30 ஆண்டுகளாக அரிசோனா தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 13 ம் தேதி 30 வது ஆண்டு விழா ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
இன்று குழந்தைகள் தினத்தில் பேரன் மற்றும் பல குழந்தைகள் பங்கு பெற்ற பாரத விலாஸ் என்ற சிறப்பு நிகழச்சி படங்களை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
நிறைய கூட்டமாய் மரக்கிளை முழுவதும் அமர்ந்து இருந்தது, நான் படம் எடுக்கும் போது கொஞ்ச குருவிகள்தான் இருந்தது.
என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது இந்த மரம். பறவைகளை ஓரளவு ஜூம் செய்து எடுத்து இருக்கிறேன்.
புல் புல் பறவைகள்
புல் புல், குருவிகள், கருங்குயில் (ஆண் குயில்)
ஆண்குயில்
இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும் .
எங்கள் குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் காலி மனையில் முன்பு இருந்த மரங்களை , செடி, கொடிகளை அழித்த போது பறவைகள் வரத்து குறைந்து விட்டது. மரங்களை அழிப்பதை படம் எடுத்து முன்பு பதிவு போட்டது நினைவு இருக்கும்.
இப்போது மழை பெய்து காலி மனையில் மீண்டும் செடி, கொடிகள் துளிர்க்க ஆரம்பித்தவுடன் பறவைகள் வரத்து அதிகமாகி விட்டது.
//இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் //
"கவலை இல்லா மனிதன்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் சந்திரபாபு இப்படி பாடி இருப்பார்.
மழை பெய்து துளிர்த்து இருக்கும் புற்கள்.
புற்களை படம் எடுக்கும் போது இரட்டை வால் குருவி(கரிச்சான்) வந்து அமர்ந்தது சரியாக விழவில்லை படத்தில்
புள்ளிச் சில்லை பறவைக்கும், திணைக்குருவிக்கும் கூடு கட்ட பசும்தளைகள் கிடைக்கிறது, அதற்கு உணவு கிடைக்கிறது, அதனால் கூட்டம் கூட்டமாய் வருகிறது. இந்த புற்களைதான் எடுத்து வரும் கூடு கட்ட. கதிர் போன்றவைகளை கொத்தி தின்னும்.
இந்த மரம் எங்கள் குடியிருப்பை கட்டி கொடுத்தவர் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரம். பறவைகளுக்கு பிடித்த மரம்.
முன்பு கோயில்களில், மசூதிகளில் கொண்டு போய் தானியங்களை கொடுத்து வருவார்கள் பறவைகளுக்கு உணவாக.
தினதந்தியில் படித்த செய்தி. (பழைய செய்தி 7 வருடங்களுக்கு முன்பு எடுத்து வைத்து இருந்தேன்) மாநகராட்சி பூங்காவில் பறவைகளுக்கு உணவாக உலர் தானியங்கள் வைக்க இடம் ஒதுக்கி இருப்பது பற்றி படித்தது.
‘//உலர் தானியங்கள்’
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மூதாதையர்கள், இறந்தவர்கள் நினைவாக திதி கொடுப்பவர்கள் மொட்டை மாடி, சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் வைத்து பறவைகளுக்கு உணவு அளித்து வருகிறார்கள். பறவைகளுக்கு உணவளிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பூங்காக்களில் ‘உலர் தானியங்கள்’ போடுவதற்காக தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பறவைகள் விரும்பி சாப்பிடும் கம்பு, தினை, சாமை, அரிசி, நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், நவ பருப்பு வகைகள் பொதுமக்கள் போடலாம். சாதம் உள்ளிட்ட சமைத்த உணவு பொருட்கள் வைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.//
இப்படி செய்வது நல்லதுதான்.
கோவையில் இருக்கும் தோழி நேற்று பேசி கொண்டு இருந்தார், அவர் சென்னைக்கு மகன் வீட்டுக்கு தீபாவளிக்கு போய் விட்டு திரும்பிய போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொன்னார்.
அவர் இருக்கும் குடியிருப்பில் அதை பராமரிப்பவர் (புதிதாக வந்து இருப்பவர்) குடியிருப்பில் வசிப்பவர்கள் வைத்து இருக்கும் வாழை மரம், துளசி, ஓமவல்லி எனறு அனைத்தையும் அழித்து விட்டு ஒன்று போல குரோட்டன்ஸ் தொட்டிகளை வைத்து விட்டாராம். அப்போதுதான் குடியிருப்பு பார்க்க அழகாய் இருக்கும் என்று.
தோழி ஒரே புலம்பல் வாழைமரம் புலம்புவது போல எழுதி அனுப்பினார் எனக்கு. குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வளவு பயனாக இருந்தேன் என்று புலம்பியது வாழை.
வெட்டபடும் மரங்களும் செடிகளும் இப்படித்தான் அவர் சொல்வது போல புலம்பும் என்று நினைத்து கொண்டேன்.
கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகனை சிந்திப்போம்- பகுதி 6
ஆறுபடை வீடுகள்
கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம். இன்று
6 வது நாள் .
பழனி ஆண்டவர்
காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து
கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை
அழியும் என்பது நீதி. அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம்
புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி
சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை
எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் (அருள் பார்வை)
செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட
சேவலையும்,செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட
ஞானியாக மாற்றினார் முருகன்.
பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில்
கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.
வெற்றி வேல் வீரவேல்
தாரகாசுரன் (மாயை)
சிங்கமுகாசுரன் (கன்மம்)
சூரபத்மன் (ஆணவம்)
சுற்றி நிற்காதே பகையே துள்ளி வந்த வேல் சூரபதுமனை
வீழ்த்திய காட்சி
சூரபதுமனின் உடல் சேவலும், மயிலுமாக ஆனது
ஞானமே வடிவானது சேவல்., மயில்
கடல் அலை போல் பக்தர்கள் தலைகள்.
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல் மோதி அந்த குன்றழித்த சக்தி வேல் மோதி அந்த குன்றழித்த சக்தி வேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல் தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்...
//அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின்