ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்
இந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.
திருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தான் என் கணவர் உரை எழுதிய "திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் "
யானை மலைமேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில் நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன்.
பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய 'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது. முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை இவர் பாடியது கிடைத்தது. அமைதியாக அழகாகப் பாடுகிறார்.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஐயனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வாரமும் கஞ்சி வார்த்தல், கூழ் வார்த்தல் நடை பெறும். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பான பூஜை நடைபெற்றது.
குழந்தைகளுக்குப் பிள்ளையாரும், முருகனும் சிறு வயதில் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் குழந்தைகளை நவராத்திரியில் பாடச் சொன்னால் இந்தப் பாடலை ஒரு சில குழந்தைகள் கண்டிப்பாய்ப் பாடும். இப்போது புதுவகையான இசை அமைப்பில் இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது கேட்டுத்தான் பாருங்களேன். தைப் பூசத்திற்குப் பழனிக்குப் பாதயாத்திரையாகப் போவோர் இந்தப் பாடலைப் பாடி , ஆடிச் செல்வார்கள்.
யானை மலை நோக்கிப் பயணம் . பசுமை நடையின் 101 வது நடை. பிப்ரவரி மாதம் 10.2.2019 ல் 100வது நடை அதன் பின் 7.7.2019 ஞாயிறு மீண்டும் பசுமை நடை தன் 101 வது நடையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
முதன் முதலில் 36 பேருடன் ஆரம்பித்த யானைமலையை நோக்கித் தன் பசுமை நடைப் பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து இருக்கும் அவர்களை வாழ்த்துவோம். இந்த நடைக்கு வந்தவர்கள் 250 பேர்.
சமணர்களின் எண்பெருங்குன்றங்களுள் ஒன்றாக ஆனைமலை அக்காலத்தில் திகழ்ந்தது.