பனி விநாயகர் உருவாகி கொண்டு இருக்கிறார்
பனி விநாயகர் உருவாகி விட்டார்
பனி விநாயகருக்கு அலங்காரம்
பனி விநாயகருக்கு சுண்டல் நைவேத்தியம்
பனி விநாயகருக்கு ஆரத்தி
என் மகன் அமெரிக்காவிலிருந்து படங்கள் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து மகிழ்கிறார்கள் மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். நாமும் பிராத்தனை செய்வோம்.
என் மகன் டெல்லியில் வேலை பார்க்கும் போது தன் அக்காவோடு நைனித்தாலுக்கு பனி மலையைப் பார்க்கப் போய் வந்தான். செங்குத்தான மலை ஏறி மேலே மேலே போனாத்தான் மணல் மாதிரி பனி பொழிவைப் பார்க்க முடியுமாம். ஹிமாலய மலையழகை ரசித்து ஒருவர் மேல் ஒருவர் பனியைப் போட்டு விளையாடி மகிழந்தார்களாம். நிறைய பனி பொழிவைப் பார்க்க வேண்டும் என்றால் இந்தியாவின் சுவிட்சர்லாந்து மணாலி போய் பார்க்க வேண்டும் என்று பார்த்து களித்து வந்தார்கள் எப்போதாவது இப்படி ரசிக்கலாம், ஆனால் தினம் பனி பொழிவில் வாழ்வது சற்று சிரமம் தான். ஒவ்வொரு வீட்டு முன்னாலும் இப்படி விழுந்து கிடக்கும் பனியில் சிறபங்கள் செய்து மனதை லேசாக்கி கொள்கிறார்கள். வீடு உள்ளோருக்கு குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹீட்டர் ,ஆடைகள் எல்லாம் இருக்கு. ஆனால் வீடு இல்லாதவர்களுக்கு இந்த சமயத்தில் இருப்பிடம், கம்பிளிகள் குளிர் ஆடைகள் எல்லாம் கொடுத்து உதவுமாம் அரசு. சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ரசித்து இன்புற்று வாழவேண்டும்.
அடாது பெய்யும் பனிப்பொழிவினையும் பொருட்படுத்தாது இப்படித்தான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் காட்டி இருக்காங்க! நல்ல பகிர்வும்மா. நன்றி.
பதிலளிநீக்குவிநாயகர்.. சூப்பர் நாயகர்தான்..
பதிலளிநீக்குபனிச்சிற்பம் மிக அழகு... பகிர்வுக்கு நன்றி.....
பதிலளிநீக்குபனி விநாயகர் அழகு.
பதிலளிநீக்குஅழகாகச் செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமிக அழகான பிள்ளையார்..:)
பதிலளிநீக்குநல்ல பெயரும் கூட, சுண்டல் பெற்று ஆரத்தி ஒற்றிக்கொண்டேன்..
பிள்ளையார் சூப்பர்.
பதிலளிநீக்குகலக்குறாரு பனிப்புயல் விநாயகர் ;))
பதிலளிநீக்கு. சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ரசித்து இன்புற்று வாழவேண்டும்.
பதிலளிநீக்கு......உண்மை... சரியா சொல்லி இருக்கீங்க...
பனியில் உருவாக்கிய விநாயகரிடம் வைத்த பொதுநலப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனிருக்கும். மிக அருமையான பகிர்வு. விநாயகர் வெகு அழகு.
பதிலளிநீக்குபனிவிநாயகர் மனதை உருக்குகிறார்.
பதிலளிநீக்குபடப் பகிர்வுக்கு நன்றி.
எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டால் நல்லது தானே வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
விநாயகர் சூப்பர் நாயகர்தான் மாதவன்.
பதிலளிநீக்குநன்றி மாதவன்.
நன்றி கருணாகரசு.
பதிலளிநீக்குநன்றி புவனேஸ்வரி.
பதிலளிநீக்குநன்றி மாதவி, உங்கள் முதல் வருகைக்கு.
பதிலளிநீக்குமுத்துலட்சுமி,சுண்டல்பெற்று ஆரத்தி எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி அமுதா கிருஷ்ணா.
பதிலளிநீக்குநன்றி கோபிநாத்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா.
பதிலளிநீக்குஆம், ராமலட்சுமி நீங்கள் சொன்ன மாதிரி பொது நலப் பிராத்தனைக்கு நிச்சியம் பலனிருக்கும்.
பதிலளிநீக்குநன்றி ராமலட்சுமி.
மனதை உருகவைப்பது தானே விநாயகரின் அருள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
விநாயகர் ரொம்ப அழகா இருக்கார். கடும் பனிப்பொழிவினையும் இப்படி பாசிட்டிவாக மாற்றிய உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் அம்மா.
பதிலளிநீக்குவாங்க ஆதி, உங்கள் வழ்த்துக்களை மகன், மருமகளுக்கு தெரிவித்து விடுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஆதி.
பனிப்புல் விநாயகர் அருமையாக உள்ளது அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கம்மா....
பதிலளிநீக்கு//கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து //
பதிலளிநீக்கு”இடுக்கண் வருங்கால் நகுக” என்பதைச் செய்து காட்டுகிறார்கள்!! பாஸிடிவ் திங்கிங்!!
வாங்க மாணவன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஹீஸைனம்மா, எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வது தானே நல்லது.
பதிலளிநீக்குநன்றி ஹீஸைனம்மா.
பனி விநாயகர் அழகு....
பதிலளிநீக்குமிக அழகாக செய்து இருக்காங்க!
நன்றி பிரியா.
பதிலளிநீக்குபனி விநாயகர் ரொம்ப அழகு கோமதி..:)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
பதிலளிநீக்குபனி வினாயகர் கொள்ளை அழகு.
பதிலளிநீக்குவிநாயகர் ரொம்ப அழகா இருக்கார். நீங்கள் எழுதி இருக்கறது நூத்துக்கு நூறு உண்மை.
பதிலளிநீக்குவாங்க லட்சுமி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உறவினர் வருகையால் பதில் எழுத முடியவில்லை.
பதிலளிநீக்குவாங்க கிரி, உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு,பனியில் செதுக்கிய பிள்ளையாரும்,பூஜை,சுண்டல் ஆஹா அட்டகாசம்.வாசிக்கும் பொழுது என் கல்லூரி நான்காம் வருடம் ஆல் இந்தியா டூர் போனப்ப நைனிடால் போய் வந்தது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குவாங்க ஆசியா,உங்களுக்கு நைனிடால் நினைவு வந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅது ஒரு கானாக் காலம் இல்லையா ஆசியா!
Exqusite..!
பதிலளிநீக்குஇயற்கையை அருமையாக ரசித்து செதுக்கி பறிமாறியதற்கு நன்றி சகோதரி.
பதிலளிநீக்குசிரமக்கள் துயரங்கள் எல்லாம் பனி போல் விலகும் பனி விநாயகரை வணங்கினால்
பதிலளிநீக்குசிரமங்கள் துன்பங்கள் எல்லாம் பனி விநாயகரை வணங்கினால் பனி போல் மறையும்
பதிலளிநீக்குவாங்க வாங்க கோமா, வெகு நாட்கள் ஆகி விட்டது திருமதி பக்கங்களுக்கு நீங்கள் வந்து.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை.
கடும் குளிரின் துயரத்தை பனி விநாயகர்
விலக்கி விட்டார்.
நன்றி கோமா.
மிக அழகாக செய்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குபனி இப்படி பொழிந்து கொண்டே இருந்தால், இத அள்ளவே நேரம் சரியாக இருக்கும் போல. ரொம்ப குளீருமே
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிக்குமார்.
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா.
பதிலளிநீக்குவாங்க ஜலீலா, பனி பொழிவை அப்புறப்படுத்துவதே பெரிய வேலை தான். குளிர் அதிகம் தான்.
பதிலளிநீக்குகஷ்டத்தை மறக்க தான் இந்த மாதிரி செய்து மகிழ்கிறார்கள்.
நன்றி ஜலீலா.
// சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ரசித்து இன்புற்று வாழவேண்டும்.//
பதிலளிநீக்குஇயற்கையோடு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி நன்றாகவே சொன்னீர்கள்!
வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அழகான பனி விநாயகர்...நல்லா செதுக்கி இருக்கார். உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள் அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் மகனை பாராட்டியதற்கும் நன்றி.
அழகிய பிள்ளையார் தரிசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய உங்கள் பதிவிலிருந்து விநாயகரை தரிசிக்க இங்கு வந்தேன். அங்கும் தரிசித்தேன். இன்னல்களை அகற்றும் என் இஷ்ட தெய்வமாகிய விநாயகபெருமான் பனியிலிருந்து உருவாகி மக்கள் அனைவரையும் பனிப்புயலில் இருந்து காத்திருக்கிறார். அவரை அழகாக உருப்பெற செய்த தங்கள் மகனுக்கும், வழிபாடு பூஜைகள் செய்த மருமகளுக்கும் மீண்டும் வாழ்த்துகள். பதிவு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.