வியாழன், 23 பிப்ரவரி, 2023

பனி மழை பொழிகிறது



பனி மூடிய சிகரம்


மூன்று நாள் விடுமுறை  சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை.   பிப்ரவரி மூன்றாவது திங்கட்கிழமை "ஜனாதிபதி தினம்".
முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்கடனை கெளரவிக்கும்  விடுமுறை தினமாக  அமெரிக்காவில் உள்ளது.

 வடக்கு அரிசோனாவில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஃபிளாக்ஸ்டாப்,( Flagstaff )   என்ற ஊருக்கு அழைத்து போனான் மகன் . 

பேரன் சனிக்கிழமை  பெரிய நூலகத்தில்  தன்னார்வலராக பணி செய்ய  போய் விட்டான். அதனால் ஞாயிறும், திங்களும் பயணத்திட்டம் வகுத்து அழைத்து சென்றான்.
பனி பொழிவும் , பனி சறுக்கு விளையாட்டும் பார்க்கலாம்  என்று போனோம். மகன் முன்பு குடும்பத்தோடு பார்த்து இருக்கிறான். எனக்கும் அவன் அத்தைக்கும்  காட்ட அழைத்து சென்றான்.

ஊரின் ஆரம்பத்திலிருந்து நீண்ட தொடராக மரகத பச்சை  வண்ணத்தில் பாண்டெரோசா   பைன் மரங்கள்  மிகவும் அழகாய் நம்மை வரவேற்கும்.

மகன் ஊர்  முழுவதும் உள்ள மலைகளில்  கள்ளிச்செடிகள் என்றால் இந்த ஊர் மலை முழுவதும்  பைன் மரங்கள்.

குவிந்து கிடக்கும் பனி

மலைச்சிகரத்திற்கு போகும் வாகனம் கிளம்பும் இடம்

6 பேர் அமர்ந்து போகலாம், நாங்கள் 5 பேர் மட்டும் பயணம் செய்தோம்.

குளிருக்கு அடக்கமாக  இயற்கை அழகை பார்க்கும் விதமாக இருக்கிறது. 


இப்படி திறந்த  வண்டியில் ரோலர் ஸ்கேட்டிங்க் செய்பவர்கள் பயணம் செய்கிறார்கள்.

ரோலர் ஸ்கேட்டை காலில் மாட்டிக் கொண்டே அதில் அமர்ந்து வந்து மலை உச்சியில் இறங்கி கொள்கிறார்கள்

மலையின் உச்சி

நாங்கள் இந்த இடம் வரை வந்து பின் கீழே இறங்காமல்
வந்து விட்டோம். இறங்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் . மீண்டும் இயற்கையை, பனி சறுக்கு செய்து கொண்டு போகிறவர்களை  ரசித்து கொண்டே   இறங்ககலாம்,  என்று சொல்லி  கதவை திறந்து பேசி விட்டு நன்கு மூடி  வாழ்த்தி அனுப்பி விடுகிறார்கள். மேலே போக 4 நிமிடம், கீழே இறங்க நாலு நிமிடம்  என 8 நிமிட பயணம் அருமையாக இருந்தது.

பேரன் சறுக்கி கொண்டு வந்தவர்களை பார்த்து கை அசைத்தான், அவர்களில் சிலர் கை அசைத்து சென்றனர்.

முன்பு மானஸா தேவி கோவிலுக்கு இந்த மாதிரி ரோப் காரில் பயணம் செய்து இருக்கிறோம். அதன் பேர் " மானசா தேவி உடன்கடோலா"

சிவகங்கை பூங்காவிலும் போய் இருக்கிறோம், சிறிது தூரத்தில் அகழிக்கு நடுவே இருக்கும் கோயில் வரை போகும்.  இப்போது அகழியில் படகு சவாரி மட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.



பனி சறுக்கு விளையாட்டு செய்பவர்கள் இங்கு இறங்கி கொண்டு மலை உச்சியிலிருந்து சறுக்கி கொண்டே வருகிறார்கள்.

அமர்ந்து இருந்த வண்டி கண்ணாடி ஜன்னல் வழியாக  எடுத்த படங்கள் 

அடிமரமே தெரியவில்லை பனியில் புதைந்து இருக்கு


பின் பக்கம் ஜன்னல் வழியாக கீழே இறங்கும் போது எடுத்த படம்



                                        பார்த்து விட்டு இறங்கியாச்சு

கொஞ்ச நேரம் கணப்பில் குளிர் காய்தல்
பனி துகள் விழுவது  தெரிகிறதா?



பனி மழையில் சிறிது நனைதல்





வெள்ளை  பனி மணல், கையில் எடுத்தால் மணல் மணலாக இருக்கிறது.  ஓரத்தில் தள்ளி வைக்கப்பட்டது பறாங்கல் மாதிரி இருக்கிறது

பாதையோரம் மலைகள் எல்லாம் பனி உறைந்து கிடக்கிறது.
சாலையை சுத்தம் செய்து ஒரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

  மரத்துக்கு கீழே  பனி, 
சாலையின் இரு பக்கமும் 
ரோலட் ஸ்கேட்
கழிவறை வசதியாக , சுத்தமாக இருந்தது . 

சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தது, இவ்வளவு மக்கள் கூடும் இடம் குப்பைகளை பார்க்க முடியவில்லை.

SKI LIFT





 வரிசையில் நின்று உணவுகளை வாங்கி வந்தான், ஒரு பெண் அப்பா, அம்மாவிடம் கோபித்து கொண்டு மேஜைக்கு அடியில் அமர்ந்து இருக்கிறாள்


உணவு  வெளியே விற்கிறார்கள்,  உணவு சாப்பிட இடம் உள்ளெ இருக்கிறது  , நாங்கள் சீஸ் பீட்சா, சீஸ் பர்க்கர்,  வாங்கி சாப்பிட்டோம்.

உள்ளே அமர்ந்து சாப்பிட  இடம் இல்லை, நிறைய கூட்டம் , அதனால் வெளியே  அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.


குளிர்கால சாகச பனி சறுக்கு விளையாட்டு 

பனி சறுக்கு விளையாட்டு சிறிய காணொளிதான்


பனி மழை பொழிகிறது
சிறிது நேரம் ஒன்றும் தெரியவில்லை
இடை இடையே நடைபாதையை சுத்தம் செய்கிறார்கள்

இருபக்கமும் வான் உயர்ந்த மரங்களுக்கு நடுவில்  மலை சிகரத்தின் உச்சிக்கு போகிறது


அடுத்து போக காத்து இருப்பவர்கள்

                                          போலீஸ் வாகனம்

  மரங்களுக்கு இடையே நிறைய சின்னதும், பெரிதுமாக  "கைலை மலை" வடிவத்தில் பனி கொட்டி கிடக்கிறது. காரில் போகும் போது பார்த்தக் காட்சிகள்
.
அங்கு நாலுமணிக்கு மேல் அனுமதி இல்லை அதனால் கீழே இறங்கி விட்டோம், வரும் வழியெல்லாம் அழகான இயற்கை காட்சி,  வெண்மேகம், நீலவானம், கீழே வெள்ளைபனி, பசுமையான மரங்கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ரசித்து கொண்டே தங்கும் விடுதிக்கு வந்து விட்டோம்.

பத்து நாட்கள் முன்  சளி,  தொண்டைவலி,  இருமல் கொஞ்சம் படுத்தி கொண்டு இருந்தது.  மருந்து கொடுத்தாள் மருமகள்.  மழைவிட்டும் தூவானம் போல  இருமல் மட்டும் இருந்தது. மருந்து எடுத்து கொண்டு போனோம். அங்கு போனதும் அவை எல்லாம் மறந்தேன் .

இயற்கையின்  அழகை கண்டு. அழகை ரசித்து கீழே பார்க்காமல்  பனிக்கட்டி வழுக்கி கீழே விழுந்தேன். பூமாதேவி தாங்கி கொண்டாள் .அடி பலமாக படவில்லை.புதிதாக  பனி விழுந்து இருக்கும் இடம் என்றால் கால் புதைகிறது, கொஞ்சம் நாள் ஆன பனி  பாறாம்கல்லாக இருக்கிறது.   உருகி ஓடிய தண்ணீர்  மெல்லிய  கண்ணாடி போல உறைந்து இருக்கிறது, அதை பார்க்காமல்   மிதித்து விட்டால் வழுக்கி விடும் , பார்த்து நடக்க வேண்டும். 

அடுத்த நாள் பனியில் சிற்பங்கள் செய்து மகிழ்ந்தோம் வேறு ஒரு இடத்தில். அது இன்னொரு பதிவில்.

இன்று தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு  காட்டி கொண்டு இருக்கிறார்கள். 

மலைச்சிகரம் பாதை ஒன்றுமே தெரியவில்லை.

அதிக காற்றும் , பனி பொழிவும் மழை மாதிரி கொட்டி கொண்டு இருக்கிறது, அதனால் அங்கு போக முடியாது  பாதை அடைக்கப்பட்டு விட்டது.

நல்லவேளை விடுமுறை நாளில்  இல்லை.

பார்க்க அழகை தரும் பனி மழை! ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் மக்களுக்கு. தமிழ் நாட்டிலும்  அதிக பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , பயிர் பச்சைகளுக்கு பாதிப்பு என்கிறார்கள்.

 ஜம்மு , காஷ்மீர்  எல்லையோரத்தில் கடுமையான பனி பொழிவு என்கிறார்கள். எல்லை பாதுகாப்பில் கடுங்குளிரில் நாட்டை காக்கும் பாதுகாப்பு வீரர்களை நினைத்து கொண்டேன், அவர்களுக்கு மனதில் வணக்கம் பல சொன்னேன். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

53 கருத்துகள்:

  1. தன்னார்வலராய் பணியாற்றுவது ஜஸ்ட் ஆர்வமா?  மாண்டிட்டரியா?  பனி மூடிய சிகரம் எவரெஸ்ட்டை நினைவுபடுத்துகிறது! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //தன்னார்வலராய் பணியாற்றுவது ஜஸ்ட் ஆர்வமா? மாண்டிட்டரியா?//


      பள்ளி ப்ராஜெக்ட். 15 மணி நேரம் செய்து இருக்க வேண்டும்.

      //பனி மூடிய சிகரம் எவரெஸ்ட்டை நினைவுபடுத்துகிறது! //
      ஆமாம்.

      நீக்கு
  2. எவ்வளவு உயரத்துக்கு பனி குவிந்து கிடைக்கிறது...  பணியையும் கொண்டாடி அதிலும் வீர விளையாட்டுகளை பொழுதுபோக்காய் விளையாடுவது ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எவ்வளவு உயரத்துக்கு பனி குவிந்து கிடைக்கிறது... பணியையும் கொண்டாடி அதிலும் வீர விளையாட்டுகளை பொழுதுபோக்காய் விளையாடுவது ஆச்சர்யம்.//

      ஆமாம், இந்த சமயம் தான் பனி சறுக்கு விளையாட முடியும்.
      குளிரை தாங்கும் சக்தி கிடைக்கிறது. குளிர் குளிர் என்று போத்தி படுத்தால் தான் குளிர் தெரியும்.

      நீக்கு
  3. சிவகங்கை பூங்கா வண்டியில் நானும் பயணித்திருக்கிறேன்! அது ஆச்சு கனகாலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிவகங்கை பூங்கா வண்டியில் நானும் பயணித்திருக்கிறேன்! அது ஆச்சு கனகாலம்!//

      ஆமாம், நான் போயும் 17 வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. பனிச்சறுக்கு, பனிமூடிய இடங்கள் படங்கள் சுவாரஸ்யம்.  செம ஜில்லென்று இருந்திருக்கும்.  கணப்பு இதமாய் இருந்திருக்கும்.  காணொளி கண்டேன்.  உத்தமன், ஆகலேலக்ஜா படக்காட்சிகள் நினவினுக்கு வந்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பனிச்சறுக்கு, பனிமூடிய இடங்கள் படங்கள் சுவாரஸ்யம். செம ஜில்லென்று இருந்திருக்கும். கணப்பு இதமாய் இருந்திருக்கும். காணொளி கண்டேன். உத்தமன், ஆகலேலக்ஜா படக்காட்சிகள் நினவினுக்கு வந்தன!//

      மிகவும் குளிர். . ஜில்லென்ற காற்று. கண்பபு இதம் தான்.
      நீங்கள் சொன்ன படங்கள் பார்த்தது இல்லை, வேறு பல இந்தி சினிமாக்கள், அன்பேவா படங்களில் ஐஸ் ஸ்கேடிங்க் பார்த்து இருக்கிறேன். சிம்லா, காஷ்மீர் காட்டுவார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. எனது உறவினரின் மகள் - எனக்கும் மகள் முறை - தற்போது அங்கே தான் கணவருடன் இருக்கின்றாள்.. சிறு குழந்தைகள் இருவரும் சொல்கின்றார்களாம் ஊருக்குப் போய் விடலாம் என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //எனது உறவினரின் மகள் - எனக்கும் மகள் முறை - தற்போது அங்கே தான் கணவருடன் இருக்கின்றாள்.. சிறு குழந்தைகள் இருவரும் சொல்கின்றார்களாம் ஊருக்குப் போய் விடலாம் என்று!..//

      ஓ! அப்படியா, அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும் . இந்த ஊர் நாலு பருவ காலங்களிலும் நன்றாக இருக்கும் என்கிறார்கள்,

      நீக்கு
  6. நேர்த்தியான காட்சிகள்.. அழகின் வண்ணம்..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேர்த்தியான காட்சிகள்.. அழகின் வண்ணம்..

      மகிழ்ச்சி..//
      ஆமாம், இயற்கையின் அழகு கொட்டி கிடக்கிறது

      நீக்கு
  7. நல்ல விவரங்கள்.. அழகான படங்கள்.

    இப்படியெல்லாம் இருந்தால் தான் மனதில் சோர்வு தோன்றாது..

    இனிய பதிவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விவரங்கள்.. அழகான படங்கள்.//

      நன்றி.

      //இப்படியெல்லாம் இருந்தால் தான் மனதில் சோர்வு தோன்றாது..//

      ஆமாம், கவலைகளை மறக்க செய்கிறது. பேரனும் ரசித்துப்பார்த்து நம்மையும் அதை எல்லாம் காட்டி பார்த்தீர்களா என்று கேட்கும் போது மகிழ்ச்சி. அண்டம் காக்கா மிக அழகாய் பெரிதாக இருந்தது , உங்களுக்கு பிடிக்குமே பறவையை எடுக்க எடுங்க எடுங்க என்றான்.
      அது வெகு தூரத்தில் இருந்தது.

      //இனிய பதிவு..

      நலம் வாழ்க..//
      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


      நீக்கு
  8. எல்லாம் அழகிய காட்சிகள்.
    மிகவும் தெளிவாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பயண அனுபவங்கள் சிறப்பு, அடுத்த நிகழ்வையும் அறிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //எல்லாம் அழகிய காட்சிகள்.
      மிகவும் தெளிவாக எடுத்து இருக்கிறீர்கள்.//

      நன்றி.

      //பயண அனுபவங்கள் சிறப்பு, அடுத்த நிகழ்வையும் அறிந்து கொள்ள ஆவல்//
      அடுத்த பதிவை விரைவில் கொடுக்க பார்க்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.


      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் அட்டகாசம்... யப்பா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அட்டகாசம்... யப்பா...!//

      நன்றி.

      நீக்கு
  10. // இவ்வளவு மக்கள் கூடும் இடம் குப்பைகளை பார்க்க முடியவில்லை.... //

    மக்கள் மனதில் அவை இல்லை என்பதால்...

    ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மக்கள் மனதில் அவை இல்லை என்பதால்..//
      மக்கள் குப்பை கூடைகளில் குப்பைகளை கொட்ட வேண்டும் என்பதை மனதில் ஏற்றி வைத்து இருக்கிறார்கள். அங்கு வாழும் நம் மக்களும் அதை கடைபிடிக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. பேரன் சனிக்கிழமை பெரிய நூலகத்தில் தன்னார்வலராக பணி செய்ய போய் விட்டான்.//

    அங்க் இது போன்று பல நல்ல நிகழ்வுகள் உண்டு.

    நல்ல விஷயம்.

    இது போன்று, கல்லூரிக்குச் சேரும் முன் சில வேலைகள் செய்திருப்பதும் அவசியம் சில ப்ராஜெக்ட் அனுபவங்கள் இருந்தால் கூடுதல் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      பேரன் சனிக்கிழமை பெரிய நூலகத்தில் தன்னார்வலராக பணி செய்ய போய் விட்டான்.//

      அங்க் இது போன்று பல நல்ல நிகழ்வுகள் உண்டு.//

      ஆமாம் , பள்ளியில் சொல்லி தருகிறார்கள்.

      //இது போன்று, கல்லூரிக்குச் சேரும் முன் சில வேலைகள் செய்திருப்பதும் அவசியம் சில ப்ராஜெக்ட் அனுபவங்கள் இருந்தால் கூடுதல் சிறப்பு.//

      ஆமாம் கீதா, அதற்குதான் இந்த வேலைகளை செய்கிறார்கள்.
      அடுத்த 9 ம் வகுப்புக்கு இந்த ப்ராஜெக்ட்.

      நீக்கு
  12. பைன் மரக் காட்சி கூடவே வெள்ளைப் பனி - பச்சையும் வெண்மையும் கண்ணிற்கு விருந்தாக...

    அரிசோனா கொஞ்சம் வறண்ட பிரதேசம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்...

    பனி குவிந்து கிடப்பது அழகோ அழகு. சிம்லா/மணாலி போன நினைவு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைன் மரக் காட்சி கூடவே வெள்ளைப் பனி - பச்சையும் வெண்மையும் கண்ணிற்கு விருந்தாக...//

      ஆமாம் கீதா, பார்க்கவே நன்றாக இருக்கிறது.

      அரிசோனா கொஞ்சம் வறண்ட பிரதேசம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்...//
      வறண்ட பிரதேசம் என்றாலும் மழை பெய்தால் மலை எல்லாம் பசுமை போர்த்தி கொண்டு பார்க்க அழகாய் இருக்கும்.

      //பனி குவிந்து கிடப்பது அழகோ அழகு. சிம்லா/மணாலி போன நினைவு வருகிறது.//
      ஆமாம்.

      நீக்கு
  13. கோண்டோலா, ஆமாம் அதிலிருந்து பார்த்துக் கொண்டே செல்வது என்ன ஒரு மகிழ்ச்சி....

    ரோலர் ஸ்டேட்டிங்க் கேட்டதுண்டு காணொளியில் பார்த்ததுண்டு இப்ப உங்க மூலமாகவும்....அது கூட வித்தியாசமாக இருக்கும் போல!!! அந்தப் பயணம்!!! பனியிலா மரங்களின் நிழல் தெரிகிறது? கோண்டோலா கண்ணாடியிலோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோண்டோலா, ஆமாம் அதிலிருந்து பார்த்துக் கொண்டே செல்வது என்ன ஒரு மகிழ்ச்சி..//

      மலை உச்சிக்கு போகும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது கீதா

      //ரோலர் ஸ்டேட்டிங்க் கேட்டதுண்டு காணொளியில் பார்த்ததுண்டு இப்ப உங்க மூலமாகவும்....அது கூட வித்தியாசமாக இருக்கும் போல!!! அந்தப் பயணம்!!! பனியிலா மரங்களின் நிழல் தெரிகிறது? கோண்டோலா கண்ணாடியிலோ?//

      ரோலர் ஸ்கேடிங்க் கால்களில் மாட்டி கொண்ட படம் தானே மர நிழல் இல்லை மரத்திற்கு பக்கத்தில் வந்தார்கள்.
      நம் ரோப் கார் கீழே ஸ்கேடிங்க் செய்து கொண்டு போவார்கள் .

      நீக்கு
  14. நாங்கள் இந்த இடம் வரை வந்து பின் கீழே இறங்காமல்
    வந்து விட்டோம். இறங்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் . மீண்டும் இயற்கையை, பனி சறுக்கு செய்து கொண்டு போகிறவர்களை ரசித்து கொண்டே இறங்ககலாம், என்று சொல்லி கதவை திறந்து பேசி விட்டு நன்கு மூடி வாழ்த்தி அனுப்பி விடுகிறார்கள். மேலே போக 4 நிமிடம், கீழே இறங்க நாலு நிமிடம் என 8 நிமிட பயணம் அருமையாக இருந்தது.//

    ஏன் அக்கா இறங்கவில்லை? அங்கு ஒன்றுமில்லையோ? அல்லது அங்கு கவனித்து ஏற்றி என்று கோண்டோலா ஸ்டேஷன் இல்லையோ?
    என்றாலும் அருமையா இருந்திருக்கும்...

    கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏன் அக்கா இறங்கவில்லை? அங்கு ஒன்றுமில்லையோ? அல்லது அங்கு கவனித்து ஏற்றி என்று கோண்டோலா ஸ்டேஷன் இல்லையோ?
      என்றாலும் அருமையா இருந்திருக்கும்...//
      சுற்றுலா பயணிகளுக்கு இறங்க அனுமதி இல்லை. ரோலர் ஸ்கேடிங்க் செய்பவர்கள் மட்டுமே இறங்க வேண்டும்.
      எங்களுக்கு முன்பு போனவர்கள் சிலர் கையில் எடுத்து கொண்டு போனார்கள் ரோலர் ஸ்கேட் கருவியை அவர்கள் மட்டும் அங்கு இறங்கலாம். ஸ்கேடிங்க் செய்பவர்களை மலை உச்சிக்கு அழைத்து போகவே இந்த வண்டிகள். அவர்கள் காலை முதல் மாலை வரை ஸ்கேடிங்க் செய்ய எத்தனை தடவை வேண்டுமென்றாலும் போகலாம், 200 டாலர் பணம் கட்டி போகிறார்கள்.
      நமக்கு போக வர கட்டணம் 30 டாலர் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. பனிச்சறுக்கு ஆஹா!!!!

    கண்ணாடி வழி எடுத்த படங்களும் அழகா இருக்கு கோமதிக்கா..

    பின் பக்கம் ஜன்னல் வழி இறங்கும் போது எடுத்த படம் செம...அட்டகாசம்!!! நல்ல ஆங்கிள் வியூ...கோமதிக்கா...ஏதோ பெயின்டிங்க் போல இருக்கு!!!!! அருமையா வந்திருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பனிச்சறுக்கு ஆஹா!!!!//

      ஆமாம், பார்க்கவே அழகு.

      //கண்ணாடி வழி எடுத்த படங்களும் அழகா இருக்கு கோமதிக்கா..//
      நன்றி.

      //பின் பக்கம் ஜன்னல் வழி இறங்கும் போது எடுத்த படம் செம...அட்டகாசம்!!! நல்ல ஆங்கிள் வியூ...கோமதிக்கா...ஏதோ பெயின்டிங்க் போல இருக்கு!!!!! அருமையா வந்திருக்கு...//

      ஆமாம் , அலைபேசியில் எடுத்த படம், காமிரா தூரத்தில் இருப்பதை எடுக்கலாம் என்று எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு போனேன், ஆனால் கையுறையை கழற்றி எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை அதனால் ஒரு சில படங்கள், வீடியோ மட்டும் எடுத்தேன்.

      நீக்கு
  16. கணப்பு - இதம்

    பனித் துகள் விழுவது நன்றாகத் தெரிகிறது...

    வெள்ளை மழை இங்கு பொழிகின்றது - பாடினீங்களா கோமதிக்கா!!!

    பனி மணலை எடுத்து லட்டு ஹாஹாஹா பந்துபிடித்து எறிந்து விளையாடலாம்...ஆனால் அந்தப் பந்து நம் மீது பட்டால் நல்லா வலிக்கும்...ஒரு சில்லிப்போடு...நரம்புகளில் ஊடுருவி!!!!

    சாலை இருபுறம் எல்லாம் மனதை மயக்கும ழகு! பாருங்க அங்கும் கூட சுத்தமான கழிவறை...

    அங்கு மக்களும் குப்பை போடாமல் பாதுக்காக்கிறாங்க...

    பனிச்சறுக்கு விளையாட்டு காணொளி சூப்பர்...

    மகனும் பேரனும் நிற்கும் படத்தில் பின் பக்கம் கப்பல் போன்று இருக்கு

    பனி மழை பொழியும் அந்தப் படம் ஹையோ ரொம்ப ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா...அட்டகாசமாக வந்திருக்கு தூரத்தில் மக்கள்...முதல் படம்,,...

    அப்புறம் உச்சிக்குச் செல்லும் அந்த லிஃப்ட் போன்றது அது செமையா இருக்கு அந்தப் படம்... அது போல அந்த ரொடு வளையும் இடத்தில் இடப்புறம் பனி மலை...செம படம்...அருமையான கோணம்

    //அங்கு போனதும் அவை எல்லாம் மறந்தேன் .

    இயற்கையின் அழகை கண்டு. அழகை ரசித்து கீழே பார்க்காமல் பனிக்கட்டி வழுக்கி கீழே விழுந்தேன். பூமாதேவி தாங்கி கொண்டாள் .அடி பலமாக படவில்லை.//

    இயற்கையைப் பார்த்தால் பத்தும் பறக்கும்!!!!!

    உருகி ஓடிய தண்ணீர் மெல்லிய கண்ணாடி போல உறைந்து இருக்கிறது, அதை பார்க்காமல் மிதித்து விட்டால் வழுக்கி விடும் , பார்த்து நடக்க வேண்டும். //

    ஆமாம் இதுதான் ஆபத்து!!!

    நல்ல காலம் அடிபட்வில்லை....இப்போது உங்கள் உடல் நலம் தேவலாம்தானே கோமதிக்கா

    நல்ல காலம் நீங்கள் போகும் போது பனி மழையால் பாதை அடைந்திருக்கவில்லை.

    படங்கள் எல்லாம் பார்த்து பார்த்து ரசித்தேன் பதிவையும் ரசித்து வாசித்தேன் கோமதிக்கா

    அருமை எல்லாமே...அடுத்து பனியில் செதுக்கியவற்றைக் காண ஆவலுடன்...மகனும் பேரனும் ஏற்கனவே செய்யறவங்க இதுல செய்யறதைப் பத்தி கேட்கணுமா என்ன!!?

    கீதா


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கணப்பு - இதம்//
      ஆமாம்.

      பனித் துகள் விழுவது நன்றாகத் தெரிகிறது...//
      மகிழ்ச்சி.

      //வெள்ளை மழை இங்கு பொழிகின்றது - பாடினீங்களா கோமதிக்கா!!!//
      நினைப்பு வந்தது , புதிய வானம், புதிய பூமி , எங்கும் பனி மழை பொழிகிறது பாடலும் நினைவுக்கு வந்தது.

      //பனி மணலை எடுத்து லட்டு ஹாஹாஹா பந்துபிடித்து எறிந்து விளையாடலாம்...ஆனால் அந்தப் பந்து நம் மீது பட்டால் நல்லா வலிக்கும்...ஒரு சில்லிப்போடு...நரம்புகளில் ஊடுருவி!!!!//

      பேரன், மகன், மருமகள் எல்லாம் விளையாடினார்கள். காணொளி எடுத்தேன்.

      //சாலை இருபுறம் எல்லாம் மனதை மயக்கும ழகு! பாருங்க அங்கும் கூட சுத்தமான கழிவறை...//
      இந்த மாதிரி இடங்களில் கண்டிப்பாய் வேண்டும். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேன்டும்.

      //அங்கு மக்களும் குப்பை போடாமல் பாதுக்காக்கிறாங்க...//
      பழக்கம், வழக்கமாக மாறி விட்டது.

      //பனிச்சறுக்கு விளையாட்டு காணொளி சூப்பர்...//
      நன்றி.

      //இயற்கையைப் பார்த்தால் பத்தும் பறக்கும்!!!!!//

      உண்மை.

      //நல்ல காலம் அடிபட்வில்லை....இப்போது உங்கள் உடல் நலம் தேவலாம்தானே கோமதிக்கா//

      இப்போது உடல் நலம் தேவலை கால் பனியில் புதைந்து , புதைந்து நடந்தது கொஞ்சம் வலி அது மாத்திரை போட்டதும் சரியாகி விட்டது, இருமலும் குணம்.

      //நல்ல காலம் நீங்கள் போகும் போது பனி மழையால் பாதை அடைந்திருக்கவில்லை.//

      ஆமாம், நாங்கள் போகும் போது இப்படி நடந்து இருந்தால் கஷ்டம் கடவுளுக்கு நன்றி.



      //அருமை எல்லாமே...அடுத்து பனியில் செதுக்கியவற்றைக் காண ஆவலுடன்...மகனும் பேரனும் ஏற்கனவே செய்யறவங்க இதுல செய்யறதைப் பத்தி கேட்கணுமா என்ன!!?//

      ஆமாம், என்னையும் உறசாகபடுத்தி செய்ய வைத்து விட்டார்கள்.

      //படங்கள் எல்லாம் பார்த்து பார்த்து ரசித்தேன் பதிவையும் ரசித்து வாசித்தேன் கோமதிக்கா//

      பதிவை ரசித்து படித்து நிறைய பின்னூட்டங்கள் கொடுத்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி. நன்றி நன்றி கீதா.




      நீக்கு
  17. காலையிலேயே இதனைப் படித்துவிட்டேன். கருத்திட முடியவில்லை

    படங்கள் கொள்ளையழகு. எனக்கு இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லணும் என்று நிரம்ப ஆசை.

    நீங்கள் enjoy செய்ததே மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //காலையிலேயே இதனைப் படித்துவிட்டேன். கருத்திட முடியவில்லை//

      காலை நேரம் நிறைய வேலைகள் இருக்கே! பரவாயில்லை முடிந்த போது வாருங்கள். எனக்கும் இப்போது சில நேரம் உடனே பதில் கொடுக்க முடியவில்லை, இரவு ஆகி விடுகிறது, அதனால் காலையில் பதில் கொடுக்கிறேன்.

      //படங்கள் கொள்ளையழகு. எனக்கு இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லணும் என்று நிரம்ப ஆசை.//
      இறைவழிபாடு போல , இயற்கையை கண்டு களிப்பதும் ஆராதனைதான். வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.

      //நீங்கள் enjoy செய்ததே மிக்க மகிழ்ச்சி//

      ஆமாம், அதற்கு ஒரு வாரம் முன்பே புதிய பூட்ஸ் , சால்வை . பனிகுல்லா என்று மகனும்,மருமகளும் வாங்கி கொடுத்தார்கள்.
      "எதற்கு நிறைய இருக்கே! என்ற போதும் சொல்லவில்லை. சனிக்கிழமை இரவுதான் சொன்னார்கள் ஞாயிறு காலை போகிறோம் என்று.
      நங்கு ரசித்தேன்.

      நீக்கு
  18. மலைபோல் குவிந்திருக்கும் பனி...அதில் நடப்பதே ரொம்ப நல்ல அனுபவமாக இருந்திருக்கும் (அதில் பனி உருகி கண்ணாடிபோல பனி படர ஆரம்பித்தால்தான் ஆபத்து என்று படித்திருக்கிறேன். அத்தகைய பனியில் வழுக்கு விழுவது பெரும் ஆபத்து. )

    மகன், மருமகள், பேரன் மற்றும் உங்கள் படங்களைப் பார்த்தேன்.

    அங்கு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்ததா? ஐஸ்க்ரீம் சாப்பிடாதது ஒன்றுதான் குறை (வெளியே பனி...உள்ளேயும் பனி ஹா ஹா ஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலைபோல் குவிந்திருக்கும் பனி...அதில் நடப்பதே ரொம்ப நல்ல அனுபவமாக இருந்திருக்கும் (அதில் பனி உருகி கண்ணாடிபோல பனி படர ஆரம்பித்தால்தான் ஆபத்து என்று படித்திருக்கிறேன். அத்தகைய பனியில் வழுக்கு விழுவது பெரும் ஆபத்து. )//

      மேலே அவ்வளவு நடக்கவில்லை. கீழே வந்து பனிச்சிற்பம் செய்த இடத்தில் தான் புதைய புதைய நடக்க வேண்டி இருந்தது அது நல்ல அனுபமாக இருந்தது. கீழே விழந்த காரணத்தால், மேலே நடக்கும் போது பேரன், மருமகள் இருவரும் சில இடங்களில் கை பிடித்து கொண்டு கவனமாக அழைத்து வந்தார்கள். கவின் தாத்தா கவனம் கீழே பார்த்து வா என்று சொல்லி கொண்டே இருப்பார்கள், அது போல பேரனும் சொன்னான், அவனிடம் சொன்னேன், "தாத்தா கீழே விழுந்து விடாதே பார்த்து வா என்பார்கள்" நீயும் அப்படியே சொல்கிறாய் என்று.

      //மகன், மருமகள், பேரன் மற்றும் உங்கள் படங்களைப் பார்த்தேன்.//

      மகிழ்ச்சி.

      //அங்கு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்ததா? ஐஸ்க்ரீம் சாப்பிடாதது ஒன்றுதான் குறை (வெளியே பனி...உள்ளேயும் பனி ஹா ஹா ஹா)//

      ஐஸ்க்ரீம் பார்லர் பார்க்கவில்லை ஐஸ் போட்ட குளிர்பானங்கள் குடித்து கொண்டு இருந்தார்கள்.
      குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்பார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.




      நீக்கு
  19. பனி மலைகள் கண் கொள்ளாக்காட்சி. எங்கும் வெண்மை. குளிர் தாங்கக் கூடியதாக இருந்ததா?

    உயர இருந்து எடுத்த படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      பனி மலைகள் கண் கொள்ளாக்காட்சி. எங்கும் வெண்மை. குளிர் தாங்கக் கூடியதாக இருந்ததா?//
      ஆமாம், பனி மலைகள் கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.
      குளிர் தாங்கும் ஆடைகள் போட்டு போய் இருந்தோம் அதனால் தாங்க முடிந்தது.


      //உயர இருந்து எடுத்த படங்களும் அழகு.//

      ஆமாம். மலை மேல் அழகுதான். அவர்கள் நிற்க விட்டு இருந்தால் இன்னும் படங்கள் எடுத்து இருக்கலாம், அவர்கள் வண்டியை விட்டு கீழே இறங்ககவே விடவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. என் பசங்கள்ட சொல்லிக்கிட்டே இருப்பேன், இந்த பனியில் செல்லும் என் ஆசையை. அதனால் அந்த மாதிரி நாடுகளுக்கு வேலைக்குப் போனால், நல்ல குளிரில் அங்கு சில மாதங்கள் வந்து இருக்கிறேன் என்று சொல்லுவேன். இந்தியாவின் காஷ்மீர்கூட இப்படி இருக்கும் என்று படித்த பிறகு, ஒரு தடவை காஷ்மீர் செல்லணும் என்ற ஆசை வந்திருக்கிறது.

    வெயில் காலம் கூட கடத்திவிடலாம். குளிர் காலம் கடினம் என்று பலர் சொல்லுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லை பனிக்காலத்தில் அணியக் கூடிய் ஆடைகளை அணிந்தால் அவ்வளவாக குளிராது..... என் வேலை நேரத்தில் பாதிக்கும் மேல் நான் பில்டிங்கிற்கு வெளியேதான் வேலை செய்ய வேண்டி இருக்கும் பனிக் கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தாலும் அதற்கிடையேதான் வேலை செய்து கொண்டு இருப்பேன்(போம்) சில சமயங்களில் க்ளோவ்ஸ் அணிய முடியாது அந்த நேரத்தில் கைகள் பயங்கரமாக எரியும் அவ்வளவுதான்

      நீக்கு
    2. எனக்கு அந்த மாதிரி இடங்களில் நல்ல குளிர்காலத்தில் சில மாதங்களாவது வாழ ஆசை மதுரைத் தமிழன். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  21. /என் பசங்கள்ட சொல்லிக்கிட்டே இருப்பேன், இந்த பனியில் செல்லும் என் ஆசையை. அதனால் அந்த மாதிரி நாடுகளுக்கு வேலைக்குப் போனால், நல்ல குளிரில் அங்கு சில மாதங்கள் வந்து இருக்கிறேன் என்று சொல்லுவேன். //

    அது உண்மைதான். மகன், மகளுடன் போய் இருந்து பார்க்கலாம். இப்போது சிறு வயதில் குடும்பத்துடன் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து போய் வாங்க மகிழ்ச்சியாக.

    மகள் டெல்லியில் இருக்கும் போது அங்குள்ள குளிர், அங்குள்ள வெயில் அனுபவித்தோம், மகன் நியுஜெர்சியில் இருக்கும் போது அங்குள்ள குளிர் அனுபவித்தோம்.
    இப்போது இங்கு பார்த்து விட்டோம்.
    ஜம்முவில் தங்கி இருக்கிறோம் குளிரில். உடலை நடுங்க வைக்கும் குளிர்.

    வைஷ்ணவி தேவி கோவிலுக்கு குளிரில் நடந்து தான் போனோம்.
    கேதார்நாத் கோவிலில் பனி விழுந்து எங்கும் காட்சி அளித்தை படம் எடுத்து போட்டு இருக்கிறேன், குளிர் முதுகுதண்டை சிலிர்க்க வைக்கும். டோலியில் போன போது புது அனுபவம். பனியை மலை போல அப்புறபடுத்தி இருப்பார்கள், பனி உருகி அருவி போல கொட்டும். கொஞ்ச படங்கள் தான் போட்டு இருப்பேன். இப்போது என்றால் இன்னும் நிறைய படங்கள் போட்டு இருப்பேன்.
    https://mathysblog.blogspot.com/2012/08/7.html நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலாவா? பசங்களை அவங்க எதிர்காலத்துல அந்த மாதிரி இடங்களுக்கு வேலைக்குப் போகச் சொல்லியிருக்கிறேன். ஹாஹாஹா

      நீக்கு
  22. எங்க மாநிலம் இந்த வருஷம் தமிழ்நாடு மாதிரி ஆகிவிட்டது நோ ஸ்னோவ்....... நேற்று இன்று கூட பல மாநிலங்களில் 2 அடி அளவிற்கு ஸ்னோவ் பல மாநிலங்கள் முடங்கி போய் கிடக்கின்றன 1500க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து ஆனால் எங்க மாநிலத்தில் ஒன்றுமே பாதிப்பு இல்லாமல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

      //பல மாநிலங்களில் 2 அடி அளவிற்கு ஸ்னோவ் பல மாநிலங்கள் முடங்கி போய் கிடக்கின்றன 1500க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து ஆனால் எங்க மாநிலத்தில் ஒன்றுமே பாதிப்பு இல்லாமல் இருக்கிறது//

      ஆமாம், தொலைகாட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  23. படங்கள் அழகு என்றாலும் நிறைய இருப்பதால் திகட்டுகிறது. 

    கொஞ்ச நேரம் முன்பு தான் ஜெயமோகன் காதில் தவாங் பயணக்  கட்டுரையும் இமய பனி படர்ந்த படங்களையும் பார்த்து வந்தேன். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு என்றாலும் நிறைய இருப்பதால் திகட்டுகிறது. //
      ஓ அப்படியா !

      //கொஞ்ச நேரம் முன்பு தான் ஜெயமோகன் காதில் தவாங் பயணக் கட்டுரையும் இமய பனி படர்ந்த படங்களையும் பார்த்து வந்தேன்.//
      இன்று நிறைய பனி படங்கள் பார்த்து விட்டீர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. /// இயற்கையின் அழகை கண்டு. அழகை ரசித்து கீழே பார்க்காமல் பனிக்கட்டி வழுக்கி கீழே விழுந்தேன். பூமாதேவி தாங்கி கொண்டாள் .அடி பலமாக படவில்லை.. ///

    கவனமாக இருங்கள்..

    கவனமாக இருந்தாலும் இப்படி ஆவதுண்டு..

    இறைவனுக்கு நன்றி..

    வாழ்க நலமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக இருங்கள்..

      கவனமாக இருந்தாலும் இப்படி ஆவதுண்டு..

      இறைவனுக்கு நன்றி..

      வாழ்க நலமுடன்..//

      ஆமாம், கவனமாக இருந்த போதும் இப்படி விழுந்து இருக்கேன். கவனமாக இருக்கிறேன் இனி.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரி

    நலமாக இருக்கிறீர்களா? பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தையும் பார்த்தேன். இன்னமும் பனி பொழியும் சில படங்களை பெரிதாக்கி பார்க்கிறேன். பனி பொழியும் போது கவனமான உடைகள் அணிந்து அதை, அந்த பனிப்பொழிவை ரசிக்கும் போது மனதுக்கு குதூகலமாகத்தான் இருக்கும் அல்லவா? படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.

    இங்கெல்லாம் தங்களை மீண்டும் இயற்கை வனப்பை காண்பதற்காக அழைத்துச் சென்ற தங்கள் மகனுக்கு நன்றிகள். தங்கள் பேரன் மற்றும், மகன் குடும்பத்திற்கு வாழ்த்துகள்.

    எனக்கும் தங்களது பல பதிவுகள், மற்றும் நம் நட்புகள் பல பதிவுகள் என சரிவர படிக்க இயலாமல் போய் விட்டது. மற்றபடி இடையிடையே சிலவற்றை படித்தாலும் கருத்துகளை பதிய இயலவில்லை. இனி அனைவரது பதிவுகளுக்கும் இறைவனருளால் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

    பனி வழுக்கும் தன்மை உடையதாகையால் எங்கு சென்றாலும், கவனமாக இருங்கள். நல்லவேளை.. கீழே விழுந்தும் ஒன்றும் ஆகாமல் காத்த இறைவனுக்கு நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமாக இருக்கிறீர்களா? //
      நலமாக இருக்கிறேன்.

      நீங்கள் நலமா? மகன் ஊருக்கு போய் விட்டார்களா?

      கீதா ரெங்கன் மற்றும் எங்கள் ப்ளாக் மூலம் உங்கள் நலம் அறிந்து கொண்டேன்.
      நீங்கள் மீண்டும் பதிவுகளை வாசிக்க வந்தது மகிழ்ச்சி.

      //அந்த பனிப்பொழிவை ரசிக்கும் போது மனதுக்கு குதூகலமாகத்தான் இருக்கும் அல்லவா? படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//
      சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பனி பொழிவு, பனி சறுக்கு விளையாட்டை நேரில் பார்க்கும் போது குதுகலம்தான்.

      //இங்கெல்லாம் தங்களை மீண்டும் இயற்கை வனப்பை காண்பதற்காக அழைத்துச் சென்ற தங்கள் மகனுக்கு நன்றிகள். தங்கள் பேரன் மற்றும், மகன் குடும்பத்திற்கு வாழ்த்துகள்.//

      ஆமாம், நன்றி சொல்ல வேண்டும், சொல்லி விட்டேன்.

      //எனக்கும் தங்களது பல பதிவுகள், மற்றும் நம் நட்புகள் பல பதிவுகள் என சரிவர படிக்க இயலாமல் போய் விட்டது. மற்றபடி இடையிடையே சிலவற்றை படித்தாலும் கருத்துகளை பதிய இயலவில்லை. இனி அனைவரது பதிவுகளுக்கும் இறைவனருளால் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.//

      எல்லாம் நல்லபடியாக இறவனருளால் தொடரும். நீங்களும் புது பதிவுகள் போடுங்கள்.

      //பனி வழுக்கும் தன்மை உடையதாகையால் எங்கு சென்றாலும், கவனமாக இருங்கள். நல்லவேளை.. கீழே விழுந்தும் ஒன்றும் ஆகாமல் காத்த இறைவனுக்கு நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், இறைவனுக்கு நன்றி சொன்னேன், பூமாதேவிக்கு நன்றி சொன்னேன். அதன் பிறகு பேரன் என்னை தனியாக விடவில்லை கவனமாக பார்த்து அழைத்து வந்தான், அந்த பாட்டியை, என்னை இருவரையும் கவனமாக் பார்த்து கொண்டான்.


      பதிவு நன்றாக உள்ளது.//

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
    2. படங்களும் காணொளியும் பகிர்வும் அருமை. பனிப்பொழிவில் நடக்கும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்த பனிச் சிற்பங்களைக் காணக் காத்திருக்கிறோம்.

      நீக்கு
    3. வணக்கம்ம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //படங்களும் காணொளியும் பகிர்வும் அருமை. பனிப்பொழிவில் நடக்கும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்த பனிச் சிற்பங்களைக் காணக் காத்திருக்கிறோம்.//

      கவனமாக பார்த்து கொள்கிறேன் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு