செவ்வாய், 13 ஜனவரி, 2015

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.


பொங்கல் திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா


ஏர் உழுவது -இப்போது  டிராக்டர் உழுகிறது.


நாற்றுகள் நடத் தயாராக இருக்கிறது

நாற்றுகள் இடம் விட்டு இடம் விட்டு அழகாய்  நடும் பெண்கள்
மிஷின் மூலம் நாற்று நடுதல் -  சில இடங்களில் (ரயிலில் போகும் போது எடுத்த படங்கள்)


பச்சைக் கம்பளம் போல் வளர்ந்து நிற்கும் நாற்றுக்கள்

கதிர் வந்து விட்டதே!

உண்ணுங்கால் எண்ணு

உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை ,
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.
--வேதாத்திரி மகரிஷி

எத்தனை பேர் உழைப்பால் நெல் மணியானது வீடு வந்து சேர்கிறது  என்பதை உணரும் போது உழவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாம் நன்றி சொல்லும் திருநாள்.

(நன்றி கூகுள்)


நான் வரைந்த பொங்கல் கோலம்
அறுவடை முடிந்து  கதிர் அடித்தபின் வைக்கோல் மாடுகளுக்குப் போகிறது.

வீட்டில் பொங்கல் திருவிழா:-

                
வெள்ளைப் பட்டை பக்கம் காவிப்பட்டையும் உண்டு வீட்டுக்குள் போட்டு இருப்பதால் காவிப் பட்டை போடவில்லை. இடது ஓரத்தில் சிறு வீடு வரைந்து இருக்கிறேன். மேலே வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் வரைவோம்.

நான்கு பக்க வாசல் போலவும் சூரியன், சந்திரன் வரைந்து நான்கு பக்க வாசலுக்குள் கோலம் போட்டு அதில் தான் பொங்கல் வைப்பார்கள். வாசலுக்கு சுண்ணாம்பு, காவிப் பட்டை கொடுக்கப்படும். மண்ணால் செய்த பிள்ளையார் செம்மண் அடித்து அதன் மேல் சுண்ணம்புப் பட்டை போட்டு வைப்பார்கள். பின் இரட்டை வாழைஇலையில் நடுவில் குத்துவிளக்கு வைத்து  விளக்கின் ஒரு பக்கம் மஞ்சள் பிள்ளையார், ஒரு பக்கம் நிறைநாழி(நெல் வைத்துள்ளது) வைத்து காய்கறிகளையும் வைப்பார்கள். வெற்றிலைபாக்கு, பழங்கள், தேங்காய்,கரும்பு எல்லாம் வைத்து பொங்கல் கொண்டாடுவோம்.

பொங்கல் அன்று எல்லாக் காய்கறிகளையும் போட்டு சாம்பார், அவியல் எல்லாம் செய்வார்கள், தேங்காய்த் துவையலும் உண்டு.

 நான்கு தினப் பொங்கல் விழாவை ஒரே நாளில் செய்து விடுகிறோம்  இப்போது கணுப் பொங்கலை சிறுவீட்டுப் பொங்கலாகக் கொண்டாடுவோம்.  பசுஞ்சாணத்தில் மார்கழி மாதம் கோலம் போட்டு  பிள்ளையார் பிடித்து வைத்து அதன் தலையில் பூசணிப் பூ வைத்து இருப்பதை காலை 11மணிக்கு எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள். 30 நாள்  இப்படி தட்டி வைத்த ராட்டிகளையும், பனை ஓலைகளையும் வைத்து முற்றத்தில், அல்லது வாசலில்  பொங்கல் வைப்பார்கள். 

சிறு பெண்கள் உள்ள வீட்டில்  சிறு வீட்டுப்பொங்கல் என்று அவர்களே சிறு வீடு வரைந்த அல்லது சின்னதாய் வீடு மாதிரி கட்டிய இடத்தில் பொங்கல் வைப்பார்கள்.   பின் அன்று வைத்த 9, 7, 11 அடிப்படையில் வைத்த   பசுஞ்சாணப் பிள்ளையாரையும் , அதே எண்ணிக்கையில்  இலையில்  வைத்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், வாழைப்பழம் எல்லாம் வைத்து ஆறு , ஏரிகளுக்கு குடும்பத்துடன்,  தோழிகளுடன் போய் கரைத்து வருவார்கள்.   சமைத்த  உணவுகளை அங்கு கொண்டு வைத்துச் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
                          
                          மாடிவீடுகளில் காஸ் அடுப்பில் தான் பொங்கல்.
                   பால் பொங்குது ”பொங்கலோ பொங்கல்!” சொல்லுங்கள்.
 சூரிய ஒளியால் விளைந்த காய்கறிகள்  அவருக்கே படைக்கப் படுகிறது.   ஒரு இலையில் உள்ளது காக்காவிற்கு.  இன்னொரு இலை ஆற்றில், குளத்தில் கரைப்பதற்கு . அதில் உள்ள ஜீவராசிகளுக்கு.
 உலக உயிர்கள் வாழ  ஆதரமான சூரியனுக்கு நன்றி சொல்லி பொங்கல் 

மாடியில் சூரியனுக்குப் பூஜை
                                                
                                             மாடுகளுக்கு நன்றி சொல்ல  - மாட்டுப்பொங்கல்

                                      
                                                             திருவள்ளுவர் தினம் ( நன்றி கூகுள்)
                                               
                                                       கணு பொங்கல், கன்னிப் பொங்கல்
                                                      
                                                                    சிறுவீட்டுப் பொங்கல்
                             அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
                                                                வாழ்க வளமுடன்.
                                                                    -----------------------

26 கருத்துகள்:

  1. மிகவும் அழகான பதிவு. கண்களுக்குக் குளிர்ச்சியான பசுமையான படங்கள். பொங்கல் பானைப்படம் வெகு ஜோர்.
    தங்களின் கோலமும், வரையப்பட்ட படங்களும் அருமை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


  2. புகைப்படங்கள் அருமை 8 வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படங்களையும் தேடி எடுத்துப்போட்டு அசத்தி விட்டீர்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பாரம்பர்யப் பொங்கலைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்..

    விதைப்பதில் இருந்து பொங்கலாக்கி இறைவனுக்குப் படைத்து மகிழ்வது வரைக்கும் தொடர் சித்திரங்கள்..

    அழகு.. அருமை!..
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அம்மா
    எப்படியான கோடி கோபுரம் மேல் வாழ்ந்தாலும் நாம் வாழும் ஊருக்கு பிறகுதான் அழகான பசுமையான வயல்வெளி.. படங்கள் எல்லாம் மிக அழகு பகிர்வுக்கு நன்றி அம்மா

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கோமதி அரசு!!!
    புகைப்படங்கள் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  6. கண்ணுக்கும் மனதிற்கும் அற்புத விருந்து
    புகைப்படங்களும் பதிவும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு.நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் ரசித்தேன்... அட்டகாசமான படங்கள்....

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள் - பொங்கல் பற்றிய குறிப்புகள் என சிறப்பான பதிவு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அந்த நாள் நினைவுகளை மீட்டெடுத்தது பதிவு. / நான்கு தினப் பொங்கல் விழாவை ஒரே நாளில் செய்து விடுகிறோம் / உண்மைதான். அருமையான பதிவு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. இந்தமாதிரியான பொங்கள் பண்டிகைகளைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு வேளை கிராமங்களில் பாரம்பரிய முறைப் பொங்கல் கொண்டாட்டம் இன்னும் இருக்கிறதோ.. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    புகைப்படங்கள் அழகு அருமை...சகோ.

    பதிலளிநீக்கு
  14. வயல்வெளிப்படங்கள் பசுமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. தென் மாவட்டங்களில் இன்னமும் மாடு உழுகிறதைப் பார்க்க முடிகிறது. படம் எடுத்தால் மாட்டுக்குத் திருஷ்டி படும் என எடுக்க விடவில்லை. :))))

    பதிலளிநீக்கு
  16. எங்க வீட்டில் தேங்காய் துவையல் கனு அன்று செய்வார்கள். அம்மா வீட்டில் அவியல் கனு அன்று. அதோடு கலந்த சாதமும் கூடச் செய்வார்கள். மாமியார் வீட்டில் கலந்த சாதங்கள் பண்ணுவதில்லை. இப்போதெல்லாம் சாப்பிட யாரும் இல்லை என எல்லாமும் கொஞ்சம் தான் பண்ண முடியறது. :)

    பதிலளிநீக்கு
  17. இங்கே எல்லா நாட்டுக் காய்களையும் போட்டுக் கூட்டு. கத்திரி, வாழை, சேனை, அவரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்ற நாட்டுக் காய்கள் தான் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  18. பூஜை பண்ணும் இடத்தில் நீங்க போட்டிருக்காப்போல் சூரியன் கோலம் வரைவோம். வெயில் படும் இடத்தில் தான் பூஜை செய்வோம். இங்கே பழைய வீட்டில் மேற்குப் பார்த்த பால்கனி. இங்கே கிழக்குப் பார்த்த பால்கனி. கொஞ்சம் வெயில் வரும்னு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  19. உங்க கோலங்களையும் மார்கழிப் பதிவுகளையும் முகநூலிலேயே பார்த்துவிடுவதால் இங்கே வர முடியலை. பொங்கல் கழிச்சு வரமுடியும்னு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  20. அழகிய படங்களுடன் பொங்கல் நினைவுகள் சுவாரஸ்யம்.

    இனிய மகர சங்கராந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. படங்களும் தொகுப்பும் அருமை அம்மா..
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பான பொங்கல் வாழ்த்துக்கள், கோமதிம்மா.

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  23. கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய காட்சிகளோடு பொங்கல் விருந்தும் மிகப்பிரமாதம். உங்கள் ஊரில் பொங்கல் கொண்டாடும் வழக்கம் பார்த்து வியந்து ரசித்தேன். ஊரில் இருப்பதைப் போன்றே உணர்வெழுகிறது. இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம், வாழ்க வளமுடன்.

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
    இறைவன் அருளால் பொங்கல் பண்டிகை எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாடி இருப்பீர்கள்.

    வரும் நாட்களும் நலமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. பொங்கல் பதிவு கிராமங்களுக்கு அழைத்துச்சென்றுவிட்டது. பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு