உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன். போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.
காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.
-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!
பூம்புகார் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஆர்.எஸ்.மூர்த்தி அவர்கள் , தான் எழுதிய ’வலைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்புப் புத்தகத்தை என் கணவருக்குப் பரிசளித்தார்கள். (கவிதைத் தொகுப்பு வெளியிட பட்ட ஆண்டு 1979) அந்தத் தொகுப்பில் மின்சாரத்தைப்பற்றி எழுதிய கவிதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். . அவர் கல்லூரி அருகில் மேலையூரில்தான் வசித்து வந்தார். மின்சாரம் இல்லாமல் ஒருநாள் யார் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார் என்று கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள்!
உதவி
----------
மின்சாரக் கோளாறால்
மேலையூர் முழுவதும்
முக்காடு போட்டது போல்
இரவு மூடிக் கொண்டது
இருளால்
விண்மீன்கள் தெரியாமல்
மேகத்திரை வானில்
விரிந்தது எங்கும்
வழி தெரியவில்லை
ஒன்று
வேலி ஒரம்
உட்கார்ந்திருந்தது
பனித்துளிப்போலப்
பளிச்சிட்டது
பக்கத்தில் சென்றுபார்த்தேன்
மின்மினிக் கண்மணி
மெல்லநகைத்தது
அன்னை இயற்கை
அளித்த மின்மினி அதனால்
மெல்ல நடந்து
இல்லம் அடைந்தேன்
மின்மினியின்
உதவிக்கு
என்னவிதம் நன்றி சொல்வேன்!
இன்னொரு பாட்டில் மின்மினிகளைப் பாடுகிறார்:
மின்மினிகள்
மின் மினிகள்
மினி மின்னல்கள்
இரவை அலங்கரிக்க
இறைவன் செய்த
சின்னஞ் சிறிய
சீரியல் பல்புகள்!
என்று சொல்கிறார்.
பேராசிரியர்.ஆர்.எஸ். மூர்த்தி |
சார் சொல்வது போல் மின்மினி பூச்சிகள் நாங்கள் முன்பு இருந்த திருவெண்காட்டிலும் நிறைய பறக்கும். சில சமயம் வீட்டுக்குள் வந்து விடும்.
நியூஜெர்சி போனபோது தோட்டத்தில் மின் மினி பூச்சியை பார்த்தபோது எனக்கு திருவெண்காடு நினைவுக்கு வந்து விட்டது. அங்கு ,இரவு வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் கூட்டம் கூட்டமாய் அழகாய்ப் பறந்தது இருட்டில் அந்த சின்ன சிறிய மின் மினி பூச்சிகள் பறந்தது கண் கொள்ளாக்காட்சிகள்.
’நட்சத்திர இரவு’என்ற பாடலில் மின்வெட்டைப் பற்றி அவர் கவிதை பாடுகிறார்.
நட்சத்திர இரவு
இரவு மணி பத்து
மின்வெட்டால்
மின்விசிறி ஓடவில்லை
இயற்கை காற்றும்
இயங்கமறுத்தது
வெளியில் வந்து
விண்ணை நோக்கினேன்
என்ன அழகான
நட்சத்திர இரவு!
நீலமலையில்
வணண மலர்காட்சி போல்
வானமெங்கும்
நட்சத்திரங்கள்
பூத்துக் கிடந்தன
அப்பொழுது
ராக்கெட்டு ஒன்று
விரைந்துசென்று
மறைந்தது
நட்சத்திரங்களைப் பார்த்து
நான் கேட்டேன்;
“விஞ்ஞானிகளைப் பற்றி
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்/ என்று
பிரதிநிதியாக
ஒருநட்சத்திரம் பேசிற்று:
“நவீன விஞ்ஞானிகளா
அந்த ராக்கெட்டு ரவடிகளா?
அவர்கள் அரசியலுக்கு
அடிமைகளாகி
சுதந்திரமில்லா
துரும்புகளானார்கள்
அழிவுத் தொழிலுக்கு
ஆயத்தமான
ஆற்றல்கள் பெற்றார்
மக்களை மக்களால்
மக்களுக்காகப் பெருக்கி
மண்ணுலகை வீணாக்கிய
மனிதர்களை
விண் வெளிக் கோளங்களுக்கு
ஏற்றுமதி செய்ய
இந்த விஞ்ஞானிகள்
இறுமாப்போடு முயன்றதை
முன்னதாகவே உணர்த்த
இறைவன்
‘மக்களுக்கு வேண்டிய காற்று
மற்றக் கிரங்களுக்கு
இல்லாமல் போகக் கடவது’
என்றார்.
இனிமேல்
மண்ணுலகிலும் காற்று
மலிவாக கிடைக்காது
மின்சாரவிசிறிகளே மிஞ்சும்1
மெஷின்களின் அடிமைகள்
ஆண்டவனுக்கு எதிராக்
ஆர்ப்பாட்டம் செய்வதை
நாங்களும் விரும்பவில்லை
நாங்கள் நடத்தும்
நட்சத்திர இரவு
நன்கொடைக்காக அல்ல
தெய்வீக நன்மைக்காக’
மீண்டும் வந்தது
நட்சத்திரங்களுக்கு
நன்றி சொல்லி
வீட்டிற்குள் வந்து
விழுந்தேன் படுக்கையில்
நான்
நீரோடையில்
மிதப்பது போல்
நிம்மதியாக
உறங்கினேன்.
***
திருவெண்காட்டில் இருக்கும் போது அடிக்கடி மின்சாரம் போகும் இரவு
மின்சாரத்தை விவாசாயத்திற்கு மாற்றி விடுவார்கள் என்பார்கள். நான் 11வது
படிக்கும் போது அடிக்கடி மின்சாரம் தடை படும். மெழுகுவத்தி, சிம்னி
விளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.
திருவெண்காட்டிலில் இருந்து மேலையூர் 4 கிலோ மீட்டர். நகரத்திற்கு மாலை
முதல் இரவு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வயலுக்கு பம்புசெட்போட மின்சாரம் கொடுத்து விடுவார்கள். அப்போது கிராமத்து பெரியவர்கள் கரண்ட்
மாற்றுவதற்குள் வேலைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். 1981ல்
மாயவரம் வந்தோம் அப்போது தான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இங்கும் மழை விடாமல் பெய்யும் காலங்களில் மின்சாரத்தை தடை செய்து விடுவார்கள். இப்போது மறுபடியும் மின்வெட்டு! மின்சார தேவைகள் நமக்கு அதிகமாக அதிகமாக இதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.
முன்பு எல்லாம் நெல் குத்தி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல் ஓரளவு பயன்பாட்டில் இருந்தது, இப்போது அவை எல்லாம் காட்சி பொருட்கள்.
வைத்திஸ்வரன் கோவிலில் ஓட்டல் சதாபிஷேகத்தில் கல்வெட்டு மாதிரி செய்து உரலில் குத்துவது திருகைக் கல்லில் அரைப்பது எல்லாம் ஓவியமாய் வரைந்து வைத்து இருக்கிறர்கள்,இக்காலக் குழந்தைகள் பார்க்க.
எங்கள் வீட்டிலும் ஒருநாள் மிக்ஸியில் தேங்காய் சட்னிக்கு அரைத்துக் கொண்டு இருந்தேன் ,கரண்ட் போய் விட்டது. வெகு நேரம் ஆகியும் வரவில்லை. மிக்ஸியில் உள்ளதை எடுத்து சின்ன ஆட்டுக்கல்லில் (இடிப்பதற்கு வாங்கியது) அரைத்தேன் சரி வரவில்லை பிறகு சின்ன அம்மிக்கல்லில் ஒருவழியாக அரைத்து முடித்தேன்.
பழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.
மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.
வாழ்க வளமுடன்!
_______________________
அழகிய ஓவியங்களும் கவிதைகளும் மனதைக் கவர்ந்தது. மின்மினி ஓவியத்தில் மினுக்மினுக்கெனும் வெளிச்சம் வெகு சிறப்புங்க. மின்சார விளம்பரம் சிறப்பு. சிரிப்பையும் வரவைத்தது. ஆட்டுக்கல்லும் அம்மியும் நல்ல சுவை கொடுப்பதுடன் ஆரோக்கியமும் கூட மின்சாரம் இருளைப் போக்க மட்டும் இருந்தால் போதும் என்பது என் கருத்து.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவாலன்டைன் டே அன்று தன் மின்சாரக்காதலிக்காக
கண்ணீர் வடிக்கும் பெஞ்சமின் போற்றி.
பெஞ்சமின்னே இன்னொரு முறை வா !! மின்சாரம் இல்லாமலே வெளிச்சம் தரும் பல்பு கண்டு பிடித்து தா.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
மின் மினி ஓவியம் பிரமாதம்!
பதிலளிநீக்குஅருமையான கவிதைப் பதிவுக்கு நன்றி
பதிலளிநீக்குஅதை ஏன் கேட்குறீங்க...? மின்சாரம் எப்போ போகும் எப்போ வரும் தெரியாது... ...ம்... எதையும் சமாளிக்க வேண்டும்...
பதிலளிநீக்குமின்சாரத்தின் அவசியம் பற்றி நன்கு உணர்ந்துவிட்டோம்.
பதிலளிநீக்குமின்மினி பூச்சி ஓவியம் மிகவும் நன்று.
கவிதையும் அழகு .
காலத்திற்கேற்ற பதிவு.
அம்மியில் அரைக்கும் எதற்கும் ஒரு தனி ருசி தான். நாம் தான் கிரைண்டர், மிக்சி எல்லாவற்றிற்கும்
அடிமையானோம்.
காலத்திற்கேற்ற பதிவு.
நன்றி பகிர்விற்கு.
அவர் மட்டுமே சொல்ல தெரிந்தவர் .அழகாய் சொல்லியுள்ளார். உங்களது படங்களும் கவிதையும் அழகு
பதிலளிநீக்குமின்வெட்டு கவிதையும், மின்சார விளம்பரமும் அருமை.. இப்பல்லாம் நானும் அம்மியும், ஆட்டுக்கல்லும் உபயோகிக்கிறேன்.. காலையில எழுந்து பால்காரரை தேடுறோமோ இல்லையோ 6 மணிக்கு மின்வெட்டு என்று 5மணிக்கே எழுந்து கிரைண்டர், மிக்சி வேலைகளை துரிதமா முடிக்க பார்க்கிறோம்.தவறிடுச்சின்னா அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்..அம்மியில அரைக்கிற அன்று எல்லாரும் கூட இரண்டு இட்லி சாப்பிடுறாங்க..:)
பதிலளிநீக்குஅருமையான நினைவுகூறல் ஓவியமும் அருமை மிசாரமில்லாமல் இயற்கையின் உதவியோடு இளமையாக இருந்தார்கள் நாம் ..............ம்கும் அதே வேற சொல்லிகனுமா
பதிலளிநீக்குபகிர்வு அருமை,படங்களை ரசித்தேன்,அம்மியும் இடிஉரலும் அழகு.
பதிலளிநீக்குமின் மினி ஓவியம் பிரமாதம்...
பதிலளிநீக்குஆஹா..அருமையான பகிர்வு.பிலஸ் படங்கள்.
பதிலளிநீக்கு//காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.// எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!ரசித்தேன்.
அன்பு கோமதி,மின்வெட்டு நல்ல பலன்களையும் தருகிறது.
பதிலளிநீக்குஇல்லாவிட்டால் அம்மியின் அழகுப் பயன் யாருக்குத் தெரியும். கைகளில் வலு இருந்த காலம் தினம் இட்லிக்கு அரைத்த கைகளதான். இட்லிப் பொடி இல்லாத வாட்களில் வண்டிக்காரன் சட்னி வொடிடயில் தயராகும். குழந்தைகள் மாவு தீரும் வரை சட்டினிக்காக தூசையும் இட்லியும் சாப்பிடுவார்கள். இன்னும் ஸ்டவ் இருந்த காலங்க்களில் கீழீ உட்கார்ந்து செய்யும் பட்சணங்க்கள்,சப்பாத்தி என்று செய்யும்போது.
சுடச்சுட சாப்பிட குழந்தைகளும் தோழீயர் எல்லோடரும் வந்துவிடுவார்கள்.அந்த மின் கவிதை மிக அருமை.
பேராசிரியடின் மின்மினிகளோ பிரமாதம்.
இந்த இயற்கையை நாம் இழக்கிறோமே:(
சகோதரி சொல்லி இருப்பது போல
வெகு நல்ல பகிர்வுமா,. இருளைப் போக்க மின்சாரம் தேவை. கொசுக்களை விரட்ட மின்விசிறி
வேண்டும்.
வாங்க சசிகலா, வாழ்க வளமுடன், உங்கள் முதல் வரவுக்கு முதலில் நன்றி. மின்வெட்டு கவிதை என்றவுடன் கவிதை எழுதும் நீங்கள் ஆர்வமாய் வந்தீர்கள் முதலில் என நினைக்கிறேன்.பகிர்வு, ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமின்மினி பூச்சி மினுக்குவதை மட்டும் பார்த்தீர்களா? ஆந்தையார் கண்ணை உருட்டி விழிப்பதை பார்க்கவில்லையா?
மின்வெட்டு காணவில்லை அறிவிப்பு சிரிப்பை வரவைத்ததா மகிழ்ச்சி.
நன்றி சசிகலா.
வாங்க கே.பி ஜனா, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமின்மினி ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
வாங்க குட்டன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகவிதை தொகுப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று சொல்ல முடியவில்லை இல்லாத போது சமாளித்துக் கொண்டு இருக்கிறோம்.
நன்றி.
அருமையான மின்சாரக் கவிதைப் பகிர்வுகள்.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.
பதிலளிநீக்குமிகவும் அழகான பதிவு.
பதிலளிநீக்குமுழுவதும் ரஸித்துப்படித்தேன்.
சாத்தூர் பஸ் நிலைய அறிவிப்பில் ஆரம்பித்து பதிவு முழுக்க விறுவிறுப்பான தகவல்கள்.
பேராசிரியர் ஆர். எஸ். மூர்த்தி அவர்களின் “வலைகள்’ இல் மின்மினிப்பூச்சிகள் அகப்பட்டதும், அதைத்தாங்கள் பகிர்ந்து கொண்டதும் மிகச்சிறப்பு தான்.
>>>>>>
//நட்சத்திரங்களுக்கு
பதிலளிநீக்குநன்றி சொல்லி
வீட்டிற்குள் வந்து
விழுந்தேன் படுக்கையில்
நான்
நீரோடையில்
மிதப்பது போல்
நிம்மதியாக
உறங்கினேன்.//
இதுவும் சூப்பராகவே உள்ளது.
>>>>>
காட்டியுள்ள படங்கள் யாவும் மிக நல்ல தேர்வு. பழமையை நினைவூட்டி மகிழ்விக்கின்றன.
பதிலளிநீக்கு//பழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.//
அவர்கள் மிகவும் பாவம் தான். ஆனாலும் ஓரளவு ஆரோக்யமாக உடல்நலத்துடன் இருந்துள்ளனர்.
//மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். //
மிகவும் தவிப்பாகவே உள்ளது.
//தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.//
நாளுக்கு நாள் மின்செலவு அதிகரித்த வண்ணமே உள்ளது.
மிகவும் நல்ல பதிவு+பகிர்வு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
தகவலுக்கும் அன்பான நன்றிகள்.
ooooo
வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் மின்சாரத்தின் முழுபயனையும் அனுபவித்து வருகிறோம், அது இல்லாமல் முடியாது என்ற நிலைமைக்கும் அடிமையாகி விட்டோம்.
இயந்திரங்கள் உதவி இல்லாமல் நாமே எல்லாம் செய்தால் ருசியாக இருக்கும் தான், ஆனால் உடம்பு முன்பு மாதிரி வளைய மாட்டேன் என்கிறதே!
ஓவியம், கவிதை, பதிவு, படபகிரவு ஆகியவற்றை பாராட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி,நன்றி.
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஅவரை பாராட்டியதற்கு நன்றி., படங்கள் கவிதையை ரசித்தமைக்கு ந்ன்றி.
வாங்க ராதா ராணி, வாழ்கவளமுடன், மின்வெட்டு கவிதை, மின்சார விளம்பரம் ஆகியவற்றை பாராட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் பால்காரர் வரும் முன்பே எழுந்து வேலைகள் துரிதமாய் நடக்கிறது. எவ்வளவு வேலைகள் மின்சாரத்தால் உள்ளது, தண்ணீர் மோட்டர் போடுவது, வாஷிங்மெஷின் போடுவது, கிரைண்டர்,மிக்ஷி போடுவது வெந்நீர் ஹீட்டர் போடுவது என்று எவ்வளவு மின் சாதனங்கள் வீட்டு உபயோகத்திற்கு! மின்வெட்டு எல்லோரையும் மிகவும் சுறு சுறுப்பாய்தான் வைத்து இருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் அம்மி, ஆட்டுக்கல் கிடையாது மின் வெட்டால் சிறிய அம்மி, ஆட்டுக்கல் வாங்கி வைக்க வேண்டி உள்ளது.
நாமே அரைத்தால் ருசிதான் கூட இரண்டு இட்லி சாப்பிடுவது மகிழ்ச்சியான விஷயம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க மலர் பாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபதிவையும், ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் , உடலுழைப்பின் மேன்மை தெரிந்தவர்கள் அதனால் தான் நீங்கள் சொன்னமாதிரி அழகிய தோற்றத்துடன் இளமியாக இருந்தார்கள். நமக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டது .
வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபகிர்வை பாரட்டியதற்கும், படத்தை ரசித்தமைக்கும் நன்றி ஆசியா.அம்மியும், இடி உரலும் அழகாய் இருக்கா!
வாங்க ஃபாயிஷா காதர், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமின்மினி ஓவியத்தை பாரட்டியதற்கு நன்றி.
வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன். பகிர்வையும், படங்களை பாரட்டியதற்கு மகிழ்ச்சி, நன்றி.
பதிலளிநீக்குமின்சார விளம்பரத்தை ரசித்து படித்தமைக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்கள் நல்லாதான் யோசிக்கிறாங்க நீங்கள் சொன்னது போல் ஸாதிகா, நன்றி.
வாங்க வல்லிஅக்கா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமின்வெட்டால் பயனும் உண்டுதான்.
அம்மி, ஆட்டுக்கல் மகிமை தெரியவருகிறது. அந்தக்கால நினைவலைகள் வருகிறது, குழந்தைகளுக்கும், தோழியரருக்கும் வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்து அவர்கள் சந்தோஷ்மாக சாப்பிட்ட நினைவுகலை பகிர்ந்து கொண்டீர்கள் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஓவியம், கவிதை இவ்ற்றை பாராட்டியதற்கு நன்றி.
இருளை விரட்ட மின்விளக்கும், கொசுவை விரட்ட மின்விசிறியும் முதலில் அவசியம்தேவைதான்.
நன்றி அக்கா, விரிவான பின்னூட்டத்திற்கு.
வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகவிதைகளை ரசித்தமைக்கு நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபகிர்வை பாராட்டியதற்கு நன்றி.ரசித்து படித்தமைக்கு நன்றி.
சாத்தூர் விள்ம்பரத்தை பகிர்ந்து கொள்ள நேரம் பார்த்து இருந்தேன். பேராசிரியர் கவிதை கிடைத்த்தும் மின்னல் போல் பதிவு ரெடியாகி விட்டது. விளம்பரத்தை,
நட்சத்திர கவிதையை ரசித்தமைக்கு நன்றி. மின்மினி உதவி கவிதை என் கணவர் ஓவியத்திற்கு உதவியது.
பழமையை நினைவூட்டும் படம் வைத்தீஸ்வரன் கோவில் போனபோது எடுத்து வைத்தேன் ஏதாவது பதிவில் போடவேண்டும் என்று இதற்கு பொருத்தமாய் இருந்த்தது போட்டு விட்டேன்.
நீங்கள் சொல்வது போல்
பழையக்காலத்து மனிதர்கள் மிகவும் பாவம் தான். எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
பழைய காலத்து மனிதர்களுக்கு பொழுது எல்லாம் வீட்டுவேலைகளில் சரியாகி இருக்கும். உடல் உழைப்பு இருந்ததால் நன்கு ஆரோக்கியமாக இருந்தார்கள். பொழுது போக்கு சாதனங்கள் என்ற பெயரில் வீட்டில் இருந்து பொழுதை கழிக்காமல், வெளியில் கோவில், குளம் என்று போய் வந்துக் கொண்டு ஆரோக்கியமாய் இருந்தார்கள்.
உங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி சார்.
//மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.//
பதிலளிநீக்குஆம் மேடம். மிகச் சரி.
சுவாரசியமான கவிதைப்புத்தகத்திற்கு நன்றி.
வாங்க ரமாரவி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநான் பகிர்ந்து கொண்ட விஷ்யங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
கவிதை பிடித்து இருந்ததா? மகிழ்ச்சி, நன்றி.
மின்சார வெட்டை பற்றி கவிதைகள் அருமை. எல்லோரும் சுறுசுறுப்பாய் தான் இருக்க வேண்டி உள்ளது....
பதிலளிநீக்குஓவியம் பிரமாதமாக உள்ளது.
//இனிமேல்
பதிலளிநீக்குமண்ணுலகிலும் காற்று
மலிவாக கிடைக்காது
மின்சாரவிசிறிகளே மிஞ்சும்1
மெஷின்களின் அடிமைகள்
ஆண்டவனுக்கு எதிராக்
ஆர்ப்பாட்டம் செய்வதை
நாங்களும் விரும்பவில்லை
நாங்கள் நடத்தும்
நட்சத்திர இரவு
நன்கொடைக்காக அல்ல
தெய்வீக நன்மைக்காக’//
அருமையான வரிகள்.
அம்மி, ஆட்டுக்கல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, அடுக்கு மாடிக்குடியிருப்பில் உபயோகிக்க முடியறதில்லை.
வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகவிதை, ஓவியம் இரண்டையும் பாராட்டியதற்கு நன்றி.
மின்வெட்டால் எல்லோரும் சுறு சுறுப்பாய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதி.
வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஆம் அருமையான வரிகள் தான் சாரல்.
அடுக்குமாடி குடியிருப்பில் அந்த வசதி வைப்பதும் இல்லை , பயன்படுத்தவும் வசதி இருக்காது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
இருளைத் தெரிய வைப்பது ஒளியா
பதிலளிநீக்குஇல்லை,
ஒளியைத் தெரிய வைப்பது இருளா?
ஒளி இல்லாமை இருளா
இல்லை,
இருள் இல்லாமை ஒளியா?
இருட்டிலில்லாத
வெளிச்ச வெள்ளத்தில்
எங்கே தொலைந்து போயிற்று
இந்த மின்மினி
என்கிற ஏக்கம்
ஒரு பக்கம்.
இத்தனைக்கும் நடுவே விழிகளை ஓட்டினால், அந்த நான்கு ஓவியங்களுமே அழகு!
முதல் ஓவியத்தில் மின்மினையை மினுக்க வைத்தது சிறப்பு என்றால்
அடுத்ததில் மைல் கல்லில் உரல் கல்லும் அதற்கடுத்தில் மைல் கல்லில் இயந்திரக் கல்லும் ஒன்றில் ஒன்று உள் நின்று உணர்வதாய் நல்ல கற்பனை..
நாலாவதோ, பழைமையும் புதுமையும் கைகோர்த்த அழகு.
அம்மியையும் ஆட்டுக்கல்லையும் வழவழக்கும் டைல்ஸ் வேய்ந்த தரையில் இருத்தி வைத்திருக்கும் புதுமை!
அருமையான பதிவு! ஆனால் அந்தத் தகவல் பலகையில் ஒரு பிழை பெஞ்சமின் பிராங்கிளினுக்குப் பதிலாக மைக்கே ஃபாரடே என்று வந்திருக்க வேண்டும்!!
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎன் கணவர் மின்மினி பூச்சி பாடலுக்கு வரைந்த ஓவியத்திற்கு நீங்கள் அழகான கவிதை எழுதிவிட்டீர்கள், நன்றி.
பழைய காலத்தில் பெண்கள் உரலில் குத்துவது, திருகையில் அரைப்பது எல்லாம் ஓட்டலில் உள்ள தோட்டத்தில் எடுத்தது.
கடைசி படம் என் வீட்டு சாப்பாட்டு மேஜையில் எடுத்தது, மேஜை விரிப்பு
வழவழக்கும் டைல்ஸ் வேய்ந்த தரைபோல் தெரிகிறதா! கரண்ட் இல்லாத போது அரைத்தேன் அதை மேஜை மேல் கொண்டு வந்து வைத்து போட்டோ எடுத்தேன்.
வாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபகிர்வு அருமையாக இருக்கிறது என்றதற்கு நன்றி.
நான் எழுதியது இல்லை சாத்தூரில் பொது மக்கள் சார்பில் வைத்த அறிவுப்பு பலகையில் உள்ள கருத்து. அதை அப்படியே கொடுத்து இருக்கிறேன்.
உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குபதிவை மிகவும் ரசித்தேன். மின்மினியின் ஒளி பற்றி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. பல மின்மினிகள் இருட்டில் காணமுடிந்தாலும் அவற்றின் மினுமினுப்பால் எந்த ஒளியும் பெற முடியாதாம்.!இந்தப் பேரண்டமெ இருண்டது என்றும் சூரியன் போன்ற நட்சத்திரங்களே ஒளி கொடுக்கிறதாம் என்றும் புரிந்து கொண்ட ஒன்று. ஜீவியின் எழுத்து சிந்திக்க வைப்பது.
மதுரை அழகு ,
பதிலளிநீக்குபெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள்
மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதை கி.பி 1750 லில் தமது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டு உள்ளார். அவர் 1790லில் இறந்தார்.
அவர் இறந்த மறு ஆண்டு தான் மைக்கேல் பார்டே பிறந்தார்- - தகவல் விக்கிபீடியா.
மதுரை அழகு ,
பதிலளிநீக்குபெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள்
மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதை கி.பி 1750 லில் தமது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டு உள்ளார். அவர் 1790லில் இறந்தார்.
அவர் இறந்த மறு ஆண்டு தான் மைக்கேல் பார்டே பிறந்தார்- - தகவல் விக்கிபீடியா.
அழகிய மின்மினி ஓவியம்.
பதிலளிநீக்குமின்சார விளம்பரம் ரசிக்கவைத்தது. கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபதிவை மிகவும் ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஓவியத்தையும் கவிதையையும் , விளம்பரத்தையும் ரசித்தமைக்கு நன்றி மாதேவி.
விளம்பர வாசகங்களை எங்களுக்காக எழுதி வந்ததற்கு நன்றி. இன்னொரு விளம்பரமும் இணையத்தில் பார்த்தேன்: “ஆற்காட்டாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்கிற போஸ்டர்!! அவர் மின் துறை அமைச்சராக இருந்தபோது, 3 மணிநேர பவர்கட்தானே!! அதற்கே ஆட்சியிழக்கச் செய்தோமே என்று மன்னிப்பாம்.
பதிலளிநீக்குஅம்மி, ஆட்டுக்கல் அழகா இருக்கு. நானும் சிறிய அம்மி ஒன்று இங்கு வாங்கி வந்தேன். ரொம்பச் சிறியது என்பதால் அரைக்க வசதிப்படவில்லை - கீழே கொட்டுகிறது, அரைபடவும் மாட்டேங்கீறது. சிறு வயதில் பெரிய அம்மியெல்லாம் அரைக்கத்தான் செய்தேன்.
கவிதைகளும் இன்றும் அன்றும் இருந்த மின்சார தட்டுப்பாடு பற்றிய தகவல்களும் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன விளம்பரமும் நன்றாக இருக்கிறது.
சின்ன ஆட்டுக்கல், அம்மிஎல்லாம் பொடி செய்யத்தான் உதவும் போலும். நானும் ஆசைப்பட்டு மாமல்லபுரத்தில் வாங்கினேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க சுரேஷ், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி.உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்னை இயற்கை
பதிலளிநீக்குஅளித்த மின்மினி
சாரமான மின்சாரக்கனவுக்கும் அருமையான படத்திற்கும் பாராட்டுக்கள்..
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஆம், அன்னை இயற்கை அளித்தது தான் மின்மினி.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
வாங்க சூரி சார, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//பெஞ்சமின்னே இன்னொரு முறை வா !! மின்சாரம் இல்லாமலே வெளிச்சம் தரும் பல்பு கண்டு பிடித்து தா.//
உங்கள் எண்ணம் போல் மின்சாரம் இல்லாமல் சூரிய சகதியை பயன்படுத்தி பல்பு தருவார்.
சூரிய சக்தி நம் நாட்டில் நிறைய இருக்கிறது அதை பயன்படுத்தி நிறைய செய்யலாம். ஒரு சில இடங்களில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.
ஆமாங்க ஆந்தைய பார்க்க மறந்துட்டேன். இப்போது பார்த்தேன் அடடா ...அருமையான படைப்பு படைப்பாளிக்கு வாழ்த்து சொல்லுங்க.
பதிலளிநீக்குவாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஆந்தையை பார்த்துவிட்டீர்களா?
மகிழ்ச்சி. படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
// மெழுகுவத்தி, சிம்னி
பதிலளிநீக்குவிளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.//
எட்டு வகுப்பு வரை ஹரிக்கேன் விளக்கு, சிம்னி உதவியோடு தான் படிப்பு. இத்தனைக்கும் மதுரையில் தான் இருந்தோம். நாங்க குடி இருந்த வீட்டில் மட்டும் மின்சார இணைப்புக் கொடுக்கவில்லை. :))))
கவிதைகள் அருமை. மின்சாரம் இல்லைங்கற விஷயத்தைக் கூட ஒரு இலக்கிய உணர்வோடு மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. நான் என்ன பெரிசாச் சொல்லி இருக்கேன். சொந்தப் புலம்பல் தான்!:)))
பதிலளிநீக்குஇந்தக் கவிஞரைப் பற்றி இன்றே அறிந்தேன். பகிர்வுக்கும், தகவல் கொடுத்ததுக்கும் மிக்க நன்றி.
அம்மியில், ஆட்டுக்கல்லில் அம்பத்தூரில் இருந்தவரை அரைத்தேன். இங்கே வந்து வைத்துக்கொள்ளும்படியான இடம் வசதியாக இல்லை. நாலாவது மாடி வேறே! :)))))
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளுக்கு அரசு சாரின் ஓவியங்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்! அருமை.
பதிலளிநீக்குதிருவெண்காடு என்றால் என் மனதில் தானாக அடுத்த வரி 'ஜெயராமன்' என்கிறது!
ஜீவி சார் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது.
பதிவின் சாரமான மின்சாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று பார்க்கிறீர்களா... இல்லாத ஒன்றைப் பற்றி என்ன சொல்ல!!
வாங்க கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு முதலில் நன்றி.
நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுக்கவிதை எழுதிய பேராசிரியர் இப்போது இல்லை. அவர் எழுதிய காலம் புதுக் கவிதை அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.
அம்மியும், ஆட்டுக்கல்லும் வைக்க இப்போது கட்டும் வீடுகளில் வசதி இல்லைதான்.
உங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மூன்று பின்னூட்டங்கள் போட்டது மகிழ்வாக இருக்கிறது நன்றி.
வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஅரசு சாரின் ரசிகரை காணவில்லையே! என்று நினைத்தேன். சாருக்கு உங்கள் பின்னூட்டம் பற்றி சொன்னவுடன் மகிழ்ச்சி.
ஊருக்கு போய் இருந்தீர்களா?
இசைபிரியருக்கு திருவெண்காடு என்றால் திருவெண்காடு ஜெயராமன் நினைவுக்கு வருவதில் ஆச்சிரியம் இல்லை.
ஜீவி சார் பின்னூட்டம் ரசிக்கவைக்கும் எப்போதும்.
இல்லாத ஒன்றைப்பற்றி என்ன சொல்வது நீங்கள் சொன்னது சரிதான்.
நன்றி வரவுக்கும், கருத்துக்கும்.
//உங்கள் பதிவுகளுக்கு அரசு சாரின் ஓவியங்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்! அருமை.//
பதிலளிநீக்குஶ்ரீராம் குறிப்பிட்டுச் சொன்னதுக்கு அப்புறமே வந்து கவனித்தேன். ஓவியங்கள் அரசு சாரா? ஜீவி சாரின் பின்னூட்டத்தையும் மறுபடி படிச்சுட்டு ஓவியங்களையும் மீண்டும் ரசித்தேன்.
அரசுசாரின் ஓவியங்கள் மிக அழகு.
வாங்க கீதாசாம்பசிவம், வாழ்கவளமுடன் உங்கள் மறு வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇப்போது கொஞ்சநாட்களாய் என் கணவர் ஓவியம் வரைந்து தருகிறார்.
பொங்கல் பதிவு போட்ட போது வரைந்து தந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்து அவர்களே முன் வந்து என்ன பதிவு எழுதுகிறாய் என்று கேட்டு அதற்கு ஏற்ற படங்களை வரைந்து தருகிறார்கள்.
அபிராமி அம்மனுக்கு அழகிய அங்கி என்ற பதிவுக்கு அபிராமி பட்டர் கதையை படத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.
அவர்களுக்கும் நல்ல பொழுதாய் போகிறது.
ஜீவி சாரின் பின்னூட்ட கவிதை அருமை அல்லவா!
மீண்டும் வந்து ஜீவி சாரின் பின்னூட்டம் எங்கள் சாரின் ஓவியம் எல்லாம் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.
மின்சாரம் இல்லாமல் போனால் வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கலாம். மின்மினிகளைப் பார்க்கலாம்; அவற்றிற்கு நன்றி கூறலாம்.
பதிலளிநீக்குதிருவெண்காடு மின்மினிப் பூச்சிகளை நியூசிலாந்து நாட்டிலும் கண்டு மகிழ்ந்தீர்களா?
பேராசிரியரின் கவிதை - நட்சத்திரத்துடன் பேசுவது - பல பல விஷயங்களைச் சொல்லுகிறது. கடைசி நான்கு வரிகள் அருமை!
அம்மியையும், ஆட்டுக் கல்லையும் இனி ஓவியங்களில் தான் அடுத்த தலைமுறைக்குக் காட்ட வேண்டும்.
தொழில் நுட்பத்திற்கு ரொம்பவும் அடிமை ஆகிவிட்டோம் என்ன செய்வது?
காணவில்லை போஸ்டர் சூப்பர்!
மொத்தத்தில் சூப்பர் பதிவு! அரசு ஸாரின் ஓவியங்கள் பதிவிற்கு அழகூட்டுகின்றன.
கோமதிக்கும், கோமதியின் அரசுவுக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவைகோ சார் கூட நன்றாக ஓவியம் வரைவார். அவர் பதிவின் மூலமே தெரிந்து கொண்டதுதான். அவரிடம் உங்கள் பதிவுகளுக்கு நீங்களே படம் வரைந்து கொள்ளலாமே என்று சொன்ன பிறகு ஓரிரு பதிவுகளுக்குப் படம் வரைந்து வெளியிட்டார். அப்புறம் அவரும் கூகிளாண்டவர் உதவிதான்! :))
வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் மின்சாரம் இல்லாதபோது வானத்தை ரசிக்கலாம்,நட்சத்திரங்களைப்
பார்க்கலாம் . அவற்றிற்கு நன்றி கூறலாம் தான்.
மின்வெட்டு இருந்தாலும் இன்வெட்டர் போட்டுக் கொண்டு வீட்டிலேயே இருப்பவர்களை என்ன சொல்வது?
முன்பு முற்றத்தில் உட்கார்ந்து அல்லது வெளி வாசலில். அல்லது மொட்டை மாடியில் குடும்பமாய் அமர்ந்து வேடிக்கை கதைகள் பேசி வானத்தில் இருக்கும் அந்த நட்சத்திரம் பேர் தெரியுமா? இந்த நட்சத்திரம், பேர் தெரியுமா? என்று கேட்டு பெளர்ணமி நாட்களில் நிலாச்சோறு உண்டு எல்லா கதைகளும் பேசி என்பவை எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.
தொலைகாட்சியால் இவைஎல்லாம் தொலைந்து போய்விட்டது.
நீங்கள் சொல்வது போல் தொழில்நுட்பத்திற்கு அடிமை ஆகிவிட்டோம் உண்மை.
காணவில்லை போஸ்டர் நன்றாக இருக்கிறதா! மகிழ்ச்சி.
கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
சாரின் ஓவியம், என் பதிவு இவற்றை பாராட்டியதற்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் மிகமகிழ்ச்சி, நன்றி ரஞ்சனி.
வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரைந்த ஓவியத்துடன் பதிவுகள் படித்து இருக்கிறேன்.
தேங்காய் விற்பவர் கதையில் விற்கும் பாட்டி , வாங்குபவர், திருச்சி மலைக்கோட்டை, தேங்காய்குவியல் எல்லாம் அழகாய் வரைந்து இருப்பார்.
பரிசு பெற்ற கதைக்கும் அவரே வரைந்து இருப்பார். பார்த்து இருக்கிறேன்.
இவர்களும் சிறு வயதில் நிறைய ஓவியங்கள் நோட்டில் வரைந்து வைத்து இருந்தார்கள், ஒரு நண்பர் வாங்கி சென்றார் பார்த்துவிட்டு தருவதாய், பின் தரவே இல்லை.
இப்ப்பொது கணிணி ஓவியம் வரைய ஆசை வந்து அதை வரைகிறார்கள். நீங்கள், வை.கோ சார் எல்லாம் சாரை பாரட்டும் போது இன்னும் மகிழ்ச்சியாக வரைகிறார்கள் உங்கள் மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
பகிர்ந்த கவிதைகள் அருமை. சின்ன வயதில் மின்மினிப் பூச்சிகள் எப்போதேனும் கண்ணில் படுகையில் வியந்து பார்ப்போம். இப்போது காணக் கிடைப்பதில்லை. மின்சாரத்தை அண்டியிராமல் வாழ்ந்த காலத்தை நினைவூட்டியதோடு விழிப்புணர்வையும் தந்துள்ளீர்கள். அம்மி ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்டு செய்யும் சமையலின் ருசியே தனிதான். அம்மியில் அரைத்த அனுபவம் உண்டு. ஆம், சாந்தி சொல்வது போல் மாடிக் குடியிருப்புகளில் வைக்க முடிவதில்லை. ஓவியம் சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகவிதைகள் நல்லா இருக்கா சந்தோஷம்.
சிறியவயதில் மின்மினி பூச்சி, வெல்வெட்டு பூச்சி, அல்லது பட்டு பூச்சி (இலக்கியத்தில் இந்திரபோகம் என்பார்கள்) அதையும் பார்த்து வியந்து போவோம், பட்டுபூச்சியை தீப்பெட்டி டப்பாவில் வைத்து அதற்கு சிறு புல்களை சிறு சிறிதாக வெட்டி போடுவோம்.
மின்சாரத்தை அண்டியிராமல் வாழ்ந்த காலங்களில் உள்ளவர்கள் உடல் பலத்தோடு நலத்தோடு வாழ்கிறார்கள் ராமலக்ஷ்மி.
மாடி குடியிருப்பில் வசதி இல்லை தான். எனக்கும் கஷ்டம் தான் தேவைபடும் போது மேடையில் வைக்கவேண்டும் அப்புறம் எடுத்து வேறு இடத்தில் வைக்க வேண்டும்.
ஓவியத்தில் ஆந்தையார் பார்த்தீர்களா! நீங்கள் கவனமாய் பார்ப்பீர்களே, மேலையூர், திருவெண்காட்டில் ஆந்தை 7மணிக்கு எல்லாம் கத்த ஆரம்பித்துவிடும்.(அவ்வளவு சீக்கீரம் ஊர் அடங்கி விடும்) அதன் நினைவாக ஆந்தை கூறை மேல் இருப்பது போல் வரைந்து இருக்கிறார்கள். ஆந்தை தன் பெரிய கண்களை உருட்டி உருட்டி முழிக்கிறது.
இப்போது அப்படி கத்துமா 7 மணிக்கு என்று அங்குள்ளவர்களை கேட்க வேண்டும் இப்போது தொலைகாட்சி வரவால் ஊர் விழித்து இருக்கிறதே!
நன்றி ராமலக்ஷ்மி.
உருட்டி விழிக்கும் ஆந்தை அற்புதம்! பல இடங்களில் மினுமினுத்த வெளிச்சத்தில் ஓரத்தில் இருந்ததைக் கவனிக்கவில்லை. கவனத்துக்குக் கொண்டு வந்து இரசிக்கத் தந்ததற்கு நன்றி கோமதிம்மா:)!
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆந்தையாரை பார்த்தீர்களா! பார்த்துவிட்டு மறுபடியும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இந்த அரசியல்வாதிகள் ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்து பார்க்கட்டும் கவிதை அருமை மின்மினி ஓவியம் அழகு
பதிலளிநீக்குஅழகான ஓவியம் அருமையான கவிதை மின்சாரத்தைப் பற்றிய ஆதங்கம் காற்று தண்ணீர் வரிசையில் மின்சாரம்,அருமையான பதிவு
பதிலளிநீக்குஅன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
பதிலளிநீக்குவாங்க மின்னல் நாகராஜ். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள் ஏன் இருக்கிறார்கள் மின்சாரம் இல்லாமல்!
காற்று தண்ணீர் வரிசையில் மின்சாரம்,அருமையான பதிவு//
நீங்கள் சொன்னது போல் இயற்கை காற்றுக்கு தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, இப்போது மின் தட்டுப்பாடு.
என்னசெய்வது?
உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிவு இன்னும் படிக்கல
பதிலளிநீக்குஅம்மி கல்லு உரல் பார்த்தேன் அந்த காலத்தில் அரைத்த ஞாபகம் வருது
பிற்கு வருகிறேன்
கோமதி அக்கா
ஜலீலாகமால்
வாங்க தி.தமிழ் இளங்கோ. வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குவலைச்சரத்தில் என் தளத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
என் கருத்தை பகிர்ந்து கொண்டு விட்டேன்.
நன்றி.
வாங்க ஜலீலாகமால், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஅம்மி, ஆட்டுக்கல் பார்த்தீர்களா! அந்தக்கால நினைவு வந்தமைக்கு
மகிழ்ச்சி. மெதுவாய் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
நன்றி.
மிகவும் சிறந்த பதிவு இன்று தேவையான பதிவு சிறப்பு ...
பதிலளிநீக்குவாங்க மாலதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக நன்றி.
அருமையான கவிதைப் பதிவுக்கு நன்றி
பதிலளிநீக்கு''..பழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் ..''
பதிலளிநீக்குஎன் இளமைக் காலத்தில் மின்சாரம் இன்றி மிக மகிழ்வாக வாழ்தோம்.
நன்றாக நினைவுள்ளது. நல்ல விரிவான பதிவு.
நிறையத் தொகுத்துள்ளீர்கள் சுவையுடன்.
அருமை. இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க விஜிபார்த்திபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வேதா. இலங்கதிலகம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.