சனி, 3 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலகம் பகுதி- 2


இதற்கு முந்திய பதிவு டிஸ்னியின் கனவுலகம்  பதிவின் தொடர்ச்சி இந்தப் பதிவு .
இந்த பூச்சிகள் உலகத்தைச் சுற்றிப்பார்க்க நிறைய வண்டிகள் இருக்கிறது.
அதில் பயணம் செய்து பூச்சிகள் உலகத்தில் உள்ளே போனால் பூச்சிகளின் வித விதமான சத்தங்கள் ஆங்காங்கே வைத்து இருந்தார்கள்.


என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life  அது போலவே காட்சி அமைப்புகள் இருந்தன்.




பெரிய ஆப்பிளைப் பூச்சிகள் கபளீகரம் செய்த காட்சி
பட்டுப்புழு வண்டியில் பயணம்
மகிழ்ச்சியான பட்டுப் புழு

விளக்குகள் எல்லாம் பொன்வண்டுகள் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது , 
இலைகளைவைத்துத் தைத்துக் கூடு கட்டி இருக்கும்   தோற்றத்தில் சுழலும்  ராட்டினம்.


இதிலும் பயணித்தோம்.




நாங்கள் பயணித்த "லேடி பக் "(lady bug) வண்டி.



பெரிய மரங்கள் , பெரிய பழங்கள்

செயற்கை மரமும் இயற்கை மரமும் வானமும்

போகும் இடம் -மேப் -கையில் வைத்து இருக்கிறான்


வானம் முட்டும் டயர்கள் 

கிறிஸ்துமஸ் மரம் - பழைய டயர்களில்
ரேஸ் காருடன் பேரன் 
கார்   சவாரி முன் போகும் பேரனுக்குக் கை அசைப்பு
காரும் காரும் மோதுவது போலவே போகும் . சீட்பெல்ட் அணிந்து  
 கொள்ள வேண்டும்.  எல்லோரும் சீட் பெல்ட் 
மாட்டிக்கொண்டார்களா என்று வந்து செக் செய்த பின்னே கார் சவாரி ஆரம்பிக்கும். 



போனபதிவில் போடமுடியாத காணொளி -சின்ன காணொளிதான் பார்க்கலாம்.
தொடரும் 
வாழ்க வளமுடன்.



30 கருத்துகள்:

  1. அழகான படங்களுடன் எங்களையும் டிஸ்னிலாண்டில் சுற்றி வரச் செய்து விட்டீர்கள்...

    நான் மீண்டும் சிறுவன் ஆனேன்!... மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை.
    பேரனுடன் நாங்களும் குழந்தையாக கண்டு களித்தோம்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். நாங்களும் டிஸ்னியின் கனவுலகம் சென்ற உணர்வு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. சகோதரி/ கோமதிக்கா அருமை...உங்கள் உபயம் நாங்கள் டிஸ்னி சுத்திப் பார்த்தாச்சு..நீங்களும் எல்லா ரைட்ஸும் போனீங்களா....குழந்தைகளுடன் செல்லும் போது நாமும் குழந்தைகளாக மாறி மகிழ்வது மனதிற்கு மிக மிக நல்ல புத்துணர்வு!!! பேரனின் முகத்தில் மட்டுமல்ல உங்கள் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி!! அதைப் பார்க்க எங்களுக்கும் ஒரு புத்துணர்வு

    அருமை

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.

    நீங்களும் எல்லா ரைட்ஸும் போனீங்களா//

    ஓரளவு போனோம்.

    //குழந்தைகளுடன் செல்லும் போது நாமும் குழந்தைகளாக மாறி மகிழ்வது மனதிற்கு மிக மிக நல்ல புத்துணர்வு!!//

    ஆமாம் , நீங்கள் சொல்வது உண்மை. குழந்தைகள் விடுமுறைக்கு வரும் போது தான் எங்களுக்கு புத்துணர்வு கிடைத்த மாதிரி, புது வசந்தம் வந்தது போல்!
    குழந்தைகளாய் மாறி அவர்களுடன் விளையாடும் போது நாங்களும் குழந்தையாகி விட்டோம்.

    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  7. டோக்யோவில் 1987ல் டிஸ்னி லாண்ட் பார்த்திருக்கிறேன் அதற்கும் டிஸ்னியின்கனவுலகுக்கும் வித்தியாசமிருக்கும் போல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    கலிபோர்னியா மாநிலத்தில் ஆனஹிம் என்ற இடத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பூங்கா சார்.

    முதல் பதிவில் இதைப்பற்றிய விவரம் இருக்கிறது.
    ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரி அமைத்து இருக்கிறார்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா கோமதி அக்கா.. அத்தனை படங்களும் சூப்பரோ சூப்பர் அண்ட் வெரி கிளியர்... நேரில் பார்ப்பது போலவே இருக்கு.. எதைச் சொல்ல எதை விட... பேடிபக், பட்டுப்புளு.. அப்பிள் அத்தனையும் கொள்ளை அழகு.

    பதிலளிநீக்கு
  10. கோமதி அக்கா.. பெரிதாக சுழன்று அடிப்பது ஒன்றிலும் ஏறவில்லை:), பேபி ரைட்ஸ் லயே நல்ல ஸ்மாட்டா ஏறி இருந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா... இவை அத்தனையும் பரிஸ் லயும் இருக்கு.. என் பக்கத்தில் படம் போட்டேன் முன்பு... எனத்தான் நினைக்கிறேன்....

    டிஷ்னி என்றாலே குழந்தைகளின் கனவுலகம் தானே அருமை...

    பதிலளிநீக்கு
  11. வீடியோக்கள் நன்றாக இருக்கு.. முதலாவது வீடியோ இன்னும் கொஞ்சம் எடுத்திருக்கலாம்.. அவர் ஏதோ எடுத்து மஜிக் செய்ய தொடங்குவதுபோல இருக்கு பட் வீடியோ முடிஞ்ஞ்ஞ்ஞ்:))

    ஹா ஹா ஹா மனதுக்கு இதம் தரும் மகிழ்ச்சியான சுற்றுலா.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
    உங்களின் உற்சாகமான பின்னூட்டம் மகிழ்ச்சி
    அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ
    முதலில் இட்ட கருத்துரை வந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

    சுழன்று கொண்டே இருந்தது.

    அழகான படங்கள் இதில் டயர் மிகவும் அருமை.

    காணொளி புகைப்படம் போலவே நிற்கிறதே...

    பதிலளிநீக்கு
  14. எத்தனை டிசைன்... எத்தனை கற்பனை...! அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. //கோமதி அக்கா.. பெரிதாக சுழன்று அடிப்பது ஒன்றிலும் ஏறவில்லை:), பேபி ரைட்ஸ் லயே நல்ல ஸ்மாட்டா ஏறி இருந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா.//


    அதிரா வயதானால் பேபிதானே ! அதுதான் அக்கா பேபி ரைட்ஸில் மட்டும் ஏறினாள்.

    வீடியோ எடுத்து கொண்டு இருக்கும் போது கூப்பிட்டு விட்டார்கள் அதனால் பாதியில் நிறுத்தி விட்டு போய் விட்டேன்.
    வீதி நாடகம் என்பத்ற்கு கொஞ்சம் எடுத்தேன்.
    நிறைய இடங்கள் ஒரு நாளில் பார்த்து முடிக்க வேண்டுமே!
    மனது இதம் தரும் சுற்றுலாதான்.
    கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தேவகோட்டை ஜி,, வாழ்க வளமுடன்.
    காணொளி வரவில்லையா? ஏன் என்று தெரியவில்லையே, நெட் ஸ்லோவாக இருந்தால்
    வராது. அதிரா பார்த்து கருத்து சொல்லி விட்டார்களே.
    படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நல்ல கற்பனை திறனால் தானே இந்த பூங்கா உருவாக்கி இருக்கிறார்.
    அத்தனை பேரின் உழைப்பும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    அத்தனை படங்களையும் பார்த்தீர்கள் , காணொளி பார்க்கவில்லையா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. படங்கள் எல்லாம் அழகு அழகோ அழகு .பொன்வண்டு விளக்கு ,புழு வண்டி புழுக்களால் உண்ணப்பட்ட ஆப்பிள் .இல்லை வடிவ ராட்டின நாற்காலி எல்லாம் பிள்ளைகளுக்கு எளிதில் பதியக்கூடிய விஷயங்கள் அதை கற்பனைத்திறனோடு செய்திருக்காங்க .
    அந்த வானளாவிய டயர்கள் ,மற்றும் கிறிஸ்துமஸ் மரம் நல்லதொரு ஐடியா

    பதிலளிநீக்கு
  19. காணொளிகள் இரண்டும் பார்த்தேன் .இரண்டாவதில் குட்டிஸ் ஒரே ஹாப்பியா ஆட்டம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    கற்பனை திறனோடு செய்து குழந்தைகளை கவர்ந்து இருக்கிறார்கள். குட்டிஸ் ஆடுவதுல் பேரனும் ஆடுகிறான். முதல் பதிவிலும் பேரன் ஆடுவதை பதிவேற்றி உள்ளேன்.
    படங்களை ரசித்து குறிப்பிட்டு கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி. நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  21. ///அதிரா வயதானால் பேபிதானே ! அதுதான் அக்கா பேபி ரைட்ஸில் மட்டும் ஏறினாள்.///

    ஹா ஹா ஹா உங்களுக்கு ஒன்றும் வயதாகவில்லை.. நல்ல யங்காகவே இருக்கிறீங்க.. ச்சும்மா நீங்களே உங்களுக்கு வயதாகி விட்டது என ஜொள்ளக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்..:). அதை நாங்கதான் சொல்லோணும்.

    பதிலளிநீக்கு
  22. அதிரா , எனக்கு வயதாகவில்லை என்று சொன்னதும் அப்படியே குளிர்ந்து போனேன்.
    பேபி என்று சொல்லி விட்டேன், அடுத்த கட்டம் சுழன்று அடிக்கும் ரைட்ஸ் சரியா?
    மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  23. புகைப்படங்கள் நினைவுகளின் மறு ஊர்வலம் என்பது எவ்வளவு உண்மை!!...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் தேவகோட்டை ஜி, காணொளிகள்
    பார்த்தீர்களா? மீண்டும் வந்து நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான், புகைப்படங்கள் நினைவுகளின் மறு ஊர்வலம் தான்.
    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ///அடுத்த கட்டம் சுழன்று அடிக்கும் ரைட்ஸ் சரியா?///

    ஹா ஹா ஹா ஹையோ பிறகு கோமதி அக்காவுக்கு தலைசுத்தி மயக்கம் வந்தால் எல்லோரும் அதிராவை எல்லோ கலைக்கப்போகினம்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  27. அதிரா, பயபடப் வேண்டாம் நான் ஜெயிண்ட்வீல் படம் மட்டும் தான் காட்டுவேன்.
    அதில் ஏறவில்லை சரியா?
    மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. அமைப்பை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பழங்கள்,பூச்சி அரித்த பழங்கள்.லேடிபக், என அனைத்துமே அழகோ அழகு. நாங்களும் உங்களுடன் பார்த்த உணர்வு ஏற்பட்டது. அவ்வளவு அழகா இருக்கு படங்கள். காணொளியும் பார்த்தேன். அழகா இருக்கு. அருமையாக டான்ஸ் ஆடுகிறார் கவின்குட்டி. சூப்பர்மா.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    பூச்சிகள் உலகம் மிகவும் ரம்மியமான உலகம்.
    படங்கள் , காணொளியை கண்டு கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
    கவின் இப்போது டான்ஸ் கற்றுக் கொள்கிறான்.

    பதிலளிநீக்கு