வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே!

வெள்ளிக்கிழமையிலே அம்மா உன் வாசலிலே

எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  ஐயனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வாரமும் கஞ்சி வார்த்தல், கூழ் வார்த்தல் நடை பெறும். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பான பூஜை நடைபெற்றது.நான் போனபோது இந்தப் பாடல் பாடிக் கொண்டு இருந்தது. காலம் எல்லாம் தாய் இருக்கக் கவலைகள் ஏது என்ற வரி, பிடித்த வரி. 

 அதற்கு முன் எல்.ஆர் ஈஸ்வரி பாடல்கள் பாடி கொண்டு இருந்தது. காலை முதல்  அம்மன் பாடல்கள் போட்டு இருந்தார்கள். மாலை தான் பூஜை.  
அய்யன் கோவில் வாசலிலே  அம்மனுக்குப் படைத்த பிரசாதங்கள் வழங்கப்படுகிறது


''அம்மனுக்குப் படைத்த கூழ் குடிக்க வாருங்கள்'
குழந்தைகள் குதூகலமாய்  ஆட்டம் பாட்டம்

சப்த கன்னியர், அம்மன்கள், நாகர்கள், மாவில் விளக்குகள்(வெல்லம் போடாமல் பச்சரிசி மாவில் விளக்குகள்), மாவு விளக்கு,  பானக்கம், பழங்கள், வளையல், மஞ்சள் கயிறு,   புளியோதரை, எலுமிச்சை சாதம், சர்க்கரை பொங்கல், கேழ்வரகும் அரிசியும் கலந்த கூழ்.
சிம்மவாஹினி, கருமாரி
காளி அம்மா 

பேச்சியாயி அம்மன் எலுமிச்சை பாவாடை அலங்காரம்

போனவார அம்மன் அலங்காரம் :- கீழே உள்ள படங்கள்.
பெரியவர்கள் அம்மன் பூஜையைப் பார்க்க,
 குழந்தைகள் அவர்கள் உலகத்தில்குழந்தைகள் பாலர் பள்ளிப் பாடல்களைப் பாடிச் சுற்றி வந்தார்கள். இரண்டு அக்கா, இரண்டு தம்பி; 'உன் தம்பி சுற்றாமல் கீழே விழுந்து விட்டான்'- ஒரு அக்கா  சொல்கிறாள்.துளசி மாடத்தின் பக்கம் பிரசாதங்கள் -கொடுக்கத் தயார் நிலையில்.
சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், கேப்பைக் கூழ்.


ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம், ஆடியில்  அம்மனுக்குக் கூழ்  செய்து வணங்கி, இல்லாதோர் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கு வழங்கப்பட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து   நமக்கு எல்லா வளங்களும் தருவாள் என்ற நம்பிக்கை.

ஆடிக்கூழில் வேப்பிலை போடுவதால் அனைத்து நோய்களும் மறையும் என்ற நம்பிக்கையும் உண்டு. கேழ்வரகு கூழின் நன்மைகளை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும்  படித்த செய்தியை பகிர்ந்தால்  நல்லது என்று பகிர்ந்தேன்.

//கூழ் கேழ்வரகிலிருந்து தயார் செய்வதால் அதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர். கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும். நிலங்களிலும், வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது. உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது. குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது.//

- நன்றி விக்கிபீடியா

பிரசாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்னை எல்லா நலங்களையும் எல்லோருக்கும் அருள வேண்டும்.


50 கருத்துகள்:

 1. அருமையான படங்களோடு அம்மனின் பிரசாதமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

  அம்மன் பாடல்கள் என்றாலே எல்.ஆர்.ஈஸ்வரிதானே...

  தேவகோட்டை முழுவதுமே ஆடித்திருவிழா ஆரம்பம் இந்த வாரம் எங்கள் தெரு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொன்னது போல் அம்மன் பாடல் என்றால் எல்.ஆர். ஈஸ்வரிதான்.
   இங்கேயும் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நன்றாக நடக்கிறது.
   பக்கத்தில் உள்ள கோவிலில் கலந்து கொள்கிறேன்.
   அதுவே போதும் என்ற மனநிறைவு இப்போது.

   சங்கரன் கோவில் ஆடிதபசு விழாவுக்கு அழைப்பு வந்து இருக்கிறது சொந்தக்காரர்களிடமிருந்து. போன வருடம் கூட்டம் இல்லா நாளை தேர்ந்து எடுத்து போய் வந்தோம் சொந்தங்களுடன். இந்த் முறை கோமதி அம்மன் அழைத்தால் போவோம்.

   தேவகோட்டை முழுவதும் விழா களை கட்டி இந்த வாரம் உங்கள் தெரு செய்வது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  நலமா? ஆடி வெள்ளி சிறப்பு பதிவு அருமையாக உள்ளது. தாங்கள் தந்த தலைப்பும் மிக அழகாக பொருத்தமாக உள்ளது. இன்று எல்லா பதிவிலும் அம்மனை தரிசனம் செய்தாகி விட்டது. அனைவருக்கும் அம்மனருள் பரிபூரணமாக கிடைக்க நானும் பிரார்த்தித்து கொள்கிறேன்.

  அம்மன் படங்கள் மிகவும் நன்றாக உள்ளது. முதல் பாடல் கேட்டேன். மிகவும் அமைதியாக உள்ளம் உருகும்படியாக நன்றாக இருக்கிறது. அம்மன் அலங்கார படங்கள் கண்ணை கவர்ந்தன. வேப்பிலை சார்த்தி எலுமிச்சைப்பழ பாவாடையுடன் அலங்கரித்த பேச்சியம்மனை தரிசித்துக் கொண்டேன்.

  குழந்தைகள் உலகமே என்றுமே தனிதான். நம்மை கவனிக்க நல்லபடியாக வைத்திருக்க வேண்டி உலக மாதாவான அம்மனை நாம் நாட, தங்களை கவனிக்க தங்கள் "தாய்" இருக்கும் மகிழ்வில் அவர்கள் கவலைகள் ஏதுமின்றி சந்தோஷமாக ஆடிப்பாடுவதை பார்க்கும் போது நம்மிடமும் அவர்களின் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.

  கேழ்வரகு பற்றி கட்டுரையில் அதன் பயன்களை படிக்கத் தந்தமைக்கு நன்றி. பிரசாதங்களை பக்தியுடன் எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   பதிவு, தலைப்பு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   நான் கோவில் போன போது இந்த பாடல் பாடியது அது பதிவு பொருத்தமாய் இருக்கும் என்று நினைத்து போட்டு விட்டேன். முன்பு எல்லாம் ஞாயிறுதான் அம்மனுக்கு உகந்த நாளாக கொண்டாடினார்கள். வெள்ளி துர்க்கை, லட்சுமி வழிபாடக இருந்தது.

   //அனைவருக்கும் அம்மனருள் பரிபூரணமாக கிடைக்க நானும் பிரார்த்தித்து கொள்கிறேன்.//
   நன்றி கமலா

   இந்த கோவிலில் ஆனி மாதம் முதல் அடுத்த ஆனி வரை ஒரு குடும்பத்தினர் பூஜை செய்வர். இந்த முறை வந்து இருப்பவர்களும் அலங்காரங்கள் நன்கு செய்கிறார்கள்.

   இப்படி பூஜை செய்பவர்கள் பலர் இருக்கிறார்களாம், அடுத்த முறை வர பல காலம் ஆகுமாம். நான் இங்கு வந்து மூன்று குடும்பங்கள் பூஜை செய்வதை பார்த்து விட்டேன்.

   //தங்களை கவனிக்க தங்கள் "தாய்" இருக்கும் மகிழ்வில் அவர்கள் கவலைகள் ஏதுமின்றி சந்தோஷமாக ஆடிப்பாடுவதை பார்க்கும் போது நம்மிடமும் அவர்களின் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. //

   ஆமாம், கமலா அந்த குழந்தைகள் மனது நமக்கு இருந்தால் எவ்வளவு நல்லது.தாய் இருக்கிறாள் நம்மை பார்த்துக் கொள்வாள் என்று ஏன் இருக்க முடிவது இல்லை சில் வேளைகளில்?

   இப்போது சிறு தானியம் உணவு என்று பிரபலமாகி வருகிறது. அந்தக்காலத்தில் அரி இல்லாத வீட்டிலும் கேழ்வரகு கண்டிப்பாய் இருக்குமாம். மாயவரத்தில் எங்க வீட்டுக்கு எதிரில் இருக்கும் காமாட்சி அம்மனுக்கு அரிசி நொய் கஞ்சிதான் படைப்பார்கள். அதில் மாங்காய், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய் பூ போட்டு.

   இங்கு எல்லா அம்மன் கோவிலும் கேழவரகு அருசி நொய்,(குருணை) சேர்த்துதான் செய்கிறார்கள்.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

   நீக்கு
 3. அழகழகான படங்களுடன் பதிவு அற்புதம்..

  அன்பான மக்களுடன் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்த உணர்வு...

  இந்த மாதிரியான வைபவங்களில் கலந்து கொள்ள இயலாமல் தவிக்கும்
  என்னைப் போன்றவர்களுடைய மனம் குளிரும்படிக்கு பதிவு தெய்வீகமாக இருக்கிறது..

  பிறருக்கு நல்ல செய்திகளை வழங்குவதும்
  முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுகின்றது...

  அந்த வகையில் அம்பிகையின் அருள் நல்லோர் அனைவருக்கும் நற்றுணையாகட்டும்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்

   வெகு தூரத்தில் இருந்தாலும் அங்கிருந்து திருவிழா படங்களை அளித்து நாங்கள் நேரில் பார்த்த உணர்வை தரும் உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

   உங்கள் மனம் குளிரும்படி அம்மன் காட்சி கொடுத்தது மகிழ்ச்சி.

   //பிறருக்கு நல்ல செய்திகளை வழங்குவதும்
   முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுகின்றது..//

   அறங்கள் வாழ்க! மகிழ்ச்சி.

   அம்பிகையின் அருள் எல்லோருக்கும் நற்றுணையாகட்டும்

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


   நீக்கு
 4. காலை வணக்கம். நானும் இளையராஜா பாட்டை ஆன்செய்து விட்டு பதிவை ஆரம்பிக்கிறேன். பாடலோடு பயணிக்க~

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   பாட்டை கேட்டுக் கொண்டே பதிவை படித்து கருத்துக்கள் சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

   நீக்கு
 5. திருவிழா என்றால் விதம் விதமான உற்சாகம்.. ஆனந்தமாய் அலச கடைகள், குழந்தைகள் விளையாட இடம்.. நடுவில் பக்தி பார்ட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவிழாக்கள் என்றாலே உற்சாகம் தான். இந்த கோவில் விழா சமயம் கடைகள் போடுவது இல்லை. குழந்தைகள் எந்த இடமாக இருந்தாலும் விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். கவலை இல்லா பருவம்.

   நீக்கு
 6. படங்கள் அழகு. அழகிய அலங்காரங்கள். அலங்காரம் செய்பவர்கள் ரசித்துச் செய்கிறார்கள். நேற்று என் பாஸ் கங்கை அம்மான் கோவிலுக்கு பால் குடம் எடுத்தார். அந்த அம்மனுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் அலங்காரம் செய்வார். நண்பரின் மகன்தான். அனுபவித்து, ஆராதித்து ரசனையோடு விதம் விதமாய் அலங்காரங்கள் இருக்கும். கடமைக்கு செய்வதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், அலங்காரங்களை ரசித்து செய்கிறார்கள். உங்கள் மனைவி பால்குடம் எடுத்தது மகிழ்ச்சி. கங்கை அம்மன் அருளால் அனைத்து நலங்களும் வந்து சேரட்டும் உங்கள் குடும்பத்திற்கு. கல்லூரி மாணவர் அப்பாவுக்கு உதவியாக கோவிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

   நீக்கு
 7. எங்களலுவலகத்தில் இருக்கும் இரு பெண்கள் வீட்டில் நாளை ஆடிக்கூழ் காய்ச்சுகிறார்கள். பெரும்பாலும் மூன்றாவது வாரம்தான் காய்ச்சுவதுதான் விசேஷம் என்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடுகளில் கும்பிடுபவர்கள் மூன்றாம் வாரம் தான் செய்வார்கள்.
   நான் கம்பங் கூழ் செய்தேன்.

   நீக்கு
 8. கூழ் தானம் செய்பவர் முதலிலேயே கோப்பைகளில் ஊற்றிக் கீழே வைத்திருக்கிறாரே... அவ்வப்போது ஊற்றிக் கொடுத்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்று தோன்றியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூழ் பாத்திரம் கொண்டு போனால் மூடி வைத்து இருக்கும் பாத்திரத்தில் இருந்து தான் ஊற்றி தருகிறார்கள்.
   விளையாடி கொண்டு இருக்கு குழந்தைகளுக்கு கூழ் சூடாக இருப்பதால் பிடிக்க முடியாது என்று ஊற்றி வைக்கிறார்கள்.

   எல்லோரிடமும் பணம் வசூல் செய்துதான் மூன்றாம் வாரம் சிறப்பாக செய்வார்கள். எங்கள் பங்கும் இருக்கிறது.
   கூழ், சர்க்கரை பொங்கல் வாங்க வருவோர் குறைச்சல், புளியோதரை, எலுமிச்சை சாதம் சீக்கீரம் காலியானது. பாக்கு மட்டை தட்டில் சாப்பிட கொடுத்தார்கள் .
   6 மணிக்கு எப்படி சாப்பிட முடியும் கையில் வாங்கி வந்து விட்டேன்.

   நீக்கு
 9. ஒவ்வொரு படமும் அழகோ அழகு... லயித்து விட்டேன்...

  இளையராஜா அவர்களின் குரலில் பாடல் அமர்க்களம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களை லயித்து பார்த்து பாடலை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 10. அம்மன் அலங்காரங்கள் சூப்பர். அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
   அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்.

   நீக்கு
 11. ஆடி வெள்ளிப் பதிவு மிக அருமை. பிரசாதங்களோடு இடுகை முடிந்ததை ரசித்தேன்.

  அம்மன் அலங்காரத்தோடு அழகாக இருக்கிறது படங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   ஆடி வெள்ளி பதிவை, அலங்காரத்தை, பிரசாதத்தை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
  2. அன்பு கோமதி,
   இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கீறேன்.

   எல்லோரும் பங்கு கொண்டு கொண்டாடும் அம்மன் அலங்காரம் மிக அழகு. நேரே பார்ப்பது போல
   அவ்வளவு அருமையாக இருக்கிறது.
   குழந்தைகளுக்குத் தான் எத்தனை உற்சாகம்.
   திண்டுக்கல்லில் கடைசியாகக் கோட்டை மாரியம்மன் விழா
   பார்த்தேன்.
   சென்னையில் எல்லை அம்மனும்
   முண்டகக் கண்ணி அம்மனும் பிரசித்தம் . உண்மையான வரப்பிரசாதிகள்.

   நட்புகள் சூழ பிரசாதம் வினியோகித்து
   அம்மனும் மகிழ்ந்து நாமும் மகிழ்வது
   எத்தனை உத்சாகம். நன்றி மா. அன்னை அருள் புரியட்டும்,.

   நீக்கு
  3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   ஆமாம் அக்கா, ஊர் மக்களின் பங்கு எல்லா விழாவிலும் இருக்கும் பணம் வசூல் செய்வார்கள். அரிசியாக, மாவாக, பணமாக கொடுத்தால் வாங்கி கொள்வார்கள்.

   குழந்தைகள் ஒவ்வொரு விழாவிற்கும் வந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

   திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பார்த்து இருக்கிறேன்.
   சென்னையில் நீங்கள் சொல்லும் அம்மனும் மிகவும் பிரசித்தம், ஆனால் பார்த்தது இல்லை.

   நீங்கள் சொல்வது போல் அம்மனும் மகிழ்ந்து நாமும் மகிழ்வோம்.
   அவள் கருணையால் மழை பெய்து மக்கள் கஷ்டம் தீரட்டும். ஆடியில் விதைக்கும் பயிர்கள் அவள் அருளால் பூத்து காய்த்து கனியட்டும். நீர்வளம், நிலவளம் பெருகட்டும்.
   உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. கோமதிக்கா மன்னிச்சுக்கோங்க....

  மனதில் பல எண்ணங்களின் அலை மோதல்...நேர நெருக்கடி...என்று ஓடுவதால் பதிவுகள் பல விட்டுப் போகிறது. காலையில் ஒரு 45 நிமிடம் கிடைக்கும் நேரத்தில் அப்போது வரும் பதிவுகளைப் பார்வையிட்டு ஓடுகிறேன் ,மாலை பெரும்பாலும் இணையம் மயங்கி விடுகிறது...சீக்கிரமாகவும் தூக்கம் வந்துவிடுகிறது காலை 4 மணிக்கு எழுவதால்...அப்புறம் தான் விட்ட பதிவுகள் ஒவ்வொன்றாக வருகிறேன். உங்கள் பதிவுகள் விட்டுப் போச்சு....வருகிறேன்..

  முதலில் பிரசாதம் தான் கண்ணில் பட்டது!!! ஹா ஹாஹ் ஆஹ் ஆ...

  படங்கள் அருமை பதிவு வாசித்துவிட்டு வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
   மன்னிப்பு கேட்டால் கோபம் வரும் அக்காவிற்கு.

   பதிவை நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள். இதற்கு முன் போட்ட பதிவை நீங்கள் படிக்கவில்லை. அதை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
   முடிந்த போது வாருங்கள்.

   வேலைக்கும் போய் கொண்டு, வீட்டுகடமைகளையும் பார்த்துக் கொண்டு பதிவுகளும் படித்து கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயம்.

   நீக்கு
 13. படங்கள் எல்லாம் அத்தனை அழகு கோமதிக்கா...

  நானும் ஆடிக் கூழ் செய்தேன்...மற்ற நாட்களிலும் கூடச் செய்வதுண்டுதான்...உடம்புக்கு நல்லது என்பதால்...

  படங்கள் பிரசாதம் என்று அம்சமாக இருக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளாவில் அரிசியும் பச்சைபயிறும் போட்டு செய்யும் கஞ்சி மிகவும் பிரபலம் இல்லையா?
   கஞ்சி தொட்டுக்க துவையல் என்று எளிமையான சத்தான உணவு எனக்கு பிடித்த உண்வு கஞ்சி. உடம்புக்கு நல்லது .

   அடிக்கடி பால கஞ்சி செய்வேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 14. அருமையான பதிவு. அம்மன் படங்கள் எல்லாமும் அழகோ அழகு. படம் எடுக்க அனுமதி கொடுத்திருக்காங்களே! அம்மனுக்குப் படைக்கப்பட்ட பொருட்களும் சேர்ந்தே வந்திருக்கின்றன. இந்த மாதம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் கூழ் வார்ப்பார்கள். மாவிளக்குப் போடுவதும் நிறையவே பார்க்கலாம். வெல்லம் இல்லாத மாவில் விளக்குப் போடுவதை இப்போத் தான் பார்க்கிறேன். கடைசியில் உள்ள பிரசாதங்களின் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   படம் எடுக்க அனுமதி உண்டு. நீங்கள் சொல்வது போல் எல்லா கோவில்களிலும் கூழ் வார்த்தல் உண்டு.

   மாவிளக்கு நான் ஆடிபெருக்கு அன்று போடுவேன்.

   வெல்லம் இல்லாத விளக்கு கார்த்திகை மாதம் 27 நடசத்திரகளை குறிப்பது போல் 27 மாவு விளக்கை செய்து வேக வைத்து அதில் விளக்கு ஏற்றுவோம். நடுவில் உள்ள விளக்குக்கு மட்டும் அடியில் தட்டு வைத்து இருப்போம். அதை சாப்பிட கொடுப்பார்கள் இரவு.

   கோவிலில் வேகாத மாவில் விளக்கு போட்டு இருந்தார்கள். சர்க்கரை பொங்கல் கொஞ்சமாய் வாங்கி அங்கேயே சாப்பிட்டு விட்டேன்.

   கடைசியில் படம் போட்ட பிராசாதங்கள் மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்தேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்...

  படங்கள் எல்லாமே அழகு மா...

  குழந்தைகளின் காணொளி சிறப்பு - அவர்கள் உலகம் எவ்வளவு மகிழ்ச்சியானது! எந்தக் கவலையும் இன்றி ஒரு விளையாட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான். குழந்தைகள் உலகம் மகிழ்ச்சியான உலகம் தான்.
   அதில் அடுத்து என்ன விளையாட்டு என்ற சிந்தனை மட்டும் தான்.
   எல்லா இடத்திலும் விளையாடுவார்கள்.எந்த கவலையும் கிடையாது, விளையாட ஆள் இல்லை என்றால் மட்டுமே அவர்களுக்கு வருத்தம்.
   உங்கள் வாழ்த்துக்கும், படங்கள், பதிவு பற்றிய கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 16. அருமையான படங்கள். சிறப்பான பகிர்வு. கேழ்வரகுக் கூழின் நன்மைகளையும் சேர்த்திருப்பது நன்று.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

  கேழ்வரகு கூழின் நன்மைகள் இப்போது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் படித்ததை பகிர்ந்து விடலாம் என்று சேர்த்தேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 18. படங்கள் எல்லாமே அழகு. நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. இதுபோல் பண்டிகைக்காலங்களில் கோவில்களுக்குச் சென்று வழிபட்ட அனுபவமோ ஆடிக்கூழ் குடித்த அனுபவமோ இல்லாத காரணத்தால் இப்பதிவு ஏக்கம் தருகிறது. (விசேட நாட்களில் கோவிலில் கூட்டமிருக்கும் என்பதால் அப்பாவிடமிருந்து அனுமதி மறுக்கப்படும்.)

  இளையராஜா பாட்டும் இதுவரை கேட்டிராத பாடல். மிகவும் ரசித்தேன் கோமதி மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
   இந்த கோவிலில் அவ்வளவு அதிகமாய் கூட்டம் இருக்காது. தள்ளு, முள்ளு கிடையாது.
   நானும் கூட்டம் நிறைய இருக்கும் இடங்களுக்கு போக மாட்டேன்.
   வீட்டுக்கு அருகில் கூட்டம் இல்லாமல் எல்லா பண்டிகைகளும் எளிமையாக கொண்டாடும் அன்பான மக்கள் உள்ள இடம்.
   பாடலை ரசித்து கேட்டது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 20. பக்தி மணம் கமழும் படங்கள் ...

  அம்மனின் அழகு மனதை நிறைக்கிறது மா.


  படங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் காண தூண்டும் அழகு ...அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 21. அம்மனுக்கு நீங்கள் வைத்த பிரசாதஙகள் கிடைத்தன. கேழ்வரகுக் கூழ் பிரமாதம் போங்கள்! சிறு வயதில் தேன்கனிக்கோட்டையில் என் பாட்டி வீட்டில் தினமும் காலையில் பள்ளிக்குப் போகும்போது 'களி' உருண்டை தான் பிரேக் பாஸ்ட்! இரவில் சில நாள் கூழ் செய்வதுண்டு.
  பச்சை மிளகாய்த் துவையலுடன் சாப்பிட மிகவும் இனிமையாக இருக்கும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்
   கேழ்வரகுக்கூழ் எடுத்து கொண்டது மகிழ்ச்சி.
   உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி சார்.
   பச்சை மிளகாய் துவையல் சாப்பிட நன்றாக இருக்குமா?
   ஒரு நாள் கேழ்வரகு கூழுக்கு நீங்கள் சொன்ன துவையல் செய்து பார்க்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. பச்சைமிளகாய், பச்சைக்கொத்துமல்லி இரண்டையும் நன்கு நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டுப் பெருங்காயம் பொரித்துக் கொண்டு உப்புப் புளியோடு சேர்த்து வைத்து அரைத்துக் கொண்டால் கேழ்வரகுக் களி, கூழுக்கு மட்டுமில்லாமல் அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசைக்கும் , வெள்ளையப்பம், பஜ்ஜி போன்றவற்றிற்கும் தொட்டுக்க நன்றாக இருக்கும் கோமதி! :)))) இது என்னோட ருசி!

   நீக்கு
  3. கீதா, மிளகாய் வற்றல் வைத்து வதக்கி அரைத்து செய்து இருக்கிறேன் , பச்சை மிளகாய் வைத்து அரைத்தது இல்லை. நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.
   அனறு அரைத்த தோசைக்கு பச்சைமிளகாய் துவையல் நன்றாக இருக்கும் தான். வெள்ளையப்பம், பஜ்ஜிக்கு செய்து விடுகிறேன்.
   மீண்டும் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

   நீக்கு
  4. மதுரை கோபு ஐயங்கார் கடையில் முன்னெல்லாம் மத்தியானம் 2 மணிக்கே போடும் வெள்ளையப்பம், பஜ்ஜி, தூள் பஜ்ஜியோடு இந்தச் சட்னி கொடுப்பார்கள். அருமை! சில சமயங்களில் தேங்காயும் கொஞ்சமாக வைத்து அரைப்பார்கள். அது அவங்க கொடுக்கும் தோசைக்கு நன்றாக இருக்கும். எங்க வீட்டில் அம்மாவே பண்ணுவார் இம்மாதிரிச் சட்னிகள் எல்லாம்!

   நீக்கு
  5. தேங்காய் வைத்து அரைத்து இருக்கிறேன் நான். இப்போதும் இருக்கா? கோபு ஐயங்கார் கடை?
   உங்கள் அம்மாவின் கை பக்குவம் உங்களுக்கும் வந்து இருக்கும் தானே!
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
  6. கோபு ஐயங்கார் கடை இருக்கே! சின்னதாக இருக்கும். பத்து டேபிள், சேர் இருந்தால் பெரிசு. வடக்குச் சித்திரை வீதியும், மேலச் சித்திரை வீதியும் சேரும் முக்கில்(முடுக்கு?) இருக்கு கடை. அங்கே கேட்டாலே சொல்வார்கள். அதைத் தவிர்த்து பைபாஸ் ரோடிலும் ஒரு கிளை திறந்திருக்காங்க! அங்கே இப்போதைய நாகரிகத்தின்படி வட இந்திய உணவு வகைகளும் கொடுப்பதாகக் கேள்வி!

   நீக்கு
  7. https://sivamgss.blogspot.com/2016/06/blog-post_19.html இங்கே வந்து பாருங்க. நீங்களும் கருத்துச் சொல்லி இருக்கீங்க! இதன் பின்னரே உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் என நினைக்கிறேன்.

   நீக்கு
  8. என் தங்கையிடம் கேட்டால் சொல்வாள். அவளிடம் கேட்க வேண்டும். முடிந்தால் போய் வருகிறேன்.
   பைபாஸ் ரோடில் அதன் கிளை இருக்கா? அதையும் விசாரித்து பார்க்கிறேன்.

   நீக்கு
  9. நீங்கள் கொடுத்த சுட்டி வழியாக போய் பார்த்தேன் பதிவை.
   மீண்டும் மதுரை வந்தால் வீட்டுக்கு வாருங்கள்.
   நிதானமாய் இருந்து போவது போல்.

   கொடைகானல் போகும் அவசரத்திலும் வந்து பார்த்து போனது மகிழ்ச்சி.
   மீண்டும், மீண்டும் வந்து கருத்துக்கள் சொல்வது மகிழ்ச்சி.
   நன்றி கீதா.

   நீக்கு