பொங்கல் திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா
ஏர் உழுவது -இப்போது டிராக்டர் உழுகிறது.
நாற்றுகள் நடத் தயாராக இருக்கிறது
நாற்றுகள் இடம் விட்டு இடம் விட்டு அழகாய் நடும் பெண்கள்
மிஷின் மூலம் நாற்று நடுதல் - சில இடங்களில் (ரயிலில் போகும் போது எடுத்த படங்கள்)
பச்சைக் கம்பளம் போல் வளர்ந்து நிற்கும் நாற்றுக்கள்
கதிர் வந்து விட்டதே!
உண்ணுங்கால் எண்ணு
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை ,
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.
--வேதாத்திரி மகரிஷி
எத்தனை பேர் உழைப்பால் நெல் மணியானது வீடு வந்து சேர்கிறது என்பதை உணரும் போது உழவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாம் நன்றி சொல்லும் திருநாள்.
(நன்றி கூகுள்)
நான் வரைந்த பொங்கல் கோலம்
அறுவடை முடிந்து கதிர் அடித்தபின் வைக்கோல் மாடுகளுக்குப் போகிறது.
வீட்டில் பொங்கல் திருவிழா:-

வெள்ளைப் பட்டை பக்கம் காவிப்பட்டையும் உண்டு வீட்டுக்குள் போட்டு இருப்பதால் காவிப் பட்டை போடவில்லை. இடது ஓரத்தில் சிறு வீடு வரைந்து இருக்கிறேன். மேலே வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் வரைவோம்.
நான்கு பக்க வாசல் போலவும் சூரியன், சந்திரன் வரைந்து நான்கு பக்க வாசலுக்குள் கோலம் போட்டு அதில் தான் பொங்கல் வைப்பார்கள். வாசலுக்கு சுண்ணாம்பு, காவிப் பட்டை கொடுக்கப்படும். மண்ணால் செய்த பிள்ளையார் செம்மண் அடித்து அதன் மேல் சுண்ணம்புப் பட்டை போட்டு வைப்பார்கள். பின் இரட்டை வாழைஇலையில் நடுவில் குத்துவிளக்கு வைத்து விளக்கின் ஒரு பக்கம் மஞ்சள் பிள்ளையார், ஒரு பக்கம் நிறைநாழி(நெல் வைத்துள்ளது) வைத்து காய்கறிகளையும் வைப்பார்கள். வெற்றிலைபாக்கு, பழங்கள், தேங்காய்,கரும்பு எல்லாம் வைத்து பொங்கல் கொண்டாடுவோம்.
பொங்கல் அன்று எல்லாக் காய்கறிகளையும் போட்டு சாம்பார், அவியல் எல்லாம் செய்வார்கள், தேங்காய்த் துவையலும் உண்டு.
நான்கு தினப் பொங்கல் விழாவை ஒரே நாளில் செய்து விடுகிறோம் இப்போது கணுப் பொங்கலை சிறுவீட்டுப் பொங்கலாகக் கொண்டாடுவோம். பசுஞ்சாணத்தில் மார்கழி மாதம் கோலம் போட்டு பிள்ளையார் பிடித்து வைத்து அதன் தலையில் பூசணிப் பூ வைத்து இருப்பதை காலை 11மணிக்கு எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள். 30 நாள் இப்படி தட்டி வைத்த ராட்டிகளையும், பனை ஓலைகளையும் வைத்து முற்றத்தில், அல்லது வாசலில் பொங்கல் வைப்பார்கள்.
சிறு பெண்கள் உள்ள வீட்டில் சிறு வீட்டுப்பொங்கல் என்று அவர்களே சிறு வீடு வரைந்த அல்லது சின்னதாய் வீடு மாதிரி கட்டிய இடத்தில் பொங்கல் வைப்பார்கள். பின் அன்று வைத்த 9, 7, 11 அடிப்படையில் வைத்த பசுஞ்சாணப் பிள்ளையாரையும் , அதே எண்ணிக்கையில் இலையில் வைத்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், வாழைப்பழம் எல்லாம் வைத்து ஆறு , ஏரிகளுக்கு குடும்பத்துடன், தோழிகளுடன் போய் கரைத்து வருவார்கள். சமைத்த உணவுகளை அங்கு கொண்டு வைத்துச் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
மாடிவீடுகளில் காஸ் அடுப்பில் தான் பொங்கல்.
பால் பொங்குது ”பொங்கலோ பொங்கல்!” சொல்லுங்கள்.
சூரிய ஒளியால் விளைந்த காய்கறிகள் அவருக்கே படைக்கப் படுகிறது. ஒரு இலையில் உள்ளது காக்காவிற்கு. இன்னொரு இலை ஆற்றில், குளத்தில் கரைப்பதற்கு . அதில் உள்ள ஜீவராசிகளுக்கு.
உலக உயிர்கள் வாழ ஆதரமான சூரியனுக்கு நன்றி சொல்லி பொங்கல்
மாடியில் சூரியனுக்குப் பூஜை
மாடுகளுக்கு நன்றி சொல்ல - மாட்டுப்பொங்கல்
திருவள்ளுவர் தினம் ( நன்றி கூகுள்)

கணு பொங்கல், கன்னிப் பொங்கல்

சிறுவீட்டுப் பொங்கல்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
-----------------------




.jpg)
















