல்லழகும் முடியழகும் சடையழகும் - அவருடைய கண்களில் இருந்து தப்பிக்க முடியாது...

  வருடம் கழித்து ஊருக்கு வரும் பேரனைப் பார்த்து -
  என்னடா எளைச்சிப் போய்ட்டே!... இதென்னா கண்ணுக்கிட்டே காயம்?... - என்றெல்லாம் அன்புடன் விசாரிக்கும் ஆச்சியைப் போல!...

  ஆனா- அவங்க இன்னும் குழந்தை என்றே சொல்லிக் கொள்வார்கள்...

  தங்களுடைய கல்யாண போட்டோவைப் பார்த்திருக்கின்றார்களா!.. - தெரியவில்லை..

  ஒருவேளை ஆதிரா அவர்கள்
  இதைப் படித்தால் கல்யாண போட்டோவைப் பற்றி ஏதாவது எழுதுவார் ... பாருங்கள்!..//

  ஹா ஹா ஹா அவங்க ஆச்சியேதான் துரை அண்ணா அதுல என்னா சந்தேகம்....80 வயசாக்கும்...!!! அவங்க செக்கரெட்டரி கிட்ட கேட்டா தெரியும்...எத்தனை வருஷமா இருக்காங்க அவங்க..ஹா ஹா ஹா

  //ஆதிராவும் அவர்தம் அன்பும் பண்பும் வாழ்க...// ஆமாம்!!! வெகு உண்மை!! வாழ்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அன்றே சொல்ல நினைச்சேன் உங்கள் சாறியில் இருக்கும் அந்தப் பிங் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என்னிடமும் முன்பு இப்படி நீலமும் பிங்கும் கலந்து ஒரு சாறி இருந்துதே.//

  அதானே பார்த்தேன் அவங்க கண்ணுல இருந்து தப்புமா...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  ஹாலிவுட் பல இடங்கள் இருக்கிறது பார்க்க , நாங்கள் லாஸ் ஏஞ்சலஸ் பார்க்க போகும் பொது வழியில் உள்ள ஹாலிவுட், மலிபு கடற்கரை எல்லாம் பார்த்து லாஸ் ஏஞ்சலஸ் இரவு நேரத்தில் பார்க்க போய் விட்டோம். பூங்காவிற்கு பக்கம் அழகிய ஏரி இருந்தது பார்க்கவில்லை.

  பாம்பு பற்றி கூகுளில் தேடி படித்தேன். சங்க்கரன் கோவில் கோமதி அம்மனை வேண்டிக் கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தேன். கண்ணில் படவில்லை பாம்பு.

  பேரன் என் ஜாடைதான். என் சிறு வயது படங்கள் அவன் சிறு வயது படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்.
  அதிரா கண்ணில் பிங்க் சாரி பட்டு கருத்து சொல்லி விட்டார்.

  கருத்துக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 22. படங்களும் அருமை. இடங்களும் அருமை.

  அனைவரது கருத்துக்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 23. ஹா ஹா ஹா அவங்க ஆச்சியேதான் துரை அண்ணா அதுல என்னா சந்தேகம்....80 வயசாக்கும்...!!! அவங்க செக்கரெட்டரி கிட்ட கேட்டா தெரியும்...எத்தனை வருஷமா இருக்காங்க அவங்க..ஹா ஹா ஹா//

  கீதா , அதிரா கேட்டால் என்னை ஆச்சி 80 வயது என்றா சொன்னீர்கள் என்பார், தன்னை

  ஸ்வீட் 16 என்றுதானே அடிக்கடி சொல்கிறார்.
  ஏஞ்சலின் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
  அதிராவுக்கு வாழ்த்து சொல்வதில் நானும் கலந்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் .

  பதிலளிநீக்கு
 24. மலிபு கடற்கரை பதிவில் சொல்ல நினைத்து விட்டுப் போனதை இந்த பதிவில் சொல்லி விட்டார்.
  புடவை கலர் பிடித்து இருப்பதை அதிரா.
  உங்க்களுக்கும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

  படங்கள், இடம், கருத்துக்களை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. ஆஹா படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு ரசிக்கும் வசனங்கள் ஸூப்பர்.

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அழகிய இடமும்..

  அற்புத படங்களும்..


  அனைத்தும் மிக அழகு....

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. பேரன் உங்களைப் போல் இருக்கிறான். :) ஹாலிவுட் சென்றிருந்தீர்களா? அருமை! படங்கள் எல்லாமும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  பேரன் என் போல்தான். ஹாலிவுட் அரைநாள் பயணம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு