ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பனிச்சிற்பங்கள்




பனி மழை  பொழிகிறது  பதிவில்  அடுத்த நாள் பனியில் சிற்பங்கள் செய்து மகிழ்ந்தோம் வேறு ஒரு இடத்தில். அது இன்னொரு பதிவில், என்று சொல்லி இருந்தேன். இந்த பதிவில் பனிச்சிற்பங்கள் செய்த காட்சிகள்.



மரத்திற்கு அருகே வரை நடந்து போக வெகு நேரம் ஆனது எனக்கும், மருமகளின் அம்மாவுக்கும் கடற்கரை மணலில் கால் புதைய புதைய நடப்பது போல இருந்தது. "இங்கு பயம் இல்லை அதனால் மெதுவாக நடந்து வாங்க" என்று சொல்லி அவர்கள் முன்னால் நடந்து சென்றார்கள். , நாங்கள் மெதுவாக அவர்களை தொடர்ந்து நடத்தோம்.
மகன் செய்ய ஆரம்பித்து விட்டான்

மகன் செய்த சாய்பாபா






நானும், மகனும் செய்த பனிச்சிற்பங்கள்




என் கால்கள்  பனியில் புதைந்து இருக்கிறது,  மருமகள் படம் எடுக்க வசதியாக நகர்ந்து  நின்ற போது  இடது கால் நல்ல ஆழமாக பனிக்குள் சிக்கி கொண்டது, மகன் வந்து கை கொடுத்து தூக்கி விட்டான்.


நான் செய்த கேதாரநாத்  
 
மகன்  ஏதாவது செய்யுங்க என்றான், மனதில் ஒன்றும் நினைக்காமல் செய்ய ஆரம்பித்தேன், முடிந்தவுடன்  எனக்கு கேதாரநாத் இறைவனை நினைவுக்கு கொண்டு வந்தது. நாங்கள் கேதார்நாத் போன நினைவுகள் மனதில் வந்து போனது. திருகேதார்நாத் தலப்பயணம்-7 உங்களுக்கும் நேரம் இருந்தால் படித்து பாருங்கள், படங்கள் கொஞ்சம் தான் போட்டு இருக்கிறேன், முன்பு இருந்தவை இப்போது இல்லை வெள்ளம்  கோவிலின் வெளிச்சுற்றில் இருந்தவற்றை எல்லாம் அடித்து சென்று விட்டது. பழைய கேதார்நாத் கோவிலை பார்க்கலாம்.


கேதாரநாத்

பேரன் தன் விளையாட்டு பொம்மைகளை வைத்து கதை காணொளி செய்தான்,  கையில் கரடி பொம்மை வைத்து இருப்பது கவின், புத்தகம் வைத்து கொண்டு இருப்பது அவன் ஆச்சி கோமதி அரசு, அடுத்த மூன்று பாத்திரங்கள் ஹாரிபாட்டர் கதை பாத்திரங்கள், பின்னால் அலாவுதீனும் அற்புதவிளக்கும்  கதை பாத்திரம் அலாவுதீன், பூதம்சீனி .

கார்  புதைந்து இருக்கிறது இரண்டு படங்களும் பேரன் தன் ஐபேடில் எடுத்த படம்



கதை உருவாகி கொண்டு இருக்கிறது

மருமகள் செய்த மிக்கி

மருமகளின் அம்மா செய்த  பனி மனிதன்



சூரியன்  எட்டிப்பார்த்தார், ஆனால் அவர் வெப்பம் தரவில்லை


மரங்களுக்கு நடுவில் பனி மனிதன் செய்து போய் இருக்கிறார்கள். எத்தனை எத்தனை கால் தடங்கள்!

கழுகாரும் காக்காவும் பறந்து கொண்டே இருந்தது போட்டோ எடுக்கும் போது கழுகார் மட்டும் சிக்கினார். நீலவானில் பறப்பது அழகு.

இரண்டு  நாள் பொழுது பனிமழையை ரசித்து எங்கும் பனியை கண்டு மகிழ்ந்தோம்.

பல நாடுகளில் , இந்த பனிச் சிற்ப திருவிழா நடந்தாலும் சீனாவில் குளிர் பிரதேசமான "ஹார்பின் நகரில்" பனிச்சிற்பம் விழாவில் உலக அதியங்களை செய்வார்களாம், அதிலும் காதலர்கள் எப்போதும் செய்வது தாஜ்மகால் சிற்பம்தானாம்.  தாஜ்மகால் செய்து அதன் முன் ஜோடியாக நின்று படம் எடுத்து கொள்வார்களாம். இந்த செய்தியை படிக்கும் போது  நமக்கு பெருமைதான் இல்லையா!


 முட்டையிட்டு அடைகாக்கும்  கழுகை  நேரடி ஒளிபரப்பாக  பார்த்து கொண்டு இருக்கிறேன்.  அவை படும் பாடு சொல்லி முடியாது,  பனி விழுந்து மூடுகிறது.  ஆண், பறவையும், பெண்பறவையும் மாறி மாறி அடைகாக்கிறது, உணவு தேடி வந்து தன் இணைப்பறவையை அழைத்து நீ கொஞ்சம், நான் கொஞ்சம் என்று உண்ணும் காட்சி கண்ணில் நீர் வரவழைக்கிறது. ஒரு நாள் காகம்,  அடுத்த நாள் பக்கத்து ஏரியிலிருந்து மீன்  அதற்கு உணவு  கிடைத்தது. 

நல்லபடியாக குஞ்சு பொரித்து மகிழ்ச்சியாக பறப்பதை பார்க்க வேண்டும்.
 

வாழ்க வையகம் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அற்புதம்...//


      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. பனிச் சிற்பங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. அடைகாக்கும் கழுகு - மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      வெகு நாட்கள் கழித்து உங்களை என் தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி.

      //பனிச் சிற்பங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. அடைகாக்கும் கழுகு - மனதைக் கவர்ந்தது//

      அடைகாக்கும் கழுகு என் மனதையும் கவர்ந்தது, அதனால் தினம் பார்த்து வருகிறேன், உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பனிச்சிற்பங்கள் எல்லாமே சூப்பர்.

    மகன் செய்திருப்பதும் மிக அழகு. மனதில் இருந்தால் தானே அது வடிவாகிவிடும்!!!

    //மகன் ஏதாவது செய்யுங்க என்றான், மனதில் ஒன்றும் நினைக்காமல் செய்ய ஆரம்பித்தேன், முடிந்தவுடன் எனக்கு கேதாரநாத் இறைவனை நினைவுக்கு கொண்டு வந்தது. //

    அதுதான்...நம் ஆழ்மனதில் இருப்பது வந்துவிடும் கோமதிக்கா...நான் முதலில் கைலாயம் என்று நினைத்தேன்....அப்புற அமர்நாத்தும் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பனிச்சிற்பங்கள் எல்லாமே சூப்பர்.

      மகன் செய்திருப்பதும் மிக அழகு. மனதில் இருந்தால் தானே அது வடிவாகிவிடும்!!!//

      நன்றி. அவன் அப்பா வந்து இருந்தால் அவர்களும் செய்து இருப்பார்கள்.

      //அதுதான்...நம் ஆழ்மனதில் இருப்பது வந்துவிடும் கோமதிக்கா...நான் முதலில் கைலாயம் என்று நினைத்தேன்....அப்புற அமர்நாத்தும் நினைவுக்கு வந்தது.//

      கைலை மலை தோற்றம். (மலைதான்) அமர்நாத் நீண்ட லிங்க வடிவம், கேதார்நாத எருமையின் முதுகு பகுதி.

      நீக்கு
  4. பேரன் தன் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை உருவாக்கம் காணொளி எடுத்தல் எல்லாம் சூப்பர் கோமதிக்கா...நல்ல கற்பனை வளம். கோமதி ஆச்சியும் கதாபாத்திரம்!! பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் தன் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை உருவாக்கம் காணொளி எடுத்தல் எல்லாம் சூப்பர் கோமதிக்கா...நல்ல கற்பனை வளம். கோமதி ஆச்சியும் கதாபாத்திரம்!! பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது!//

      அவன் உருவாக்கும் கதையில் ஆச்சி சாகஸம் செய்யும் தைரியமானவள். என் கதாபாத்திரத்திற்கு நான் பேசும் வசனம் அவன் சொல் படி குரலை ஏற்றி இறக்கி அவன் சொல்வது போல வரவழைத்து விடுவான். முன்பு தாத்தாவும் உண்டு.
      சில கதைகளில் இப்போதும் தாத்தா வருகிறார்கள், ஆனால் கவின், ஆச்சி கண்களுக்கு மட்டுமே தெரியும் . என்று சொல்வான் அப்போது மனம் உடல் சிலிர்த்துவிடும் கீதா.

      நீக்கு
  5. மருமகள் செய்த மிக்கி, அவங்க அம்மா செய்த பனிமனிதன் எல்லாம் நல்ல ஒரு சந்தோஷமான நிகழ்வு.

    கால்தடங்களே ஒரு டிசைன் போல இருக்கு இல்லையா கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மருமகள் செய்த மிக்கி, அவங்க அம்மா செய்த பனிமனிதன் எல்லாம் நல்ல ஒரு சந்தோஷமான நிகழ்வு.

      கால்தடங்களே ஒரு டிசைன் போல இருக்கு இல்லையா கோமதிக்கா//

      மருமகளுக்கு செய்ய நேரம் இல்லை, மகன் , பேரன், நாங்கள் செய்வதை படம், காணொளி எடுத்தாள், அதன் பின் சின்னதாக மிக்கி செய்தாள்.
      கால்தடங்களும் நல்ல டிசைன் தான் கீதா.

      நீக்கு
  6. கால்கள் புதைய புதைய நடக்கும் அந்தப்பாதை கற்பனை செய்து பார்க்கிறேன்.  பயமில்லை என்று சொன்னாலும் சற்று பயமாகத்தான் இருக்கும் இல்லையா?  அதேபோல அப்புறம் கால் வலி பின்னங்கால்களில் பின்னி எடுத்து விடும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்,
      //கால்கள் புதைய புதைய நடக்கும் அந்தப்பாதை கற்பனை செய்து பார்க்கிறேன். பயமில்லை என்று சொன்னாலும் சற்று பயமாகத்தான் இருக்கும் இல்லையா? அதேபோல அப்புறம் கால் வலி பின்னங்கால்களில் பின்னி எடுத்து விடும் இல்லையா?//

      நடக்கும் போது எனக்கும், மருமகளின் அம்மாவிற்குதான் சிரமம், மற்ற்வர்கள் எல்லாம் தரையில் நடப்பது போல மகிழ்ச்சியாக நடந்து வந்தார்கள், நாங்கள் தான் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க என்று மெதுவாக நடந்தோம், அதற்கு ஏற்றார் போல சில இடங்களில் கால் ஆழாமாக கீழே போய் விடும் பின் அந்த காலை பத்திரமாக வெளியே எடுத்து வைத்து நடந்து என்று போய் விட்டோம்.

      பனிச்சிற்பங்கள் முடிந்தவுடன் நாங்கள் காருக்கு கஷ்டபட்டு வந்து விட்டோம். கால்களுக்கு மருந்து தடவி, இரவு மாத்திரை போட்டு கொண்டேன். வலி மறுநாளும் இருந்தது, ஆனாலும் மகிழ்ச்சிதான்.

      நீக்கு
  7. மகன் கையில் பாபா அற்புதமாக வந்து விட்டார். அவருக்குதான் உங்கள் சிற்பங்களில் முதலிடம். நீங்க என்ன முயற்சி செய்தாலும் நான் வருவேன் என்று கேதார் உங்கள் கைகளில் வந்தது மனதில் நிற்கும் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் கையில் பாபா அற்புதமாக வந்து விட்டார். அவருக்குதான் உங்கள் சிற்பங்களில் முதலிடம். நீங்க என்ன முயற்சி செய்தாலும் நான் வருவேன் என்று கேதார் உங்கள் கைகளில் வந்தது மனதில் நிற்கும் நிகழ்வு.//

      அவன் முன்பு இருந்த ஊரில் வீட்டு தோட்டத்தில் செய்தவைகளுக்கு பனி அள்ளும் கருவிகள் வைத்து செய்தான், இங்கு கைகளால் மட்டுமே அள்ளி அள்ளி செய்ய வேண்டி இருப்பதால் இந்த அள்வோடு நிறுத்தி கொண்டான்.

      கேதார் வந்தது மகிழ்ச்சிதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பேரன் பின்னாளில் எதில் ஜொலிக்கப் போகிறார் என்று யோசிக்கிறேன்.  எல்லாவற்றிலும் சிறக்கிறார்.  ரௌலிங் போல நல்லதொரு கதாசிரியராக வந்து கூட கலக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் பின்னாளில் எதில் ஜொலிக்கப் போகிறார் என்று யோசிக்கிறேன். எல்லாவற்றிலும் சிறக்கிறார். ரௌலிங் போல நல்லதொரு கதாசிரியராக வந்து கூட கலக்கலாம்.//

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
      நல்ல கதை சொல்லி அவன். கற்பனை வளம் இருக்கும் அதில். அவனே பல குரலில் பேசி பதிவு செவான், என் கதாபாத்திரத்திற்கு என்னை பேச வைத்து பதிவு செய்து இருக்கிறான்.

      நீக்கு
  9. கழுகின் சர்வைவல் கஷ்டங்கள் எப்படி நேரலையில் பார்க்க முடிந்தது? பாவம் காகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கழுகின் சர்வைவல் கஷ்டங்கள் எப்படி நேரலையில் பார்க்க முடிந்தது? பாவம் காகம்!//
      யுட்யூபில் பார்க்கிறேன் ஸ்ரீராம், மகனிடம் பனியில் சில பற்வைகள் நெடுந்தூரம் பறந்து வந்து நம் நாட்டில் முட்டையிட்டு குஞ்சுபொஏய்த்து போகும். இங்கு குளிர்காலத்தில் இங்கே இருக்கும் பற்வைகளும் உண்டு என்று காணொளியை தோலைகாட்சி பெட்டியில் போட்டு விட்டு தினம் பாரு நேரடியாக காட்சியாக பாருங்கள் என்றான். சில முட்டைகள் பல நாள் அடைகாத்தும் குஞ்சாக மாறாதாம், அப்போது பறந்து போய் விடுமாம், இதுவும் நாட்கள் கடந்து விட்டது, என் மனம் குஞ்சு வெளி வரும் நாளை காண ஆவலாக இருக்கிறது. பார்ப்போம் இறைவன் விட்டவழி!
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    வெள்ளி பனிமலை மேல் நடப்பது போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      வெள்ளி பனிமலை மேல் நடப்பது போலவே இருக்கிறது.//

      ஆஹா! நானும்

      வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் என்று

      பாரதி பாடியது போல வெள்ளி பனி மலையில் உலாவி விட்டேன்.
      உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. கழுகார்- நீலமும் கருமையும் நல்ல சேர்க்கை.

    இந்தப் பனியில் கழுகார் முட்டை இட்டு அடை காத்து குஞ்சு வருவது என்பது ஹப்பா எவ்வளவு பெரிய பிரயத்தனம். பாவம். நான் யுட்யூபில் சென்று பார்த்தேன் கோமதிக்கா...பார்த்து எனக்கும் மனம் கஷ்டமாகி என்னை அறியாமலேயே கண்ணில் நீர்...பாருங்க அதுங்களுக்கு இருக்கும் அந்தப் பொறுமையும் ஒருவரை ஒருவர் கவனிக்கும் அழகும் - நீ பாதி நான் பாதி - என்று ஆணும் பெண்ணும்....6 அறிவுகளுக்கு இல்லையே...

    தாஜ்மஹால் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருப்பது மகிழ்வான விஷயம், கலைவடிவில்.

    சூரியன் வந்தாலும் பூமியில் படர்ந்திருக்கும் பனியைப் பார்த்து அந்த அழகில் சொக்கி தன் வெப்பக் கதிர்களை விரிக்க மறந்து நிற்பார் எனவே சூடு இருக்காதுதான்!!!

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுகார்- நீலமும் கருமையும் நல்ல சேர்க்கை.//
      ஆமாம். நீலவானம், பற்வை பறப்பது வரைவோம் இல்லையா? அதுபோல பார்க்க ஆனந்தம்.

      //இந்தப் பனியில் கழுகார் முட்டை இட்டு அடை காத்து குஞ்சு வருவது என்பது ஹப்பா எவ்வளவு பெரிய பிரயத்தனம். பாவம். நான் யுட்யூபில் சென்று பார்த்தேன் கோமதிக்கா...பார்த்து எனக்கும் மனம் கஷ்டமாகி என்னை அறியாமலேயே கண்ணில் நீர்...பாருங்க அதுங்களுக்கு இருக்கும் அந்தப் பொறுமையும் ஒருவரை ஒருவர் கவனிக்கும் அழகும் - நீ பாதி நான் பாதி - என்று ஆணும் பெண்ணும்....6 அறிவுகளுக்கு இல்லையே...//

      எல்லா உயிர்களிடத்தும் அன்பும், கருணையும் இருக்கிறது கீதா.
      அதை பார்க்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.

      //தாஜ்மஹால் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருப்பது மகிழ்வான விஷயம், கலைவடிவில்.//
      ஆமாம், காலத்தை கடந்து நிற்கும் உலக அதிசயம் இல்லையா!

      //சூரியன் வந்தாலும் பூமியில் படர்ந்திருக்கும் பனியைப் பார்த்து அந்த அழகில் சொக்கி தன் வெப்பக் கதிர்களை விரிக்க மறந்து நிற்பார் எனவே சூடு இருக்காதுதான்!!!//
      ஆமாம், அது மட்டுமல்லாது பனி தன் வெப்ப கதிரால் உருகி விட்டால் பார்க்க வந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆகி விடுமே என்ற எண்ணமும் கதிர்களை சுருக்கி கொள்ள வைத்து இருக்கும்.

      //அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா//


      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. படங்கள் என்னைக் கவர்ந்தன. அதிலும் பனியில் சிற்பங்கள்.

    கவின் மிக நல்ல கற்பனை வளம் கொண்டிருக்கிறான். அந்த சாய்பாபா சிற்பம் மனதைக் கொள்ளைகொண்டது. நிச்சயம் அவருடைய அருள் கவினுக்குக் கிடைக்கும்.

    கார் புதைந்திருப்பதுபோல உள்ள படத்தில், பனி, உருகும் பனிபோலத் தோன்றியது (அடர்த்தி இல்லாத, ஆபத்தான)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //படங்கள் என்னைக் கவர்ந்தன. அதிலும் பனியில் சிற்பங்கள்.//

      நன்றி.

      //கவின் மிக நல்ல கற்பனை வளம் கொண்டிருக்கிறான். அந்த சாய்பாபா சிற்பம் மனதைக் கொள்ளைகொண்டது. நிச்சயம் அவருடைய அருள் கவினுக்குக் கிடைக்கும்.//

      சாய்பாபா மகன் செய்தது, கவினுக்கு கற்பனை வளம் அதிகம் தான்.
      உங்களுடைய வார்த்தைகள் மகிழ்ச்சி தருகிறது சாய்பாவாவின் அருள் கிடைக்கட்டும்.

      //கார் புதைந்திருப்பதுபோல உள்ள படத்தில், பனி, உருகும் பனிபோலத் தோன்றியது (அடர்த்தி இல்லாத, ஆபத்தான)//

      அதுதான் என் கால்கள் ஆழமாக புதைந்து விட்டது. அவன் இருந்த பகுதி மரத்தின் அருகே அதனால் அங்கு அப்படி இருக்கிறது.

      நீக்கு
  13. எந்தப் பெற்றோருமே தன் குழந்தைகள் நல்ல வாழ்க்கை வாழ, தாங்கள் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். இதில் பறவைகள் என்ன, விலங்குகள் என்ன, மனிதர்கள் என்ன.

    என்ன ஒரு வித்தியாசம் என்றால், மனிதர்கள் (மற்றும் சில விலங்குகள்) பாசத்தைக் கடைசிவரை வைத்திருக்கின்றன. மற்றவை, தன் குழந்தை வளர்ந்து ஆளான பிறகு, அது யாரோ தான் யாரோ என்று இருந்துவிடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எந்தப் பெற்றோருமே தன் குழந்தைகள் நல்ல வாழ்க்கை வாழ, தாங்கள் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். இதில் பறவைகள் என்ன, விலங்குகள் என்ன, மனிதர்கள் என்ன.//

      ஆமாம், உண்மை. ஆனால் மனிதன் மட்டும் காலை முதல் கஷ்டபடுவதாக புலப்புகிறான் அல்லவா? அதற்குதான் எல்லா உயிர்களும் வாழ தன் குழந்தைகளை பாதுகாக்க கஷ்டபடுகிறது, இணை பறவைகள் இரண்டுக்கும் அன்பான உறவு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் பண்பு எல்லாம் இருக்கிறது.

      //என்ன ஒரு வித்தியாசம் என்றால், மனிதர்கள் (மற்றும் சில விலங்குகள்) பாசத்தைக் கடைசிவரை வைத்திருக்கின்றன. மற்றவை, தன் குழந்தை வளர்ந்து ஆளான பிறகு, அது யாரோ தான் யாரோ என்று இருந்துவிடுகின்றன//

      ஆமாம், உண்மை. நாமும் அன்பு வைத்தால் நல்லது, வளர்ந்த பின்னும் நம் கைகுள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று பாசம் வைத்தால் கஷ்டபட வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
    2. //மனிதன் மட்டும் காலை முதல் கஷ்டபடுவதாக புலப்புகிறான் அல்லவா?// - இதைப்பற்றி கொஞ்சம் யோசிச்சா, பசங்க அதுவா பிறக்கறதில்லை. நாமதான் ஆசைப்பட்டு பெற்றுக்கொள்கிறோம். அப்போ, அவங்களுக்குச் செய்வது நம்ம கடமை. அதையும் தாண்டி நாம் பாசத்தால் செய்தால், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. ஆனா இப்படிச் சொல்வது சுலபம். Practicalஆ நாம், அவர்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்.

      திருமணம் ஆயிடுச்சுன்னா, நம்ம கைக்குள்ள அவங்க இருக்கணும்னு நினைக்கவே கூடாது. என் நினைப்பு இப்படித்தான் இருக்கு. பிறகு மாறுமா என்பதைப் பார்க்கணும்.

      நீக்கு
    3. //இதைப்பற்றி கொஞ்சம் யோசிச்சா, பசங்க அதுவா பிறக்கறதில்லை. நாமதான் ஆசைப்பட்டு பெற்றுக்கொள்கிறோம். அப்போ, அவங்களுக்குச் செய்வது நம்ம கடமை. அதையும் தாண்டி நாம் பாசத்தால் செய்தால், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. ஆனா இப்படிச் சொல்வது சுலபம். Practicalஆ நாம், அவர்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்.//
      உண்மை. நன்றாக சொன்னீர்கள். நாம் கடமை, அன்பு இவற்றால் செய்கிறோம்.
      அவர்களும் செய்வார்கள், அதற்கு மேல் நாம் எதிர்பார்க்கும் கூடாதுதான். அவர்கள் உதவியும் நமக்கு தேவைதான்.

      //திருமணம் ஆயிடுச்சுன்னா, நம்ம கைக்குள்ள அவங்க இருக்கணும்னு நினைக்கவே கூடாது. என் நினைப்பு இப்படித்தான் இருக்கு. பிறகு மாறுமா என்பதைப் பார்க்கணும்.//

      திருமணம் ஆன பின் அவர்களுக்கு ஒரு குடும்பம் அதன் கடமைகள், பொறுப்புகள் இருக்கே! அதையும் அவர்கள் சரிவர செய்ய வேண்டும்.

      என் உறவினர் ஒருவர் தன் பிள்ளைகள் இன்னும் தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும், மகன் தனக்கு மட்டுமே எல்லாம் செய்ய வேண்டும் என்று நடந்து கொள்கிறார்கள், மருமகள் அவதி படுகிறாள். மகன் அம்மா பேச்சை மட்டுமே கேட்கிறார். அதனால் குடும்பத்தில் அமைதி இல்லை.

      இருபக்கமும் சரியாக பார்த்து கொள்ள தெரிந்தவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. பனிக்குள் சேலை கட்டி சென்றது நீங்கள் மட்டும்தான் போல இருக்கு.... இப்படி பனிக்குள் செல்வது விளையாடுவது மனதிற்கு மிக சந்தோஷம் தரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

      //பனிக்குள் சேலை கட்டி சென்றது நீங்கள் மட்டும்தான் போல இருக்கு.... இப்படி பனிக்குள் செல்வது விளையாடுவது மனதிற்கு மிக சந்தோஷம் தரும்//

      நான் எப்போதும் சேலைதான். சேலை அணிந்து சென்றதால் சுதந்திரதேவி சிலை பார்க்க போன இடத்தில் சலுகை கிடைத்தது.
      நாங்கள் போன நேரம் படகு கிளம்ப தயாராக இருந்தது, எங்களை பார்த்து விட்டு இந்தியாவிலிருந்து வந்து இருக்கிறீர்கள் விரைவாக லாக்கரில் பொருளை வைத்து விட்டு வாங்க வெயிட் செய்கிறோம் என்றார்கள் என் புடவை , என் பொட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

      நான் கட்டி செல்லிம் புடவைகளை மேல் நாட்டு பெண்கள் பாராட்டி இருக்கிறார்கள் நிறைய இடங்களில்.

      பனிக்குள் விளையாடுவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  15. சென்ற பதிவைப் போலவே இதுவும் அருமை..

    கண்கவர் படங்கள்.. நானும் பய்ணிப்பது போல இனிமை...

    எண்ணம் எழுத்து எதுவாயினும் மனதில் உள்ளதே கை வண்ணம் ஆகும்..

    ஆகவே, தங்களது குடும்பத்தினரைப் பொறுத்தவரை கேதார் நாத் ஆயினும் சாய்பாபா ஆயினும் எதுவும் ஆச்சர்யம் இல்லை..

    கவின் அவர்களது கை வண்ணமும் அழகு...

    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாரஜூ,

      //சென்ற பதிவைப் போலவே இதுவும் அருமை..

      கண்கவர் படங்கள்.. நானும் பய்ணிப்பது போல இனிமை...//

      நன்றி.

      //எண்ணம் எழுத்து எதுவாயினும் மனதில் உள்ளதே கை வண்ணம் ஆகும்..

      ஆகவே, தங்களது குடும்பத்தினரைப் பொறுத்தவரை கேதார் நாத் ஆயினும் சாய்பாபா ஆயினும் எதுவும் ஆச்சர்யம் இல்லை..

      கவின் அவர்களது கை வண்ணமும் அழகு...//

      சிறப்பான பதிவு..
      வாழ்க நலம்..//

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. பனி பிரதேசங்களை பார்ப்பது ஒரு வித சுகமென்றால், அதில், நடந்து விளையாடி நம்மை மகிழ்வித்து கொள்வதும் ஒரு இன்பமான செயல்தான். பனிநிறைந்த படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. கால் புதைய புதைய பனியில் நீங்கள் நடந்து சென்ற அனுபவங்களைப் பற்றி கூறிய போது நானும் அந்த அனுபவத்தை மனதால் உணர்ந்தேன்.

    நீல வண்ண வானத்தில் சூரியனின் படமும், கழுகின் படமும் கண்களுக்கு விருந்தாக இருந்தது. உங்கள் வீட்டிலுள்ளவர்கள் செய்த பனிச் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. தங்கள் மகன் உருவாக்கிய சாய்பாபா உருவமும், தாங்கள் உருவாக்கிய கேதார் லிங்க உருவமும் அழகு.

    உங்கள் பழைய பதிவாகிய கேதார்நாத் பதிவுக்கும் சென்று படித்து, படங்களை ரசித்து அங்கும் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.

    பறவைகளின் கூடும், அதன் குஞ்சு பொரிக்கும் படங்களும் நன்றாக உள்ளன. இறைவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழ்வில் பல சிரமங்களை தந்தாலும், இறுதியில் அவனருளினால் காப்பாற்றி விடுவார். அதுதான் அவரின் தாய்ப்பாசம். பகிர்வு எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமையாக உள்ளது. பனி பிரதேசங்களை பார்ப்பது ஒரு வித சுகமென்றால், அதில், நடந்து விளையாடி நம்மை மகிழ்வித்து கொள்வதும் ஒரு இன்பமான செயல்தான். //

      ஆமாம், நம்மை போன்ற சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சி. எப்போதும் இதை அனுபவிப்பவர்களுக்கு கஷ்டம்.

      //பனிநிறைந்த படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. கால் புதைய புதைய பனியில் நீங்கள் நடந்து சென்ற அனுபவங்களைப் பற்றி கூறிய போது நானும் அந்த அனுபவத்தை மனதால் உணர்ந்தேன்.//

      உங்கள் உணர்வுக்கு நன்றி.

      //நீல வண்ண வானத்தில் சூரியனின் படமும், கழுகின் படமும் கண்களுக்கு விருந்தாக இருந்தது. உங்கள் வீட்டிலுள்ளவர்கள் செய்த பனிச் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. தங்கள் மகன் உருவாக்கிய சாய்பாபா உருவமும், தாங்கள் உருவாக்கிய கேதார் லிங்க உருவமும் அழகு.//

      நன்றி கமலா.

      //உங்கள் பழைய பதிவாகிய கேதார்நாத் பதிவுக்கும் சென்று படித்து, படங்களை ரசித்து அங்கும் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.//

      மகிழ்ச்சி. நீங்களும், நெல்லைத் தமிழனும் படித்து கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள். அங்கு உங்களுக்கு பதில் அளித்து விட்டேன். நன்றி.

      //பறவைகளின் கூடும், அதன் குஞ்சு பொரிக்கும் படங்களும் நன்றாக உள்ளன. இறைவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழ்வில் பல சிரமங்களை தந்தாலும், இறுதியில் அவனருளினால் காப்பாற்றி விடுவார். அதுதான் அவரின் தாய்ப்பாசம். பகிர்வு எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி சகோதரி.//

      உண்மை இறைவன் தாய் போல கருணை உள்ளவன். அனைவரையும் காத்து அருள்வார்.
      உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி கமலா.



      நீக்கு
  17. ஒவ்வொருவர் செய்த பனி சிற்பமும் சிறப்பு. பேரன் பொம்மைகளையும் நிறுத்திக் கற்பனை வளத்தோடு காட்சிப்படுத்தி இருக்கிறான். படங்கள் அனைத்தும் அருமை.

    கழுகுகளின் போராட்டம் நெகிழ்ச்சி. நீங்கள் சொல்லியிருப்பது போலவே நல்லபடியாகக் குஞ்சுகளைப் பொரித்து மகிழ்ச்சியுடன் பறக்கட்டுமாக!

    பதிலளிநீக்கு
  18. குடும்பமாக அனைவரும் செய்த பனிச் சிற்பங்கள் மிகவும் அழகு. நல்ல மகிழ்ச்சியான நேரமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //குடும்பமாக அனைவரும் செய்த பனிச் சிற்பங்கள் மிகவும் அழகு. நல்ல மகிழ்ச்சியான நேரமாக இருந்திருக்கும்.//

      ஆமாம், நல்ல மகிழ்ச்சியான நேரம் தான் மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு