வியாழன், 5 செப்டம்பர், 2019

திருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்
இந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.

திருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு  நிறைவு விழாவில் தான் என் கணவர்  உரை எழுதிய "திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் "
நூல் வெளியீடு நடந்தது.மகாமகக் குளத்துக்குத்  தென்கிழக்குக் கரையில்   ஸ்ரீ அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளது . மகாமகக் குளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது. நான்கு  பக்கமும் படங்கள் எடுத்தேன், அது அடுத்த பதிவில் .

காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் ஒட்டி இருந்த  விழாச் சுவரொட்டி 
விழா அழைப்பிழதழ்
இந்த மன்றம் தொடங்கி இதுவரை 624 நிகழ்ச்சிகள்  நடைபெற்று இருக்கிறது.
காலை 9 மணி முதல் விழா நடை பெற்றது. என் கணவருக்கு மாலை 4 மணிக்கு  மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் பற்றி பேசச் சொல்லி இருந்தார்கள்.
மாலை 4.30க்கு நூல் வெளியீடு என்று போட்டு இருந்ததால் நாங்கள் காலை மதுரையிலிருந்து புறப்பட்டு போனோம். 


நாயன்மார்களை பற்றிப் பேசிய மாணவி
நாயன்மார்களை பற்றிப் பேசிய மாணவி

முதல் பரிசு வாங்கிய மாணவி

திருமங்கலக்குடி அம்மன் மங்களநாயகியின் சிறப்பைப் பற்றி கவிதை வாசித்தார்
மங்கள நாயகி  பிள்ளைத் தமிழ் பற்றி பேசுகிறார்கள் என் கணவர்

புத்தகத்தை அச்சிட்டவர்  திரு . செல்வம் அவர்கள். அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்யப்பட்டது.

ஆன்மீக உரையில் பங்கு பெற்ற மாணவர்கள். ""பட்டினத்தார் போற்றிய நாயன்மார்கள் "என்ற தலைப்பில் பேசிய மாணவிகள் 17.8. 2019ல் நடந்தது பேச்சுப் போட்டி. அதில் கலந்து கொண்டவர்கள், பரிசு பெற்றவர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். எல்லோருக்கும் புத்தகங்கள், மற்றும் கேடயம் பரிசு கொடுத்தார்கள்.
சபா. ப. மகாலிங்கம்  அவர்கள் திருக்குடந்தைத் திருமுறை மன்றச்செயலாளர்


Image may contain: 1 person
புத்தகத்தை தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள் வெளியிட்டு அருளாசி வழங்கினார் .

நீராடற் பருவத்தில் காவிரி நதியில் நீராடி அருள்வாயாக ! என்று வருகிறது. குற்றமற்ற மந்திரபீடத்தின் மீது எழுந்தருளியுள்ள மங்களநாயகியே! காவிரி நதியில் நீராடி அருள்வாயே என்று வரிகளை எடுத்து சொல்லி  இந்த புத்தக வெளியீடு சமயம் காவிரியில் தண்ணீர் வந்து இருப்பது பொருத்தம் என்று பாராட்டினார்.

முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் :- 
திருமிகு . S. பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னாள் தலைவர் சிட்டி யூனியன்  வங்கி கும்பகோணம்

S. பாலசுப்பிரமணியம் அவர்கள். தலமை திட்ட அதிகாரி , சிட்டி யூனியன் வங்கி கும்பகோணம். இவர்களைப் படம் எடுக்க முடியவில்லை.

பூவுடன் சேர்ந்த நாருக்கும் பெருமை என்பது போல் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்கும் போது எனக்கும் சேர்த்து.

 ஆண்டு சந்தா, ஆயுள்சந்தா,புரவலர் சந்தா,மாதாந்திர கார்த்திகை நன்கொடையாளர்களுக்கும்   நன்றி தெரிவித்துப் பொன்னாடை  அணிவிக்கப்பட்டது.
நிறைவாக  சிவத்திரு. ப. சம்பந்தம் குருக்கள் அவர்களின்  திருமுறை இன்னிசை.
38ம் பாட்டு மேலும் கீழ்ப் பகுதியில் நான்கு வரிகளும் வருகிறது.
சப்பாணிப்பருவ பாடல்.

சாரின் புத்தகவெளியீட்டு செய்தியைப் படங்களுடன்  ஸ்ரீராம் எங்கள் ப்ளாகில்   வியாழன் பதிவில்  போட்டு  சாரைப்  பெருமைப் படுத்தினார். ஸ்ரீராமுக்கு அன்பான  நன்றியை சாரும் நானும் தெரிவித்துக் கொள்கிறோம்.

//பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு செய்யுள் அல்லது சில வரிகளைப் போட்டிருக்கலாமே என்று நினைத்தேன். கோமதி அரசு மேடம் இது சம்பந்தமான இடுகை எழுதும்போது இதனை நினைவு வைத்துக்கொள்வார்னு நம்பறேன்.//

 நெல்லைத்தமிழன்  இப்படி கேட்டு இருந்தார்   அவர் விருப்பத்திற்க்காக ஒரு  செய்யுள் அதன் பொழிப்புரை.


                                                      
இந்த சிறுவன் ஓடி ஓடி எல்லோருக்கும் தண்ணீர், காபி எல்லாம் கொடுத்தான். அப்புறம் அந்த கப் எல்லாம் சேகரம் செய்து குப்பைக் கூடையில் போட்டான்.  தொண்டு செய்யும் பண்பு சிறு வயதிலேயே! .தேவாரம் கற்று கொண்டு இருக்கிறானாம். நல்ல எதிர்காலத்தை இறைவன்  அருள வேண்டும், அவன் தாய் தந்தையர் மகிழ வேண்டும்.

நாங்கள்  அபிமுகேஸ்வரர் திருக்கோயிலில் நடந்து கொண்டு இருந்த அஷ்டமி பைரவர் வழிப்பாட்டைச் சில நிமிடம் பார்த்து விட்டு , சுவாமி, அம்பாளைத் தரிசனம் செய்து விட்டுக்  கும்பேஸ்வரர் கோவில் போனோம்.
வெள்ளிக் கிழமை ஆவணி வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் உண்டாம் . அழகான அலங்காரத்தில் அம்மை இருந்தாள் விரட்டுவார் யாரும் இன்றி மனம் குளிரக் கண் குளிரப் பார்த்து தரிசனம் செய்தோம். குருக்களிடம் மங்களநாயகி பாதத்தில் வைத்து தரச் சொன்னோம் 'மங்கள நாயகி பிள்ளைத்தமிழ் புத்தகத்தை.'    அவரும் குங்குமம் , பூ வைத்து தீபாராதனை காட்டிக் கொண்டு வந்து கொடுத்தார்.

மகாவித்துவான் திரிசிரம் மீனாட்சிசுந்தரனார் எழுதிய
தனியூர்ப்புராணம், திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ், உறையூர் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களுக்கும் என் கணவர் உரை எழுதி இருக்கிறார்கள்.  புத்தகமாய் வெளிவந்து இருக்கிறது. பருவங்கள் பற்றிய குறிப்பு.
                                                      
உறையூர் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் நூல் போன மாதம்  வெளியிடப் பட்டது. சென்னையில்  போகவில்லை நாங்கள்.
உறையூர் காந்திமதியம்மை கோவிலுக்குப்  பல வருடங்களுக்கு முன் போனது . மீண்டும் அம்மன் அழைக்க வேண்டும். போய்ப் பார்க்க ஆசை.
           
கும்பகோணத்தில் போய் வந்த கோவில்கள் விவரம் அடுத்த பதிவில்.
                                                              வாழ்க வளமுடன்.

63 கருத்துகள்:

 1. மிக அற்புதமான நிகழ்வினை நேரில் கண்டமாதிரி தங்களது தொகுப்பு...

  என்ன தவம் செய்தோமோ - இத்துணைச் சிறப்புகளையும் வாசிப்பதற்கு!...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   குழந்தைகள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றாக பேசினார்கள்.
   என்னால் குறிப்பு எடுக்க முடியவில்லை.
   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 2. இந்தப் பதிவில் பூவுடன் சேந்த நாரைப் போல - என்று தாங்கள் அவையடக்கம் சொல்லியிருந்தாலும்

  பூவோடு பொருந்தியிருக்கும் மணம் அல்லவா தாங்கள்!...

  தங்களது நட்பு வளையத்தில் நானும் இருப்பதெல்லாம்
  அபிராம பட்டர் குறித்தருளும் அம்பிகையின் அருட்கொடையல்லவா!...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பூவோடு பொருந்தியிருக்கும் மணம் அல்லவா தாங்கள்!...//

   ஆஹா... அருமை. இந்த பொருத்தமான வார்த்தை எனக்குக் கிடைக்கவில்லை பாருங்கள்!

   ஸூப்பர் துரை ஸார்.

   நீக்கு
  2. பூவோடு பொருந்தியிருக்கும் மணம் அல்லவா தாங்கள்!...
   ஆஹா! நன்றி.

   அன்பான நட்பை பெற்று இருக்கும் நாங்களும் கொடுத்து வைத்தவர்களே!
   அபிராமி இறைவன் பால் பக்தி கொண்டோரை இணைத்து இருப்பது நற்பேறுதான்.

   நீக்கு
 3. சென்ற செவ்வாய்க் கிழமையிலிருந்தே (இன்றளவும்)வலையின் பக்கம் சரியாக வர முடியவில்லை...

  அதனால் தான் வியாழன் பதிவில் திரு ஸ்ரீராம் அவர்கள் வெளியிட்ட தகவலை அறிந்து கொள்ள முடியாமல் போனது..

  தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு நழுவி விட்டதில் வருத்தம் தான்...

  இந்த விழாவுக்காக தஞ்சையைக் கடக்கும்போது தான் என்னைப் பற்றி ஐயாவிடம் பேசிக் கொண்டு சென்றீர்களா!..

  தன்யன் ஆனேன்...

  ஓம் நமசிவாயம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பயணம், வேலை இவைகளுக்கு நடுவே நல்ல பதிவுகளையும், கதைகளையும் எழுதி அனுப்புவது வியப்பே எனக்கு. குடும்பவிழா சிறப்பாக நடந்து இருக்கும். இறைவனின் பிரார்த்தனைகள் நல்லபடியாக நிறைவு செய்து இருப்பீர்கள்..

   மதுரை வரும் சந்தர்ப்பம் மறுமுறை கிடைக்கும் போது வாருங்கள்.
   இந்த விழாவிற்கு போகும் போதுதான் பேசிக் கொண்டு போனேன். தஞ்சை பைபாஸ் ரோட்டில் போனோம். தூரத்தில் தஞ்சை கோவில் தெரிந்தவுடன் தஞ்சையம்பதி வலைத்தளத்தை சொல்லி உங்களையும் சொன்னேன். விழாவிற்கு வந்து இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

   ஓம் நமசிவாயம்
   உங்கள் அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. நீண்ட நாட்களுக்குப் பின் பதிவு. வருக... வருக!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம், நீண்ட நாட்கள் ஆகி விட்டது பதிவு போட்டு.
   உடல் நலம் கொஞ்சம் சரியில்லை, கும்பகோணத்தில் மழையில் நனைந்தேன்.
   இப்போது நலம்.

   நீக்கு
 5. சென்றமுறை குடந்தை சென்றபொழுது அங்கிருந்த சிறிய, பெரிய கோவில்கள் எல்லாவற்றுக்கும் சென்று வந்தேன். இந்த கோவிலுக்கும் சென்றிருப்பேன். நினைவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் எத்தனை முறை கும்பகோணம் சென்று இருக்கிறோம் ! மகாமகத்திற்கு கும்பகோணம் சென்று இருக்கிறோம், இந்த அபிமுகேஸ்வரர் கோவில் போனது இல்லை.
   இப்போது தான் போனோம். இங்க்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விஷேசம் ஆனதாம்.
   அடுத்த பதிவில் அந்த கோவிலில் எடுத்த படங்களை பகிர வேண்டும்.

   நீக்கு
 6. பகிர்ந்திருக்கும் பகுதிகளை படித்தேன். சப்பாணி கொட்டுதல் என்றால் என்ன? சிறப்பான புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கும் ஸாருக்கு வணக்கங்கள். பூவோடு சேர்ந்த நார் என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும் நீங்களும் ஆன்மீக விஷயங்களில் சிறந்து விளங்குபவர் என்பதை நாங்கள் அறிவோமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தத்தித் தளர் நடையிடும் குழந்தைகள் மழலைச் சிரிப்புடன் இருகைகளையும் தட்டுதல் (கொட்டுதல்)..

   வளர்ந்த குழந்தைகள் வலைத்தளத்தில் கொட்டுவதெல்லாம் (கும்மீஸ்) இந்தக் கணக்கில் சேராது..

   நீக்கு
  2. சப்பாணி கொட்டுதல் என்றால் தெரியாது என்று சும்மா தானே சொல்கிறீர்கள்.
   சிறு குழந்தைகளுக்கு அம்மா பாடுவார்களே கேட்டது இல்லையா?
   சப்பாணி கொட்டுவானாம், தயிரும் சோறும் தின்பானாம்
   அப்பம் சுட்டா மொக்குவானாம் அவல் இடிச்சா தின்பானாம். என்று வீட்டில் இருக்கும் அத்தை , பாட்டி பாடுவார்கள் குழந்தை கை கொட்டி சிரிக்கும் அது தான் சப்பாணி பருவம்.
   கைதட்டுதலை தான் சப்பாணி கொட்டுதல் என்று சொல்வோம்.

   பிள்ளைத் தமிழ் குழந்தையின் பருவத்தைப் ப்ற்றி சொல்வது சப்பாணி கொட்டுதல் ஒரு பருவம். குழந்தையின் மூன்றாம் மாதம் முதலாக இப்பருவங்கள் ஆரம்பிக்கிறது.

   சப்பாணிபருவம் குழந்தையின் ஒன்பதாம் மாதம் வரும் பருவம்.

   ஆன்மீக விஷயங்கள் எனக்கும் கொஞ்சம் தெரியும் அவ்வளவுதான்.


   நீக்கு
  3. ஸ்ரீராம், குழந்தைகள் மூன்றாவது மாதம் முதல் இருபத்தோரம் மாதம் வரை செய்யும் விளையாடும் விளையாட்டுகள் உள்ளன. பிள்ளைத்தமிழில்.

   பருவங்கள் பட்டியல் கொடுத்து இருக்கிறேன், நேரம் இருக்கும் போது மறு முறை வந்து பாருங்கள்.

   நீக்கு
 7. பள்ளிப்பிள்ளைகள் ஆன்மிகம் பேசுவதும், பரிசு பெறுவதும் மகிழ்ச்சி தருகிறது. தேவாரம் கற்ற அந்தச் சிறுவனின் பண்பு வியக்க வைக்கிறது. கற்றனைத்தூறும் அறிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிப் பிள்ளைகள் ஆன்மீகம் பேசுவது மகிழ்ச்சி அளிக்க கூடியது தான்.சிறுவனின்
   செயல் பாராட்டபட வேண்டும். பாராட்டி வாழ்த்தினேன், வாழ்த்து சொன்னேன். அந்த வயது குழந்தைகள் அலைபேசியில் விளையாடி கொண்டு இருப்பார்கள் அவர்களை போல் இல்லாமல் இப்படி அந்த பையன் உதவிசெய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

   நீக்கு
 8. என்னைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 23 ம்தேதி நடந்த விழாவைப் பற்றி காலதாமதகாக போடுகிறேன். நீங்கள் முன்பே போட்டு சிறப்பு செய்து விட்டீர்கள் அதற்கு உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும் சொல்ல வேண்டும் கண்டிப்பாய்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. இவ்வளவு அழகாக படத்துடன் விளக்கம் அளிக்கும் திறன் உங்களிடம் மட்டுமே உள்ளது அம்மா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  சிறந்த அருமையான பதிவு. பல நூல்களுக்கு அருமையாய் உரை எழுதியிருக்கும் தங்கள் கணவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் கணவர் எழுதிய இந்த திருக் குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ் புத்தக வெளியீட்டு விழாவை தங்கள் பதிவின் மூலம் நேரில் கண்ட மாதிரி இருந்தது. அங்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய குழந்தைகளை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. சின்னப்பையன் தேவாரம் கற்று கொள்வதோடு மட்டுமின்றி கூட்டத்தினருக்கு தொண்டுகள் செய்வது கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பையனும் தெய்வீக அழகாக இருக்கிறார். நலமுடன் வாழ்ந்து, அவர் தாய் தந்தையாருக்கு பெருமை தேடி தர வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  தங்களின் தன்னடக்கம் மிகவும் வியக்க வைக்கிறது. பூவால், நாருக்கு பெருமையா? இல்லை நாரினில் தொடுக்கப்பட்டதால் மாலையான புகழில் பூவுக்கு பெருமையா? என்னும் போது ஒன்றோடு மற்றொன்றும் சார்ந்து இருந்தால்தான் இரண்டுமே மணம் வீசி புகழுடன், தெய்வீக அழகுடன் ஜொலிக்கும் என்பது நிச்சயமாகிறது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சொல்வது போல் தங்களை வலைத்தள மூலமாக நட்பு கொள்ள நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த நட்பான உறவுகள் தொடர வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறேன். இதன் அடுத்த பகுதியினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   வணக்கங்களை தெரிவித்து விட்டேன்.
   படிக்கும் குழந்தைகள் ஆன்மீக பேச்சு போட்டியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.திருமுறை மன்றம் சிறப்பாக செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பேச வைக்கிறார்கள்.

   சிறுவனுக்கு உங்கள் வாழ்த்துக்கள் நலம் பயக்கும். தெய்வீக அழகு, தெய்வீக சிரிப்பு. அனைவருக்கும் காப்பி கொடுத்து விட்டு அவன் குடிக்கவில்லை ,நீ குடிக்கவில்லையா ?
   என்று கேட்டவுடன் தான் அவன் குடித்தான். நான் காப்பி குடிக்க மாட்டேன் என்னை திரும்ப திரும்ப வந்து கேட்டுக் கொண்டு இருந்தான், நான் காப்பி குடிக்க மாட்டேன் அதனால் தான் உன்னிடம் வாங்கவில்லை என்று சமாதானம் செய்தேன்.

   //ஒன்றோடு மற்றொன்றும் சார்ந்து இருந்தால்தான் இரண்டுமே மணம் வீசி புகழுடன், தெய்வீக அழகுடன் ஜொலிக்கும் என்பது நிச்சயமாகிறது//

   அழகாய் சொன்னீர்கள். உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
   நீங்கள் சொல்வது போல் இந்த அன்பான நட்பு தொடரவேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். வேண்டிக் கொள்வதற்கு நன்றி. நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

   உங்கள் அருமையான அனபான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. அழகான விளக்கமுடன் பதிவை சொல்லிச் சென்ற விதம் அருமை.

  சாருக்கு எமது வாழ்த்துகள் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. குட்டிக் கோபுரத்துடன் கூடிய அழகிய மண்டபம், நந்தி படுத்திருப்பது அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   ஆமாம், குட்டி கோபுரம் அழகுதான்.
   நந்தியை அழகாக மதிலின் மீது வடித்து விடுவார்கள் சிற்பிகள்.

   நீக்கு
 13. மகாமகக் குளம்.. பெயரே புதுமை.. அதில் நிற்பவர் மாமா தானே.. அழகாகப் போஸ்ட் குடுக்கிறார்ர்.. தடாகத்திலே ஒரு தாமரையைப்போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாசி மாதம் மக நட்சத்திரத்தில் (12 ஆண்டுக்கு ஒரு முறை ) கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் மாசிமகத் திருவிழா சிறப்பாக ந்டைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாசச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும், குரு சிம்மராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பது ஐதீகம்.

   மகாமகக் குளத்தில் அன்று தீர்த்தவாரி கொடுப்பார்கள் கும்பேஸ்வரர் கோவில் மற்றும் அனைத்து கோவில் தெய்வங்களும் கட்டுகடங்காத கூட்டம் வரும் கும்பகோண்த்திற்கு.

   //தடாகத்திலே ஒரு தாமரையைப்போல.//
   அதிரா கவிஞர் அல்லவா? அழகாய் சொல்லி விட்டீர்கள்.
   நீக்கு
 14. விழாச் சுவரொட்டிகளைக்கூட விட்டு வைக்கவில்லை கோமதி அக்கா:).

