திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல் -பாகம்-2

திண்ணையில் நான்  வரைந்த கோலம்

பொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.
உங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா?  தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம் செய்வது.

 வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.
(கார்ட்டூன் -கணவர் வரைந்தது)

 சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.

நம் அம்மா காலத்தில் (திருநெல்வேலி பக்கம்) பழைய வீடுகளில் அட்டாலி என்று பொருட்கள் வைக்கும் பலகையால் ஆன தட்டு இருக்கும். அதைக் கூட விடாமல் கழட்டி அதைக் கழுவி சுத்தம் செய்து அதில் எல்லாம் கோலம் போடுவார்கள். அதுவும் புது சுண்ணாம்பு வாங்கி, அதை வெந்நீரில் போட்டு பின் அதை மாக்கோலம் போடுவது போலவே கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு  துணியைச் சுண்ணாம்பு தண்ணீரில் நனைத்து அழகாய் கோலம் போடுவார்கள்.  (நான் தேங்காய் நாரை பிரஷ்  மாதிரி செய்து அதைக் கொண்டு கோலம் போடுவேன் )

 சுண்ணாம்புக் கோலம் அழியாமல் இருப்பது மட்டும் அல்ல- நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் வீட்டின் எல்லா அறைகளிலும் பெரிது பெரிதாய் சுண்ணாம்புக் கோலம் போடுவார்கள். அப்போது உள்ள தரையில் கோலம் பளிச் என்று தெரியும்.  பொங்கல் அன்று  முற்றம் அல்லது முன் வாசலில்   நாலு பக்கம் வாசல் மாதிரி பட்டை அடித்து அதன் ஒரங்களில் காவிப் பட்டை அடித்து  நடுவில் மாக் கோலம் போட்டு சூரியன் சந்திரன் எல்லாம் வரைந்து  அதில் கட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின் கேஸ் அடுப்பில் பொங்கல்  வைத்து விளக்கு முன் சாமி கும்பிட்டு என்று மாறுகிறது காலம்.

புதிதாக வந்த காய்கறிகள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு, மஞ்சள் இஞ்சி என்று உடலுக்கு பலமளிப்பது எல்லாம் தை மாதத்தில்  .கிடைக்கிறது.

மஞ்சள் கொத்து எங்கள் வீட்டு
தோட்டத்து தொட்டியில் விளைந்தது.
 நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லவும்,  பயிர் வளம் பெருக நமக்கு உதவும் சூரியனுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

நாங்கள் கொண்டாடிய பொங்கல் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.

                                      மொட்டை மாடியில் சூரிய பூஜை

                                           பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

                                                              வாழ்க வளமுடன்!

                                                                   -------------------

43 கருத்துகள்:


 1. கரும்பெல்லாம் கடித்து ருசித்து சாப்பிட்ட பொஙல் எல்லாம் வெறும் நினைவுகளே.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பொங்கல் கொண்டாட்டத்தைப் பார்த்த அனுபவத்தை உண்டாக்கியது உங்கள் பதிவு.

  பாராட்டுக்கள்.

  ராஜி

  பதிலளிநீக்கு
 3. சுண்ணாம்பு கோலமும் மொட்டை மாடியில் சூரிய பூஜையும் மிகவும் அருமை கோமதி!

  உங்கள் கணவரின் ஓவியத் திறமைக்குப் பாராட்டுக்கள்.

  நான் கூட வருடாவருடம் மஞ்சள் கிழங்குகளை மண்ணில் நட்டு வைத்து விடுவேன்.
  எல்லோரும் அதை எடுத்து பயன்படுத்தும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  கருப்பு சாப்பிடுவது குறைந்தே விட்டது.

  பொங்கலன்றே போட்ட பதிவு சர்க்கரைப்பொங்கல் போல இனிக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. கோலம் அழகு..
  கார்டூன் கலக்கிட்டாங்களே..
  விகடன் தீபாவளி மலர் கார்டூன்கள் நினைவுக்குவருது.

  பதிலளிநீக்கு
 5. பொங்கல் பண்டிகையை அழகாகப் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.
  பதிவும் பொங்கலைப் போல் இனிமை

  பதிலளிநீக்கு
 6. உங்கள் இருவரின் ஆர்வம் சற்றும் குறையாமல் எடுத்துச் செல்வது அனைவரும் அறிந்து கொண்டு, நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்று.

  கார்ட்டூன், கோலம், சூரியனுக்கு படையல்- எனக்கு எல்லாம் இப்பவே போர் அடிக்கிது :)

  உங்கள் இருவருக்கும் எங்களது இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. இனிய பொங்கல் நினைவுகள் - உங்கள் படங்களைப் பார்த்து....

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி, கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 9. தாங்கள் திண்ணையில் வரைந்துள்ள கோலம் அழகு.

  தங்கள் கணவர் வரைந்துள்ள கார்டூன் நல்ல நகைச்சுவையாக உள்ளது.

  பதிவும் பகிர்வும் அருமையோ அருமை. பாராட்டுக்க்ள். வாழ்த்துகள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. கார்ட்டூன் மிக மிக அருமை
  தங்கள் கணவரிடம் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்
  பொங்கல்சிறப்புப் பதிவு படங்களுடன்
  வெகு சிறப்பு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ராஜி, வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஃபைசா காதர், வாழ்கவளமுடன்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன். சுண்ணம்பு கோலத்தையும் சூரிய பூஜையையும் ரசித்தமைக்கு நன்றி.
  என் கணவரின் ஒவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
  நீங்களும் மஞ்சளை வருடா வருடம் நட்டு வைத்து விடுவீர்களா நம் வீட்டில் விளைந்த மஞ்சள் என்றால் மனதுக்கு சந்தோசம் தானே!
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வா முத்துலெட்சுமி, வாழ்கவளமுடன்.கோலம் , கார்டூன் எல்லாம் பாரட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.முந்திய பொங்கல் பதிவு படித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 17. வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.முந்திய பொங்கல் பதிவு படித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 18. கோலமும் படையலும் பொங்கலைப் போலவே மிகவும் இனிமை.தங்களின் சிரத்தையும் உற்சாகம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 19. வாங்க தெகா, வாழ்கவளமுடன். வெகு நாட்கள் ஆகி விட்டதே! நலமா?

  நாங்கள் உற்சாகமாக் இருப்பது உங்களுக்காக தான்.

  பிள்ளைகள் ஸ்கைப்பில் பேசுகிறார்கள் அதில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் எங்களை செயல்படவைக்கிறது.
  நாங்கள் உற்சாகமாக இருந்தால் பிள்ளைகள் உற்சாகமாக இருப்பார்க்ள், அவர்கள் உற்சாகமாக இருந்தால் தான் நாங்கள் உற்சாகமாக இருப்போம்.
  இது தான் வாழ்க்கை.

  எனக்கு எல்லாம் இப்பவே போர் அடிக்கிது :)//
  போர் அடிக்க கூடாதே உற்சாகமாக இருங்கள் .
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க வெங்கட், வாழ்கவளமுடன். பொங்கல் நினைவுகள் வந்து விட்டதா!
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், கோலத்தை பாராட்டியதற்கு நன்றி. தன் கார்டூனை பாராட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக மிக நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 23. வாங்க ரமணிசார், வாழ்கவளமுடன்.
  கார்டூனை பாரட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
  பொங்கலோ பொங்கல் முதல் பாகம் படித்திரீகளா? உங்கள் வரவுகளாலும், உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் தான் எங்களை உற்சாகமாய் வைத்து இருக்கிறது.
  தங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி இந்திரா.

  பதிலளிநீக்கு
 25. பொங்கலை சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்களென்று நினைக்கிறேன். பொங்கலுக்காக சுத்தம் செய்யும் விதங்களை எழுதியிருந்த விதம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது! உங்கள் கணவரின் ஓவியத்திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 26. பொங்கலோ பொங்கல் ;))

  கடைசி ரெண்டு படம் சூப்பரோ சூப்பர் ;)

  பதிலளிநீக்கு
 27. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  வலைச்சர பொறுப்பில் இருக்கும் போதும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. என் கணவர் ஓவியத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. உங்கள் வீட்டுப்பொங்கலை எங்க்ளுடன் பகிர்ந்த கோமதி அம்மாவுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. படங்களும் பதிவும் அருமை.
  பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. அன்பு ஸாதிகா வாங்க, வாழ்கவளமுடன்.

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வாங்க ராம்வி, உங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு கழித்தோம். உங்கள் கோலமும், கணவர் வரைந்த சித்திரமும் வெகு அருமை.

  /விகடன் தீபாவளி மலர் கார்டூன்கள் நினைவுக்குவருது./

  எனக்கும் அப்படியே:)!

  பதிலளிநீக்கு
 33. அழகிய கோலம்வரவேற்க பொங்கும் உங்கள் வீட்டுப் பொங்கல் பூசை மனத்துக்கு நிறைவைத்தருகின்றது.

  மங்களகரமாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 34. வாங்க ராமலக்ஷமி, வாழ்கவளமுடன். என் மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்றி.
  என் கணவ்ரின் கார்டூனை பாராட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன் தொடர்ந்து வந்து எல்லா விட்டு போன பகுதிகளையும் படித்துக் கருத்து சொன்னமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. அருமையான பகிர்வு.சூப்பர்.அசத்திட்டீங்க..வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 37. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வாங்க அக்கா, வாழ்க வளமுடன்.
  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. அக்கா, கார்ட்டூன் படம் மிக நன்றாக இருக்கீறது. விகடன் போன்ற பத்திரிகைகளில் வருவதுபோலவே உள்ளது.

  மற்ற பொங்கல் படங்களும் கண்டேன். திட்டமிட்டு எடுத்துப் பகிர்ந்தவிதம் வியப்பளிக்கிறது. கோலம் போடும் விபரங்களும், சுண்ணாம்பு பற்றியும் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 40. வாங்க ஹுஸைனம்மா, வாழகவளமுடன். என் கணவ்ர் கார்ட்டூன் படத்தை பாராட்டியதற்கு நன்றி. அவர் கார்டூன் படத்திற்கு ஆதரவு கூடுவதால் என் பதிவு எல்லாவற்றிலும் ஒரு கார்டூன் வரைந்து தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மாட்டுபொங்கலில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் வரைந்து தந்தார்கள்.

  பதிவுக்காக படி படியாக எடுத்தது உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு