பசிபிக் பெருங்கடல்
2017 நவம்பர் மாதம் மகன் இங்கு அழைத்து சென்றான். பள்ளியில் படிக்கும்போது புவியியல் பாடத்தில் பசிபிக் பெருங்கடல் என்று உலக ப்படத்தில் குறித்ததை நேரில் பார்த்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதுவும் பேரனுடன் கடலில் விளையாடியது அதைவிட மகிழ்ச்சி. அவனின் மகிழ்ச்சி கண்டு எங்கள் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
அமெரிக்காவில் உள்ள இந்தக் கடற்கரையின் பெயர் "மலிபு". பார்க்க அழகான கடற்கரை.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் "பாரடைஸ் கோவ்" என்ற தனியாருக்குச் சொந்தமான ஓட்டல் உள்ளது. அங்கிருந்து கடலைப் பார்க்கப்போவதற்கு
ஒரு ஆளுக்கு 36 டாலர் கொடுக்க வேண்டும்.
கடற்கரையின் பெயர் மலிபு
நம்மை வரவேற்கும் சீகல் பறவையும் அழகான பாரடஸ் கோவ்
கடலைப் பார்க்க அழைக்கும் அறிவிப்புப் பலகையும்.
கீழே தெரியும் மரப்பாலத்திலிருந்து கடலின் அழகைப் பார்க்கலாம்
அங்கு உள்ள அறிவிப்பு பலகை.
கடற்கரையில் மணலில் பேரன் விளையாடுவதைப் பார்வையிடும் தாத்தா
கடல் என்றாலே களிப்பு தானே!
சில் சில் என்று இருக்கு ! வா வா ஆச்சி
கடல் அழகை ரசிப்பதா இந்தப் பறவைகள் செய்யும் செயல்களைப் பார்ப்பதா ?என்ற நினைவுகள் எழும், இருட்டுவதற்குள் கடலைப் பார்வையிட வேண்டும்.
நீண்ட அழகிய கடற்கரையில் நடந்து போவதே சுகானுபவம்.
நம் ஊர் மீனவர்கள் இந்தப் பறவையை" நீர்க் காகம் "என்கிறார்கள்.. விமான விபத்துகள் அடிக்கடி இந்தப் பறவைகளால் ஆகுமாம்.
கடலில் மிதந்து கொண்டே மீன்களைச் சாப்பிடுவதுடன் நாம் சாப்பிடும் உணவையும் விரும்பிச் சாப்பிடுகிறது.
மீன் கிடைத்து விட்டதோ!
எங்கே ! இத்தனை வேகத்துடன் கத்திக் கொண்டு ஓட்டம்?
ஓ ! பிஸ்கட் தருகிறார்கள் ஒரு அம்மா . அதுதான் இத்தனை ஓட்டம், குதூகலம்.
திடீரென்று பாய்ச்சல் கடலில்
என்ன கிடைக்கும் என்ற பார்வை
கொக்கு போல் ஒற்றைக் காலில்
உனக்கும் என் பேர்தான் எங்க நாட்டில் என்று கூறிவிட்டு ராஜநடை நடக்கிறதோ காகம்.
மாலையில் காக்கைகளும் நிறைய வர ஆரம்பித்தன காக்கை உள்ள படங்கள் நிறைய இருக்கிறது. எங்கள் பிளாக் போல ஞாயிறு படங்கள் பகிரலாம்
கடல் அழகை பார்க்கக் குடையின் கீழே
ஆசனங்கள் போட்டு இருக்கிறார்கள் ஓட்டல்காரார்கள். குடையின் மேல் அமர்ந்து நம்மைப் பார்க்கும் சீகல் பறவை.
ஒட்டல் உள்ளே ஆர்டர் செய்துவிட்டு வெளியில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்றால் சீகல் பறவைகள் தொந்திரவால் உள்ளேயே சாப்பிட்டோம்.
அசைவப் பிரியர்களுக்குத் தான் அங்கு நிறைய உணவுகள். (கடல் உணவுகள்.)
எங்கள் எல்லோருக்கும் ஜூஸ், ,ஃப்ரெஞ்ச் ஃப்ரை தான்
ஓட்டலின் பின் புறம்
ஓட்டலின் முன்புறம்
வானமும் கடலும் அழகிய தோற்றம்
மரப்பாலத்திலிருந்து எடுத்த படம்.
நீண்டு போய்க் கொண்டே இருக்கிறது கடல்
பயமே இல்லை எனக்கு
வித்தியாசமான சீகல் வகை
மாலைச் சூரியன் எதிர் கட்டிடங்களை மஞ்சளாக்கியது
மஞ்சள் வெயில் மாலை
பேரன்," அலையே ! சற்று நேரம் நில் !ஆச்சியைத் தாத்தா போட்டோ எடுக்கிறார்கள் "என்று சொல்கிறான்.
முதல் படத்தில் தெரியும் கப்பல் தான் ஜூம் செய்து எடுத்தேன் மரப் பாலத்திலிருந்துபாய் மரக் கப்பலை
பழமையான மணி 1818 ல் செய்யபட்டது. ஓட்டலின் முன்புறம் இருந்தது.
மணியில் நாதம் ஒலிக்க நாக்கு இல்லை.
இது சொர்க்கத்துக்கு
அழைத்து செல்லும் அற்புத மணியாம்
மனதில் வேண்டிக் கொண்டு இந்த மணியைத் தடவி கொடுத்தால் நினைத்தது நடக்குமாம். சொர்க்கம் கிடைக்குமாம். வேண்டுதல் நிறைவேறினால் சொர்க்கம் தானே!
எல்லோர் வாழ்விலும் கவலைகள் ஒழிந்து ஆனந்த அலை பரவட்டும் என்று வேண்டி வந்தேன்.
வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆஹா மிக அழகிய கடற்கரை கோமதி அக்கா.. கடற்கரை என்றாலே அழகுதானே. மணலும் அந்த கஃபே அனைத்தும் அழகு..
பதிலளிநீக்குமாலை நேர மஞ்சள் வெயில் கொள்ளை அழகு..
சீஹல் ஐ பக்கம் பக்கமாக படம் எடுத்திருக்கிறீங்க.. உங்களுக்கு அது புதுசாக இருந்திருக்கும்.. இங்கு எங்களுக்கு கார்டினில் என்ன போட்டாலும் புறாவோடு சீஹல் தான் வருவினம்.. அதுவும் கூட்டமாகவே வந்து போவார்கள் பெரிய சவுண்டோடு...
பதிலளிநீக்குஅந்த விஷ்சிங் பெல்லை மீயும் தழுவிச் செல்கிறேன்:)
வணக்கம் அக்கா!
பதிலளிநீக்குஆஹா... அத்தனையும் அழகான காட்சிகள்.
தாத்தா, பாட்டி, பேரன்னு எல்லோரையும் பார்த்தாச்சு. மிக்க மகிழ்ச்சி..:)
ஒவ்வொரு படங்களும் ஒருவரிக் கதை கூறியது ரசிக்கவைத்தது அக்கா.
அந்த மணியைத் தடவி //எல்லோர் வாழ்விலும் கவலைகள் ஒழிந்து ஆனந்த அலை பரவட்டும் என்று வேண்டி வந்தேன்.// என்றீர்களே.. இதைவிட உங்களின் அன்பை நாம் புரிந்துகொள்ள வேறென்ன வேண்டும்...
மிக்க மிக்க நன்றி அக்கா!
வாழ்க வளமுடன்!
அழகிய படங்களும் அருமையான வர்ணனைகளும் இரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குமுடிவில் சொன்ன வாக்கியம் இந்த எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தால் நாடும் நலம் பெரும் வாழ்க வளமுடன்...
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுதலில் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
இதற்கு முன் பதிவு கரும்புச்சாறு பதிவுக்கு வரவில்லையே!
கடலையும், மாலை நேர மஞ்சள் வெயிலை ரசித்தமைக்கு நன்றி.
சீகலை அமெரிக்கா போகும் போது பார்ப்பதுதான் . முதன் முதலில்
நாயகரா நீர்வீழ்ச்சியில் சீகலை அதன் குஞ்சுகளுடன் பார்த்தேன், படங்கள் எடுத்து இருக்கிறேன்.(பல வருடங்களுக்கு முன்)
உங்கள் வீட்டுக்கு வருவது மகிழ்ச்சி.
//அந்த விஷ்சிங் பெல்லை மீயும் தழுவிச் செல்கிறேன்:)//
அதிரா என்றாலே மகிழ்ச்சி அலை பரப்பும் தேவதை தானே!
மேலும் மகிழ்ச்சி அலை பரப்புங்கள்.
நன்றி.
வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்து மகிழ்வை தருகிறது.
//ஒவ்வொரு படங்களும் ஒருவரிக் கதை கூறியது ரசிக்கவைத்தது அக்கா.//
நீங்கள் கவிதை எழுதி விடுவீர்கள் .
என் படங்களை, வார்த்தைகளை ரசித்தமைக்கு நன்றி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//அழகிய படங்களும் அருமையான வர்ணனைகளும் இரசிக்க வைத்தன..//
நன்றி.
//முடிவில் சொன்ன வாக்கியம் இந்த எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தால் நாடும் நலம் பெரும் வாழ்க வளமுடன்.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
படங்கள் வெகு அழகு. குறிப்பாக வானம் கடலும். பேரனின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. குழந்தைகளாகிப் போகலாம். படங்களும் அதற்கான குறிப்புகளும் அருமை.
பதிலளிநீக்குவாவ்... கடல் பார்க்க என்றுமே அலுப்பதில்லை. குஜராத் சென்ற போது நானும் இந்த சீகல் பறவைகளை படம் பிடித்தேன்....
பதிலளிநீக்குதிருமண நாள் நல்வாழ்த்துகள் மா.....
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவானமும் கடலும் நமக்கு அலுப்பதே இல்லை பார்க்க
இரண்டும் சேர்ந்த படம் என்றால் மகிழ்ச்சி தானே!
//பேரனின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. குழந்தைகளாகிப் போகலாம்.//
உண்மை ஸ்ரீராம், மகிழ்ச்சியான தருணங்கள்.
கடலும் , குழந்தையும் மகிழ்ச்சியை அள்ளி தரும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//வாவ்... கடல் பார்க்க என்றுமே அலுப்பதில்லை. குஜராத் சென்ற போது நானும் இந்த சீகல் பறவைகளை படம் பிடித்தேன்....//
கடல் பார்க்க அலுப்பதில்லைதான்.
குஜராத் பதிவு படிக்க வேண்டும். அழகாய் எடுத்து இருப்பீர்கள் சீகலை.
//திருமண நாள் நல்வாழ்த்துகள் மா....//
மகிழ்ச்சி வெங்கட்!
நினைவு வைத்து இருப்பது ஆச்சிரிய மகிழ்ச்சி.
நன்றி நன்றி.
வல்லி அக்காதான் எப்போதும் வாழ்த்து சொல்வார்கள் நினைவு வைத்து.
அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//நினைவு வைத்து இருப்பது ஆச்சிரிய மகிழ்ச்சி.//
பதிலளிநீக்குவல்லிம்மா மூலம் தான் தெரிய வந்ததும்மா...
ஓ! எங்கள் பிளாக் குழுவில் வாழ்த்தி இருப்பதை தாமதமாய் பார்த்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
கவலைகளை எல்லாம் மறந்திருந்தால் அல்லது துறந்திருந்தால் சொர்க்கம் தான்...
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன் இனிய பதிவு..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//கவலைகள் எல்லாம் மறந்திருந்தால் அல்லது துறந்திருந்தால் சொர்க்கம் தான்...//
உண்மைதான் கவலையை துறக்கதான் வேண்டும்.
மறக்க முடிவதில்லை கவலைகளை . வாழ்வில் ஒன்று மாற்றி ஒன்று கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.கவலைகளுக்கு காரண காரியமே வேண்டாம் அப்ப்டி இருக்கிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
.
படங்கள் எல்லாம் அருமை. கடலையும் தூய்மையான கடற்கரையையும் நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு. நன்றாக enjoy செய்திருப்பீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்: வாவ்! படங்கள் அழகோ அழகு! மனதை மயக்குகின்றன. பதிவர்களின் படங்கள் மூலம் நான் நிறைய இடங்களைக் காண முடிகிறது சகோதரி...மிக்க நன்றி
பதிலளிநீக்குகீதா: கோமதிக்கா என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை அழகிய படங்கள்..அருமை....அதுவும் வானமும் கடலும், மரப்பாலத்திலிருந்து எடுத்த படம், நீண்டு செல்கிறது என்ற மூன்றும் ரொம்பவே மனதைஅள்ளுகிறது...சீகல்..பேரன் விளையாட்டு தாத்தா ரசிப்பது..நீங்கள் எல்லாம் அழகு!!..அக்கா தண்ணீர் ரொம்ப சில்லென்று இருந்திருக்குமே...உங்கள் புகைப்படத்திற்கான கமென்ட்ஸும் நல்லாருக்குக்கா
மிக மிக ரசித்தோம்
படங்களும் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க சகோதரி/ கோமதிக்கா
பதிலளிநீக்குகடல் எவ்வளவு பார்த்தாலும் அலுப்பதே இல்லை இல்லையா அக்கா..அதன் நிறத்தைப் பாருங்க...கடலும் வானும் போட்டி போடுகின்றன...எதை ரசிப்பது? அது போல சீகல்,,எல்லாமே அழகுதான்
பதிலளிநீக்குகீதா
ஆஹா எத்தனை அற்புதமான இடம்
பதிலளிநீக்குநாங்களும் கண்டு இரசிக்க அற்புதமாகப்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅழகான கடற்கரையை பார்த்துக் கொண்டே இருக்கலாம் தான்.
மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை போவோம்
இப்போது போகமுடியவில்லை.
அங்கு பேரனுடன் மகிழ்ச்சியாக களித்தேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கீதா, துளசிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இருவரின் அழகான் அன்பான கருத்துக்கு நன்றி.
பாராட்டுக்கு நன்றி.
கடலை எப்போது பார்த்தாலும் அலுப்பது இல்லைதான்.
வானும், கடலும் எப்போதும் அழகுதான். சீகல் செய்யும் குறும்புகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி நன்றி.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா?
அழகான அமைதியான இடம் தான். நாங்கள் ஹாலிவுட் போய்விட்டு இங்கு போனோம்
அதானல் குறைந்த நேரமே இருக்க முடிந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆகா
பதிலளிநீக்குஅழகு
அருமை
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அழகான படங்களுடன் கூடிய அனுபவப் பகிர்வு. குறிப்பாக வானும் கடலும் அற்புதம். மேலும் படங்களை ஞாயிறு படங்களாகப் பார்க்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை பாராட்டி பார்க்க காத்திருக்கிறேன் என்று உற்சாக மூட்டும் அன்பு கருத்துக்கு நன்றி.
மிக அழகிய இடம்...
பதிலளிநீக்குசிறப்பான படங்கள் ...அனைத்தும் வெகு அழகு அம்மா..
அதிலும் வானமும் கடலும், மரப்பாலத்திலிருந்து எடுத்த படம் இரண்டும்...ஆஹா...
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்து உற்சாக கருத்து சொன்னதற்கு நன்றி.
அருமையான தேவையான வேண்டுதல். எப்போதும் போல் படங்களுடன் பதிவு சிறப்பு! மரப்பாலத்திலிருந்து எடுத்த படம் எனக்கும் பிடித்தது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
கவலை இல்லா வீடு இருக்கா ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கிறதே. அதுதான் அப்படி வேண்டுதல்.
உங்கள் கருத்துக்கு நன்றி .