புதன், 29 ஏப்ரல், 2026

மலர் கோலங்கள் , மலர் அலங்காரங்கள், அழகர் வருகை



மகன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மலர்களை கொண்டு மலர் கோலங்கள், மலர் அலங்காரங்கள் செய்தேன் . அவை இந்த பதிவில்.


மகன் வீட்டில் இருந்த போது    மலர் கோலங்கள் மூன்று  பதிவுகள் போட்டேன், இந்த பதிவு டிராப்பிட்டில் இருந்தது பகிராமல்  அதனால்  இன்று போட்டு விட்டேன். மலர் கோலங்கள்  நான்காவது பதிவு இது.

அழகர் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
































பூக்கள் குறைந்து விட்டதால் இலைகளால் அலங்காரம். பழுத்த இலைகள் (பத்திரம்)  இறைவனுக்கு உகந்தது என்பார்கள். மூன்று மூன்று இலையாய் வில்வ இலை போல் ஒரு மரம் இருக்கிறது மகன் வீட்டில், அதை வில்வமாக வைத்து அலங்காரம்.

 வெயில் அதிகமாகி விட்டதால் பூக்கள் குறைந்து விட்டது. வெள்ளையும் , ரோஸ் கலரும் நிறைய பூத்தன. இப்போது கொஞ்ச பூக்கள் பூக்கிறது.

சிவப்பு அலரி இப்போதுதான் வாங்கினோம் சிறு செடியாக இருக்கிறது . சூரியகாந்தி அணில் சாப்பிட்டது போக மீதி கிடைக்கிறது. செண்டு பூ இரண்டு செடி வாங்கினோம் , இரண்டு மூன்று பூ பூத்தது, அதையும் குருவிகள் அழித்து விட்டது.












இங்கு மீனாட்சி  சித்திரை திருவிழா  நடைபெற்றது.  காலையும் மாலையும்  ஜோதி தொலைக்காட்சியில்   நேரலையில் திருவிழாவை பார்த்து வருகிறேன். இன்று அழகர்  அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டு இருக்கிறார். அவரை எதிர் கொண்டு அழைக்கும்  "அழகர் எதிர் சேவை" நாளை நடைபெறும் அதை தொடர்ந்து 10 நாட்கள் அழகர் திருவிழா .

முன்பு  அழகரும் கண்ணனும் என்று எதிர்சேவை பதிவு போட்டு இருக்கிறேன்.
படித்துப்பார்க்கலாம். அழகரை பார்க்கலாம்.







 

இனி அழகர் திருவிழா முடிந்து  அழகர் மலைக்கு போகும் வரை மதுரை முழுவதும் இந்த பாடல் தான் முழங்கும்.

வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போராரு
உலகம் காக்க வாராரு

உலகத்தை காக்க வேண்டுவோம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    நலமா.?பதிவு அருமை.மலர் கோலங்கள் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கின்றன மலர்களுடன் இலைகளும் கோலங்களின் அழகை மேம்படுத்தி காட்டுகின்றன. அதிலும் அந்த பழுத்த இலைகள் கலந்த கோலம், முத்துக்கள், கற்கள் பதித்தது போன்ற கோலம் இவையிரண்டும் கண்ணைப் பறிக்கிறது. எல்லா கோலங்களும் ஒவ்வொரு சிறப்பு. அனைத்துக் யும் பார்த்து ரசித்தேன்.

    அழகர் மதுரை வரும் படங்களும் சூப்பராக இருக்கிறது. தங்கை திருமணத்தை காண ஆவலுடன் வருகிறார். ஆனால், திருமணம் முடிந்ததால், தாமதமாகி விடுகிறது. நேற்று மீனாட்சி சொக்கநாதர் திருமணம் கொஞ்சம் பார்த்தேன்.

    அழகர் வாராரு பாடல் நன்றாக உள்ளது. மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் சில ஆண்டுகள் வசித்தும், இந்த வைபவங்கள் காணச் சென்றதில்லை. கூட்டத்தில் அவ்வளவு தொலைவு போய் வருவது கடினம் என்பார் என் கணவர். அதனால், இப்படி தொ. காட்சியில் பார்த்தால் உண்டு. அதையும் முழுமையாக காண இயலாது. அவரவர் விருப்பத்திற்கு தொ. கா. ஒளிபரப்புக்கள் மாறி விடும்.

    இன்று உங்கள் காணொளியை கண்டு ரசித்தேன். பழைய பதிவுக்கும் சென்று படித்து வந்தேன். என் கருத்தும் அதில் இடம் பெற்றுள்ளது.

    நாளை உங்கள் வீட்டிலும், உறவுகள் வந்து மகிழ்விப்பார்கள் என நினைக்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      நலமா.?//
      நான் நலம். நீங்கள் நலமா? நீங்கள் ஊரிலிருந்து வந்தவுடன் உங்களை நலம் விசாரித்தேன் எங்கள் ப்ளாக்கில். உங்கள் பயணம் சிறப்பாக இருந்து இருக்கும் இல்லையா?

      //பதிவு அருமை.மலர் கோலங்கள் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கின்றன மலர்களுடன் இலைகளும் கோலங்களின் அழகை மேம்படுத்தி காட்டுகின்றன. அதிலும் அந்த பழுத்த இலைகள் கலந்த கோலம், முத்துக்கள், கற்கள் பதித்தது போன்ற கோலம் இவையிரண்டும் கண்ணைப் பறிக்கிறது. எல்லா கோலங்களும் ஒவ்வொரு சிறப்பு. அனைத்துக் யும் பார்த்து ரசித்தேன்.//

      நன்றி கமலா


      //அழகர் மதுரை வரும் படங்களும் சூப்பராக இருக்கிறது. தங்கை திருமணத்தை காண ஆவலுடன் வருகிறார். ஆனால், திருமணம் முடிந்ததால், தாமதமாகி விடுகிறது. நேற்று மீனாட்சி சொக்கநாதர் திருமணம் கொஞ்சம் பார்த்தேன்.//

      அவர் நேரே வந்து இருந்தால் திருமணத்திற்கு வந்து இருக்கலாம், ஒவ்வொரு மண்டகபடியாக தங்கி தங்கி வருவார் விருந்து உபசாரங்களை ஏற்று ஆடி வருவார் பக்தர்கள் சூழ. நேற்று தேர் திருவிழா.

      //அழகர் வாராரு பாடல் நன்றாக உள்ளது. //
      அந்த பாடல் கள்ளழகர் என்ற படம் விஜயகாந்த் நடித்த படம் போல அதில் தேவா இசையில் வைரமுத்து எழுதிய பாடல். இப்போது திருவிழா சமயம் அதிகமாக கேட்க முடியும்.

      //மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் சில ஆண்டுகள் வசித்தும், இந்த வைபவங்கள் காணச் சென்றதில்லை. கூட்டத்தில் அவ்வளவு தொலைவு போய் வருவது கடினம் என்பார் என் கணவர். அதனால், இப்படி தொ. காட்சியில் பார்த்தால் உண்டு. அதையும் முழுமையாக காண இயலாது. அவரவர் விருப்பத்திற்கு தொ. கா. ஒளிபரப்புக்கள் மாறி விடும்.//

      மாயவர்த்திலிருந்து கோடை விடுமுறையில் வரும் போது சித்திரை திருவிழா பார்ப்போம். திருமணத்திற்கு முன்பு அப்பாவுடன், உறவினர்களுடன் பார்த்து இருக்கிறேன்.
      இப்போது தொலைகாட்சியில் பார்க்க வில்லை என்று நீங்கள் வருத்தபட முடியாது யூடியூப் காணொளிகள் கிடைக்கிறதே நினைத்த போது பார்த்து கொள்ளலாம். நேரலையில் எடுத்த காணொளிகள் இருக்கிறது.

      //இன்று உங்கள் காணொளியை கண்டு ரசித்தேன். பழைய பதிவுக்கும் சென்று படித்து வந்தேன். என் கருத்தும் அதில் இடம் பெற்றுள்ளது.

      நாளை உங்கள் வீட்டிலும், உறவுகள் வந்து மகிழ்விப்பார்கள் என நினைக்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பழைய பதிவை பார்த்து வந்ததற்கு நன்றி கமலா
      தங்கை வீட்டுக்கு விடுமுறைக்கு திருவிழா பார்க்க குழந்தைகள், பேத்தி, பேரன் வந்து இருக்கிறார்கள் வருவார்கள் என நினைக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  2. பூக்களால் கோலம்...... கண்களுக்கு விருந்து.

    மதுரையின் சித்திரை திருவிழா பார்க்கப் பார்க்க ஆனந்தம். இதுவரை நேரில் சென்று பார்த்ததில்லை. பார்க்க ஆசை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //பூக்களால் கோலம்...... கண்களுக்கு விருந்து.//

      நன்றி.

      //மதுரையின் சித்திரை திருவிழா பார்க்கப் பார்க்க ஆனந்தம்.//
      முன்பு உடம்பில் பலம் இருந்த போது ஆண்டு தோறும் பார்த்து விட்டேன்.
      ஆனந்தம் தான், அங்கு கூடும் மக்களை பார்க்கும் போதும் , தெய்வ தரிசனம் காணும் போதும்


      //இதுவரை நேரில் சென்று பார்த்ததில்லை. பார்க்க ஆசை உண்டு.//
      தமிழ் நாடு வந்து விட்டீர்கள் ஒரு வருடம் சித்திரைத்திருவிழா பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டு வாருங்கள்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. மலர் கோலங்களும் அதை அமைத்திருக்கும் விதமும் கண்ணைக் கவரும் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மலர் கோலங்களும் அதை அமைத்திருக்கும் விதமும் கண்ணைக் கவரும் அழகாக இருக்கின்றன.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மலர்களை வைத்து இவ்வளவு வடிவங்கள் அதுவும் அழகழகாக அமைக்க முடியுமா என்று தோன்றுகிறது.  மலர்கள் பறந்து நகர்ந்து இடம் மாறி விடாதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலர்களை வைத்து இவ்வளவு வடிவங்கள் அதுவும் அழகழகாக அமைக்க முடியுமா என்று தோன்றுகிறது. மலர்கள் பறந்து நகர்ந்து இடம் மாறி விடாதோ..//

      வீட்டுக்குள் பூஜை அறை முன் பலகையில் பூக்கோலம் அமைத்தேன்.
      பறக்காது. வெளியில் போட்டால் தான் பறக்கும். அதுவும் பறக்காமல் போடலாம். ஓணத்திற்கு அத்தம்பூக் கோலம் போடுவது போல் போட்டால் பறக்காது.

      நீக்கு
  5. அழகர் திருவிழா செய்தி பார்க்கும்போதெல்லாம் எனக்கு மதுரை வாசம் நினைவுகள் வந்து விடும்.  நாங்கள் ரேஸ்கோர்ஸ் காலனியில் இருந்தோம்.  என்ன கூட்டம் வரும்... .காலை ஆறு மணி போல ஒன்றிரண்டாக தென்படும் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நிறைந்து தெருவே நிரம்பி விடும்.  எல்லோரும் சௌராஷ்ட்ரா மக்கள்.  சாலையெங்கும் கலகலவென மக்கள் கூட்டம் அலைமோதும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அழகர் திருவிழா செய்தி பார்க்கும்போதெல்லாம் எனக்கு மதுரை வாசம் நினைவுகள் வந்து விடும். நாங்கள் ரேஸ்கோர்ஸ் காலனியில் இருந்தோம். என்ன கூட்டம் வரும்... .காலை ஆறு மணி போல ஒன்றிரண்டாக தென்படும் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நிறைந்து தெருவே நிரம்பி விடும். எல்லோரும் சௌராஷ்ட்ரா மக்கள். சாலையெங்கும் கலகலவென மக்கள் கூட்டம் அலைமோதும்,//

      ஆமாம், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி விடும். அவருடன் நடந்து வருபவர்கள் அதிகமாகி கொண்டே தான் வருகிறது. எல்லா மக்களும் கூடுவார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. ஒவ்வொரு டிசைனும் செமையா இருக்குக்கா. ரொம்ப அழகா செய்திருக்கீங்க முன்னரும் நீங்க அப்ப போட்ட நினைவு இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //ஒவ்வொரு டிசைனும் செமையா இருக்குக்கா. ரொம்ப அழகா செய்திருக்கீங்க//

      நன்றி கீதா.

      //முன்னரும் நீங்க அப்ப போட்ட நினைவு இருக்கு.//

      ஆமாம் கீதா, மூன்று பதிவுகள் முன்பு போட்டு இருக்கிறேன். மகன் வீட்டில் இருக்கும் போது தினம் என் கணவர் படத்துக்கு முன்னும், இறைவன் முன்னும் போட்ட மலர் கோலங்கள்.

      நீக்கு
  7. சூரியகாந்தி அணில் சாப்பிட்டது போக மீதி கிடைக்கிறது. செண்டு பூ இரண்டு செடி வாங்கினோம் , இரண்டு மூன்று பூ பூத்தது, அதையும் குருவிகள் அழித்து விட்டது.//

    பாவம் அதுங்க சாப்பிட்டுப் போட்டும்!!! குறைந்தாலும் இலையால் அழகுபடுத்திட்டீங்க கோமதிக்கா.

    எனக்கு என் கல்லூரி நினைவு வந்தது. இப்படிப் பூக்களாலும் இலைகளாலும் கோலம் போடுவோம் வீட்டில் ஓணத்தின் போது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வீடியோவும் பார்த்தேன் கோமதிக்கா. அழகா இருக்கு. மதுரைத் திருவிழா அல்லோகலப்படும் எங்கள் ஊரிலும் சித்திரைத் தேர் திருவிழா நடந்து முடிந்தது,.

    எல்லாம் ரசித்தேன் அக்கா முக்கியமா பூவால் கோலங்கள் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பூக்கோலங்கள் யாவும் அருமை. மிகப் பொறுமையுடன் நேர்த்தியாகச் செய்துள்ளீர்கள். திருவிழாக் காட்சிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பூக்கோலங்கள் யாவும் அருமை. மிகப் பொறுமையுடன் நேர்த்தியாகச் செய்துள்ளீர்கள். திருவிழாக் காட்சிகளும் அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. மலர்க் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அசுவாரசியமாகத் தோன்றியது. பூக்கள் மாதிரி கோலங்களோ என்று.

    பதிவில் இருக்கும் படங்களைப் பார்த்ததும் ரொம்பவே வியந்தேன்.

    இதற்கு நிறைய பொறுமையும், கலைக் கண்ணும் வேண்டும். பொதுவா கிடைக்கும் இந்தப் பூக்களை வைத்துக்கொண்டு இப்படி அசத்தியிருக்கிறீர்களே.. பாராட்டுகள்.

    அதிலும் முதல் படம்... ஆஹா ஓஹோ என்று இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //மலர்க் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அசுவாரசியமாகத் தோன்றியது. பூக்கள் மாதிரி கோலங்களோ என்று

      பதிவில் இருக்கும் படங்களைப் பார்த்ததும் ரொம்பவே வியந்தேன்.//

      முன்பு போட்ட மூன்று மலர் கோலங்கள் பதிவுகளை படித்து , பார்த்து பாராட்டி இருக்கிறீர்கள் நெல்லை. அதன் சுட்டிகளை கொடுத்து இருக்க வேண்டும் போல.

      //இதற்கு நிறைய பொறுமையும், கலைக் கண்ணும் வேண்டும். பொதுவா கிடைக்கும் இந்தப் பூக்களை வைத்துக்கொண்டு இப்படி அசத்தியிருக்கிறீர்களே.. பாராட்டுகள்.//

      மகன் வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டதும் வந்த எண்ணம் தான் இந்த மலர் கோலங்கள். இறைவனுக்கு மாலை கட்டியும் போட்டேன்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //அதிலும் முதல் படம்... ஆஹா ஓஹோ என்று இருக்கிறது//

      நன்றி நெல்லை.



      அதிலும் முதல் படம்... ஆஹா ஓஹோ என்று இருக்கிறது

      நீக்கு
  11. எல்லா டிசைன்களுமே கண்ணைக் கவர்கின்றன.

    அதில் ஒரு படத்தில் நீலக் கலரில் நடுவில் இருப்பது சிறிய பிளாஸ்டிக் கிண்ணமா இல்லை வரிசையாக உள்ள நீலப் பூக்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா டிசைன்களுமே கண்ணைக் கவர்கின்றன.//

      ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //அதில் ஒரு படத்தில் நீலக் கலரில் நடுவில் இருப்பது சிறிய பிளாஸ்டிக் கிண்ணமா இல்லை வரிசையாக உள்ள நீலப் பூக்களா?//

      ஆமாம், சரியாக சொன்னீர்கள் சிறிய பிளாஸ்டிக் பால் பாட்டில் மூடி
      அதை நடுவில் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நித்தியகல்யாணி பூவை வைத்து இருக்கிறேன்.
      கவனமாக அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு