திருக்கண்ணபுரம்
நித்திய புஷ்கரணி, நிமிர்ந்த கோபுரம்.
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திருகண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )
கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )
காற்றினிலே வரும் கீதம் வலைத்தளத்தில் பாடல் எடுத்தேன். கண்னன் பாட்டுக்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.
முக நூலில் திருக்கண்ணபுரம் படம் போட்ட போது வல்லி அக்கா கண்ணபுரம் சேவித்தேன்
கவலை எல்லாம் மறந்தேன் என்று சொன்ன வுடன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய பாடல் இங்கு மிகவும் பிடிக்கும் என்றேன். உடனே எனக்கு அந்த பாடலை அனுப்பி கேட்க வைத்து மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.
நான் வரைந்த கண்ணன் (மார்கழி கோலம்)
கோலங்கள் பல செய்யும் கண்ணன்
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
எங்கள் வீட்டுக் கண்ணன்
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
போன வருடம் இந்த உறியின் படம் முகநூலில் பகிர்ந்த போது அதற்கு
ஸ்ரீராம் எழுதிய கவிதை.
//கிண்ணங்களில்
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
உறி போலச் செய்து
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
அவனுக்கும் தெரியும்
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//
கண்ணனின் குறும்பு .
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//
கண்ணனின் குறும்பு .
மருமகள் வரைந்த கண்ணாடி ஓவிய தவழும் கண்ணன்
முறுக்கு, இனிப்பு, உப்பு சீடை, தட்டை செய்வதை விட்டு வெகுகாலம் ஆகி விட்டது. அப்பம், அவல் பாயசம், வெண்ணெய், தயிர் வைத்து வணங்கி விடுவேன். இந்த முறை குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு பெரியவர், முறுக்கு, சீடை, அவல், கடலை எல்லாம் பாக்கெட் போட்டு விற்றார், மழையும் மாலையில் கடைக்குப் போக முடியாமல் பெய்து கொண்டு இருந்தது.
எளிமையாக அவல் பாயசம் மட்டும் வைத்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தேன். சார் ஊருக்கு போய் இருந்தார்கள் வரும் போது கண்ணனுக்கு போளி வாங்கி வந்தார்கள் , வாழைக்காய் சிப்ஸ் வாங்கி இருந்தார்கள் , தம்பி வீட்டுக்கு வந்தவன் பழங்கள் வாங்கி வந்தான்.
வீட்டிலிருந்த முந்திரி, திராட்சை, பாதாம், வெண்ணை இவற்றை வைத்து சிறப்பாக்கிக் கொண்டார் கண்ணன்.
மயிற்பீலிக் கண்ணன்
மாணவிகள் கொடியை உடையில் குத்திக் கொண்டு சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு திரும்புகிறார்கள். (சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.)
சிறுபையன் தன் அப்பா பின்னால் தேசியகொடியை எடுத்து செல்கிறான். நான் அலைபேசியை எடுத்து படம் எடுப்பத்தற்குள் வேகம் எடுத்து விட்டது வண்டி.
அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நல்ல பாடலை நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகோலத்தில் கண்ணன் அருமை.
உங்கள் வீட்டுக் கண்ணன் அமர்க்களம் செய்கிறார். நவரசங்கள்!
என்னுடைய கவிதையை இங்கு வெளியிட்டிருப்பதில் இரட்டை மகிழ்ச்சி.. அது கவிதை என்று சொல்லியிருப்பதே முதல் மகிழ்ச்சி!
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
அருமை... அருமை...
பதிலளிநீக்குஉங்கள் வீட்டுக்கண்ணன் அழகு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஓவியம் சிறப்பாக இருக்கிறது
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
த.ம. 3
மரத்தட்டில் என்ன?... குழலூதும் கண்ணனின் கோலமா? ஜோர்.
பதிலளிநீக்குதிருக்கண்ணபுரம் நினைவுகள் மனசுக்கு இதமாக இருந்தன.
படங்கள் வழக்கம் போல அருமை.
பகிர்தல்களுக்கு நன்றி.
படங்கள் அருமை! உங்கள் வீட்டுக்கண்ணன் ரொம்ப க்யூட்டாக இருக்கிறார்!!! என்ன பாவங்கள்!! குழந்தைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்! வாழ்கநலம்!
பதிலளிநீக்குஉங்கள் கோலம் வெகு அருமை! கலக்குகிறீர்கள்!
பாடல் மிகவும் பிடிக்கும்..அருமையான பாடல்...தங்களின் மருமகளுக்கும் வாழ்த்துகள்! ரொம்ப அழகாகச் செய்திருக்கிறார்..கண்ணாடி ஓவியம்...
ஸ்ரீராமின் கவிதை செம..ரசித்தோம் .அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்த்குஅள்!
இனிய சுதந்திரதின நல் வாழ்த்துகள்!
துளசி, கீதா
கோமதிக்காவின் பதிவுகள் வரவில்லையா அல்லது நாங்கள்தான் மிஸ் பண்ணிவிட்டோமா? இத்தனைக்கும் ப்ளாகரில் ரீடிங்க் லிஸ்டில் சேர்த்தோமே என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து கணினியின் முன் அமர்ந்தால் உங்கள் பதிவும் ப்ளாகர் டேஷ் போர்டில்....துளசியின் கமென்டும் எனக்கு மெயிலில் இருந்தது..அதையும் என் கமென்டும் சேர்த்துப் போட்டாச்சு....ஆச்சரியப்பட்டுப் போனேன்...
பதிலளிநீக்குகீதா
திருக்கண்ணபுரம் என்ற பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு, சீர்காழியின் 'கண்ணபுரம் செல்வேன்' பாடல் நினைவுக்கு வந்ததால், பதிவுக்குள் வந்தால், அந்தப் பாடலையே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமற்ற கண்ணன் பாடல்களை (நீங்கள் குறிப்பிட்டுள்ளவை), பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் குரலில் கேட்டால், மனம் பக்தியில் மிகவும் ஒன்றிவிடும்.
கண்ணன் ஓவியமும் உங்கள் கோலமும் நன்றாக இருந்தது. ஓவியம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
கோகுலாஷ்டமி மற்றும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
உங்க வீட்டு சுட்டி கண்ணன் அழகு....அட்டகாசம்...
பதிலளிநீக்குகண்ணன் கண்ணாடி ஓவியம் கண்ணை கவர்கிறது....அருமை...
தவழும் கண்ணன் கண்ணாடி ஓவியத்தின் மீது என்றும் காதல் எனக்கு...
உங்கள் குட்டிக் கண்ணன் மிக அழகு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசீர்காழி அவர்க்ளின் பாடலை யாரும் மறக்க முடியாது.
கண்ணன் கோலத்தையும், சின்ன கண்ணனையும் பாராட்டியதற்கு நன்றி.
கவிதை நன்றாக இருப்பதாய் பின்னூட்டங்கள் சொல்கிறது.
உங்களுக்கு இரட்டை சந்தோஷம் என்று கேட்டு மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாழ்த்திற்கும் நன்றி.
அருமை.. அருமை..
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு..
>> கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.. <<<
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள் எழுதிய பாடல்..
சீர்காழியாரின் குரல் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்..
அன்பின் நல் வாழ்த்துகள்..
வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமரதட்டில் இருக்கும் கோலத்தை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கண்ணன் கோல அச்சு தட்டு.
கண்ணன் என்றால் கண்ணபுரம், கண்ணன் பாடல்களை மறக்க முடியாது/
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்களும் பதிவும் கண்டேன் ஓட்டுப் பட்டையை காணவில்லை!
பதிலளிநீக்குத ம 5
பதிலளிநீக்குகுட்டிக் கண்ணனின் குறும்பான முகபாவங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம் கவிதை அருமை.
மார்கழிக் கோலம் அழகு.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளும், சுதந்திர தின வாழ்த்துகளும்!
வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.ஒன்றையும் விடாமல் அனைத்தையும் கவனித்து பாராட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்குகுழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்களை அனுப்பி விட்டேன், நன்றி.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.
அன்பு கீதா, என் பதிவை எதிர்பார்த்தேன் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி.
ஆடிக்கிர்த்திகை கோயிலுக்கு போய் விட்டேன் வந்து பதிவு போட்டேன்.
ப்ளாகர் டேஷ் போர்டில் இணைந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇசை பிரியர்களுக்கு திருக்கண்ணபுரம் என்று சொன்னவுடன் சீர்காழியின் 'கண்ணபுரம் செல்வேன்' பாடல் நினைவுக்கு வரும் நிச்சயம்.
பித்துக்குளி முருகதாஸ் பாடல்கள்தான், மிக அருமையாக பாடுவார் இந்த பாட்டை.நீங்கள் சொல்வது போல் பக்தியில் மனம் ஒன்றுவது உண்மையே!
ஓவியம், கோலம் எல்லாம் பாராட்டியத்ற்கு மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தட்டை, முறுக்கு, சீடை செஞ்சு கொடுத்து கிருஷ்ணர் பல்லை உடைச்சுட்டீங்க போல!
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதவழும் கண்ணன் கண்ணாடி ஓவியத்தின் மீது என்றும் காதல் எனக்கு.//
மருமகள் நிறைய கண்ணன் கண்ணாடி ஓவியங்கள் வரைந்து இருக்கிறாள் , எனக்கு தழழும் கண்ணன் கொடுத்தாள்.
எல்லோருக்கும் தவழும் குழந்தை கண்ணன் பிடிக்கும் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள் எழுதிய பாடல்..
சீர்காழியாரின் குரல் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்..//
உண்மை.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு உளுந்தூர் பேட்டை சண்முகம் அவர்கள் எழுதிய பாடல்கள் எல்லாம் வெற்றிப்பெற்ற பாடல்கள்.
விநாயகர் பூஜை வருகிறது அவரின் பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஓட்டு பட்டையை தேடி ஓட்டு விட்டது மகிழ்ச்சி, நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுட்டிக்கண்ணன், ஸ்ரீராம் கவிதை, கோலம் எல்லாம் ரசித்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகண்ணனின் பல் உடையவில்லை, கல்லையும், மண்ணையும் தின்னவர் பல் எப்படி உடையும்?
குழந்தைகள் அருகில் இல்லாத காரணம் வீட்டில் இருக்கும் தாத்தாவும் சாப்பிடுவது இல்லை அப்புறம் ஏன் செய்து கொண்டு என்ற அலுப்புதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குசுதந்திரதின நல்வாழ்த்துக்களும்/
#கண்ணனின் குறும்பு#
பதிலளிநீக்குதிருடுவதிலும் சுகமா , அக்குறும்பால்லே இருக்கு :)
வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குஅருமை
தங்கள் வீட்டுக்கண்ணனின்
முகத்தில்
நவரசமும் ததும்பி வழிகின்றது
மகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
திருக்கண்ணபுரம் இதுவரைப் போகவில்லை
பதிலளிநீக்குஅருமையான கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டங்கள். பலரும் இப்போதெல்லாம் வீட்டில் பக்ஷணங்கள் செய்வதில்லை. எங்க வீட்டுக்கு வந்திருந்த இரு குழந்தைகளுக்கு இட்லியோடு மிளகாய்ப் பொடி பிடிக்கும்னு சொன்னதாலே மிளகாய்ப் பொடி தடவிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்ட குழந்தைகள் இதோட ருசி தனியா இருக்கு, எந்தக் கடையிலே வாங்கினாங்கனு கேட்கச் சொன்னாங்களாம். நான் கடையில் வாங்கலை, வீட்டில் தயாரித்ததுனு சொன்னதும் அவங்களுக்கு இதெல்லாம் கூட வீட்டில் செய்ய முடியுமானு ஆச்சரியம்! :) இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாமும் அப்படித் தான் ஆகப் போகிறது என்பதற்கான முன்னோட்டமோ இது என நினைத்துக் கொண்டேன். :)
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஒரு சினிமாவில் குபீர் சமையல் என்பார்கள் டின் டின்னாக ரேடிமேட் பொடிகள் இருக்கும்.நகைச்சுவையாக இப்படித்தான் நாகரீக பெண்மணிகள் இருப்பதாய் சொல்வார்கள். இப்போது எல்லோரும் தீடீர் வகையறாக்களை தான் வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.
நம்மை போன்றவர்கள் மட்டும் நாமே நம் கையால் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டு இருக்கிறோம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.