வியாழன், 31 மார்ச், 2016

ஓவியரும் , ரசிகரும்

என் பதிவுகள் சிலவற்றுக்கு என் கணவர் ஓவியம் வரைந்து தந்தார். அதை பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.  அதுவும்   எங்கள் Blog  ஸ்ரீராம் , என் கணவர் வரையும் ஓவியத்தை பாராட்டி விட்டு அடுத்த பதிவில் சார் படம் இல்லை என்றால் ஏன் வரையவில்லை சார்? என்று கேட்பார். நான் சாரிடம் உங்கள் ஓவியத்தை காணோம் என்று உங்கள்  ரசிகர் ஸ்ரீராம் கேட்கிறார் என்று சொல்வது உண்டு.

எழுத்துப்பணி நிறைய இருந்ததால் அவர்களால் வரைந்து தர முடியவில்லை. சமீபத்தில் மதுரை வந்து இருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஸ்ரீராம் ஸ்ரீராம் மனைவி,  ஸ்ரீராம் அண்ணா  மூவரும் வந்து இருந்தார்கள்.  ஸ்ரீராம் வலைத்தளத்தின் மூலம்  பழக்கம், ஆனால் அவர் மனைவியும் அண்ணாவையும் அன்றுதான் பார்த்தேன் வெகு நாள் பழகியது போல் நன்றாக பேசினார்கள்.  மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் இரண்டு மூன்று இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்ததால் சந்திப்பு வெகு சீக்கீரத்தில் முடிந்து விட்டது. குறுகியகால இடைவெளியிலும் சாரை படம் வரைய சொல்லி வேண்டுகோள்விடுத்து சென்றார் ஸ்ரீராம்..அடுத்த பதிவுக்கு வரைந்து தருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.  ஸ்ரீராம் வேண்டுகோள்படி  . 


 ஸ்ரீராம்   எனக்கு அப்பாவின் இரண்டு புத்தங்களை   பரிசாய் அளித்தார்கள். ” இவனும் அவனும்” என்ற சிறுகதை தொகுப்பும்,   ”தூறல்கள் ” என்ற புத்தகமும் .
இன்னும் முழுதாய் படிக்கவில்லை  விருந்தினர் வருகை, உறவினர் மணிவிழா என்று நேரம் சரியாகி விட்டது.

ஸ்ரீராம் அப்பா அவர்களைப்பற்றி துளசிதரன் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றில் தெரிந்து கொண்டேன். கதை எழுதுவார்கள் என்றும் தன் மனைவி மேல் உள்ள பிரியத்தில் அவர்கள் பெயருடன் தன் பெயரை இணைத்து ஹேமலதா பாலசுப்ரமணியம்  என்ற பெயரில் எழுதி வந்தார்கள் என்று அறிந்து கொண்டேன்.

தூறல்கள் புத்தகத்திற்கு  திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்  அளித்துள்ள அணிந்துரையில் மேலும் தெரிந்து கொண்டேன். 

தூறல்களீல் எனக்கு பிடித்த , எல்லோருக்கும் பிடித்த வானத்தைப்பற்றி சொல்லி இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.   படித்துப்பாருங்களேன். 

 டல் அடிக்கும் போதும் மனச்சோர்வின் போதும் வானத்தை நிமிர்ந்து பார்த்தால் போதும் என்கிறார். நமக்கு வானத்தைப் பார்ப்பது பிடிப்பது போல்    வானத்திற்கும் நம்மிடம் பேசப் பிடிக்கிறதாம், காத்து இருக்கிறதாம்.

எனக்கு சிறு வயதில் இருந்தே வானத்தைப் பார்ப்பது பிடிக்கும். மேகங்கள் செய்யும் ஜாலங்கள் அற்புதமாய் இருக்கும். நமக்கு தெரிந்த கற்பனை காட்சிகள் மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்று கேட்டு அவர்களுக்கும் அது தெரிந்தால் குழந்தையின் குதுகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் . காட்சி மட்டும் தான் நாம் கண்டோம்  பாலசுப்பிரமணியம் சார் அது பேசுவதையும் கேட்கச் சொல்கிறார்.  பேசுவதைவிடக் கேட்பது நல்லது என்கிறார். வானத்தை பார்ப்பதையும், வானம் பேசுவதையும்  கேட்டால் அலுப்பு போயே போச்சு.
அப்புறம் என்ன! உலகம் பிறந்தது   எனக்காக என்று பாடத் தொடங்கி விடுவோம்  பாலசுப்பிரமணியம் சார் சொல்வது போல்.

                 
      
                      

தூறல்கள் புத்தகம் விலை 40 ரூபாய்.

இவனும் அவனும் சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை திரு. கர்ணன் அளித்து இருக்கிறார். ஜீவி சார்  புத்தகத்தில் (ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை) குறிப்பிட்டுள்ள  பல ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார் திரு. ஹேமலதாபாலசுப்பிரமணியன் அவர்கள்.


//கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.பா ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, -கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி. ஜானகிராமன் மற்றும் பல எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் , உடன் வாழ்ந்தவர். ஹேமலதா பாலசுப்பிரமணியன் அப்போது சிறுவயது.இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரார்  கு.ப. ரா. கு .ப. ரா மனைவியும் பாலசுப்பிரமணியம் மனைவி ஹேமலதாவும் நெருங்கிய சினேகிதிகள் //

என்று குறிப்பிடுகிறார். கர்ணன் அவர்கள்.

இவனும் அவனும் சிறுகதைத் தொகுப்பில் 25 கதைகள் இருக்கிறது. அதில் 12 ஆவது கதையான  .”நாலணா”  கதையில் ஆரம்பத்தில் வரும் வாக்கியம் இது. மாதக்கடைசியைப் பற்றி சொல்கிறார் :- //அப்படி ஒன்றும் கடைசியுமல்ல . தேதி  இருபதுதான். ஆனாலும் என்ன? ஏழுதேதிவரை கையும், பையும் குலுங்கும். அதன் பின் மனம் மட்டும் குலுங்கும் -இது ஒரு வாழக்கை// என்று .//

கலைவாணர் முதல்தேதி படத்தில் பாடுவாரே தேதி  ஒன்னிலே இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், தேதி 21லிருந்து திண்டாட்டம், திண்டாட்டம். பாடல் நினைவுக்கு வருது.

13 ஆவது கதை - எனக்குப் பிடிச்ச பூ !  என்ற கதையில் 

இரு பெண்கள்  பேசிக் கொள்வது.

உங்களுக்கு என்ன பூ பிடிக்கும்?”

“எனக்கு ரோஜா பிடிக்கும், மல்லிகை பிடிக்கும் ரெண்டும் ரொம்ப கிராக்கி கெடைக்கிறதே இல்லை.”

உங்களுக்கு?
வாழைப்பூ

சமைக்கிறதுக்குக் கேக்கலே...:

நானும் அதைச் சொல்லலே... புடிக்கிறது எதுவா இருந்தா என்ன? கெடைக்கிறது அது இல்லியே ... கெடைக்கிற்தையே புடிக்கிறதாக்கிக்கிறதுதான் நல்லது, இல்லியா! எனக்கு கிடைக்கிறது வாழைப்பூதான்.!”
ஏன் வாழைப்பூவும் நல்லது தானே - உடம்புக்கு ரொம்ப நல்லதும்பாங்க!:

வாழைப்பூவை கவனிச்சிருக்கீங்களா கீழே மட்டும்தான் விரிஞ்சிருக்கும் ....மேலே முகம் கூப்பி குறுகி  இருக்கும். மத்த பூ மாதிரி அதுக்குச் சிரிக்கவே தெரியாது //  
இப்படி பேசி முடித்தவுடன்  சிரிக்கிறார்கள். இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள் மனம் லேசாகி விட்டதாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

 நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை பிடித்ததாய்  ஆக்கி க்கொண்டு வாழ்வதைச் சொல்கிறது கதை.

 படித்த இரண்டு கதையும் எனக்குப் பிடித்து இருக்கிறது. மற்ற கதைகளை நிதானமாய் ப்படிக்க வேண்டும்.

திருமதி ஹேமலதா பாலசுப்பிரமணியன் அவர்கள் பெயரில்  அறப்பணிச்சேவைகள்  எப்படி உருவானது அதனால் யார் யார் பயனடைகிறார்கள் என்று பாருங்கள்.

 ஸ்ரீராமின் தாயார் தன் சேமிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் அப்பா தன் ஓய்வூதியத்தில்  50 சதவீதம் கொடுக்கிறார்,  அது ஒரு பெரிய செயல் நல்ல செயல். ஸ்ரீராம் அப்பா வணக்கத்துக்குரியவர். மருத்துவத்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது படைப்புகள் 1950 முதல் 1980 வரை பல்வேறு பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறதாம்.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதுதான்  ”இவனும் அவனும் ” சிறுகதைத்  தொகுப்பு. 


இவனும் அவனும்  - புத்தகம் கிடைக்குமிடம்  மணிவாசகர் நூலகம். விலை 90 ரூபாய்.

நல்ல பெற்றோர்கள் பெற்ற மகன் நல்லவைகளை பதிவிடுகிறார் . ஒவ்வொரு சனிக்கிழமையும் பாஸிட்டிவ் செய்திகளை தொகுத்து வழங்குவார்.


                                                                      *      *      *

பல பதிவுகளுக்கு என் கணவர் வரைந்த ஓவியங்கள்

பாலீதீன் மறுசுழற்சி



அபிராமி பட்டர் கதை





கோவிலில் லட்சதீபம் ஏற்றுதல் 
இலட்சதீபம்


கழுகுமலை வெட்டுவான் கோவில்




கழுகுமலை

ஜல்லிகட்டு



மாட்டுப் பொங்கல்



மின்சாரமே ! மின்சாரமே!!



பொங்கலோ பொங்கல் -- பாகம் - 2




டிக் டிக் கடிகாரம் அன்பை கூறும் கடிகாரம்

இளமையின் ரகசியம்  - தீராக்கற்றல்


ஆஹா உருளை !



சிக்குபுக்கு ரயிலே ரயிலே!


KUMKUM school

home

ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால்  என் கணவரின் படங்கள் இங்கு பகிர பட்டு இருக்கிறது. ஸ்ரீராமுக்கு நன்றி.

                                                                   வாழ்க வளமுடன்.

38 கருத்துகள்:

  1. நண்பர் ஸ்ரீராம் அவர்களைப் பற்றிய குறிப்பு நன்று ஓவியங்களை ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. நம் ஸ்ரீராம் ஜயராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களின் பெற்றோர் பற்றிய பல விஷயங்கள் தங்கள் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    நூலிலிருந்து தாங்கள் கொடுத்துள்ள ஒருசில கதைகளின் சாரமே மிக அருமையான உள்ளன.

    இவரும் அந்தக்கால கும்பகோணப் பிரபல எழுத்தாளர்களின் சம காலத்தவர்தான் என்று கேட்பதில் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்கள் கணவர் வரைந்த ஓவியங்களின் அணிவகுப்புகள் ஜோர் ஜோர். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி இந்தப் பகிர்விற்கு. உங்களையும் அரசு ஸாரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் வாரிசின் சாதனைகளைக் கேட்டது மகிழ்ச்சி. அந்த சாக்பீஸால் செய்யப்பட்ட கோவிலை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. எண்களின் பாஸிட்டிவ் பதிவுகளைப் பற்றிச் ச்ல்லியிருப்பதில் மகிழ்ச்சி. அப்பா பற்றிய வரிகளுக்கு நெகிழ்ச்சி + மகிழ்ச்சி.

    அரசு ஸார் வரைந்த பழைய படங்களைப் பார்த்தது மகிழ்ச்சி. குறிப்பாக அபிராமி பட்டர் நுணுக்கமான படம், கழ்குமலை வெட்டுவான் கோவில் படம், சிக்குபுக்கு ரயிலே வண்ண ஓவியம்... கூடுதல் சிறப்பு.

    மொத்தத்தில் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி..

    நன்றி. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் இரு குடும்பத்தார் சந்திப்பும்,ஶ்ரீராம் பொற்றோர்கள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் தெரிவித்தமைக்கு நன்றி.

    தங்கள் கணவரின் ஓவியங்கள் அருமையாக இருக்கிறது.

    தென்காசி இரயில் நிலைய ஓவியத்தை முன்பே கண்டு இருக்கிறேன் அருமை அருமை.

    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  5. தன் தந்தையின் 'தூறல்கள்' புத்தகத்தை ஸ்ரீராம் எனக்குத் தந்திருக்கிறார். அவ்வப்போது எடுத்துப் படிப்பதுண்டு. அந்த நூல் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இங்கு அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்த பொழுது அந்த எண்ணம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் ஸ்ரீராமின் தந்தையிஹ் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம், அந்தப் புகைப்படமே அந்த நல்ல மனிதரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக எனக்குத் தோன்றும். அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கமும் மென்மையான அவரின் மனசை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    என் புத்தகத்தை நினைவு கொண்டமைக்கு நன்றி. ந.பி பிச்சமூர்த்தியும் கு.பா.ரா.வின் அருகாமை வீட்டுக்காரராய் சில காலம் வசித்திருக்கிறார். பெரும்பாலும் அந்தக் காலத்தில் வாடகை வீடு தான். அதனால் ந.பி.யும் அதே தெருக்காரராய் தான் இருந்திருக்க வேண்டும்.

    நல்ல பதிவு இது. அரசு சாரின் தத்ரூபமான ஓவியங்களும் பதிவின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    ஸ்ரீராம் உங்கள் ஓவியத்தையும் பாராட்டுவார், முன்பு நீங்களும் உங்கள் பதிவுகளுக்கு நீங்களே ஒவியம் வரைவதை பாராட்டி இருக்கிறார்.
    உங்கள் புதிய பதிவில் உங்கள் ஓவியம் இடம் பெறட்டும்.
    உங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கணவரிடம் சொல்லிவிட்டேன்.
    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக அழகாக கதைகளையும் ஸ்ரீராம் அண்ணாவின் அப்பா குறித்தும் சொல்லியிருக்கிறீர்கள்....
    ஓவியங்கள் அழகு... வாழ்த்துக்கள் அம்மா....
    ஐயாவைத் தொடர்ந்து வரையச் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    என் மகனின் கோவிலை பாராட்டியதற்கு மகிழ்ச்சி.



    //அந்த புத்தகத்தில் ஸ்ரீராமின் தந்தையிஹ் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம், அந்தப் புகைப்படமே அந்த நல்ல மனிதரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக எனக்குத் தோன்றும். அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கமும் மென்மையான அவரின் மனசை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. //

    ஜீவி சார் சொல்வது உண்மைதான்.


    தூற்ல்கள் புத்தகத்தில் முன் பக்கத்தில் தூறலை ரசிக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளும்
    பின் அட்டையில் உங்கள் அப்பா படமும் இருப்பதை குறிப்பிட மறந்து விட்டேன்.

    ஜீவி சார் அந்த புத்தகத்தில் உள்ள பகைப்படம் பற்றி பேசிய பின் தான் நாம் போடவில்லையே என்ற நினைவு வந்தது.
    அந்த படம் திருகடையூரில் அம்மன் சன்னதி கொடிமரத்தின் முன்பு இருக்கும் தோட்டம் தானே!
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சாரிடம் நீங்கள் குறிப்பிட்டு பாராட்டிய படங்களை பற்றி சொல்லிவிட்டேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
    என் கணவர் வரைந்த பழைய படங்களைத்தான் பகிர்ந்து இருக்கிறேன் உமையாள்.
    அடுத்த பதிவில் புதிதாக வரைந்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இந்தப் பதிவைப் படித்தபின் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி ஏற்படுகிறது. நானும் திரு துளசிதரன் அவர்களது தளத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீராம் தந்தையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து ஸ்ரீராமைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொள்ளுகிறேன். இன்றுவரை எங்கள் சந்திப்பு நடக்கவில்லை. சென்னைக்குப் போகும் வாய்ப்பும் இனி குறைவுதான்.
    நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கும் இரண்டு புத்தகங்களையும் படிக்கும் ஆசை அதிகமாகிறது. அதுவும் வானம் பற்றிச் சொல்லியிருப்பது அற்புதம்.

    வெகு சீக்கிரம் ஸ்ரீராமை சந்தித்து புத்தகங்களைப் பெற வேண்டும்.

    உங்கள் கணவரின் கைவண்ணம் வியக்க வைக்கிறது. இந்த மாதிரி திறமைகள் கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லவேண்டும்.

    உங்களுக்கும், உங்கள் கணவருக்கும், ஸ்ரீராமிற்கும் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    தூறல்கள் புத்தகத்தில் நிறைய நல்ல செய்திகள் இருக்கிறது
    நீங்கள் சொல்வது போல் அவ்வப்போது எடுத்து படிக்கலாம் .
    அட்டைபடத்தில் அவர் படத்திற்கு கீழ் உள்ள வரிகள் அருமை.
    “பாதைகள் தொடர்ந்து செல்லும் முடிவதில்லை;
    பயணங்கள் குறுகிவிடும் தொடர்வதில்லை :

    உயர்ந்த குணங்கள் கொண்ட மனிதர் அடிஒற்றி நடந்தாலே போதும் இல்லையா?


    //என் புத்தகத்தை நினைவு கொண்டமைக்கு நன்றி. ந.பி பிச்சமூர்த்தியும் கு.பா.ரா.வின் அருகாமை வீட்டுக்காரராய் சில காலம் வசித்திருக்கிறார். பெரும்பாலும் அந்தக் காலத்தில் வாடகை வீடு தான். அதனால் ந.பி.யும் அதே தெருக்காரராய் தான் இருந்திருக்க வேண்டும்.//

    பழைய எழுத்தாளர்களைப் பற்றி பேசும் போது உங்கள் நூலை குறிப்பிடமால் முடியாது சார். நல்ல காரியம் செய்தீர்கள் நீல் வெளியிட்டு.
    நீங்கள் சொல்வது போல் இருந்து இருக்கலாம்.
    சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.


    பதிலளிநீக்கு
  14. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    சாரிடம் சொல்கிறேன் குமார் ,தொடர்ந்து வரைய சொல்லி.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    ஸ்ரீராம் அம்மாவைப்பற்றி அடிக்கடி பேசுவார், ஆனால் அப்பாவைப்பற்றி பேசியது இல்லை. ஆனால் அவ்ர் கொடுத்த புத்தகம் மூலம் ஸ்ரீராம் அப்பா தன் மனைவியின் மேல் வைத்து இருந்த பாசமும், நேசமும் . புரிந்து கொண்டேன்.

    வானம் மட்டும் அல்ல ரஞ்சனி மானுட அற்புதங்கள் என்று எழுதி இருக்கிறார் அதுவும் மிக் அருமை.

    //மானுட அற்புதங்களை ஒரே பக்கம், ஒரு பக்கம் அல்லது ஒன்றிரண்டு பத்திகளில் தேடி தேடி வெளியிடும் நிருபர்களும், பத்திரிக்கைகளும் மகத்தான சேவை செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை இந்த ஒரு பக்கம் அளவு இன்னும் நிறைய நிறைய பெருகினால் நாட்டில் நிச்சயம் மாதம் மும்மாறி பொழியும் சுபிட்சம் பொங்கும் - எது இல்லாவிட்டாலும் படிக்கிறவர் மனசாவது டெட்டால் போட்டுக் கழுவ படும்// என்கிறார்.
    கெட்டதை டேடி தேடி போடாமல் நல்லதை நல்லவர்கள் செய்த சாதனைகளை தேடி தேடி போடும் போது படிக்கும், கேட்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். அதை தான் மானிட அற்புதம் என்கிறார். மக்கள் எல்லோரும் நல்லவர்க்ளாக இருந்தால் வானம் நிச்சயம் மழையை தரும் தானே?

    உங்கள் எண்ணம் சீக்கிரம் நிரைவேற வாழ்த்துக்கள். ஸ்ரீராம் சந்திப்பு, புத்தகம் கிடைக்க வாழத்துக்கள்.
    என் கணவரை பாராட்டியதற்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    அம்மா எப்படி இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  16. நல்ல பகிர்வு ..

    ஐயாவின் ஓவியங்கள் அழகு ..

    பதிலளிநீக்கு
  17. என் வாழ்வில் மிக அருமையான நண்பர்கள் கிடைத்த காலம் நீங்கள் அனைவரும் நட்புகளானதே. மனதை இலேசாக்கும் அமைதி எழுத்து உங்களது. ஸ்ரீராம் குடும்பம் உங்களைச் சந்தித்தது மிக மகிழ்ச்சி. வானம் போதிமரம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. அருமையான எழுத்தாளர் அறிமுகம் இன்று கிடைத்தது. மனைவி மேல் எவ்வளவு பாசம்.

    சாரின் ஓவியங்கள் மிகக் கச்சிதம். உங்கள் இருவரின் அடக்கம் மேன்மைக் குணம்.
    சீக்கிரமாக ஸ்ரீராமின் தந்தை புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைக்கவேண்டும்.
    மிக நன்றி கோமதி.
    அனைவருக்கும் என் அன்பு.

    பதிலளிநீக்கு
  18. நானும் துளசிதரன் தில்லையகத்துப் பதிவில் ஸ்ரீராமின் தந்தைபற்றி எழுதி இருந்ததைப் படித்திருக்கிறேன் அவரை சந்திக்க ஆவல் ஆனால் ஸ்ரீராம் தன் தந்தை ஒரு டெரர் என்று எழுதி இருந்ததும் நினைவுக்கு வருகிறது பல நாட்களுக்குப் பின் அரசுவின் கை வண்ணம் பதிவில் காண மகிழ்ச்சி. பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வல்லி அக்கா , நலமா? வாழ்க வளமுடன்.
    அன்பான உங்களை போன்ற உறவுகள் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி
    சொல்ல தோன்றும். கவலைகளை மறந்து இன்பம் அடையும் நேரம் நட்புகளுடன் உரையாடும் போது. சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விட்டேன் சாரிடம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. கோமதி அரசு மேடம்... ஆமாம். அந்தப்படம் திருக்கடையூர் நந்தவனம்தான். ஆனால் அப்பா நடப்பது போல இருப்பது இங்கு சென்னையில் என்னால் எடுக்கப்பட்டு, புத்தகத்தைத் தொகுத்த நண்பரால் ஃபோட்டோஷாப் செய்யப் பட்டது!

    பதிலளிநீக்கு
  23. ரஞ்சனி மேடம். சீக்கிரமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்!

    :)))

    பதிலளிநீக்கு
  24. கோமதி அரசு மேடம்.. அம்மா பற்றி அடிக்கடி பேசுவேன். ஏனென்றால் இழந்ததின் அருமை பின்னால்தானே தெரிகிறது! அப்பா பற்றி அதிகம் பேசுவதில்லை என்றாலும் எங்கள் ப்ளாக்கில் அவர் அவ்வப்போது எழுதியதை பாஹே என்ற பெயரில் பகிர்ந்திருந்தேன். பார்த்திருப்பீர்கள். அப்பா, அம்மா மேல் வைத்திருந்த பாசம் / நேசம் பற்றிய குறிப்புகள் மதுரை தினமலர், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வந்திருந்தது!

    பதிலளிநீக்கு
  25. ஜி எம் பி ஸார்... அப்பா ஒரு டெரர் என்று உங்கள் பதிவில் சொல்லி இருந்தேன்தான். பாசத்தை வெளியில் சொல்லாதவர்! அவர் ரூமில் இருந்தால் நாங்கள் ஹாலிலும், அவர் ஹாலில் இருந்தால் நாங்கள் ரூமிலும் இருப்போம். சிங்கம் போல டெரராய் இருந்தவர் இப்போது குழந்தை போலப் படுத்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    தினமலர் ஆனந்த விகடனில் வந்ததை பகிர முடிந்தால் பகிரலாமே
    முன்பு பகிர்ந்து இருக்கிறீர்களா?
    பாலசுப்பிரமணியன் சாரிடம் உங்கள் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொல்லலாமா? என்று நினைத்தேன்.
    நீங்களே சொல்லி விட்டீர்கள். உங்கள் வருத்தம் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. நூல் அறிமுகம் கண்டேன். நன்றி. ஓவியங்கள் மனதில் பதிந்துவிட்டன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. நிறைய தகவல்கள். ஜீவி அவர்களது நூல் வந்ததிலிருந்து கும்பகோணம் எழுத்தாளர்களைப் பற்றி பல பதிவுகளில் காண முடிகிறது. ஓவியரின் படத்தையும் வெளியிட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். ஜீவி சார் நூல் மூலம் எல்லோருக்கும் எழுத்தாளர்களை
    தெரிந்து கொள்ளவும் படிக்கவும் எண்ணம் வந்து இருப்பது மகிழ்ச்சிதான்.
    ஓவியர் நிறைய பதிவுகளில் வந்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் ஓவியர் படத்தை போட்டுவிடுவோம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சகோதரிபுத்தகம் கணவர் படங்கள் மிக நன்று.
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  32. புத்தகங்கள் கணவரது படங்கள் மிக நன்று
    இனிய வாழ்த்துகள்.

    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  33. புத்தகங்கள் கணவரது படங்கள் மிக நன்று
    இனிய வாழ்த்துகள்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  34. தலைப்பும் பகிர்வும் நன்று. தூறல்கள் நூல் குறித்து என் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். ‘இவனும் அவனும்’ சில கதைகள் முடித்திருக்கிறேன். அருமையான தொகுப்பு.

    அரசு சாரின் ஓவியங்கள் அனைத்தும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    தூறல்கள்நூல் குறித்து பகிர்ந்திருந்தது தெரியாது தெரிந்து இருந்தால் லிங்
    கொடுத்து இருப்பேன். நானும் சில கதைகள் தான் படித்து இருக்கிறேன்.
    நன்றாக இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு