திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தாய்மை

”பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறென்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு”

தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்
ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற தெய்வம் குடிகொண்டுள்ளது. ஒவ்வொருவரும்
அந்த குடியிருந்த கோயிலை மறக்க முடியாது - மறக்கக் கூடாது,

மாதா,பிதா,குரு, தெய்வம் என்று சொல்வார்கள். முதல் இடம் தாய்க்குத்தான்.
மாதா சொல்லித்தான் மற்றவர்களை நமக்குத் தெரியும்.
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,’தாயிற் சிறந்த கோயிலும்
இல்லை.’என்றெல்லாம் தாயின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம்.

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' என்றார் திருவள்ளுவர்.

போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.
எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும்
துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும்
இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை
சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன்
படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து
வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்கள்.
எல்லாப் பேரக்குழந்தைகளுக்கும் கோலம், சமையற்குறிப்பு , எம்பிராய்டரி
என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.

எனது மாமியார்

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

என்றார் திருவள்ளுவர். மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்றும் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்றும்
கூறினார். நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
மாமியாருக்கு முத்தம்மாள் என்ற பெயர் பொருத்தமுடையதாகவே உள்ளது.

முத்தம்மாள் பெற்ற நல்முத்துக்கள் ஐந்து. நல்லொழுக்கம், நல்ல இறை
நம்பிக்கை கொண்ட நல்ல மனிதராய்களாய் வளர்த்து ஆளாக்கியவர் அவர்.
ஐந்து மருமகள்களையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.எனது
மாமனாருக்கு நல்ல வாழ்க்கைத்துணையாக இருந்து வருகிறார்கள்.
இப்போது நூறு வயதான என் மாமனாருக்கு நல்லதொரு தாயாகி ஒரு
குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் வயது 85 ஆகிறது. தனது முதுமையால் ஏற்படும் உடல்
துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் கணவரை கண்ணும் கருத்துமாய்ப்
பாதுகாக்கிறார்.

விடுமுறைக்குப் பேரன் பேத்திகள் வந்தால் அவர்களுக்குப் பிடித்த பலகாரங்
களைச் செய்து அவர்களை மகிழ்விப்பார். இப்போது முதுமை காரணமாகப்
பழையமாதிரி செய்யமுடியாமற் போனாலும் ’நமக்கு முடியும்போது வருவார்
களா?’ என்று கேட்டுவிட்டு எளிதாகச் செய்யும் பலகாரங்களைச் செய்து
கொடுத்து மகிழ்வார்கள்.

பேரன் பேத்திகளோடு இக்கால அக்கால எல்லா உலக விஷயங்களையும்
பேசி அவர்களை மகிழ்விப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே
இல்லை என்று கூறலாம்.

எனது மகள்

எனது மகள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் . தன் குழந்தைகள் பல கலை
களிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று பாடுபடும் தாய். தன் குழந்தைகளுக்கு
எவ்வளவு விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு
விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். நடனம்,பாட்டு.
விளையாட்டு,பொது அறிவு ஆகியவற்றில் அவர்கள் சிறக்கச் செய்திருக்கிறாள்.
அதைப் பார்க்கும்போது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது போல் எனது மகள் என்னைக்
காட்டிலும் சிறந்த தாயாக விளங்குகிறாள்.

எனது மருமகள்

எனது மருமகளும் இப்போது ஒரு ஆண்மகவிற்குத் தாயாகி இருக்கிறாள்.
அவள் இருப்பது அமெரிக்காவில். அங்கு பிரசவ நேரத்தில் கணவனும் உடன்
இருக்கலாம். என் மகன் உடன் இருந்தான். சுகப்பிரசவம் என்று சொல்லி
கடைசி நேரத்தில் ஆயுதம் போட்டு என் பேரனை வெளியில் எடுத்தார்கள்.
திருச்சி தாயுமானவரே பிரசவம் பார்த்தது போல் ’ டாக்டர் தாய் ’எனது
பேரனை எனது மருமகளிடம் கொடுத்தார்கள்.

எனது மருமகள் டாக்டருக்கு தாய்மையின் சிறப்பை அற்புதமாய்க் காட்டும்
சிலையை(தாய் குழந்தையை மார்போடு அணைத்துக் கொஞ்சும் சிலை)
கொடுத்து ,’எனக்கு என் மகனைக் கொடுத்த தேவதை நீங்கள்’ என்று கண்ணீர்
மல்கப் பாராட்டியபோது, சிலையையும் என் மருமகளையும் அணைத்துக்
கொண்டு அவர்களும் கண்ணீர் மல்கியபோது தாய்மையின் சிறப்பு
தெரிந்தது.

என் மருமகளுக்கும் பிரசவத்தின் போது உதவிக்கு வந்திருந்த தன் தாயின்
மீது அன்பும் பாசமும் அதிகரித்திருக்கும்.

எனது மகன் பிரசவத்தின் சமயம் உடனிருந்ததால் அவனுக்கும் தாய்மையின்
சிறப்பு தெரிந்திருக்கும்.அவனுக்கும் அவள் மேல் பாசம் அதிகரித்திருக்கும்.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் குழந்தையைப் பார்க்கவரும் போது
அம்மாவைப் பார்த்து ’பெற்றுப் பிழைத்தாயா?’ என்று கேட்பார்கள்.
ஆம். பெற்றவளுக்கு அது மறுபிறவிதான்!

தாய்மை இப்படி பல உறவுகளில் பரிணமிக்கிறது!

பெண்வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே வளர்ந்தாய்
பெண்துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமையுணர்

தாய்மையைப் போற்றுவோம்.

22 கருத்துகள்:

  1. தாய்மையின் உன்னதத்தை, தாங்கள் வாழ்வில் உணர்ந்த சிறந்த தாய்களைக் குறிப்பிட்டு விளக்கியிருக்கும் விதமே நீங்கள் எத்துணை சிறந்த தாயாகப் பரிமளித்திருப்பீர்கள் என்பதையும் கூறாமல் கூறுகிறது.

    //தாய்மையைப் போற்றுவோம்//

    நிச்சயமாக. நல்ல பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ராமலக்ஷ்மி தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல குடும்பம் பலகலைக்கழகம். நல்ல குடும்பம் தெய்வீகம்

    பதிலளிநீக்கு
  4. மிகச்சிறந்த பதிவு அம்மா!

    பெண்மையை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  5. இப்போதுதான் முதன் முதலில் தங்கள் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.... ஒரு தடாலடி விசிட்....(முத்துலெட்சுமியின் வலையினூடாக....)

    நிறைய எழுதி இருக்கீங்க.... படிச்சுட்டு வரேன்....

    இந்த போஸ்டிங் கூட அந்த சிலையை மற்றும் தான் பார்த்தேன்.... படிச்சேன்னு போய் சொல்ல விரும்பல... எல்லாத்தையும் பொறுமையா படிச்சுட்டு சொல்றேன்...

    நேரம் கிடைக்கறப்போ நம்ம கடைகள் (www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com) பக்கமும் வந்துட்டு போங்க....

    நன்றி கோமதி அரசு மேடம்.....

    பதிலளிநீக்கு
  6. மிக அழகாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்!! :-) நல்ல இடுகை! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  7. சென்ஷி,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கோபி! பொறுமையாய் வாங்க.

    கண்டிப்பாய் உங்க கடைக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. முல்லை,வாங்க

    உங்க ரசிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இதைவிட யாரும் தங்கள் பெற்றவர்களைப் பற்றியும், மாஅமியார் மாமனார் பற்றியும் கனிவோடு பதிவிட முடியாது,. மனசிலிருந்து வரும் உணர்வுகளை அருமையாகப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். கோமதி.

    நல்ல எழுத்துகள் வளரவேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அன்பு வல்லி அவர்களுக்கு,
    வணக்கம்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்
    ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற தெய்வம் குடிகொண்டுள்ளது.//

    மிக‌ மிக‌ ச‌ரி மேட‌ம்.... இதை இப்ப‌டியும் சொல்ல‌லாம் (த‌லைவ‌ர் சொன்ன‌துபோல்) "தாயென்ற‌ ஒரு தெய்வ‌ம் வீட்டோட‌ இருக்கு... நீ த‌னித்த‌னியா கோயில், குள‌ம் அலைவ‌தும் எதுக்கு... அம்மாவின் பாத‌த்தில் க‌ற்பூர‌ம் கொளுத்து... ஆனந்த‌ க‌ண்ணீரில் அபிஷேக‌ம் ந‌ட‌த்து"

    //மாதா சொல்லித்தான் மற்றவர்களை நமக்குத் தெரியும்.
    ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,’தாயிற் சிறந்த கோயிலும்
    இல்லை.’என்றெல்லாம் தாயின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம்.//

    அன்னையை ப‌ற்றி சொல்வ‌த‌ற்கு ம‌ட்டும் "நோ ஃபுல்ஸ்டாப்".. மிக‌ ச‌ரி...

    //ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
    மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.//

    உங்க‌ள் தாய்க்கு என் ம‌ன‌மார்ந்த‌ வந்த‌ன‌ம்...

    //என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
    விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
    கருடப்பத்து படியுங்கள்.//

    இதை சொல்ல‌ என்ன‌ தைரிய‌ம் வேண்டும்... அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ ம‌ன‌துக்கு மீண்டுமொரு ச‌ல்யூட்...

    //நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
    மாமியாருக்கு முத்தம்மாள்.//

    இவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த, பணிவார்ந்த வணக்கம்...

    //தன் குழந்தைகளுக்கு
    எவ்வளவு விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு
    விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.//

    மிகவும் உயர்ந்த சிந்தனை மற்றும் பாராட்டுக்குறிய செயல் செய்யும் ஒரு நல்ல அன்னை..

    //திருச்சி தாயுமானவரே பிரசவம் பார்த்தது போல் ’ டாக்டர் தாய் ’எனது
    பேரனை எனது மருமகளிடம் கொடுத்தார்கள்.//

    இந்த இறை நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தேவை...

    //பெண்வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே வளர்ந்தாய்
    பெண்துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமையுணர்

    தாய்மையைப் போற்றுவோம்.//

    தாய்மையை என்று போற்றுவோம்... தாயை எந்நாளும் வ‌ண‌ங்குவோம்...

    நல்ல பதிவிற்கு நன்றி கோமதி மேடம்...

    பதிலளிநீக்கு
  13. //தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்

  14. //தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்

  15. //அன்னையை பற்றி சொல்வதற்கு மட்டும்”நோஃ புல்ஸ்டாப்’” மிகசரி.//

    உங்கள் தலைவர் சொன்னது போல அம்மாவை வணங்கினாலே போதும்,
    அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

    நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  16. ஆன்டி
    படிக்கும் பொது என் அம்மா,பாட்டி நினைவு வந்து கலங்குகிறது.நான் அமெரிக்காவில் அவர்கள் இந்தியாவில் ;-(

    பதிலளிநீக்கு
  17. விஜி,
    அம்மா, பாட்டி நினைவு வந்து
    விட்டதா? அடிக்கடி அம்மா பாட்டியிடம்
    பேசுங்கள்.அது தான் அவர்களுக்கு
    உற்சாகத்தை கொடுக்கும்.

    நன்றி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  18. ஆன்டி
    தினமும் அப்பா,அம்மா கூட சாட்டிங்,இருந்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா.நீங்கள் எங்கு இருகீறேங்க?

    பதிலளிநீக்கு
  19. //நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
    மாமியாருக்கு முத்தம்மாள் என்ற பெயர் பொருத்தமுடையதாகவே உள்ளது.//
    :-)

    பதிலளிநீக்கு