சனி, 1 ஆகஸ்ட், 2009

கற்றல் நன்றே

” கற்றல் நன்றே கற்றல் நன்றே
வலைக் கல்வி கற்றல் நன்றே”

நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. விளம்பரத்தில்
’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின்
சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம கணிப்பொறி விளையாட்டு,
ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

அடுத்த குரு என் மகள். வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுத்தேன் அவளுக்கு. அவள்
எனக்கு வலைக் கல்வி கற்றுக் கொடுத்தாள்.

மகள்,மகன், மருமகள் எல்லோரும் நல்ல வலைத்தளங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.ஒரு மாதமேயான என் பேரனும் வருங்காலத்தில் எனக்குக் கற்றுக் கொடுப்பான்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.

4 கருத்துகள்:

 1. \\” கற்றல் நன்றே கற்றல் நன்றே
  வலைக் கல்வி கற்றல் நன்றே”//

  உங்கள் வாக்கும் இனிமையாகவே இருக்கிறதே :)

  பதிலளிநீக்கு
 2. :-)))

  வாழ்த்துக்கள் கூறி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்!

  பதிலளிநீக்கு