  பிள்ளைகளின் பேச்சும் மாமாவின் சிரிப்பும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரலாறு முக்கியம் அல்லவா?
   அதுதான். கோவில் வாசல் உள்புறம் ஒட்ட விடுவது சிறப்பு இல்லையா?
   கோவிலுக்கு வருபவர்கள் படித்து விட்டு வர வசதியாக.

   நீக்கு
 15. //பூவுடன் சேர்ந்த நாருக்கும் பெருமை என்பது போல் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்கும் போது எனக்கும் சேர்த்து.//

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... நீங்கள் இல்லாமல் மாமாவால் இது சாத்தியப்பட்டிருக்கும் எனச் சொல்ல மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன்.
   அவர்கள் எழுதுவதற்கு இடைஞ்ல் இல்லாமல் இருப்பதே அவர்களுக்கு உதவிதான்.
   திருமணத்திற்கு பின் படித்துக் கொண்டே தான் இருந்தார்கள். முனைவர் பட்டம் வரை திருமணத்திற்கு பின் தான்.

   நீக்கு
 16. அழகிய வெளியீட்டு விழா.

  அக்க்குழந்தைச் சிறுவன் திருநீற்றுப் பூச்சுடன் நலமே வளர நானும் பிரார்த்திக்கிறேன்.

  அழகிய பதிவு. நெல்லைத்தமிழனும் பயணத்தில் இருப்பதாக சொல்லியிருந்தாரே.

  பதிலளிநீக்கு
 17. ஆமாம் அதிரா, நெல்லைத்தமிழன் பயணத்தில் இருப்பதாகவும் 14ம் தேதிதான் இனி என்றும் குறிப்பிட்டு இருந்தார். நீங்களும், அவரும் கேட்டுக் கொண்டீர்கள் அதனால் பதிவு போட்டேன்.
  அந்த குழந்தைக்கு உங்கள் எல்லோர் பிரார்த்தனைகளால் நலமே வளர்வான். அனைத்து நலங்களையும் இறைவன் அருள்வான்.

  உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. பருவங்கள் பற்றி நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!  இந்த வார்த்தைகள் எல்லாமே எனக்கு புதுசு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 19. சிறப்பான தகவல்கள் மா...

  புத்தக வெளியீடு - மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  விழாவினை நேரில் பார்த்தது போல நிறைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 20. ஸ்ரீ அபிமுகேஸ்வரர் கோயில் ஆரவாரமில்லாமல் இருக்கும் ..
  ஸ்ரீ வயிரவமூர்த்தியின் திருமேனி சிறப்பான வடிவமைப்பு...

  குடந்தையில் மேற்கு நோக்கியிருக்கும் மூன்று திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ அபி முகேஸ்வரர் கோயில் ஆரவாரமில்லாமல் மன நிம்மதியை தரும் அழகான கோவில்தான்.

   ஸ்ரீவயிரவமூர்த்தி இரண்டு இருந்தது ஒன்று நல்ல பெரியது. அதுதான் மிக அழகு.
   மற்றது சின்னது.

   அங்குள்ள ஸ்ரீயோகதெக்ஷிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று விளம்பரம் பலகை வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் வரும்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 21. பிள்ளைத் தமிழ் பாடல்கள் இயற்றுவதற்கு நிறைய கற்பனை வளம் வேண்டும். அவற்றிற்கு உரை எழுதுவதற்கு அதற்கான இசைந்த மன வளமும் வேண்டும்.

  இறைவி மங்களநாயகியே பாட்டுடை தலைவி ஆதலால் பெண்பால் பிள்ளைத் தமிழ்.

  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் முதலிய பெண்பிள்ளையின் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன.

  அரசு சார் தமிழாசிரியராக இருந்தாரோ?.. அவரது ஓவியத் திறமையை மட்டுமே நீங்கள் சொல்லியிருப்பதால் இந்தக் கேள்வி.

  இன்றைய கும்பகோணமும் சிட்டி யூனியன் வங்கியும் பிரித்துப் பார்க்க முடியாதவை.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

  சார் முனைவர் பட்டம் பெற்றவர்.
  நாகபட்டினம் மாவட்டம் மேலையூர் , பூம்புகார்க் கல்லூரியில் 37 ஆண்டுகள் பணி புரிந்தார்கள். தமிழ்துறை தலைவராக இருந்தார்கள். ஓய்வு பெற்றபின் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 6 வருடம் கெளரவ விரிவுரையாளராக இருந்தார்கள்.

  மாயவரத்தில் இருந்த போது கோவில்களில் தொடர் சமய சொற்பொழிவுகள் செய்தது பற்றி பதிவுகள் போட்டு இருக்கிறேன் சார்.

  கும்பகோணத்தையும் சிட்டி யூனியன் வங்கியும் பிரித்துப் பார்க்க முடியாதுதான்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கோமதி மா மனம் மிகப் பெருமை அடைகிறது. சாரின் தமிழ்ப் பெருமை இன்று இணையத்தில் ஒளி வீசுகிறது.
   ஸ்ரீராம் பதிவிலேயே சார் பணியாற்றிய கல்லூரிகள்
   ,
   வகித்த பதவிகள் பற்றித் தெரிந்து மகிழ்ந்தேன்.
   நல்ல தமிழ் பேசும் குடும்பம், பிள்ளைத்தமிழ் அதுவும் மங்களாம்பிகையை
   சேவித்து எழுதியது என்றால் மிக உயர்ந்த பெருமை. மற்ற
   புத்தகங்களையும் பார்க்கிறேன். சென்னை செல்லும் யோகம் கிடைக்கும் போது வாங்க முடியுமா என்று பார்க்கிறேன்.

   ஆடுக செங்கீரை தான் நினைவுக்கும் வருகிறது. அம்பாளைப் பாடிய வேளை இல்லத்தில் நலம் பெருக வேண்டும்.
   வீட்டில் வர்ணம் பூசும் வேலையும் விளக்குகள் பொருத்தும் வேலையும்
   நான்கு நாட்களாக நடைபெறுகிறது. அதுதான் தாமதமாகிவிட்டதுமா.
   சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   பிள்ளாய்த்தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்ததும் சாரின் பெற்றோர்கள் ஆசியும் இறைவனின் கருணையும்.

   மங்களம்பிகையை வெள்ளிக் கிழமை வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி.
   நடப்பது எல்லாம் இறைவனின் விருப்பம் என்று தான் போகிறோம் அக்கா.
   அவர் நமக்கு என்ன கொடுக்க வேண்டுமோ கொடுக்கட்டும்.
   உங்கள் வாக்கு படி இல்லத்தில் நலம் பெருகட்டும்.

   வீட்டில் வர்ணம் பூசுவது பெரிய வேலையே! தாமதம் எல்லாம் கிடையாது நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் பதிவுகளை.

   உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 23. நூல் மதிப்புரை, விழா நிகழ்வு, அருமையான புகைப்படங்கள், ஆன்மிக சங்கமம் என்று அசத்தியுள்ளீர்கள். நான் பிறந்த ஊர் அல்லவா? ஆதலால் படிக்கும்போது மிகவும் நிறைவாக உணர்ந்தேன். கும்பகோணத்திலுள்ள பெரும்பாலான அனைத்துக் கோயில்களுக்கும் பல முறை தனியாகவும், குடும்பத்துடன் சென்றுள்ளேன். இன்னும் சென்றுவருகிறேன். ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும்போது கிடைக்கும் அனுபவம் மனதிற்கு நிறைவினைத் தரும். அதுபோல இவ்விழாவில் வந்து கலந்துகொண்டதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

   நான் உங்களை நினைத்தேன், குடந்தை பதிவு போட்டு இருக்கிறேன் உங்களை காணவில்லையே ! என்று. வந்து படித்து அருமையான கருத்தை பகிர்ந்து விட்டீர்கள்.
   மாயவரத்தில் இருக்கும் போது பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேச கோவில்கள் பார்க்க உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் கும்பகோணம் பல முறை பார்த்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் கோவில் அனுபவங்கள் மனதுக்கு நிறைவை தந்தது. எத்தனை முறை கும்பகோண கோவில்களை பார்த்தாலும் மீண்டும் பார்க்க மனம் எண்ணும்.

   உங்கள் அருமையான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 24. புத்தக வெளியீடு இனிய வாழ்துகள். தொடர்க பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 25. உங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பான தொகுப்பாக மிக அழகிய படங்களுடனும் புகைப்படங்களுடனும் இருக்கிறது.

  தங்கள் கணவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  தாங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தப்படும் காட்சியை மிகவும் ரசித்தேன். இது ஒரு கொடுப்பினை! உங்கள் கணவருடன் இணைந்து இப்படி மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் நலமுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன். வாழ்க வளமுடன்

   உங்கள் அன்பான வார்த்தைகள் மனம் நெகிழ்ந்தேன். மனமார்த்த வாழ்த்துக்களை படித்து மனது மகிழ்ந்தேன்

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 26. நிகழ்வினை அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

  sir ஆற்றிய உரையை காணொளியாக்கிப் பகிர்ந்திருக்கலாம்.

  தங்களுக்கும் சேர்த்து மரியாதை செய்திருப்பது சிறப்பு.  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
  உரையை காணொளியாக்கினேன், ஆனால் பகிர முடியவில்லை.
  ஆமாம் , எனக்கும் அவர்களால் கிடைத்தது.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. நிகழ்ச்சியை நேரில் காண்பதுபோல எழுதியிருக்கிறீர்கள்.

  பொழிப்புரை, குறிப்புரையுடன் சிறிய விளக்கத்தையும் கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. சாதாரணமாக பாடலுக்கு வரிக்கு வரி பொழிப்புரை எழுதுவதை விட, பாடலில் உபயோகப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கு அர்த்தம்ம் போடுவது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். பொழிப்புரையும் சிறப்பாக உள்ளது (அவர் முனைவர்.. நான் வாசகன் என்ற நிலையில் இருந்து என் கருத்தை எழுதுகிறேன். நாங்கதானே படித்துப் புரிஞ்சுக்கணும்).

  நான்கூட ரொம்ப மாதங்களாக பெசண்ட் நகர் உ.வெ.சா நூல் நிலையத்துக்குப் போய் சில புத்தகங்கள் வாங்கணும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் (மீ.சு.பி. அவர்களின் வாழ்க்கை, என் வரலாறு என்னிடம் மின்னூல் இருந்தாலும் பிரிண்ட் எடிஷன் எவ்வளவு விலை, எப்படி இருக்கிறது என்று பார்த்து அதையும் வாங்கலாமா என்று எண்ணியுள்ளேன்).

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  நீங்கள் தான் அருமையாக பாடல்களை புரிந்து படித்து விளக்கமும் கொடுப்பீர்களே!

  சாரும் முனைவர் பட்டத்திற்கு வேண்டிய ஆராய்ச்சி குறிப்புகள் எடுக்க உ.வே.சா நூல் நிலையம் தான் போய் வந்தார்கள். ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள், நூல்கள் என்று குறிப்புகள் எடுத்து வந்தார்கள்.

  புத்தகங்கள் வாங்குவது அதை படிப்பது மகிழ்ச்சிகுரிய செயல்தான்.

  சொன்னவுடன் உடனே வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. மிக அருமையாக நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். படங்கள் ஏற்கெனவே ஸ்ரீராம் போட்டு எங்கள் ப்ளாகில் பார்த்தாலும் மீண்டும் போட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   ஸ்ரீராம் முன்பே போட்டு விட்டாலும் நெல்லைத்தமிழன் , அதிரா கேட்டு கொண்டதாலும் மற்றும் என் தளத்தில் சேமிப்பாக இங்கும் பகிர்ந்தேன்.
   உங்கள் கருத்துக்கு ந்னறி.

   நீக்கு
 31. மிக மகிழ்ச்சி மா ...


  தகவல்களும் படங்களும் மிக சிறப்பு மா .

  ஐயா விற்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும் .....


  வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக -திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் நூலை வாசிக்க வேண்டும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   அனு, உங்கள் வணக்கங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   மங்களநாயகி பிள்ளைத்தமிழை வாசிக்க வேண்டும் என்றதற்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 32. பதில்கள்
  1. வணக்கம் வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு