விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவாய் 'சதுர்த்தி எண்ணங்கள்' என்ற பதிவில்
பிள்ளையார் செய்ய வேண்டுமா என்று பாலசுப்பிரமணியம் சார்
ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார். நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அழகான எளிமையான செய்முறை. அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் என் பேரனும் இதே போன்ற பிள்ளையார் செய்திருக்கிறான் என்று போட்டிருந்தேன்.
சார் சொல்வது போல் சில பதிவுகள் நம்மை எழுத தூண்டும் பதிவுகளாய் அமையும் என்பது உண்மையே!
என் பேரன், ஓவியம், கைவேலைகள் கற்றுக் கொள்கிறான். அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் பிள்ளையார் செய்ய.அவன் செய்த பிள்ளையார் தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு.
என் மகன், சிறுவனாக இருக்கும்போது நான் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டு இருக்கும்போது கொஞ்சம் மாவு எடுத்துப் போவான், அதில் வித விதமாய்ப் பொம்மைகள் செய்வான். பிள்ளையார் சதுர்த்திக்குக் களிமண் பிள்ளையார் வாங்கப் போனால், கூடவே கொஞ்சம் களிமண் வாங்கி வருவான். அதை வைத்துச் சின்ன பிள்ளையார் செய்து விடுவான். அதற்குத் தனியாக அவன்சதுர்த்தி கொண்டாடுவான்.சாக்பீஸில் நிறைய உருவங்கள் செய்வான்.படம் பார்த்தால் உடனே அதைப்பார்த்து வரைவான்.
இப்போதும் ஓய்வு நேரத்தில் கேன்வாஸ் ஓவியம் வரைவான் அதை நண்பர்கள் வீட்டு விழாக்களுக்கு பரிசளித்து விடுவான். எங்களுக்கும், கயிலை படம், நடராஜர் படம் வரைந்து தந்து இருக்கிறான்.
பனி சிற்பம். உட்லை வருத்திக் கொண்டு செய்த அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’
//என் மகன் வசிக்கும் நியூஜெர்சியில் மூன்றாம் தேதிஅன்று(3/1/2014) பனிப் பொழிவு இருந்திருக்கிறது. அந்தப் பனிப்புயலுக்கு 'ஹெர்க்குலிஸ்’ என்று பெயர் இட்டு இருக்கிறார்கள். பனி விழுந்த சமயத்தில் என் மகன் அதைச் சேகரித்து , சிவலிங்க உருவம் செய்து, ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’ என்று பெயரிட்டு வழிபட்டான். போனமுறை பனிக்காலத்தில் பனி மனிதன் உருவமும், அதற்கு முந்தைய தடவை ’பனிப்புயல் காத்த விநாயகர்’ உருவம் செய்து இருந்தான்.
. பனிபுயல் காத்த விநாயகர்
இப்போது அப்பாவைப்போல் என் பேரனும் படம் பார்த்து வரைகிறான்
.
கேன்வாஸ் ஓவியம் - வானம், நிலா, அருவி.
பேரன் கவினுக்கும் ஓவியம் வரைய ஆர்வம் இருந்ததால் அதை மேலும் மெருகேற்ற ஓவியப்பள்ளியில் சேர்த்து இருக்கிறான் என் மகன். அவனும் அழகாய் வரையக் கற்றுக் கொண்டு இருக்கிறான்.அங்கு தான் இந்தப் பிள்ளையாரைச் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
Modeling kids clay யில் செய்து இருக்கிறான் பிள்ளையாரை.
பிள்ளையார், குழந்தைகளின் நண்பன். இந்த குட்டி நண்பன் கவினைக் காக்கவேண்டும் நாளும்!
பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, மோதகம் என்று அம்மா செய்து தந்ததை ஒன்று ஒன்று வைத்து இருக்கிறான் , அப்புறம் சாப்பிட்டு விட்டு எது வேண்டும் என்று கேட்கிறாரோ அதைக் கொடுப்பானாம் மீண்டும். (ஏன் 1,1,1,1 என்று கேட்டதற்கு பதில் அவன் சொன்னது)
என் பிள்ளையாருக்கும் குடை வேண்டுமே!
தேவகோட்டைஜி (கில்லர்ஜி) பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்? என்று அருமையான விழிப்புணர்வுப் பதிவு எழுதி இருக்கிறார். பண்டிகைகள் நாளுக்கு நாள் ஆடம்பரமாய்ப் போவதை அழகாய் சொல்லி இருக்கிறார். தேவகோட்டைஜியும் அழகான பிள்ளையார் காணொளி போட்டு இருக்கிறார். 2015 ல் புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கியப் போட்டிக்கு எழுதிய பதிவு அது.
அவர் சொல்வது போல் பண்டிகைகள் போகும் போக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
அருகம்புல், எருக்கம் பூ வைத்து எளிமையாகக் கும்பிட்டாலே போதும், பிள்ளையார் அருளைத் தருவார்.
அவருக்கு தொலைக்காட்சியில் 21 வகையான இலைகளை வைத்து வணங்கினால் நல்லது, அவை இந்த இந்த பலனைத் தரும் என்று ஒரு சோதிடர் சொன்னார்.(அப்படியாவது அந்த மரம் செடிகளை வளர்க்கட்டும். அதுவும் நல்லதுதான்.)
அவர் சொன்னதை வைத்துக் கொண்டு சிலர் அந்த 21 இலைகளைச் சேகரித்து பேக் செய்து," விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் எங்களிடம் கிடைக்கும், தேவையானவர்கள் எங்கள் அலுவலக தொலைபேசியில் புக்கிங் செய்யுங்கள் 22, 23 தேதிகளில் புக் செய்பவர்களுக்கே கிடைக்கும்."
என்று துண்டு விளம்பரம் வீடு வீடாய் போட்டுச் சென்றார்கள். விழாவிற்கு முந்தின நாள் கொண்டு வந்து கொடுத்தபின் பணம் கொடுக்கலாம் என்று போட்டு இருந்தது எவ்வளவு பணம் என்று சொல்லவில்லை. இலவச டோர் டெலிவரி என்று போட்டு இருந்தார்கள்.
21 பழங்கள் , 21 பூவும் அந்த ஜோதிடர் சொன்னார் அதை அவர்கள் சேகரித்து டோர் டெலிவரி செய்வதாக சொல்லவில்லை. சேகரித்த பின் யாரும் வாங்கவில்லை என்றால் கஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் போலும்.
பண்டிகைகள் எளிமையாகக் கொண்டாட முடியாத அளவு விலைவாசிஏறி கிடக்கிறது. நாவல்பழம் எளிமையான பழம். முருகன் ஒளவைக்குக்
கொடுத்த காலம். இப்போது 100 கிராம் 30 ரூபாய். விளாம்பழம் இரண்டு 80 ரூபாய் , நாலு சின்ன பேரிக்காய் 80 ரூபாய், கொய்யா கால்கிலோ வாங்கினால் 30 ரூபாய் அரைக்கிலோ வாங்கினால் 50 ரூபாய் என்கிறார்கள் , எல்லாப் பழங்களிலும் ஒன்று ஒன்று போடு என்று சொன்ன அம்மாவைத் திட்டுகிறார்கள் "எந்த காலத்தில் இருக்கிறே ! ஒவ்வொரு பழமும் ஓவ்வொரு ரேட்டு முடிந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி செய் "என்கிறார்கள். பெரிய பழக்கடையிலும் வியாபாரம் சூடு பறக்கிறது.
பண்டிகைக்காலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைப் பக்தியோடு இணைத்து மக்களை உண்ண வைத்தார்கள், உடல் நலத்திற்கு.
கால சீதோஷணத்திற்கு ஏற்ற மாதிரி அவை இருக்கும்.
எள் உருண்டைக்கு எள் வாங்கி நாமே செய்தால் 60 ரூபாய்க்கு நிறைய உருண்டை வரும். அதுவும் இப்போது இயற்கை அங்காடியில் கிடைக்கிறது , ஒரு சின்ன டப்பாவில் 7 உருண்டைகள் அடங்கியதின் விலை 60 ரூபாய்.
முடியாதவர்களுக்கு இதனால் நன்மைதான், காலம் மாறுது நீயும் மாறு இல்லையென்றால் கஷ்டம். இப்படிச் சொல்வது என் கணவர்!
வாழ்க வளமுடன்!

அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’ எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். //
//என் மகன் அமெரிக்காவிலிருந்து படங்கள் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து மகிழ்கிறார்கள் மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். நாமும் பிராத்தனை செய்வோம்.//
. பனிபுயல் காத்த விநாயகர்
இப்போது அப்பாவைப்போல் என் பேரனும் படம் பார்த்து வரைகிறான்
.
கேன்வாஸ் ஓவியம் - வானம், நிலா, அருவி.
பேரன் கவினுக்கும் ஓவியம் வரைய ஆர்வம் இருந்ததால் அதை மேலும் மெருகேற்ற ஓவியப்பள்ளியில் சேர்த்து இருக்கிறான் என் மகன். அவனும் அழகாய் வரையக் கற்றுக் கொண்டு இருக்கிறான்.அங்கு தான் இந்தப் பிள்ளையாரைச் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
Modeling kids clay யில் செய்து இருக்கிறான் பிள்ளையாரை.
பிள்ளையார், குழந்தைகளின் நண்பன். இந்த குட்டி நண்பன் கவினைக் காக்கவேண்டும் நாளும்!
பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, மோதகம் என்று அம்மா செய்து தந்ததை ஒன்று ஒன்று வைத்து இருக்கிறான் , அப்புறம் சாப்பிட்டு விட்டு எது வேண்டும் என்று கேட்கிறாரோ அதைக் கொடுப்பானாம் மீண்டும். (ஏன் 1,1,1,1 என்று கேட்டதற்கு பதில் அவன் சொன்னது)
என் பிள்ளையாருக்கும் குடை வேண்டுமே!
தேவகோட்டைஜி (கில்லர்ஜி) பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்? என்று அருமையான விழிப்புணர்வுப் பதிவு எழுதி இருக்கிறார். பண்டிகைகள் நாளுக்கு நாள் ஆடம்பரமாய்ப் போவதை அழகாய் சொல்லி இருக்கிறார். தேவகோட்டைஜியும் அழகான பிள்ளையார் காணொளி போட்டு இருக்கிறார். 2015 ல் புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கியப் போட்டிக்கு எழுதிய பதிவு அது.
அவர் சொல்வது போல் பண்டிகைகள் போகும் போக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
அருகம்புல், எருக்கம் பூ வைத்து எளிமையாகக் கும்பிட்டாலே போதும், பிள்ளையார் அருளைத் தருவார்.
அவருக்கு தொலைக்காட்சியில் 21 வகையான இலைகளை வைத்து வணங்கினால் நல்லது, அவை இந்த இந்த பலனைத் தரும் என்று ஒரு சோதிடர் சொன்னார்.(அப்படியாவது அந்த மரம் செடிகளை வளர்க்கட்டும். அதுவும் நல்லதுதான்.)
அவர் சொன்னதை வைத்துக் கொண்டு சிலர் அந்த 21 இலைகளைச் சேகரித்து பேக் செய்து," விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் எங்களிடம் கிடைக்கும், தேவையானவர்கள் எங்கள் அலுவலக தொலைபேசியில் புக்கிங் செய்யுங்கள் 22, 23 தேதிகளில் புக் செய்பவர்களுக்கே கிடைக்கும்."
என்று துண்டு விளம்பரம் வீடு வீடாய் போட்டுச் சென்றார்கள். விழாவிற்கு முந்தின நாள் கொண்டு வந்து கொடுத்தபின் பணம் கொடுக்கலாம் என்று போட்டு இருந்தது எவ்வளவு பணம் என்று சொல்லவில்லை. இலவச டோர் டெலிவரி என்று போட்டு இருந்தார்கள்.
21 பழங்கள் , 21 பூவும் அந்த ஜோதிடர் சொன்னார் அதை அவர்கள் சேகரித்து டோர் டெலிவரி செய்வதாக சொல்லவில்லை. சேகரித்த பின் யாரும் வாங்கவில்லை என்றால் கஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் போலும்.
பண்டிகைகள் எளிமையாகக் கொண்டாட முடியாத அளவு விலைவாசிஏறி கிடக்கிறது. நாவல்பழம் எளிமையான பழம். முருகன் ஒளவைக்குக்
கொடுத்த காலம். இப்போது 100 கிராம் 30 ரூபாய். விளாம்பழம் இரண்டு 80 ரூபாய் , நாலு சின்ன பேரிக்காய் 80 ரூபாய், கொய்யா கால்கிலோ வாங்கினால் 30 ரூபாய் அரைக்கிலோ வாங்கினால் 50 ரூபாய் என்கிறார்கள் , எல்லாப் பழங்களிலும் ஒன்று ஒன்று போடு என்று சொன்ன அம்மாவைத் திட்டுகிறார்கள் "எந்த காலத்தில் இருக்கிறே ! ஒவ்வொரு பழமும் ஓவ்வொரு ரேட்டு முடிந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி செய் "என்கிறார்கள். பெரிய பழக்கடையிலும் வியாபாரம் சூடு பறக்கிறது.
பண்டிகைக்காலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைப் பக்தியோடு இணைத்து மக்களை உண்ண வைத்தார்கள், உடல் நலத்திற்கு.
கால சீதோஷணத்திற்கு ஏற்ற மாதிரி அவை இருக்கும்.
எள் உருண்டைக்கு எள் வாங்கி நாமே செய்தால் 60 ரூபாய்க்கு நிறைய உருண்டை வரும். அதுவும் இப்போது இயற்கை அங்காடியில் கிடைக்கிறது , ஒரு சின்ன டப்பாவில் 7 உருண்டைகள் அடங்கியதின் விலை 60 ரூபாய்.
முடியாதவர்களுக்கு இதனால் நன்மைதான், காலம் மாறுது நீயும் மாறு இல்லையென்றால் கஷ்டம். இப்படிச் சொல்வது என் கணவர்!
வாழ்க வளமுடன்!
உங்கள் பெயரன் கவின் செய்த பிள்ளையார் மிகவும் அழகாக மெழுகு போன்று வழு வழுப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவினுக்கு வாழ்த்துகள்.
எனது பதிவின் சுட்டியை கொடுத்தமைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?
இந்த சுட்டி செல்லவில்லையே.....
த.ம.1
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇப்போது பாருங்கள் சுட்டி செல்கிறது.
நெட் போய் போய் வந்த போது சுட்டிக்கு கொடுத்தது பதிவு ஆக வில்லை போலும்.
இப்போது போகிறது.
கவினுக்கு வாழ்த்து சொன்னத்ற்கு நன்றி.
சுட்டியைப் பற்றி சுட்டியதற்கு நன்றி.
ஆஹா பனிப்பிள்ளையார், சிவலிங்கம் அத்தனையும் அழகு.
பதிலளிநீக்குபேரனின் கை வண்ணங்கள் மிக அழகு.. குட்டியாக இருக்கிறார் இப்பவே இவ்வளவு நன்றாக செய்கிறார்.. ஊக்கம் கொடுத்தான் மிக நல்ல இடத்துக்கு வருவார் வரைதல் கலையில்.
என்னாது கில்லர்ஜி க்கு பிள்ளையார் பெரியப்பாவோ?:) நான் புத்தகத்தில் அப்பூடிப் படிக்கல்லியே:)... அப்போ பிள்ளையாரின் சொந்த ஊரும் தேவகோட்டையோ?:)
பதிலளிநீக்குஏன் ராமர் அயோத்தியில் பிறக்கும்போது...
நீக்குபிள்ளையார் தேவகோட்டையில் பிறக்க கூடாதா ?
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபிள்ளையார் சதுர்த்தி பிள்ளையார் பதிவு படிக்க வரவில்லையே!
இந்த பதிவில் மகன், பேரன் செய்தவை வந்தது.போன பதிவில் என் கணவர் செய்த பிள்ளையார் படங்களை போட்டு இருந்தேன்.
//ஊக்கம் கொடுத்தான் மிக நல்ல இடத்துக்கு வருவார் வரைதல் கலையில்//
நீங்கள் சொல்வது உண்மைதான்.
தேவகோட்டைஜி ஏன் பெரியப்பா என்கிறார் என்பதை அவர் பதிவின் பின்னூட்டத்தில் சொல்கிறார் படித்துப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅதிராவிடம் நல்ல கேள்வி.
அதிரா, சொல்லுங்கள் பதிலை.
பனியில் சிலைகளும், கவினின் ஓவியமும் வெகு அழகு.
பதிலளிநீக்குகவினுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பனிச்சிற்பங்கள் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபனிச்சிற்பங்க்களை பாராட்டியதற்கு நன்றி.
கவினின் பிள்ளையார் செம க்யூட்!! அழகோ அழகு!!! அது போன்று தங்கள் மகனின் கைவண்ணங்களான சிவலிங்கம் பிள்ளையார் எல்லாம் வெகு சிறப்பு. கவின் பார்த்துவ் வரைந்த ஓவியமும் ஹையோ செம!!! அப்படியே வரைகிறாரே! மூன்று தலைமுறைகள்!! உங்கள் கணவர், உங்கள் மகன், பேரன்!!! அப்பா 8 அடி...மகன் 16 அடி...பேரன் 32 இல்லை இல்லை 64 ம் இல்லை இன்னும் இன்னும் மேலே செல்வார்!!!!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!
பதிலளிநீக்கு-துளசி, கீதா
கீதா: விளாம்பழம் மிகவும் பிடிக்கும் இப்போது அதன் விலை ஒன்றின் விலை 15, 20 ரூபாய் விற்கிறது....ம்ம்ம் நீங்கள் சொல்லுவது போல் விலை ரொம்பவே ஏறிவிட்டது. பண்டிகைகளும் வியாபாரமாகிவிட்டது!
வணக்கம் துளசிதரன் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இருவரின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கவினின் உயர்வுக்கு உதவும்.
மனமார்ந்த நன்றி.
பண்டிகைகள் சமயம் விலைவாசி ஏறுவதற்கு காரணம் இதை வைத்து கண்டிப்பாய் விழா கொண்டாட வேண்டும் என்று நாம் நினைப்பதால்தான். வியாபாரிகள் என்ன விலையை உயர்த்தினாலும் இவர்கள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்கள் உயர்த்துகிறார்கள் நாளுக்கு நாள்.
ஏழைகளின் பாடு திண்டாட்டம் ஆகிறது. கூறு கட்டி வைத்து இருக்கும் பழங்களை வாங்கி போகிறார்கள் அதில் எவ்வளவு தேறும் தெரியாது.
வெள்ளிக் கிழமை சந்தை சமயம் வாடிய காய் இதை யார் வாங்குவார்கள் என்று நினத்தால் வாங்கி போக ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது மிக வேதனையாக இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .
தாத்தாவின் ஜீன் பேரனிடம். சபாஷ்.
பதிலளிநீக்குபூஜை அன்று டைஃபாயிடில் இளைத்த கரும்புத்துண்டு, கம்பு, சின்னஞ்சிறிய ஆப்பிள் ஒன்று, சின்னஞ்சிறிய கொய்யா ஒன்று - இந்த செட் 100 ரூபாய் சென்னையில்!
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசெட் கொடுத்தார்களே சென்னையில்!
இங்கு கால்கிலோ, அரைக்கிலோ வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மாயவரத்தில் திருவாதிரை களிக்கு 21 காய் போட்டு கூட்டு செய்ய எல்லாகாய்களும் துண்டு போட்டு பாக்கெட் போடுவார்கள், ஆடிபெருக்கு, பிள்ளையார் சதுர்த்திக்கு எல்லா பழங்களும் ஒவ்வொன்று போட்டு ஒரு பாக்கெட் விற்பார்கள்.
பேரனை பாராட்டியதற்கு நன்றி.
கணவர் மகன் பெயரன் அனைவரும் அசகாய வித்தகர்கள் வாழ்த்துகள் பதிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று கிடைப்பதுசந்தோசம்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி.
வா...வ் சூப்பரா பிள்ளையாரை செய்த்திருக்கார். அவ்விநாயகன் உங்க பேரனுக்கு நல்லாசி வழங்க வேண்டுகிறேன். அழகாவும் ஓவியம் வரைந்திருக்கார். என்னோட வாழ்த்துக்கள் கவின்குட்டி. இன்னும் நன்றாக படித்து,நல்ல நிலைக்கு வரவேண்டும்.
பதிலளிநீக்குமகனும் அந்த இடத்தில்,சூழ்நிலைக்கேற்ப சிவலிங்கம்,பிள்ளையார் அழகாக செய்த்திருக்கார். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇங்கு பனிபொழிவு என்பது சாதாரணமாகிவிட்டது. இன்னும் 2,3,மாதத்தில் ஆரம்பிக்கும் குளிர்,தொடர்ந்து பனிப்பொழிவு..
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தை பேரனுக்கு அனுப்பி விட்டேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி அம்மு.
உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇப்போது இருக்கும் அரிசோனாவில் பனிப்பொழிவு இல்லை.
முன்பு இருந்த நியூஜெர்சியில்தான் கஷ்டமான சூழ்நிலையை அவர்களுக்கு பிடித்த பொழுது போக்காய் மாற்றி மகிழ்ந்தார்கள்.
உங்களுக்கு பனிப்பொழிவு ஆரம்பித்து விடும். குளிரும் நிறைய இருக்கும்.
மகனுக்கு வாழ்த்துக்கள் சொன்னத்ற்கு மகிழ்ச்சி அம்மு.
பனிப்புயல் காத்த வினாயகர் - ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் மைனஸ் 20 டிகிரிக்கு உள்ள நாடுகள்ல (அந்த சமயத்துல) ஒரு மாசமாவது இருக்கணும்னு எண்ணம். பார்க்கலாம் இந்தப் பிறவியில் நடக்கிறதா என்று.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பனி விநாயகர்....
பதிலளிநீக்குகவின் தம்பியின் படங்களும்...
அழகான பிள்ளையார் என அனனத்தும் அருமை அம்மா..
கவின்குட்டி எனது வாழ்த்துக்களும்....
ஆலங்குடி திருக்கோயிலில் கலங்காமல் காத்த விநாயகர்..
பதிலளிநீக்குஅங்கே அமெரிக்காவில் பனிப்புயல் காத்த விநாயகர்..
அழைத்தவர் குரலுக்கு கண்ணன் மட்டுமல்ல கணபதியும் வந்து நிற்பார்..
தங்கள் பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..
வணக்கம் அனுராதா பிரேம்குமார் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், கவினுக்கு அளித்த வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், பேரனுக்கு அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மிகநன்று
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ச. இரமேஷ் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பனிப்புயலையும் நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்ட உங்கள் மகன், மருமகள் இருவருக்கும் பாராட்டுகள். எந்தச் சூழ்நிலையிலும் ஸ்திரமாக இருப்பார்கள். பேரனிடமும் அத்தகைய திறமையைப் பார்த்தால் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை! தந்தை, பாட்டனாரின் திறனில் அவனுக்கும் பங்கு வராதா என்ன? அவன் கைத்திறனும் வியக்க வைக்கிறது. தொடர்ந்து குழந்தையை ஊக்கப்படுத்தி வரும் பெற்றோருக்கும் வாழ்த்துகள். அருமையான சிற்பங்கள், பேரனின் ஓவியமும் அழகு!
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், மகன், மருமகள், பேரனை வாழ்த்தியதற்கு நன்றி.
ஹெர்க்குலேஸ்வரர் அருளைப் பெற்றோம். முந்தைய பனி மனிதன், விநாயகர் பகிர்வுகள் நினைவில் உள்ளன. விநாயகர் சாப்பிடச் சாப்பிட ஒன்று ஒன்றாகப் பிரசாதம் கொடுக்க காத்திருப்பதாகப் பேரன் கூறிய பதில் இரசிக்க வைத்தது:). அவனது கலைத் திறனுக்குத் தொடந்து ஊக்கம் கொடுத்து வாருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், பேரனின் பேச்சை ரசித்தமைக்கும் நன்றி.
தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறோம் பேரனுக்கு.
நமக்கு கதை சொல்லும் போதே படம் வரைந்து தான் கதை சொல்வான்.
படங்கள் அருமை பனிப் புயல் கொடுமை த ம 1
பதிலளிநீக்குவணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கல் கருத்துக்கு நன்றி.
குடும்பத்திலேயே கலாரசனை ஊறியிருக்கிறது. பேரன் செய்த பிள்ளையாரும்...மகன் செய்த பனிக்கடவுளர்களும் என்ன அழகு.. இனிய வாழ்த்துகள் மேடம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், இனிய வாழ்த்துக்களைக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபேரனுக்கு வாழ்த்துகள். விநாயகரின் நல்லாசிகள் என்றும் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்கு