ஒவ்வொரு ஆண்டும் இந்த மகா கணபதி ஆலயம் நடத்தும் பிள்ளையார் செய்யும் விழாவில் குழந்தைகள் தங்கள் கைகளால் அவர்களே பிள்ளையாரை செய்து பிள்ளையார் சதுர்த்தி அன்று வழிபடுவார்கள். அப்புறம் எல்லோரும் சேர்ந்து பிள்ளையாரை கரைக்கும் விழாவும் சிறப்பாக நடக்கும் மகா கணபதி ஆலயத்தில்.
வாத்தியங்கள் இசைத்து வரவேற்கிறார் பதிவை படிக்க வருபவர்களை
அரிசோனாவில் உள்ள ஸ்ரீ மகா கணபதி ஆலயம் இந்த ஆலயம் பதிவு போட்டது நினைவு இருக்கலாம். மீண்டும் இந்த ஆலயத்தை பார்க்க விரும்பினால் பார்க்கலாம்.
இந்த கோயில் சார்பில் தான் இந்த விழா நடக்கிறது.
மகன் ஒவ்வொரு ஆண்டும் போட்டோ பூத் செய்து கொடுப்பான், இந்த வருடம் செய்து கொடுத்த போட்டோ பூத்தில் பேரன் கவின்.
பிள்ளையார் பட்டி பிள்ளையார் இந்த ஆண்டு
குழந்தைகளுக்கு பிடித்த நண்பர் பிள்ளையார் , குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிள்ளையார் இஷ்ட தெய்வம். குழந்தைகள் முகத்தில் எத்தனைமகிழ்ச்சி! அவர்களே பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் செய்து வழிபடும் போது நான் செய்தது என்ற பெருமிதமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது அவர்களுக்கு.
கவின் செய்கிறான்
அச்சுகளில் எண்ணெய் தடவி கொடுக்கிறார்
குழந்தைகள் களிமண்ணை அச்சுகளில் அடைக்கிறார்கள்

குழந்தைகள் அன்பெனும் பிடியுள் பிள்ளையார்
அன்பெனும் பிடியுள்
அகப்படும் கருப்பொருள்
குழந்தைகள் , பெரியவர்கள் என்று ஆசையாக படம் எடுத்து கொண்டார்கள் .
இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இந்த பாடல்.
காக்கும் கடவுள் கணேசனை நினை இந்த பாடலில் வரும் அன்பெனும் பிடியுள்
அகப்படும் கருப்பொருள் வரிகள்.
கரூரை சேர்ந்த சிற்பியும் அவர் மனைவியும், (மகா கணபதி திருப்பணிகளை இவர் செய்து வருகிறார்) அன்புடன் எங்கள் நலம் விசாரித்து ,"கோயிலுக்கு வாங்க " என்று அழைத்து எங்களுடன் படம் எடுத்துக் கொண்டார்கள்.
தன்னார்வலர்கள், இதில் குழந்தை தன்னர்வலர்களும் உற்சாகத்தோடு ஈடு பட்டார்கள்.
நாங்களும்
பேரனுடன் படம் எடுத்து கொண்டோம்.

மதுரையில் தங்கை வீட்டு பிள்ளையார் கொலு . 10 நாட்கள் வைப்பாள். இந்த ஆண்டு வைத்த கொலு
எங்கள் வீட்டு விழாக்கள் என்ற பதிவில் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழாவும், கிருஷ்ண ஜெயந்தி விழா படங்களும் , மற்றும் மகா கணபதி கோயில் விழா படங்களும் இருக்கும். குழந்தைகள் செய்த பிள்ளையாரை கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து கரைக்கும் படங்களும் இருக்கும்.
பிரபோ கணபதே! பாடல் சிறு வயதில் பள்ளியில் பாடுவோம் பிடித்த பாடல்.
இந்த பாடலில் பிள்ளையார் அபிஷேகம், எல்லாம் காட்டுகிறார்கள். சாரதாவும் இனிமையாக பாடுகிறார்.
மதுரையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் .
விழா சிறப்பாக வழக்கம் போல நடக்கும், அங்கு உள்ள நட்புகள் படங்களை அனுப்பி வைப்பார்கள். அவரை நினைத்து வணங்கி கொள்வேன்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே!
-திருமூலர்
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே!
-திருமூலர்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
யார்க்கும் எதற்கும்
அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள்
அகப்படும் கருப்பொருள்
ஊர்க்கும் உலகிற்கும்
ஒளி தரும் உறிப் பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும்
ஓம்கார தனிப் பொருள்...!!!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------====










தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதலைப்பும், பதிவும், படங்களும், செய்திகளும் அருமை.
குழந்தைகள் ஆர்வத்துடன் சிலை செய்வதில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காணொளி கண்டேன்.
ஃபோன்பூத் அழகாக உள்ளது. ஒவ்வொரு பண்டிகைகளின் போதும் தங்கள் குடும்பத்தினரின் ஆர்வமும் பக்தியின் வெளிப்பாடான பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
தலைப்பும், பதிவும், படங்களும், செய்திகளும் அருமை.//
நன்றி ராமலக்ஷ்மி
//குழந்தைகள் ஆர்வத்துடன் சிலை செய்வதில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காணொளி கண்டேன்.
ஃபோன்பூத் அழகாக உள்ளது. ஒவ்வொரு பண்டிகைகளின் போதும் தங்கள் குடும்பத்தினரின் ஆர்வமும் பக்தியின் வெளிப்பாடான பங்களிப்பும் பாராட்டுக்குரியது.//
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.//
நன்றி.
விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை அழைத்து துதி செய்து விட்டீர்கள். வழக்கம்போல அரிஸோனாவில் மக்கள் கலக்குகிறார்கள். என்ன ஆர்வம். என்ன டெடிகேஷன்...
பதிலளிநீக்கு//விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை அழைத்து துதி செய்து விட்டீர்கள். வழக்கம்போல அரிஸோனாவில் மக்கள் கலக்குகிறார்கள். என்ன ஆர்வம். என்ன டெடிகேஷன்...//
நீக்குஅரிசோனா மக்கள் மகா கணபதி கோயிலில் கலக்குவது உண்மை. 10 நாடகளாக திருவிழா போல இந்த கோயிலில் பூஜைகள் நடக்கிறது.
இன்றைய அலங்காரம் பழ அலங்காரம். ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிபழங்களை வைத்து அருமையான அலங்காரம் . முகநூலில் தினம் பார்த்து வருகிறேன். கோயில் தூரம் போக வர மூன்று மணி நேரம் ஆகும்.
கவினுக்கு மீசை முளைக்கத் தொடங்குகிறது போல.. வசீகரமான இளைஞராகிக் கொண்டு வருகிறார். காணொளிகள் கண்டேன். சாரதா மற்றும் சீர்காழி பாடல்களை அருமை.
பதிலளிநீக்கு//கவினுக்கு மீசை முளைக்கத் தொடங்குகிறது போல.. வசீகரமான இளைஞராகிக் கொண்டு வருகிறார். //
நீக்குஅடுத்த வருடம் கல்லூரி போய்விடுவான்.
//காணொளிகள் கண்டேன். சாரதா மற்றும் சீர்காழி பாடல்களை அருமை.//
நன்றி.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடித்த விநாயகர். அதனால் அவரே கடவுளர்களின் சூப்பர் ஸ்டார்!!
பதிலளிநீக்கு//குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடித்த விநாயகர். அதனால் அவரே கடவுளர்களின் சூப்பர் ஸ்டார்!!//
நீக்குசூப்பர் ஸ்டார் அருமை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
உங்கள் மகன் இவ்வளவு போட்டோ பூத்துக்கள் தயார் செய்து கொடுத்திருக்கிறாரா? நல்ல சேவை. எல்லோருக்கும் அதனுடன் போட்டோ எடுத்துக்கொள்ளப் பிடிக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் மகன் இவ்வளவு போட்டோ பூத்துக்கள் தயார் செய்து கொடுத்திருக்கிறாரா? நல்ல சேவை. எல்லோருக்கும் அதனுடன் போட்டோ எடுத்துக்கொள்ளப் பிடிக்கும்.//
ஆமாம், குழந்தைகள் முதல் பெரியவர்களும் ஆசையாக எடுத்துக் கொண்டார்கள்.
பிள்ளையாரை நாமே செய்வது... எங்கள் வளாகத்திலும் அதனை ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அது பெரியவர்களுக்காக.
பதிலளிநீக்கு//பிள்ளையாரை நாமே செய்வது... எங்கள் வளாகத்திலும் அதனை ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அது பெரியவர்களுக்காக.//
நீக்குகுழந்தைகளும் செய்வது போல வைத்தால் பண்டிகைகளை உற்சகமாக கொண்டாடுவார்கள்.
கவின் அடுத்த ஸ்டேஜ் செல்வதை உணர முடிகிறது.
பதிலளிநீக்குநல்லா வளரட்டும் அவன். சின்ன வயதில் உள்வாங்கிய நல்ல எண்ணங்கள் செயல்கள், அவன் அடுத்த ஸ்டேஜ் செல்லும்போதும் துணை வரும். வாழ்க வளமுடன்
//கவின் அடுத்த ஸ்டேஜ் செல்வதை உணர முடிகிறது.//
நீக்குஆமாம்.
//நல்லா வளரட்டும் அவன். சின்ன வயதில் உள்வாங்கிய நல்ல எண்ணங்கள் செயல்கள், அவன் அடுத்த ஸ்டேஜ் செல்லும்போதும் துணை வரும். வாழ்க வளமுடன்//
நீங்கள் சொல்வது போல அவன் உள்வாங்கிய நல்ல எண்ணங்களும் உங்களை போன்ற வர்களின் ஆசியும் உடன் வரும்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
பிள்ளையார் கொலு மற்றும் படங்கள் நன்றாக இருக்கின்றன
பதிலளிநீக்கு//பிள்ளையார் கொலு மற்றும் படங்கள் நன்றாக இருக்கின்றன//
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி