வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை துலா கட்ட காசி விஸ்வநாதர் கோவில்

மயிலாடுதுறை துலாகட்டம் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில். இதற்கு முந்திய பதிவு  தெப்பக்குள  காசி விஸ்வநாதர்  கோவில்.  இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும்      காசி விஸ்வநாதர் கோவிலுக்கு  அடுத்து நாங்கள் சென்றோம். அந்த கோவில் படங்கள் இந்த பதிவில். (2022ல்) டிசம்பர் 12ம் தேதி போய் வந்த கோவில்களை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன். 


மகாதானத் தெருவில் திருகைலாய பரம்பரை  தருமபுரம் ஆதீனத்தின்   கோவில்.   கோவில் வாசலில் மகன் நிற்கிறான்.

கிழக்கு நோக்கி இருக்கும் வாயில்  இடபக்கம் கோவில் நந்தவனம் உள்ளது , வலபக்கம் யாகசாலை உள்ளது.
பூஜைக்கு எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது குருக்கள் வந்தவுடன் பூஜை நடக்கும் காத்து இருக்கிறார்கள்.
கொடிமரத்து பிள்ளையாரையும், கொடி மரத்தையும்  வணங்கி உள்ளே போகிறோம்.
நால்வர் இருக்கிறார்கள் ரிஷபத்தில்  இருக்கிற சுவாமிக்கு குருக்கள்  பூஜை செய்வது போல சுதை சிற்பங்கள் அழகு

அம்மன் சன்னதி  வாசல் , மடப்பள்ளி இருக்கிறது.


சுவாமி, அம்பாள் விமானம் வடநாட்டு காசி விஸ்வநாதர் கோவில்  போல் கட்டப்பட்டு இருக்கிறது. ஆதீனம் அவர்கள் காசி போய் வந்த நினைவாக இந்த கோவில்  கட்டபட்டதாக    சொல்வார்கள்.
  விஸ்வநாதர் சன்னதி காலையில் வந்து விளக்கு போட்டு போய் இருக்கிறார்கள் அன்பர்கள்.

காசிவிசாலாட்சி சன்னதி  கம்பி தெரியாமல் எடுத்து இருக்கலாம்.  யாரும் வந்து எடுக்க வேண்டாம் என்று சொல்வதற்குள் எடுத்து விடுவோம் என்று எடுத்து விட்டேன்.

தெற்கு பார்த்த அம்மன் சன்னதி வாசல் முகப்பில்  காமாட்சியாக வீற்று இருக்கிறார்  வலபக்கம் மகாலட்சுமியும் , இடபக்கம் சரஸ்வதியும் இருக்கிறார்கள். இந்த கதவை திறக்க மாட்டார்கள், விழா காலம் மட்டும் தான் திறப்பார்கள். சுவாமி சன்னதி வழியே அம்மனையும் தரிசனம் செய்யலாம். தெற்கு பக்கம் கடைவீதியை பார்த்து ஒரு வாசல் இருக்கிறது. அந்த வாசலும் மூடி இருக்கும். கிழக்கு பக்க வாசல் வழியேதான் மக்கள் வந்து போவார்கள்.

மூலவர் இருக்கும் கருவறை  விமானத்தில்  தெற்கு பார்த்து தென்முக கடவுள் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி.
அதற்கு கீழ் கருவறை வெளிபுறசுவரில்(கோஷ்டத்தில்) தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இருதூண்களுக்கு நடுவில் தன் சீடர்களுடன் அழகாய் அமர்ந்து இருக்கிறார். கருவறைசுவற்றை சுற்றி நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை இருக்கிறார்கள்.



வரசித்தி விநாயகர், சோமாஸ் கந்தர்  , அடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகன்  எல்லாவற்றுக்கும் அழகிய விமானங்கள் உள்ளன.


விநாயகர்  சப்த கன்னியர்  பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி , சாமுண்டி. இப்போது  வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில்  வராகி அம்மனை அனைவரும் அதிகமாக  ஆராதனை செய்கிறார்கள். கலியுகத்தில் அதிகமாக அவர் வழிபாடு இருக்குமாம்.  

                                         மகா சரஸ்வதி, நால்வர்
ஞானேஸ்வரர், ஞானேஸ்வரிக்கு அருகில் இருப்பது திருமால் பாதம்.
அந்தக் கால செங்கல் தளம். அப்படியே இருக்கிறது. மழை பெய்து கொண்டே இருப்பதால் பாசம் படிந்து இருக்கிறது
  வெகு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.  இந்த மண்டபத்தில் தான் எங்கள் புனுகீஸ்வரர் கோவில்  வார வழிபாட்டு ஆண்டு விழா , மற்றும் திருவாசக முற்றோதல், தேவார இசை கச்சேரிகள் நடைபெறும். முற்றோதலுக்கு திருவாசக பாடலுக்கு என் கணவர் விளக்கம் சொல்வார்கள். முதலில் புனுகீஸ்வரர் கோவிலில் மட்டும் வார வழிபாடு நடந்த காலம், அப்புறம் தனியாக இந்த கோவிலில் ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்கள் ஆண்டுவிழாவுக்கும் எங்களை அழைப்பார்கள் நாங்கள் கலந்து கொள்வோம். நினைவுகள் பசுமையாக மனதில் உள்ளது. கணவரின்  நினைவுகளுடன் கோவிலை வலம் வந்தேன்.

அடிக்கடி தரிசிக்கும் கோவில் கடைத்தெரு வரும் போது எல்லாம் இந்தக் கோவிலுக்கு வந்து விடுவோம். அமைதியாக இருக்கும். மனதில் அமைதி நிலவும்.

                                                            கஜலட்சுமி



கருவறைக்கு பின் இருக்கும் இந்த மண்டபத்தில் தான்  சொற்பொழிவுகள், தேவார இன்னிசை நடக்கும்


பைரவர்,  சூரியன், நாகர், மற்றும் நவக்கிரகம் உள்ளது


கோவிலுக்கு முன் பக்கம் மலைக்கோவில் என்று அழைக்கும் முருகன் கோவில் உள்ளது. 


பத்துபடிகள் ஏறி போக வேண்டும். சஷ்டி மற்றும் முருகன் விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். பால தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

                                           சின்ன பிரகாரம்.
                             அங்கும் விநாயகர், துர்க்கை உள்ளர்கள்
இருபக்கமும் கம்பி  கதவு உள்ளது. பிரகாரம் சுத்தமாக இருக்கிறது.
முருகன் பிரகாரத்திலிருந்து காசிவிஸ்வநாதர் ஆலயத்தை எடுத்த படம்



கீழே வரும் இந்த ஐந்து படங்கள் மகன் எடுத்த படம்



இங்கு இன்றுதான் சர்வஏகாதசி    ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கும் திருமாலை வணங்கி கொள்வோம்.


கோவில் முழு தோற்றம் தெரிகிறதா ? அதுதான் மகன் எடுத்த இந்தபடம் பகிர்வு.


மழை மேகம் சூழ்ந்து கொண்டது இருட்டி கொண்டு வந்தது. மழை ஆரம்பிக்கும் முன்  மயூரநாதர் கோவில் கிளம்பி விட்டோம். பக்கத்தில் இருக்கும் துலா கட்டம் போனோம், அங்கு இருக்கும் கடைகள் போனோம், அந்த பதிவுகளும் பின்னர் வரும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. கோவில் படங்கள் வெகு அழகு.  கோவிலைச் சுற்றி வந்த உணர்வு.  பழைய செங்கல் தளமே இருப்பது சிறப்பு.  ஸார் இங்கு சிலக்கங்கள் கொடுத்து உரையாற்றி இருக்கிறார் என்கிற தகவல் நெகிழ்ச்சி.  உங்கள் நினைவு எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கோவில் படங்கள் வெகு அழகு. கோவிலைச் சுற்றி வந்த உணர்வு. பழைய செங்கல் தளமே இருப்பது சிறப்பு.//

      ஆமாம், பழைய தளம் வெயிலுக்கும், குளிருக்கும் நல்லது .
      என் நினைவுகள் மாயவரத்திலேயே இருந்து இருக்கலாம். அவர்கள் கோவில்களில் சொற்பொழிவுகள் செய்து கொண்டு, கோவில்களை வழிபட்டு கொண்டு இருந்து இருக்கலாம் என்ற நினைப்பு வந்து போனது. மாயவரம் வந்த நினைவுகள் , அங்கிருந்து கிளம்பிய நினைவுகள் எல்லாம் பந்து மோதின. எல்லாம் இறைவன் சித்தபடிதான் நடக்கும் என்ற எண்ணம் வந்து அமைதி அடைந்தேன்.

      நீக்கு
  2. பின்னணி மேகக்கூட்டங்களுடன் முழு கோவில் தெரியுமாறு மகன் எடுத்திருக்கும் கோவிலின் படம் அழகாக இருக்கிறது.  மகனுக்கும் அப்பாவின் நினைவு அதிகம் வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன் நிறைய படங்கள் எடுத்தான் . பதிவு பெரிதாகி விடும். அதனால் சில முக்கியமான் படங்கள் மட்டும் பகிர்ந்தேன். உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      ஆமாம் , இருவரும் பேசி கொண்டோம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. காசி விஸ்வநாதர் கோயில் படங்களும் கட்டுரையும் நன்று. விரிவாக விவரமாக ஒவ்வொரு சன்னதியையும் பற்றி படங்களுடன் எழுதி இருக்கிறீர்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் , வாழ்க வளமுடன்

      //காசி விஸ்வநாதர் கோயில் படங்களும் கட்டுரையும் நன்று. விரிவாக விவரமாக ஒவ்வொரு சன்னதியையும் பற்றி படங்களுடன் எழுதி இருக்கிறீர்கள். //

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு. கோவிலும் துடைத்துவிட்டார்போல் பளிச்சுனு இருக்கு

    மகன் கூட்டிச் சென்றது நெகிழ்ச்சி

    கோவில் கோபுரம் மிக வித்தியாசமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //கோவிலும் துடைத்துவிட்டார்போல் பளிச்சுனு இருக்கு//
      ஆமாம். எப்போதும் சுத்தமாக இருக்கும்.

      //மகன் கூட்டிச் சென்றது நெகிழ்ச்சி//
      பாங்க் வேலைகளுக்கு இடையே எவ்வளவு பார்க முடியுமோ அவ்வளவு அழைத்து சென்றான்.

      காசியை நினைவூட்ட இப்படி கோவில் கட்டி இருக்கிறார்கள்.


      நீக்கு
  5. கோவிலை உழவாரப் பணி செய்வோர் தொடர்ந்து பராமரிக்கணும்.

    கோவில் உலாவில் நாவுக்கரசு சார் நினைவுக்கு வருவதில் வியப்பில்லை. எத்தனை கோயில்கள் சேர்ந்து சென்று பகிர்ந்திருக்கிறீர்கள்.

    நேற்றுக்கூட, சட் என இறப்பு வாய்ப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சாரைப் பற்றிச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவிலை உழவாரப் பணி செய்வோர் தொடர்ந்து பராமரிக்கணும்.//

      கோவிலை உழவார பணி செய்வோர் அடிக்கடி சுத்தம் செய்வார்கள்.
      சாரின் நண்பர் தான் உழவார பணியின் தலைவர் அவர் பேர் தட்சிணாமூர்த்தி. அவர் நடத்தும் "சிவச்சுடர்" பத்திரிக்கைக்குதான் சார் மாத மாதம் கட்டுரை எழுதி கொடுப்பார்கள்.

      //கோவில் உலாவில் நாவுக்கரசு சார் நினைவுக்கு வருவதில் வியப்பில்லை. எத்தனை கோயில்கள் சேர்ந்து சென்று பகிர்ந்திருக்கிறீர்கள்...//

      இந்த கோவிலுடன் நெருக்கம் அதிகம். நிறைய முற்றோதல் செய்து இருக்கிறார்கள்.

      வார வழிப்பாட்டு ஆண்டுவிழா மற்றும் அங்கு நடக்கும் தேவார கச்சேரிகளில் கலந்து கொண்டது மறக்கவே முடியாத நினைவுகள்.

      //நேற்றுக்கூட, சட் என இறப்பு வாய்ப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சாரைப் பற்றிச் சொன்னேன்.//

      சாரைபற்றி பேசியது கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன்.

      நீக்கு
  6. மகன் எடுத்த படங்களும் தனித்த அழகுடன் மிளிர்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் எடுத்த படங்களும் தனித்த அழகுடன் மிளிர்கின்றன//

      நன்றி.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. காலையில் ஆலய தரிசனம்.. மனதிற்கு மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி..
    எல்லாம் ஆகிய சிவம் எல்லாரையும் காத்து ரட்சிக்கட்டும்..

    விஸ்வநாதம் பஜேஹம்...
    பஜேஹம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //காலையில் ஆலய தரிசனம்.. மனதிற்கு மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி..
      எல்லாம் ஆகிய சிவம் எல்லாரையும் காத்து ரட்சிக்கட்டும்..//

      எல்லோரையும் காத்து ரட்சிப்பார்.
      விஸ்வநாதரை வேண்டிக் கொள்வோம்.

      நீக்கு
  8. மனதார மயிலாடுதுறையின் கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை..

    மயூர நாதர் தான் மனம் வைக்க வேண்டும்..

    முடவனுக்கும் அருள் சுரந்த மூர்த்தி அவர்.. எனக்கும் நலம் தருவார் என்ற நம்பிக்கை உண்டு..

    நேற்று முன் தினம் மதியம் மாடியில் உலர்ந்த துணிகளை எடுத்து வந்த சில நிமிடங்களில் என்ன காரணம் என அறிய வில்லை.. சற்றே தடுமாறி விட்டேன்..

    யாருக்கும் இன்னல் வரக் கூடாது.. எல்லாரையும் இறைவன் காத்தருள வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனதார மயிலாடுதுறையின் கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை..

      மயூர நாதர் தான் மனம் வைக்க வேண்டும்.//

      கண்டிப்பாய் நல்ல மனம் வேண்டுதல்களை மயூர நாதர் செவிசாய்ப்பார்.

      //நேற்று முன் தினம் மதியம் மாடியில் உலர்ந்த துணிகளை எடுத்து வந்த சில நிமிடங்களில் என்ன காரணம் என அறிய வில்லை.. சற்றே தடுமாறி விட்டேன்..//

      எதற்கும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை அளவு சரிபார்த்து கொள்ளுங்கள்.

      //யாருக்கும் இன்னல் வரக் கூடாது.. எல்லாரையும் இறைவன் காத்தருள வேண்டும்..//

      இறைவன் காத்தருள்வார். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  9. ஐயா அவர்களும் ஆன்ம ஒளி வடிவுடன் தங்களுடன் வலம் செய்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஐயா அவர்களும் ஆன்ம ஒளி வடிவுடன் தங்களுடன் வலம் செய்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை..//

      என் நினைவுகளில் அவர்கள் வலம் வந்தார்கள்.
      நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
  10. கோயில் படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    இன்றைய தரிசனம் நன்று.

    அந்த படிகள் கிராணைட் கற்களா ? பக்தர்களை வழுக்கி விடாதா ? நாகரீக மோகத்தில் எல்லாம் மாறி விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //கோயில் படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

      இன்றைய தரிசனம் நன்று.//

      நன்றி .

      //அந்த படிகள் கிராணைட் கற்களா ? பக்தர்களை வழுக்கி விடாதா ? நாகரீக மோகத்தில் எல்லாம் மாறி விடுகிறது.//

      ஆமாம், முன்பு கல்படிதான் இருந்தது, இப்போதுதான் கிராணைட் கற்களில் இருக்கிறது. மழை நேரம் கவனமாக ஏறி இறங்க வேண்டும்.
      கைபிடி வைத்து இருக்கிறார்கள். அன்பர்கள் தங்கள் வீடு கிராணைடில் இருக்கும் போது கடவுள் வசிக்கும் வீடும் அப்படி இருக்க ஆசைபட்டு விட்டார்கள் போலும் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அழகு... நன்றாக பராமரிப்பு செய்கிறார்கள் என்பது தெரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு//
      நன்றி..

      ஆமாம், நன்கு பராமரிப்பு செய்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. கோயில் ப்டங்கள் அத்தனையும் அழகு. இரண்டாம் படம் செம...செங்கல் தரையே அழகு கோமதிக்கா...அல்லது கருங்கல் தரை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      கோயில் ப்டங்கள் அத்தனையும் அழகு. இரண்டாம் படம் செம...///
      நஹ்ன்றி கீதா.

      //செங்கல் தரையே அழகு கோமதிக்கா...அல்லது கருங்கல் தரை..//

      ஆமாம், அவைதான் நல்லது.

      நீக்கு
  13. படங்களில் அந்தச் செங்கல் தரை ஈர்க்கிறது.

    வடநாட்டு வடிவில் கோபுரம் ரொம்ப அழகு,

    ஆமாம் கோமதிக்கா நானும் யாராவது வந்து படம் எடுப்பதைப் பார்த்து திட்டுவாங்களோன்னு நினைப்பேன்

    கம்பியின் வெளியே எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து....விட்டுவிடுவேன். கம்பிகள் இல்லாமல் எடுத்தால் நல்லாருக்கும்...புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களில் அந்தச் செங்கல் தரை ஈர்க்கிறது.//

      ஆமாம், எனக்கும் பிடிக்கும் செங்கல்தரை.

      //வடநாட்டு வடிவில் கோபுரம் ரொம்ப அழகு,//
      முன்பு உள்ள வண்ணம் மிக அழகாய் இருக்கும். இப்போது காலத்துக்கு ஏற்றார் போல வண்ணம் .

      //ஆமாம் கோமதிக்கா நானும் யாராவது வந்து படம் எடுப்பதைப் பார்த்து திட்டுவாங்களோன்னு நினைப்பேன்//

      முன்பு மூலவர்களை எடுத்த படம் இருக்கிறது, அதை தேடமுடியவில்லை.

      படம் , வீடியோ எடுக்க வேண்டாம் என்று போடவில்லை, இருந்தாலும் மனதில் ஒரு பயம்.

      //கம்பியின் வெளியே எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து....விட்டுவிடுவேன். கம்பிகள் இல்லாமல் எடுத்தால் நல்லாருக்கும்...புரிந்தது.//

      பெரிய கம்பிதான் நன்றாக எடுத்து இருக்கலாம். நிறைய வேலைகளை வைத்து கொண்டு கோவில் வலம். நின்று நிதானமாக எடுக்கும் மன நிலை இல்லை.



      நீக்கு
  14. விசாலாட்சி அம்பாள் சன்னதி அழகு...
    அடுத்து அந்த கோபுரம்...செம...முதலில் சைட் ஆங்கிள் அடுத்து நேராக எடுத்திருக்கும் படம் அட்டகாசம்!!!

    செங்கல் தரையில் மழை பெய்யும் போது பாசி பிடிக்கும்...அது கொஞ்சம் வழுக்கி விடும்...அது ஒன்றுதான் அதில் பிரச்சனை

    ஆமாம் கோயில் மிகவும் சுத்தமாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விசாலாட்சி அம்பாள் சன்னதி அழகு...
      அடுத்து அந்த கோபுரம்...செம...முதலில் சைட் ஆங்கிள் அடுத்து நேராக எடுத்திருக்கும் படம் அட்டகாசம்!!!//

      நன்றி.

      //செங்கல் தரையில் மழை பெய்யும் போது பாசி பிடிக்கும்...அது கொஞ்சம் வழுக்கி விடும்...அது ஒன்றுதான் அதில் பிரச்சனை//

      ஆமாம். தினம் கூட்டி சுத்தம் செய்து விட்டால் பாசம் விலகி விடும்.

      //கோயில் மிகவும் சுத்தமாக இருக்கிறது//

      நாங்கள் போய் இருந்த போது கூட ஒரு அம்மா சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் இரண்டு படங்களில் தெரிவார்கள்.

      நீக்கு
  15. முருகன் பிரகாரத்திலிருந்து காசிவிஸ்வநாதர் ஆலயத்தை எடுத்த படம்//

    இந்தப் படமும் வெகு அழகு!! நல்ல ஆங்கிள்

    மகன் எடுத்திருக்கும் படங்கள் செம....நானும் இப்படிக் க்ளோசப்பில் எடுப்பதும் அடுத்த படம் - முக்கு கோணம்....அப்படியும் எடுக்க ரொம்பப் பிடிக்கும் எனக்கு

    மகன் எடுத்த அத்தனை படங்களும் ரொம்ப அழகு நல்ல கோணங்களில் எடுத்திருக்கிறார். ஆமாம் முழு கோயிலும் இரு படங்களிலும் தெரிகிறது

    மாமா இங்கு உரையாற்றி இருப்பது உங்களுக்குப் பல நினைவுகளைக் கொண்டு வந்திருக்கும்!! புரிந்து கொள்ள முடிகிறது கோமதிக்கா

    மகனுக்கும் மாமாவின் நினைவு ரொம்ப வந்திருக்கும் அதுவும் அவங்க இருவருமே நண்பர்கள் போல இல்லையா....

    பதிவும் படங்களும் அருமை கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. முருகன் பிரகாரத்திலிருந்து காசிவிஸ்வநாதர் ஆலயத்தை எடுத்த படம்//

    இந்தப் படமும் வெகு அழகு!! நல்ல ஆங்கிள்//

    ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //மகன் எடுத்திருக்கும் படங்கள் செம....நானும் இப்படிக் க்ளோசப்பில் எடுப்பதும் அடுத்த படம் - முக்கு கோணம்....அப்படியும் எடுக்க ரொம்பப் பிடிக்கும் எனக்கு

    மகன் எடுத்த அத்தனை படங்களும் ரொம்ப அழகு நல்ல கோணங்களில் எடுத்திருக்கிறார். ஆமாம் முழு கோயிலும் இரு படங்களிலும் தெரிகிறது//

    மகன் எடுத்த படங்களை பாராட்டியதற்கு நன்றி கீதா.

    //மாமா இங்கு உரையாற்றி இருப்பது உங்களுக்குப் பல நினைவுகளைக் கொண்டு வந்திருக்கும்!! புரிந்து கொள்ள முடிகிறது கோமதிக்கா//

    ஆமாம், புரிந்து கொண்டதற்கு நன்றி.


    //மகனுக்கும் மாமாவின் நினைவு ரொம்ப வந்திருக்கும் அதுவும் அவங்க இருவருமே நண்பர்கள் போல இல்லையா....//

    கடைத்தெருவில் இருவரும் உரையாடி கொண்டு நடந்து போனதை பக்கத்துவீட்டு பையன் வந்து என்னிடம் சொல்லி சிரித்தான். "அக்கா சாரும், உங்கக மகனும் என்ன பேசுவாங்க? உலகத்தை மறந்து பேசி கொண்டு போகிறார்கள்! கடைவீதியில்" என்று சொன்னார்.
    மறக்க முடியாத வார்த்தைகள்.


    பதிவும் படங்களும் அருமை கோமதிக்கா..//
    அனைத்தயும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கோவில் படங்கள் அழகு .மகன்செய்த எடுத்த படம் கோவிலை கண்முன்னே கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //கோவில் படங்கள் அழகு .மகன்செய்த எடுத்த படம் கோவிலை கண்முன்னே கொண்டு வருகிறது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  18. அனைத்து படங்களும் அருமையான கோணங்களில் எடுத்துள்ளீர்கள்.

    விவரங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    சப்த கன்னியர் சிற்பங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அனைத்து படங்களும் அருமையான கோணங்களில் எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //சப்த கன்னியர் சிற்பங்கள் அழகு.//

      ஆமாம், எல்லா கோவில்களிலும் வெளிச்சம் இல்லா இடத்தில் இருக்கும். இங்கு நல்ல வெளிச்சம் படக்கூடிய இடத்தில் அமைத்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு