குழந்தைகளின் கனவு உலகம் - ஒரு முறை பார்த்து விட ஆசைப்படும் இடம்
அற்புத பூங்காவை அமைத்த அற்புத மனிதர் வால்ட் டிஸ்னி
ஜூலை 1955 இல், கலிபோர்னியா மாநிலத்தில் ஆனஹிம் என்னும் ஊரில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் டிஸ்னிலாண்ட் வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்டது.
சாகஸம் செய்ய நிறைய விளையாட்டுக் கூடங்கள், நடன , நாடகஅரங்குகள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்தார்.
இதற்குக் கிடைத்த வரவேற்பில் மீண்டும் பெரிய 27,258 ஏக்கரில் புளோரிடாவில் இடம் வாங்கி பெரியபூங்கா அமைக்கத் திட்டம் வகுத்தார் ஆனால் 1966ல் இறந்து விட்டார். அதற்குப் பின் 1971ல் இந்த பிரமாண்ட பூங்கா அமைந்து மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாய் அமைந்து விட்டது.
தேவதைக் கதைகள், டிஸ்னி கதையின் பாத்திரங்கள் அடிப்படையில் இந்த பொழுது போக்குப் பூங்கா உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அவரின் கற்பனைப் பாத்திரங்களுடன் குழந்தைகள், பெரியவர்கள்
மகிழ்ச்சியாய் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
பறக்கும் ரயில். லேசர் ஓலிக் காட்சிகள், வாணவேடிக்கைக்காட்சிகள், நீர்ப் புகைத் திரையில் 'ஸ்நோஒயிட்டும் , ஏழு குள்ளர்களும்' கதை காட்டப்படுவது பார்க்க வேண்டிய ஓன்று.
மிக்கி மவுஸ் பெரிய கொடை ராட்டினத்தில் நடுநாயகமாய் இருக்கும் இரவு ஓளி விளக்கில் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
ஒரு அரங்கில் ஷேக்ஸ்பியர் நாடகம் காட்டப்பட்டது. நாடக காட்சி அமைப்புகள் மேடையில் கண்சிமிட்டும் நேரத்தில் வேகமாய் மாற்றப்படும். அந்தக் கால மேடை நாடகத்தில் படுதா ஏற்றி இறக்கும்போது காட்சி மாறுவது போல் அப்படியே நடத்திக் காட்டினர். பெரிய கதவுகள் மேலே இருந்து அப்படியே இறங்கும். காதல் காட்சிகளுக்கு அழகான பூங்கா, நீரூற்று, மலர்கள் நிறைந்த தோட்டம் எல்லாம் தத்ரூபமாய் காட்சி அளித்தது.
பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் அதிசய நிகழ்ச்சிகள் காட்டப்படுகிறது
முக்கியமான எட்டு இடங்கள் பார்க்கவேண்டியது உள்ளது. ஓவ்வொன்றுக்கும் அழைத்துப் போக டிராம்கள் பூங்காவிற்குள் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்கிறது.
எட்டு இடங்களில் ஒன்றான "மெயின் ஸ்ட்ரீட்"
பார்க்க வந்த மக்கள் எல்லோரும் வித வித உடைகள் அணிந்து வருகிறார்கள். அதைப் பார்ப்பதே நமக்கு நல்ல பொழுதுபோக்காய் உள்ளது. அந்தக்கால உடை அணிந்து நடந்து போகிறார்கள்.
எழுத்தாளர் சாவி அவர்கள் எழுதிய "வாஷிங்டனில் திருமணம்" கதையில்
வரும் சீமாட்டிகள் போல் (ஓவியர் கோபுலு வரைந்த கதாபாத்திரங்கள் போல்) அலங்காரம் செய்து கொண்ட பெண்கள், அந்தக் கால தொப்பி, கோட், சூட் கைத்தடி வைத்துக்கொண்டு சீமான்கள் போல் அலங்காரம்செய்து கொண்ட ஆண்கள் . அங்கே இங்கே போய்க்கொண்டு இருந்தார்கள்.
பூங்காவின் நுழைவாயிலில் இருப்பவர்கள், "இன்றைய பொழுது அருமையான பொழுதாய் இருக்கட்டும்" என்று வாழ்த்தி பூங்காவின் மேப் கொடுக்கிறார்கள். எப்படிப் போக வேண்டும் ,முதலில் எதைப்பார்க்கலாம் என்று நமக்கு முடிவு எடுக்க வசதியாக உள்ளது.
முதலில் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கொண்டு இருக்கும் மிக்கி, மினி, டொனால்ட் டக் இவைகளுடன் படம் எடுத்துக் கொள்ள வரிசையில் நிற்கும் பெரியவர், சிறியவர், குழந்தைகள் .
.
மின்னி, மிக்கி, டோணால்டக் இவர்களுடன் நாங்களும்
படம் எடுத்துக் கொண்டோம்.
ஆட்டோ கிராப் போடுகிறது
பொது மக்களுடன் ஆட்டம்
தந்தையின் தோளில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சிறுவன்
டிஸ்னி டான்ஸ் உலகம் என்ற அரங்கத்தில் வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்களுடன் ஒரு சிறு யுவனும், யுவதியும் ஆடும் ஆட்டம் அருமையாக இருக்கிறது. அரங்கத்தில் தேவையான ஆட்கள் வந்தவுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.
முன்னாடி உட்கார்ந்து இருக்கும் குழந்தைகளை ஆட அழைக்கும் மின்னி, மிக்கி
குழந்தைகளும் நடனம் ஆடினார்கள்
பேரனும் ஆடினான்
வீதி நாடகம்
செய்தித்தாள்போடும் பையன்களாய் அன்றைய முக்கிய தலைப்புச் செய்தியைச் சொல்லிக் கூவி விற்கும் காட்சி
அவ்வளவு வேகம் ஆட்டத்தில்
காணொளி எடுத்தேன் பதிவில் வேலை செய்யமாட்டேன் என்கிறது
டிஸ்னி பதிவு தொடரும்
வாழ்க வளமுடன்.
ஆஹா அருமையான டிஸ்னி உலகம்.. டிஸ்னி என்றாலே ஒரே குதூகலமாகத்தானே இருக்கும்.. நன்கு என் ஜோய் பண்ணியிருப்பீங்களே.. கோமதி அக்காவும் ட்ரைட்ஸ் இல் ஏறினனீங்களோ?.. பேரன் முகத்தில் பயங்கர ஹப்பினெஸ்..:).. படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குநாங்கள் பரிஸ் டிஸ்னி போயிருக்கிறோம்... பொருமையா அழகா அனைத்தும் பார்த்து முடிக்க 2,3 நாட்கள் தேவை..
நானும் பெரும்பாலும் எல்லா ட்ரைட்ஸிலும் ஏறி விடுவேன்.. பின்னர் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஊரிலுள்ள தெய்வத்தை எல்லாம் உதவிக்குக் கூப்பிட்டுக் கொண்டே இருப்பேன் ஹா ஹா ஹா:).
வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் இரண்டு, மூன்று நாட்கள் வேண்டும் தான். நாங்கள் காலை முதல் இரவு வரைப் பார்த்தோம்.
நிறைய பயபடுத்தாத ட்ரைட்ஸில் ஏறி மகிழ்ந்தோம்.
சிறு வயதில் சித்திரை பொருட்காட்சி
யில் பெரிய ராட்டினத்தில் ஏறி விட்டு உங்களை போல் ஊரிலுள்ள எல்லா தெய்வத்தையும்
கூப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.
இன்னும் டிஸ்னி பயணம் வரும் .
முதலில் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி அதிரா.
படங்கள் எல்லாம் அப்படியே நேரில் பார்ப்பது போல் க்ளியரா இருக்கு .குழந்தைகள் முகத்தில் எவ்ளோ சந்தோஷம் !
பதிலளிநீக்குஅற்புதமான டிஸ்னிலாண்டை தங்களால் நாங்களும் பார்த்த உணர்வு
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதான். படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கற்பனைத்திறன் வாய்ந்த அந்த வால்ட் டிஸ்னி கலகலப்பான மனிதர் என்று சிலையைப் பார்த்தால் தெரிகிறது. எவ்வளவு குதூகலமான இடம்? பார்க்க ஒருநாள் போதுமா என்று பாடவேண்டியதுதான்! அழகான படங்கள்.
பதிலளிநீக்குபேரனின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகற்பனைத்திறன் வாய்ந்த டிஸ்னி நண்பரால் ஏமாற்றப்பட்டு நிறைய சோதனைகளை சந்தித்தார். அவர் வீட்டில் சுற்றிய எலியைப் பார்த்து வரைந்து அதை பேச வைத்து உலவவிட்டபின் தான் மீண்டும் எழுந்தார். இன்னும் நிறைய சாதனை செய்ய இருந்தார் , இறைவன் போதும் என்று அழைத்துக் கொண்டார்.
தொழில் முன்னோடிகள்: வால்ட் டிஸ்னி என்ற தி இந்துவில் வந்த கட்டுரை படித்து இருப்பீர்கள்.
//பார்க்க ஒருநாள் போதுமா என்று பாடவேண்டியதுதான்! அழகான படங்கள்.//
ஆமாம் ஸ்ரீராம், ஒருநாள் போதாது. நம் கால்க்ளும் கெஞ்சும் எனக்கு கொஞ்சம் ஓய்வு கொடு என்று.
பேரனின் மகிழ்ச்சி எங்களை தொற்றிக் கொண்டது. எங்கள் மகிழ்ச்சி என் மகன், மருமகளை மகிழ்ச்சி படுத்தியது.
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபுகைப்படங்க்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உண்மையில் அது குதூகல உலகம் தான்...
பதிலளிநீக்குசில வீடியோக்களில் பார்த்திருக்கின்றேன்..
தங்கள் பதிவு இன்னும் அருமையான நேர்முகத்துடனும் அழகான படங்களுடனும்
உணர்வு பூர்வமாக வெளிவந்துள்ளது..
நேற்றே பதிவினைக் கண்டேன்..
இணையம் இளைத்துப் போனதால் கருத்துரை கஷ்டமானது..
சந்தோஷமான முகங்களைப் பார்ப்பதே சந்தோஷம்..
அடுத்த பதிவிற்காக - ஆவலுடன்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குடிஸ்னி வீடியோக்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
தன் மனைவியும் குழந்தைகளும் சந்தோஷபடுவதைப் பார்த்து உலகில் எல்லோரையும் சந்தோஷபடுத்த ஆரம்பித்த உலகம் தான் டிஸ்னி உலகம்.
நான் எடுத்த வீட்டியோக்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை வலையேற்ற முடியவில்லை.
முகநூலில் பதிவிட முடிகிறது வலைத்தளத்தில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.
வீடியோக்களை யூடியூப் வீடியோவாக செய்ய வேண்டுமாம், அதை கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொன்றாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
//சந்தோஷமான முகங்களைப் பார்ப்பதே சந்தோஷம்..//
நீங்கள் சொல்வது மலர்ந்த முகங்கள் மகிழ்ச்சியை தருகிறது.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
படங்களும் இடமும் அருமை. மலர்ந்த முகங்களின் மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொள்கின்றது.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.'
பதிலளிநீக்கு//மலர்ந்த முகங்களின் மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொள்கின்றது.//
உண்மைதான் நெல்லைத் தமிழன்.
எங்கும் மலர்ந்த முகங்கள், ஆரவாரமான மகிழ்ச்சி ஒலி அந்த வளாகம் முழுவதும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் அக்கா!
பதிலளிநீக்குகுழந்தைகளின் கனவுலகத்தினை நேரில் சென்று பார்த்து அனுபவித்து மகிழ்ந்ததை
அழகாகப் பதிவாக்கியுள்ளீர்கள்! அருமை!
நானும் ஒவ்வொரு படமாகப் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன் அக்கா.
உங்கள் மகிழ்ச்சி எம்மையும் மகிழ்சிப்படுத்தியது!
பேரனுடன் அழகான இடுகை. நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!
வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை பெரிதாக்கிப் பார்த்தீர்களா? மகிழ்ச்சி.
எங்கும் மகிழ்ச்சிஅலை பரவட்டும் இளமதி.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வால்ட் டிஸ்னி பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ரொம்ப அழகான கலகலப்பான இடம் என்று. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன்கள் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை கட்டிப் போட்டதுண்டே! அருமையான இடம். தங்களின் பேரனும் மிகவும் மகிழ்ந்திருப்பார். படங்கள் அனைத்தும் அழகு..(துளசி: முந்தியய பதிவின் படங்களூம் பார்த்தேன் ரொம்ப அழகு மனதை மயக்கும் படங்கள். அதுவும் அந்த மாலை நேர சூரியன் ஏரி படம் மிக மிக அருமை..சகோதரி)
பதிலளிநீக்குதுளதிசரன், கீதா
கீதா: கோமதிக்கா செமை இடம்..நீங்கள் எல்லோரும் மிகவும் குதூகலித்திருப்பீர்களே!! படம் எல்லாம் அழகு..குறிப்பாக உங்கள் பேரன் ரொம்பவே எஞ்சாய் செய்திருப்பார். டிஸ்னி என்றாலே குதூகலம்தான். இங்கு கூட டிஸ்னி வேர்ல்ட் என்று கிழக்குக்கடற்கரை சாலையில் இருக்கு ஆனால் அது விளையாட்டுகள் பெரும்பாலும். நானும் சில ரைட்ஸ் சென்றிருக்கிறேன் என்ராலும் எனக்கு வாட்டர் ரைட்ஸ் தான் பிடிக்கும். இங்கு...அங்கும் வாட்டர் விளையாட்டுகள் இருந்தனவா
இது போன்ற இடமெலாம் பார்க்க ஒரு நாள் போறாது...3, 4 நாட்களேனும் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.கனவுலகம் தான் ..நாங்களும் உங்களுடன் டிஸ்னி கனவுலகைத் தொடர்கிறோம் கோமதிக்கா...
வணக்கம், துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குடிஸ்னியின் கார்ட்டூனில் எல்லோரும் மகிழ்ந்தவர்கள் தானே!
முந்திய பதிவுக்கும் இங்கு கருத்து சொன்னது
மகிழ்ச்சி.
பேரன் முன்பே பார்த்து இருக்கிறான் எங்களுக்காக மீண்டும் காட்டி மகிழ்ந்தார்கள் கீதா. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து போனால் முழுவதையும் பார்க்கலாம்.
நமக்கு பார்த்தவரை மகிழ்ச்சி, திருப்த்தி.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி .
எவ்வொலோ அழகான இடம்....
பதிலளிநீக்குபடங்களும் வெகு நேர்த்தி...
உங்களுடன் இப்போ நாங்களும் டிஸ்னி சுத்தி பார்க்கிறோம் அம்மா...அருமை
புதிய உலகிற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. புகைப்படங்கள் மிகவும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ஐம்புலிங்கம் ஜயா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
டிஸ்னி உலகத்தைப் பற்றி விதம் விதமாக கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களுடைய பதிவு படங்களோடு சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது. நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன்
பதிலளிநீக்கு, வாழ்கவளமுடன்.
உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.
மிக அருமை. படங்களும் அழகோ அழகு! மிக அற்புதமாக வடிவமைத்திருக்கின்றனர். இங்கேயும், ஃப்ளோரிடாவிலும் இருப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். உங்களுடைய விளக்கமான பதிவு அருமை! தாமதமான வரவுக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குகுழந்தைகளுக்குக் குதூகலத்தைத் தரும் இடம். உடன் செல்லும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி. பகிர்வு அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎதற்கு மன்னிப்பு எல்லாம்?
ஊருக்கு போய் விட்டு வந்து விட்டீர்களா?
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆமாம் ராமலக்ஷ்மி, குழந்தைகளுக்கும் உடன் செல்லும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
அவர்கள் மகிழ்ச்சிதானே நம் மகிழ்ச்சி.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
சிறுவர்கள் மட்டுமல்ல அக்கா, பெரியவங்களும் பார்க்க ஆசைப்படுவாங்க.அவ்வளவு அழகா இருக்கு. நீங்க எழுத்திய விதம் மேலும் ஆவலை தூண்டுகிறது.
பதிலளிநீக்குநானும் வாசித்திருக்கிரேன் சாவியின் நாவல். வெரி இன்ஸ்டிரங்.
பேரன் கவின் அழகா போஸ் கொடுக்கிறார். அவருக்கு நல்ல ஜாலியாக இருந்திருக்கும். முகத்திலே தெரிகிறது. அழகான படங்கள் அக்கா.
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎன் போன்ற பெரியவர்களுக்கும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது என்பது உண்மை அம்மு.
சாவி அந்த ஊரைப் பார்க்காமல் எழுதியது மிகவும் ஆச்சிரியமான விஷயம்.
கவின் இரண்டு முறைப் பார்த்து இருக்கிறான், அவனுக்கு எங்களுக்கு காட்டுவதில் மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.