ஞாயிறு, 5 ஜனவரி, 2014

அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !

என் மகன் வசிக்கும் நியூஜெர்சியில் மூன்றாம் தேதிஅன்று(3/1/2014)  பனிப் பொழிவு இருந்திருக்கிறது. அந்தப் பனிப்புயலுக்கு 'ஹெர்க்குலிஸ்’  என்று பெயர் இட்டு இருக்கிறார்கள்.   பனி விழுந்த சமயத்தில் என் மகன் அதைச் சேகரித்து , சிவலிங்க உருவம் செய்து, ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’ என்று பெயரிட்டு வழிபட்டான். போனமுறை பனிக்காலத்தில் பனி மனிதன் உருவமும், அதற்கு முந்தைய தடவை  ’பனிப்புயல் காத்த விநாயகர்’ உருவம் செய்து இருந்தான்.

’கைவலி, முதுகுவலி இரண்டும் வரும், இவற்றைச் செய்யும் போது. ஆனால் முடித்தபின் ஆனந்தமாய் இருக்கும்’ என்கிறான் அவன். நாம் இங்கு இருந்து கொண்டு, ’குழந்தைகளுக்கு குளிர் அதிகமாய் இருக்குமே!  பனி பெய்தால் அதை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டுமே’ என்று கவலைப்படுகிறோம். இந்தச் சமயத்தில் அங்கெல்லாம் காரை வெளியே எடுக்க அதன் வழி தடத்தை பனியை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

  பனிப்புயல் காத்த விநாயகர் என்ற தலைப்பிட்ட எனது முந்தைய ஒரு பதிவில், மகன் முன்பு செய்த பனி விநாயகர் பற்றிப் பகிர்ந்து இருக்கிறேன். 
இந்த முறை ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’! 

 அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’ எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். 






அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்








இந்த முறை ஜனவரி முதல் தேதி அங்கு பிரிட்ஜ் வாட்டர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் கூட்டமாம், நம் ஊர் போல  ’நகர்ந்து போங்கள், போங்கள்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம்('keep going,keep going'). அதைப் பேரன் இப்போதும்  சொல்லிக் கொண்டே இருக்கிறான். இப்படி உலகம் முழுதும் புத்தாண்டு தினத்தன்று , அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக, நலமாக இருக்கவேண்டுமென்று நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள். நம்பிக்கை  நல்லதுதானே!

மற்றும் ஒரு  செய்தி. என் டெல்லிப் பேரன் சபரி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறான்.  சபரிக்கு  வாழ்த்துக்கள்! வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற வாழ்த்துகிறோம். அவனுக்கு எங்கள்  வாழ்த்துக்களுடன் உங்கள் வாழ்த்துக்களும் இணைந்தால் மகிழ்வேன்.


                                   வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! !
                                                        ----------------------------

49 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா
    பனிக்கட்டியில் செய்த சிலைகள் மிக அழகாக உள்ளது.... அத்தோடு தங்களின் டெல்லிப்பேரன் சபரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அம்மா.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. என்ன அழகு...! தங்களின் மகனுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... பேரன் சபரிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் டெல்லிப் பேரன் சபரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    //அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !"//

    என்ன ஒரு கிரியேட்டிவிட்டி..!!

    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. //அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !"//

    மிக அழகாய் இருக்கிறார்.

    சபரிக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. என்ன ஒரு கலையுணர்வு! அருமை. அமெரிக்காவில் பனிப்புயல் பற்றிப் படித்தேன்.செய்திச் சேனலிலும் பார்த்தேன்.

    உங்கள் டெல்லிப்பேரன் சபரிக்கு எங்கள் வாழ்த்துகளும். வாழ்வில் எல்லா நலனும் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல்வரவுக்கு நன்றி, பேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும்,தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. பேரனுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க்கைத் ததுவமும் ஒரு வழியில் KEEP GOING தானே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.மகனுக்கும், பேரனுக்கும் தங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    பேரனை வாழ்த்தியமைக்கும், மகனின் படைப்பை பாராட்டியதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். பேப்பரிலும், தொலைகாட்சியிலும் பார்த்து விட்டு மகனை விசாரிக்கும் போது அவன் செய்த சிவனை காட்டினான். அதை தான் இங்கு பகிர்ந்தேன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம், பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    //வாழ்க்கைத் ததுவமும் ஒரு வழியில் KEEP GOING தானே.//

    நீங்கள் சரியாக சொன்னீர்கள் சார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கண்ணைக் கவரும் சிலைகளுடன் இனிய நற் செய்தியும் கேட்டேன் .
    தங்களின் பேரனை நானும் வாழ்க வாழ்க வளமுடன் என்று
    வாழ்த்தி நிற்கின்றேன் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  15. தங்கள் டெல்லிப் பேரன் சபரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    //அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !"//

    என்ன ஒரு கிரியேட்டிவிட்டி..!!

    பாராட்டுக்கள்..!

    மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  16. ஹெர்க்குலேஸ்வரர் - நல்ல பெயர்தான். சிற்பம் செய்வதில் சின்ன வயதில் இருந்தே உங்கள் மகனுக்கு ஆர்வம் இருந்திருக்கும் என்று தெரிகிறது.
    உங்கள் டெல்லி பேரனுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. ஹெர்க்குலேஸ்வரர் மிகவும் அழகாக இருக்கிறார்... எல்லோரையும் நல்லபடியாக வைத்திருக்கட்டும்..

    சபரியை நானும் ரோஷ்ணியும் இணைந்து வாழ்த்துகிறோம்...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சபரி..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அம்பாளடியாள் வாழ்க வளமுடன். பனிசிற்பத்தைப்ப்ற்றிய கருத்தும், பேரனுக்கு வாழ்த்துக்களும் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்,வை.கோபாலகிருஷ்ணன்சார், வாழக வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஐந்து தலை நாகர், தாமரை பூ , லிங்கம் அனைத்தும் மிக அழகா செதுக்கி இருக்கார்.. மொத்தத்தில் ஹெர்குலீஷ்வரர் மிக அருமையா இருக்கார். வாழ்த்துக்கள். குழந்தை சபரிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  21. உங்கள் மகனின் கிரியேடிவிட்டி மலைக்க வைக்கிறது. மிகவும் அருமையாக கலரெல்லாம் வேறு கொடுத்திருக்கிறார்களே!
    உங்கள் பேரன் சபரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    சின்ன வயதிலிருந்தே ஆர்வம் இருக்கிறது. சாக்பீஸ்வைத்து செய்த கோவிலை சின்னவயதில் செய்து இருக்கிறான். முன்பு அதுவும் பகிர்ந்து இருக்கிறேன்.

    http://mathysblog.blogspot.com/2011/11/blog-post.html
    சதய்த் திருநாள் என்ற பதிவில் மகன் கட்டிய கோவில் பார்க்கலாம்.
    பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    ரோஷ்ணியும் நீங்களும் சபரியை வாழ்த்தியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
    மகனின் சிறபத்தைப் பற்றி கருத்து சொன்னதற்கும், பேரனை வாழ்த்தியமைக்கும் நன்றி ராதாராணி. உங்கள் தொடர் வருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவுகளும் அடிக்கடி தாருங்கள் இன்னும் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    ஸ்பிரே கலர் கொடுத்து இருக்கிறான்.அதை குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி.
    பேரனுக்கு உங்கள் ஆசிகளும், வாழ்த்துக்களும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  26. டெல்லிப் பேரன் சபரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
    தாமதமாகிவிட்டேன் சகோதரி.. ஏற்றுக்கொள்ளுங்கள்!

    //அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !"//

    உங்கள் குடும்பம் கலைக்குடும்பம் சகோதரி!
    ஆச்சரியமும் வியப்புமாக மனம் லயித்துப் போனேன்.

    மிக மிக அருமை!
    அற்புத கலைநயம் மிகுந்த உங்கள் குடும்பத்தினருக்கு உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் மணி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி.

    என் மகனை பாராட்டிகுடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.

    தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அருள்மிகு ஹெர்குலேஸ்வரர் அனைவருக்கும் நல்வாழ்வினைத் தரட்டும்..

    தங்களின் அன்பிற்குரிய பேரனுக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் அருள்மிகு ஹெர்குலேஸ்வரர் அனைவருக்கும் நல்வாழ்வினைத் தரட்டும்.
    பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. very creative. அதிக பொறுமை. உள்ளூர் டிவி நிலையத்துக்கு செய்தி சொல்லியிருக்கணும்.

    உங்கள் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. அருமை. மிக அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார். வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள்!

    சபரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன். மகனை பாராட்டியதற்கு நன்றி.

    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.மகனிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன்.
    சபரிக்கும் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம்,மங்கையர்க்கரசி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும்,
    பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. குழந்தை சபரிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    பேரனுக்கு உங்கள் வாழ்த்து கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  38. உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
    உங்கள் பேரனின் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  39. உங்கள் மகனின் கலைத்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
    உங்கள் பேரனின் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  40. வணக்கம், மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    மகனுக்கு நீங்கள் அளித்த பாராட்டுக்கு நன்றி.
    பேரனுக்கு நல் ஆசிகளும்,நல்வாழ்த்துக்களும் அளித்தமைக்கு மகிழ்ச்சி.
    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. யு.எஸ் பக்கம் -52 டிகிரி என்ற செய்தி பார்த்து எப்படி அங்கே சிரமப்படுகிறார்களோ ! என்று நினைத்தேன்,அந்த பனியைக் கூட விஷேசமாக்கி ஹெர்குளீஸ்வரர்,ப்ரெட் அல்வா செய்து அசத்திய தம்பதியினரை பாராட்ட வேண்டும்.டெல்லி பேரன் சபரிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. அன்பு கோமதி,இன்றுதான் மகளிடம் குளிர்ப்புயல் பற்றிய செய்திகள் கேட்டு அறிந்தேன்.
    தங்கள் மகனின் இந்நாளிலும் இறைவனை நாடி அவன் தாள்களைப் பதிய வைக்கும் கலை பரிமளிக்கிறது. அற்புதமான ரூபங்கள். இந்நேரம் நியூஜெர்சியைத் தாண்டி இருக்கும் புயல். என்றும் இறைவன அவர்களை நல்லபடியாக வாழவைப்பான்.
    சபரிக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அனுப்பி வையுங்கள்.
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் ஆசியா, வாழ்கவளமுடன்.
    யு.எஸ் பக்கம் குளிர், பனி பொழிவு இரண்டும் அதிகம் தான். கஷ்டத்தையும் மகிழ்வாக்கி அனுபவிக்கிரார்கள். அதுவரை சந்தோஷம்தான்.
    மகன், மருமகளை பாராட்டியதற்க்கும், பேரனை
    வாழ்த்தியதற்கும் நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
      நானும் நினைத்துக் கொண்டேன் உங்களிடம் மகள் ஊரில் பனிபுயல் எப்படி இருக்கிறது என்று கேட்க வேண்டும் என்று.
      இறைவன் தான் எல்லோரையும் பனிபுயலில் இருந்து காக்க வேண்டும்.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.
      சபரிக்கும் குளிர் அதிகமாய் இருப்பதால் பள்ளி விடுமுறை.
      சபரிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன்.
      பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  44. வணக்கம் சகோதரி

    இந்த பதிவும் அருமையாக இருந்தது. புயலின் பெயராலேயே ஈஸ்வரர் உதித்து பனிப்புயலின் பாதிப்பு அதிகமின்றி அங்குள்ள மக்கள் அனைவரையும் காத்துள்ளார்.

    அதற்கு உறுதுணையாக இருந்த தங்கள் மகன், மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துக்களை சொல்லுங்கள். பனியை குழைத்து சிலைகள் அமைக்கும் போது கைவலி வருவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதையும் பொருட்படுத்தாது கலைக் கண்களோடு இறை படைப்புக்களை செய்து சந்தோஷமடைந்திருக்கும் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு