கந்த சஷ்டி சிறப்பு பதிவு-5 முருகன் பாடல்கள் மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்த சஷ்டி சிறப்பு பதிவு-5 முருகன் பாடல்கள் மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2022

வடிவேல் முருகா வருகவே!

 

முருகனை சிந்திப்போம் _5

முருகன் வருகைப் பாடல் :-
பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூணவருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோடணைத்துச் சீராட்டி
முத்தமிடற்கு வருக எதிர் மொழிகண் மழலை சொல வருக
தன்னெறில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினல்மை
சாத்தவருக மேலாகத் தானே வருக தேவர் தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச்  சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  
இன்று 5 வது நாள்

இந்தப் பதிவில் இரண்டு பாடல்களைக் கேட்போம். இரண்டும் 
உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்கும் போகும் பாதையை
 நன்னெறிப் படுத்தவும்- இறைவன் வழிபாடு. கந்தன் அன்பும் 
கருணையும்  இந்த இருபாடலில் விளக்கமாய் இருக்கிறது, 
எது உண்மைப் பொருள் எது நிரந்தரமானது எல்லாம் இந்தப் பாடலில்
 விளக்கமாய் இருக்கிறது