புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை.
நானும் குஞ்சைப்பார்க்க ஆவலாக இருந்தேன். குஞ்சு வந்ததும் ஒரு நாள் உணவு ஊட்டுவதைப் பார்த்து விட்டேன்.
அதன் பிறகு என் கண்ணில் காட்டாமல் தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு என்னை கவனித்து கொண்டே இருந்தது.
பாதுகாப்பு இல்லாத இடம் மற்ற பறவைகளால் இடையூறூ ஏற்படும் இடம். அதனால் அது தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு இருந்தது. (அந்த காணொளியும் இதில் இருக்கிறது பார்க்கலாம்.)
நேற்று தாய் , சேய்கள் அந்த இடத்தில் இல்லை, பறந்து போய் விட்டது.
3 அல்லது 4 வாரங்கள் கழித்து தான் பறந்து போகும் என்று படித்து இருக்கிறேன். மகன் வீட்டிலும் பார்த்து இருக்கிறேன்.
வருத்தமாக இருக்கிறது, ஏதாவது இடையூறு நிகழந்து இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது.
நன்றாக இருந்தால் சரி. இறையருளால் நன்றாக இருக்க வேண்டும்.
என் வீட்டுக்கு வந்த அமைதி புறா.
ரஷ்யா- உக்ரைன் 4 வது நாள் போர் நீடிக்கிறது. போர் விரைவில் முடிவடைய வேண்டும். மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டபடுவதும், கை குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுவதை பார்க்கும் போது மனது கனத்து போகிறது. போர் இல்லா உலகம் வேண்டும்.
அமைதி நிலவ வேண்டும். அமைதிக்கு பிரார்த்தனை செய்வோம்.
இந்தியர்கள் இந்தியா திரும்பி வருகிறார்கள்.படிக்க போன மாணவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் நலமாக ஊர் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
(15,000 பேர் திரும்ப வேண்டுமாம்.)
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------------------------------------