எங்கள் வளாகத்தில் கிளிகள் சுற்றி சுற்றி பறக்கும் அமர்ந்து இருக்கும் போது எடுப்பது கஷ்டம். நான்கு தினங்கள் மொட்டை மாடிக்கு நடைபயிற்சி செய்ய போனதால் கிளிகளை படம் எடுக்க முடிந்தது. கிளிகளின் படங்கள், மற்றும் பூச்சி பிடிப்பான், திணைக்குருவிகள், புறாக்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
//‘பறவை பார்த்தல்’ (Bird watching) என்பது அடிப்படையில் இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பின் பொறியைத் தூண்டிவிடுவதுதான்; இயற்கை வேறு, நாம் வேறு அல்ல என்ற பேருணர்வு நமக்குள் இயல்பாகவே தோன்ற அனுமதிப்பதுதான். ‘பறவை பார்த்தல்’ மூலமாக அப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருப்பவர்தான் உருகுவேயைச் சேர்ந்த ஹுவான் பாப்லோ குலாஸோ. அவர் பார்வையற்றவர் என்பதுதான் இதில் விசேஷம்.
இவர் இதயத்தால் பார்க்கிறார்
பார்வையற்றவர் எப்படிப் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார், முரணாக இருக்கிறதே என்ற கேள்விகள் நம்முள் எழலாம். பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் எந்தப் புலனைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது இந்தக் கேள்விகளுக்கான தெளிவு. ஹுவான் காதுகளால் பார்க்கிறார்!
இன்னும் சொல்லப்போனால் இதயத்தால் பார்க்கிறார். காதுகளும் இதயமும் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடியவை, தேவையானவற்றை மட்டும் பார்க்கக்கூடியவை. அதனால், பார்வையுள்ளவர்களைவிட பறவை பார்த்தலில் வல்லவர் ஹுவான் என்றுகூட சொல்லலாம்.//
மேலும் இவரை பற்றி தெரிந்து கொள்ள இவர் எப்படி இதயத்தால் பார்க்கிறார் என்று படித்து பாருங்களேன்.
பார்வையின்றியே ‘பறவை பார்ப்போர்’
பார்வையற்ற ஹுவான் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார் என்ற செய்தி நமக்கு வியப்பு ஏற்படுத்தியது என்றால் , பார்வையற்றவரான டோனா போஸாண்ட் பறவை பார்த்தலுக்கான வழிகாட்டியாக இருக்கிறார்.
‘பார்வையற்றோருக்கான எல்லையற்ற வாய்ப்புகள்’ என்ற அமைப்பின் களச்சேவை இயக்குநராக இருக்கும் டோனா, பார்வையற்றோருக்குப் பறவை பார்த்தலில் பயிற்சியளித்து அவர்களை வழிநடத்திச் செல்கிறார்.
டோனாவின் தலைமையில் பறவை பார்ப்பதற்குச் செல்லும் முன் ஒவ்வொருவரும் பறவைகளின் ஒலிகளை மனப்பாடம் செய்துகொள்கிறார்கள்.//
நன்றி :- இந்து தமிழ்திசை
இருவரை பற்றியும் படித்து பாருங்களேன். மிக அருமையாக இருக்கிறது படிக்க படிக்க. எப்படி அவர்கள் பறவைகளை தங்கள் காதுகளால், இதயத்தால் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வியப்பாக இருக்கிறது அவர்களை பற்றி படிக்கும் போது. இறைவன் இவர்களுக்கு ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்து வைத்து இருக்கிறார்.
நான் பறவைகளின் பேரை தெரிந்த கொண்ட பின் வீட்டுக்குள் இருக்கும் போது பறவை எழுப்பும் ஒலியை வைத்து "ஓ ! இந்த பறவை வந்து இருக்கிறது என்று ஒடி சென்று பார்ப்பதை பெருமையாக நினைத்து கொண்டு இருந்தேன், " இப்போது அது எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று இவர்களை பற்றி படித்தபின்உணர்ந்து கொண்டேன்.
குருவியும், பூச்சி பிடிப்பான்களும்
பூச்சி பிடிப்பான் ( Bee Eater)-
மரத்தின் உச்சிக்கிளையில் சின்ன குச்சியில் நிற்கிறது.
வெகு தூரத்தில் இருந்தது அதை காமிராவில் ஜூம் செய்து எடுத்தேன்
இந்த புறா அழகான கலர்
நிறைய காகங்கள் இருப்பதும் பறப்பதுமாய் இருந்தது . இன்னொரு பதிவில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
அழகிய ரசிக்கத்தக்க படங்கள். பார்வை மற்றவர்களின் பறவை பார்க்கும் பணி வியப்பூட்டுகிறது. அவரவர்கள் சுவாரஸ்யத்தை, விருப்பத்தை ஒட்டி ஸ்பெஷல் திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய ரசிக்கத்தக்க படங்கள். பார்வை மற்றவர்களின் பறவை பார்க்கும் பணி வியப்பூட்டுகிறது. அவரவர்கள் சுவாரஸ்யத்தை, விருப்பத்தை ஒட்டி ஸ்பெஷல் திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.//
பார்வை அற்றவர்களின் திறமைக்கு யாராவது தூண்டுகோலாக இருப்பார்கள் ஹூவானுக்கு அவர் தந்தை சிறு வயது முதலே பியானோவில் பறவைகளின் சப்தங்களை இசைத்து காட்டி , அருகாட்சியத்திற்கு அழைத்து சென்று பறவைகளின் இறகுகளைத் தொட்டுபார்க்க வைத்து சொல்லி கொடுத்து இருக்கிறார். எல்லா ஒலிகளையும் நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
டோனாவை பின் தொடரும் சிறுவர்கள். இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் நாங்கள் இன்னும் சிறப்பு வாய்ந்தவர்கள் பலபறவைகளின் ஒலியை ஒரே நேரத்தில் துல்லியமாக உணர முடியும் என்கிறார்கள்.
அவர்களைபற்றி படிப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
தங்கள் குறையை எண்ணி இடிந்து போகாமல் தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்தப் புறா வித்தியாசமான நிறத்தில் அழகுதான். ஆனால் புகைபபடத்தில் பார்ப்பதைவிட நேரில் இன்னும் அழகாய் இருந்திருக்கும் என்று தோன்றியது.
பதிலளிநீக்கு//அந்தப் புறா வித்தியாசமான நிறத்தில் அழகுதான். ஆனால் புகைபபடத்தில் பார்ப்பதைவிட நேரில் இன்னும் அழகாய் இருந்திருக்கும் என்று தோன்றியது.//
நீக்குஆமாம் ஸ்ரீராம், சூரிய ஒளியில் நின்றது. , நேரில் பார்க்கும் போது இன்னும் அழகுதான்.
அலைபேசிப் படங்களா? கேமிராவா?
பதிலளிநீக்கு//அலைபேசிப் படங்களா? கேமிராவா?//
நீக்குகேமிரா படங்கள்தான் மாலை நேரம் 4.30க்கு நல்ல வெயில்.
தூரத்தை காட்டி ஜூம் செய்து எடுத்தேன் என்று பூச்சிப்பிடிப்பான் படத்தின் கீழ் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
காமிராவில் ஜூம் செய்து எடுத்தேன் என்று போடவில்லை நீங்கள் கேட்டவுடன் மீண்டும் படித்து காமிராவில் என்று இணைத்து விட்டேன் ஸ்ரீராம். நன்றி.
நீக்குகிளி மற்றும் பூச்சி பிடிப்பான் படங்கள் அழகு.
பதிலளிநீக்குபார்வையற்றவர் எவ்வாறு பறவைகளை உணர்வார் என்ற தகவல் நன்று
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கிளி மற்றும் பூச்சி பிடிப்பான் படங்கள் அழகு.
பார்வையற்றவர் எவ்வாறு பறவைகளை உணர்வார் என்ற தகவல் நன்று//
உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. கிளிகளின் படங்கள் மிக அழகாக உள்ளன. மாலை நேரத்தைத்தான் இந்த கிளிகள் மற்றும் பறவைகள் எப்படி உற்சாகமாக பறந்தும், நிறைய பறவைகளாக ஒன்று கூடி சேர்ந்து வட்டமடித்து பறந்தும் களிப்பாக களிக்கின்றன என நானும் நினைத்திருக்கிறேன் . எங்கள் மொட்டை மாடியில் நான் எப்போதாவது செல்லும் போது இந்த காட்சிகளை கண்டும் கைப்பேசியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விடுவதால் படம் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
தாங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. கடைசி படமான புறாவின் அழகு மிக நன்றாக உள்ளது. அதிலும் அதன் வித்தியாசமான கலர். இப்படியும் புறாகள் உள்ளனவா? இல்லை தங்களது இருப்பிடம் தேடி அவை வந்துள்ளனவா என ஆச்சரியப்பட்டேன்.
நாம் பார்த்து கண்டு களிப்பதை தம் செவித்திறன் மூலம் கண்டு மகிழ்ச்சியடையும் ஹுவான்., மற்றும் டோனா போஸாண்ட் என்ற இருவரும் அதிசயதக்க பிறவிகள். இறைவன் அவர்கள் ஆற்றலுக்கு வழித்துணையாக இருந்து உதவுகிறார். அவர்களைப்பற்றி செய்தியையும் படித்தேன். அவர்களின் பார்வையற்ற திறன் மனதிற்கு வேதனையாக இருந்தாலும், அவர்களின் காட்சிகளை உணர்தல் திறன் பன்மடங்காக உள்ளது. அவர்கள் நலமே வாழ பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.இப்படிப்பட்ட நல்ல பகிர்வுக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
அடுத்து தாங்கள் எடுத்த பல விதமான பறவைகளின் படங்களையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//மாலை நேரத்தைத்தான் இந்த கிளிகள் மற்றும் பறவைகள் எப்படி உற்சாகமாக பறந்தும், நிறைய பறவைகளாக ஒன்று கூடி சேர்ந்து வட்டமடித்து பறந்தும் களிப்பாக களிக்கின்றன//
நானும் நினைத்து கொள்வேன் பாரதி சொன்னது போல மாலை முழுதும் விளையாட்டு என்று வைத்து கொண்டு இருக்கிறதோ! என்று.
அதுவும் காகங்கள் கூட்டமாய் பறப்பதும், அமர்வதும் பார்க்க அருமை.
ஒரு காகத்திற்கு ஒரு கால் ஊனம் அது பறந்து அமர்வது பார்க்க கஷ்டமாய் இருக்கும்.
மகன் கையில் எப்போதும் செல்போன் இல்லாமல் போக கூடாது என்பான், காமிராவும் கை பையில் வைத்து கொள்ளுங்கள் என்பான். மொட்டிமாடியில் யாரும் இருக்கமாட்டார்கள் அதனால் காமிராவை ஒரு பையில் வைத்து எடுத்து சென்று விடுவேன்.
//தாங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. கடைசி படமான புறாவின் அழகு மிக நன்றாக உள்ளது. அதிலும் அதன் வித்தியாசமான கலர். இப்படியும் புறாகள் உள்ளனவா? இல்லை தங்களது இருப்பிடம் தேடி அவை வந்துள்ளனவா என ஆச்சரியப்பட்டேன்.//
மகள் ஊரில் முன்பு ஒரு மலைபகுதிக்கு அழைத்து போனபோது இந்த கலரில் உள்ள புறா படம் போட்டேன் , ஆனால் தூரத்தில் எடுத்தேன். இதை ஜூம் செய்து எடுத்தேன் எங்கள் வீட்டுக்கு எதிர் பக்கம் உள்ள மொட்டை மாடி விளிம்பில் அமர்ந்து இருக்கிரது, கிளி , புறா எல்லாம்.
//ஹுவான்., மற்றும் டோனா போஸாண்ட் என்ற இருவரும் அதிசயதக்க பிறவிகள். இறைவன் அவர்கள் ஆற்றலுக்கு வழித்துணையாக இருந்து உதவுகிறார். அவர்களைப்பற்றி செய்தியையும் படித்தேன். அவர்களின் பார்வையற்ற திறன் மனதிற்கு வேதனையாக இருந்தாலும், அவர்களின் காட்சிகளை உணர்தல் திறன் பன்மடங்காக உள்ளது. அவர்கள் நலமே வாழ பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.இப்படிப்பட்ட நல்ல பகிர்வுக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.//
அவர்கள் நலத்துக்கு பிரார்த்தனை செய்து கொண்டது மகிழ்ச்சி. நானும் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
கோமதிக்கா.....எனக்கு ரொம்பப் பிடிக்கும் பறவைகள் பார்த்தல்...பார்க்கறப்ப எல்லாம் க்ளிக்கித் தள்ளிடுவேன். இயற்கையோடு இணைந்து ஆமாம் அதே தான். மனம் என்னமா ரிலாக்ஸ் ஆகும் இல்லையா...
பதிலளிநீக்குமுதல் படம் செம அழகு. கிளி யின் படங்கள்...ம்ம்ம் எனக்கு இப்படிக் கிளிகள் எடுக்க வாய்க்கவில்லை இங்கு. ஒவ்வொன்றா பார்த்து வரேன்
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா.....எனக்கு ரொம்பப் பிடிக்கும் பறவைகள் பார்த்தல்...பார்க்கறப்ப எல்லாம் க்ளிக்கித் தள்ளிடுவேன். இயற்கையோடு இணைந்து ஆமாம் அதே தான். மனம் என்னமா ரிலாக்ஸ் ஆகும் இல்லையா...//
ஆமாம், அக்காவின் மனது தங்க்கைக்கும்.
மாலை நேரம் ஒரு ஐந்து கிளிகள் ஒன்று போல சத்தம் கொடுத்து கொண்டே மகிழ்ச்சியாக சுற்றி வரும். அதை எடுக்க ஆசை ஆனால் கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து விடும். இப்போது கால் வலி இருப்பதால் மாடி போகவில்லை. போனால் எடுக்க வேண்டும்.
ஒரு கிளி மட்டும் மரக்கிளையில் அமர்ந்து ஊஞ்சல் ஆடுவதை எடுத்து இருக்கிறேன்.
நிச்சயமாகச் சொல்லலாம் கோமதிக்கா, பார்வைத் திறன் அற்றவர்கல் இதயத்தின் வழி பார்ப்பதை, மகேஷ், அரவிந்த் மூலம் நன்கு அறிவேன். மகேஷ் விவரிப்பதைப் பார்க்கறப்ப பார்வை உள்ளவர் போலவே சொல்வார். நம் புலன்கள் அதன் சக்தி, அதிகம். எல்லா புலன்களும் இருக்கும் போது நாம் அதைப் பயன்படுத்துவது இல்லை என்றே எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் கோமதிக்கா.
கீதா
//நிச்சயமாகச் சொல்லலாம் கோமதிக்கா, பார்வைத் திறன் அற்றவர்கல் இதயத்தின் வழி பார்ப்பதை, மகேஷ், அரவிந்த் மூலம் நன்கு அறிவேன். மகேஷ் விவரிப்பதைப் பார்க்கறப்ப பார்வை உள்ளவர் போலவே சொல்வார். நம் புலன்கள் அதன் சக்தி, அதிகம். எல்லா புலன்களும் இருக்கும் போது நாம் அதைப் பயன்படுத்துவது இல்லை என்றே எனக்குத் தோன்றும்.//
நீக்குபார்வை திறன் அற்றவர்கள் கேட்பு திறன் அதிகமாக இருக்கும். இதயத்தின் வழிதான் பார்க்கிறார்கள்.
மகேஷ் அரவிந்த் அவர்களை பட்டித்தது இல்லை.
நம் புலன்களின் சக்தி அதிகம் தான் நீங்கள் சொல்வது போல நாம் சரியாக பயன்படுத்துவது இல்லைதான்.
‘பார்வையற்றோருக்கான எல்லையற்ற வாய்ப்புகள்’ என்ற அமைப்பின் களச்சேவை இயக்குநராக இருக்கும் டோனா, பார்வையற்றோருக்குப் பறவை பார்த்தலில் பயிற்சியளித்து அவர்களை வழிநடத்திச் செல்கிறார். //
பதிலளிநீக்குஒன்று இல்லைனா மற்றொன்றின் மூலம் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இதுவும் நல்ல தகவல்.
//வியப்பாக இருக்கிறது அவர்களை பற்றி படிக்கும் போது. இறைவன் இவர்களுக்கு ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்து வைத்து இருக்கிறார்.//
நமக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேதன இருக்கின்றன....ஆனால் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது...
நான் அடிக்கடி யோசிப்பேன் இதை. என்னில் இருப்பவற்றை பலரும் சுட்டிக் காட்டும் போது , ஏன் நம்மால் எதிலுமே வர இயலவில்லை...ஏன் மூளை இவ்வளவு மந்தமாக ஏதேதோ சிந்தனைகளில் இருக்கிறது...ஏன் சூழல் இப்படியானது என்று. ஊக்கம் தரும் கட்டுரைகள் வாசித்தாலும் அந்த சமயத்தில் ஆஹா என்று பொங்கும் ஹாஹாஹாஹா அப்புறம் அடங்கிவிடும். மனம் ரிலாக்ஸ்டாக இருப்பதையே விரும்புகிறது தற்போது எல்லாம். பிடித்ததை மட்டும் செய்து கொண்டு.
கிளியின் படங்கள் எல்லாம் அழகு....திணைக்குருவியின் படங்களும் செம் அழகு.
பூச்சி பிடிப்பான் ரொம்ப அழகு. ஜூம் செய்தது கூட நன்றாக வந்திருக்கிறது.
உங்க வீட்டு பகக்த்துல இருந்த மரங்கள் அடர்த்தியா இருந்தப்ப வந்தவையோ..உங்கள் வளாக எல்லையில் இருக்கும் செடிகள் மரங்களில்....இப்ப அங்கு கட்டுமானம் வருகிறது இல்லையா வெற்றிடம் தெரிகிறது.
இந்த வண்ண புறாவை இங்கும் பார்த்திருக்கிறேன் கோமதிக்கா....கொஞ்சம் ப்ரௌன் நிறைத்தில்...அழகு
எல்லாம் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. அருமையான தகவல்களுடனான பதிவு
கீதா
//நமக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேதன இருக்கின்றன....ஆனால் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது...//
நீக்குஆமாம்.
//நான் அடிக்கடி யோசிப்பேன் இதை. என்னில் இருப்பவற்றை பலரும் சுட்டிக் காட்டும் போது , ஏன் நம்மால் எதிலுமே வர இயலவில்லை...ஏன் மூளை இவ்வளவு மந்தமாக ஏதேதோ சிந்தனைகளில் இருக்கிறது...ஏன் சூழல் இப்படியானது என்று. ஊக்கம் தரும் கட்டுரைகள் வாசித்தாலும் அந்த சமயத்தில் ஆஹா என்று பொங்கும் ஹாஹாஹாஹா அப்புறம் அடங்கிவிடும். மனம் ரிலாக்ஸ்டாக இருப்பதையே விரும்புகிறது தற்போது எல்லாம். பிடித்ததை மட்டும் செய்து கொண்டு.//
நீங்களே இப்படி சொன்னால் என்னை என்ன சொல்வது.
நானும் எனக்கு பிடித்ததை செய்து கொண்டு அமைதியாக இருப்பதை விரும்புகிறேன்.
//பூச்சி பிடிப்பான் ரொம்ப அழகு. ஜூம் செய்தது கூட நன்றாக வந்திருக்கிறது.//
அந்த படம் ஜூம் செய்யாத படம் தூரத்தை காட்ட அதை எடுத்தேன், அடுத்து உள்ள படங்கள் ஜூம் செய்து எடுத்த படங்கள்.
//உங்க வீட்டு பகக்த்துல இருந்த மரங்கள் அடர்த்தியா இருந்தப்ப வந்தவையோ..உங்கள் வளாக எல்லையில் இருக்கும் செடிகள் மரங்களில்....இப்ப அங்கு கட்டுமானம் வருகிறது இல்லையா வெற்றிடம் தெரிகிறது.//
பறவைகள் அமர்ந்து இருக்கும் வீடு எங்கள் வளாகத்தில் உள்ள வீட்டின் பின் புற தோட்டம். வெற்றிடம் தெரிவது பக்கத்து மனை அதில் தான் மரங்கள் நிறைய இருக்கும். இந்த மரமும், எங்கள் வளாக மற்ற மரங்களிலும் வந்து அமர்வதை எடுத்து கொண்டு இருக்கிறேன். இது போன மாதம் எடுத்த படம் தான். இரண்டு திணைக்குருவி எங்கள் வீட்டில் கூடு கட்ட வந்து பார்த்து போய் கொண்டு இருக்கிறது.
//எல்லாம் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. அருமையான தகவல்களுடனான பதிவு//
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
படங்கள் அனைத்தும் அழகு. பூச்சி பிடிப்பான் ரொம்பவே கவர்கிறது.
பதிலளிநீக்குபார்வையற்றவர்கள் இதயத்தினால் பார்க்கிறார்கள் - நெகிழ்ச்சியும் பிரம்பிப்பும்.
தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அழகு. பூச்சி பிடிப்பான் ரொம்பவே கவர்கிறது.//
நன்றி.
//பார்வையற்றவர்கள் இதயத்தினால் பார்க்கிறார்கள் - நெகிழ்ச்சியும் பிரம்பிப்பும்.தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.//
ஆமாம், அவர்களை பற்றி படித்ததும் நெகிழ்ச்சியும், பிரம்பிப்பும் ஏற்பட்டது உண்மை.
//பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//
உங்கள் தொடர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குஹுவான் அவர்களின் செயல் வியக்க வைக்கிறது.
இந்த பூமி மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமே என்று பலரும் நினைக்கிறார்கள் இது தவறு.
இயற்கை பொதுவானது.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.//
நன்றி.
//ஹுவான் அவர்களின் செயல் வியக்க வைக்கிறது.
இந்த பூமி மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமே என்று பலரும் நினைக்கிறார்கள் இது தவறு.
இயற்கை பொதுவானது.//
ஆமாம், நீங்கள் ஒவ்வொரு தடவை சொல்வதும் உண்மை.
இயற்கை பொதுவானது எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த பூமி சொந்தம்.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.
பொறுக்கியெடுத்த பறவைகளின் படங்கள். நன்றாக உள்ளன. எடுக்கப்பட்ட இடம் பற்றி ஒன்றும் கூறவில்லையே. அதையும் சேர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்.
நீக்கு//பொறுக்கியெடுத்த பறவைகளின் படங்கள். நன்றாக உள்ளன. எடுக்கப்பட்ட இடம் பற்றி ஒன்றும் கூறவில்லையே. அதையும் சேர்த்திருக்கலாம்.//
எங்கள் வளாகத்தில் கிளிகள் சுற்றி சுற்றி பறக்கும் அமர்ந்து இருக்கும் போது எடுப்பது கஷ்டம். நான்கு தினங்கள் மொட்டை மாடிக்கு நடைபயிற்சி செய்ய போனதால் கிளிகளை படம் எடுக்க முடிந்தது. கிளிகளின் படங்கள், மற்றும் பூச்சி பிடிப்பான், திணைக்குருவிகள், புறாக்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. என்று முதல் பத்தியில் போட்டு இருந்தேன் சார்.
மொட்டைமாடியிலிருந்து எங்கள் வீட்டுக்கு எதிர்பக்கம் மொட்டை மாடி சுவரின் விளிம்பில் , எங்கள் வளாக மின்சார கம்பியில், மற்றும் எங்கள் வளாகத்தில் உள்ள வீடுகளை கட்டிக் கொடுத்தவர் வீடு எங்கள் வளாகத்தின் நடுவில் இருக்கும் அவர் வீட்டு தோட்டத்து மரத்தில் தான் பறவைகள் வந்து அமரும்.
அதை மாடியிலிருந்து எடுத்தேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கொடுத்து வைத்த பறவைகள்.. உங்களுக்காக என்றே அமைகின்றன.. ஒவ்வொரு பட்மும் ஒவ்வொரு அழகு..இதுவே மகிழ்ச்சி..
பதிலளிநீக்குபதிவு சிறப்பு..
நலம் வாழ்க..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//கொடுத்து வைத்த பறவைகள்.. உங்களுக்காக என்றே அமைகின்றன.. ஒவ்வொரு பட்மும் ஒவ்வொரு அழகு..இதுவே மகிழ்ச்சி..
பதிவு சிறப்பு..
நலம் வாழ்க..//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபூச்சி பிடிப்பான் பறவை இங்கும் சுற்றிக் கொண்டு இருக்கிறது
ஹுவான் அவர்களது செயல் சிறப்பானது.
பதிவு அழகு.. மகிழ்ச்சி..
//பூச்சி பிடிப்பான் பறவை இங்கும் சுற்றிக் கொண்டு இருக்கிறது//
நீக்குவயல் பக்கம் தான் நிறைய இருக்கும்.
//ஹுவான் அவர்களது செயல் சிறப்பானது.//
ஆமாம்.
//பதிவு அழகு.. மகிழ்ச்சி..//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். குறிப்பாக ஜூம் செய்து எடுத்த படங்களில் DOF சிறப்பாக உள்ளது. பார்வையற்றவர்களின் பறவை பார்க்கும் திறனும் ஆர்வமும் வியப்பூட்டுகிறது. உங்களைப் போல நானும் ஒலியால் பறவைகளை அடையாளம் காண்பதில் ஆர்வம் காட்டுவேன். ஆனால் இவர்களின் திறன் முன் நாம் நிற்க முடியாது.
பதிலளிநீக்குவித்தியாசமான வண்ணத்திலிருக்கும் புறா அழகு.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். குறிப்பாக ஜூம் செய்து எடுத்த படங்களில் DOF சிறப்பாக உள்ளது.//
உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
நீங்கள் எடுக்கும் பறவைகளின் துல்லியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
//பார்வையற்றவர்களின் பறவை பார்க்கும் திறனும் ஆர்வமும் வியப்பூட்டுகிறது.//
ஆமாம் ராமலக்ஷ்மி.
//உங்களைப் போல நானும் ஒலியால் பறவைகளை அடையாளம் காண்பதில் ஆர்வம் காட்டுவேன். ஆனால் இவர்களின் திறன் முன் நாம் நிற்க முடியாது.//
ஆமாம், உண்மை ராமலக்ஷ்மி.
எவ்வளவு திறமைகள்! அவர்களின் தன்னம்பிக்கை, அளவிட முடியாத ஒன்று.
//வித்தியாசமான வண்ணத்திலிருக்கும் புறா அழகு.//
ஆமாம். அது பார்ப்பது மிகவும் அழகாய் இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
மிக அழகான படங்கள்! இந்த கிளியின் படங்களைத் தொகுத்து இன்ஸ்டாக்ராமில் ரீல் ஆக வெளியிடலாம்
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//மிக அழகான படங்கள்! //
நன்றி
//இந்த கிளியின் படங்களைத் தொகுத்து இன்ஸ்டாக்ராமில் ரீல் ஆக வெளியிடலாம்//
உங்கள் வருகைக்கும் உங்கள் ஆலோசனைக்கும் நன்றி , முயற்சி செய்கிறேன்.
மிக அழகான படங்கள். கிளியின் படங்களைத் தொகுத்து, ரீல் ஆக வெளியிடலாம். கண் இருந்தும் பறவைகளை பார்க்காதவர்களுக்கிடையில் இதயத்தால் பறவைகளைப் பார்க்கும் ஹூவானும், டோனா பொசாண்டும் வியக்க வைக்கிறார்கள்.
பதிலளிநீக்கு//மிக அழகான படங்கள். கிளியின் படங்களைத் தொகுத்து, ரீல் ஆக வெளியிடலாம். கண் இருந்தும் பறவைகளை பார்க்காதவர்களுக்கிடையில் இதயத்தால் பறவைகளைப் பார்க்கும் ஹூவானும், டோனா பொசாண்டும் வியக்க வைக்கிறார்கள்.//
நீக்குஆமாம். இதயத்தால், காதுகளால் பறவைகளை பார்க்கிறார்கள். அவர்களை பற்றி படித்த போது வியப்பாகத்தான் இருந்தது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி பானுமதி.
கிளி, பூச்சி பிடிக்கும் பறவை, புறா, திணை ககுருவி படங்கள் எல்லாம் மிக அழகு.
பதிலளிநீக்குஆமாம்... கண்ணிருந்தும் காணாமல் இருக்கும் நம்மிடம், கண்ணின் விலை அறியாதவர்கள் நீங்கள் , என்று சொல்கிறார்களோ இதயத்தால்.பறவைகளை பார்த்து ரசிப்பவர்கள்.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்
நீக்கு//கிளி, பூச்சி பிடிக்கும் பறவை, புறா, திணை ககுருவி படங்கள் எல்லாம் மிக அழகு.//
நன்றி.
//ஆமாம்... கண்ணிருந்தும் காணாமல் இருக்கும் நம்மிடம், கண்ணின் விலை அறியாதவர்கள் நீங்கள் , என்று சொல்கிறார்களோ இதயத்தால்.பறவைகளை பார்த்து ரசிப்பவர்கள்.//
இதயத்தால் பறவைகளை பார்த்து ரசிப்பவர்கள் நம்மை வியக்க வைப்பது உண்மை.
எல்லாம் இருந்தும் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு குறைபட்டு கொண்டு இருக்கும் நம்மை பற்றி நினைக்கும் போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி துளசிதரன்.
பார்வை அற்றவர்களின் பறவை பார்க்கும் பணி வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குபறவை படங்கள் அழகு.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபார்வை அற்றவர்களின் பறவை பார்க்கும் பணி வியக்க வைக்கிறது.//
ஆமாம், அவர்களை பற்றி படிக்க படிக்க வியப்புதான்.
பறவை படங்கள் அழகு.//
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.