புதன், 2 பிப்ரவரி, 2022

கருட சேவை உற்சவம்

 தை அமாவாசையை  ஒட்டி  மூன்று நாட்கள் சீர்காழி

அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும்.

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதன் அருகில்  11 ஆலயங்கள் இருக்கிறது. மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் கோயிலில் 11 கோயில்களில்  உள்ள சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார்கள்.   இரண்டு , மூன்று மூறை பார்த்து இருக்கிறோம் மாயவரத்தில் இருக்கும் போது. அந்த நினைவுகள் இன்று மாலை 6 மணிக்கு புதுயுக தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பிய போது வந்து போனது.

 முன்பு நாங்கூர்  கருட சேவை பார்த்த நினைவுகளும் வலைத்தளத்தில் பகிர்ந்த நினைவுகளும் வந்தது.

பழைய பதிவு மீண்டும் மீள் பதிவாக இங்கு.





அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)


அண்ணன் கோவிலில் கருடாழ்வார் கிளம்புகிறார் நாராயணபெருமாள் கோவிலுக்கு


 மாதவப் பெருமாள்


மாதவப்பெருமாள் கோவில்    


ஸ்ரீ வண்புருஷோத்தமப் பெருமாள் கோவில்


ஸ்ரீவண்புருஷோத்தமர்



ஸ்ரீவண்புருஷோத்தமர் பின் அலங்காரம்











முன் அலங்காரம்


பின் அலங்காரம்




 வைகுந்தநாதப் பெருமாள்






குமுதவல்லியும்  திருமங்கையாழ்வாரும்

 ஸ்ரீ  ராமானுஜர்

பஜனை பாடும் பெரியவர்களும் தாளத்திற்கு ஏற்ற மாதிரி ஆடும் சிறுவனும்

மணிமாடக் கோவில் நாராயணபெருமாள் கோவில்

11 பெருமாள் கோவில்  குடைகள்
கருட சேவை  திருவிழா கடைகள்




கருட சேவை

பக்தர்களை காக்க  கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
   

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. அழகாக இருக்கிறது அனைத்து படங்களும் தரிசனம் நன்று.

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் மிக அருமை.

    இந்தத் தடவை கடைசி நேரத்தில்தான் அனுமதி கிடைத்ததாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //இந்தத் தடவை கடைசி நேரத்தில்தான் அனுமதி கிடைத்ததாம்.//

      அப்படியா ? இன்று பார்த்த கருட சேவை பழசு.
      மாயவரத்தில் போய் வந்தவர்களை கேட்டால் சொல்வார்கள் விழா எப்படி நடந்தது எனற விவரம் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு. உங்கள் பதிவுகளின் வழி நாங்களும் கருடசேவை கண்டோம். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் , வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அழகிய புகைப்படங்கள்.  நீங்கள் சொல்லும் இடங்கள் பார்த்ததில்லை.  அண்ணன்கோவில் பார்த்த நினைவு.  சுகுமார் அவர்களின் ஷஷ்டியப்தபூர்த்தி செல்லும்போது அங்கும் சென்ற நினைவு.  மாயவரம், சீர்காழியில் மன்னி வழியில் சில உறவுகள் இருந்தார்கள்.  எனினும் சென்றதில்லை!  தஞ்சாவூரில் அவ்வளவு வருடங்கள் இருந்து நிறைய இடங்கள் அப்போதும் பார்த்ததில்லை! அப்பா எங்களை எங்கும் அழைத்துச் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய புகைப்படங்கள்.//

      நன்றி.


      மாயவரம், சீர்காழி , தஞ்சாவூரில் எல்லாம் பார்க்க வேண்டிய கோயில்கள் நிறைய இருக்கிறது. பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம்.

      நீங்கள் நேரம் கிடைக்கும் போது போய் வாருங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      அண்ணன் கோயில் பார்த்தாக முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  6. படங்கள் அருமை கோமதிக்கா.

    குடைகள் இருக்கும் படம் செம!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      /படங்கள் அருமை கோமதிக்கா.

      குடைகள் இருக்கும் படம் செம!!!//

      நன்றி கீதா.

      நீக்கு
  7. திருநாங்கூர் போனதில்லை. திருநகரி போயிருக்கிறேன்

    பஜனையும் தாளத்திற்கு ஆடும் சிறுவனும்...அட போட வைத்தது.

    டிவி படங்கள் கூட அழகாக வந்திருக்கின்றன கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அந்த பக்கம் வந்து இருக்கிறீர்களா?
      பஜனை தாளத்திற்கு ஆடும் சிறுவனை காணொளி எடுத்து இருக்கலாம், அப்போது தோனவில்லை.

      //டிவி படங்கள் கூட அழகாக வந்திருக்கின்றன கோமதிக்கா//

      நன்றி கீதா.
      உங்கள் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  8. உங்கள் படங்கள் எல்லாமே எப்போதுமே அருமையாக தெளிவாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      படங்களை பாராட்டி கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. இங்கிருந்து பலர் செல்வார்கள் இந்த கருடசேவைக்கு. இந்தக் கோயில்கள் பதினொன்றிற்கும் போய் வந்திருக்கோம். மறக்க முடியாத நிகழ்வு. இதே போல் தஞ்சாவூரிலும் கருடசேவை உண்டு என்பார்கள். படங்கள் எல்லாமும் நன்றாக வந்திருக்கின்றன. தரிசனம் பழசாக இருந்தாலும் காணக் கிடைச்சதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்


      //இந்தக் கோயில்கள் பதினொன்றிற்கும் போய் வந்திருக்கோம். மறக்க முடியாத நிகழ்வு.//

      முன்பு போட்ட பதிவிலும் சொல்லி இருக்கிறீர்கள்.

      மதுரையில் மதன கோபாலசாமி கோவிலில் கருட சேவை பார்த்து பதிவு போட்டு இருக்கிறேன். தஞ்சாவூரிலும் நடக்கும் தான்.

      //படங்கள் எல்லாமும் நன்றாக வந்திருக்கின்றன. தரிசனம் பழசாக இருந்தாலும் காணக் கிடைச்சதுக்கு நன்றி.//

      நானும் பழைய பதிவை பார்த்து தரிசனம் செய்து கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. காணக்கிடைக்காத காட்சி. நான் பிறந்த ஊரான கும்பகோணத்திலும், தொடர்ந்து தஞ்சாவூரிலும் கருட சேவை பார்த்துள்ளேன். நாங்கூர் கருட சேவை காணும் நாளுக்காக பெருமாளை வேண்டி நிற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்

      //கும்பகோணத்திலும், தொடர்ந்து தஞ்சாவூரிலும் கருட சேவை பார்த்துள்ளேன்.//

      மகிழ்ச்சி.

      //நாங்கூர் கருட சேவை காணும் நாளுக்காக பெருமாளை வேண்டி நிற்கிறேன்.//
      பெருமாள் அருள்புரிவார்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. மீள் பகிர்வும், படங்களும் மிக அருமை. குறிப்பாக பல்லக்கில் அருள்புரியும் சுவாமிகளின் படங்கள்!

    இந்த வருட கருட சேவையையும் தொலைக்காட்சியில் படமாக்கி எங்களுக்குக் காணத் தந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      தொலைக்காட்சியில் வைத்த கருட சேவை இந்த வருட கருட சேவையா என்று தெரியாது. யாரும் மாஸ்க் அணியவில்லை.

      படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. திருநாங்கூர் 11 கருட சேவை படங்கள் நன்றாக உள்ளன. ஒவ்வொரு கோவிலாக நீங்கள் விளக்கம் அளித்து தந்த படங்களை பார்த்து அந்தந்த ஊரின் பெருமாளை மனதாற தரிசித்துக் கொண்டேன். 11 குடைகளையும் வரிசையாக நிற்க வைத்த படம் மிகவும் அழகாக உள்ளது. இங்கெல்லாம் எப்போது போய் தரிசிக்க முடிகிறதோ தெரியவில்லை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் அழகான, மனநிறைவான தரிசனங்கள் கிடைத்தன. உங்கள் முந்தைய பதிவையும் நான் பார்த்து ரசித்திருக்கிறேன் என நினைக்கிறேன். அழகான பெருமாளின் கருடசேவை படங்களுடன் பக்தி ததும்பும் வர்ணனைகளுடன் பதிவாக்கி தந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      மாயவரத்தில் இருந்த காரணத்தால் கருட சேவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. வருட வருடம் எல்லாம் போக வில்லை. இரண்டு , மூன்று தடவை பார்த்து இருக்கிறோம்.

      இப்போது ஆலய தரிசனம் என்று ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் , தினம் ஒரு கோயில், ஆலய வழிபாடு என்று போட்டி போட்டுக் கொண்டு கோயில்களை காட்டுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்யலாம்.

      முந்தைய பதிவை படித்து இருப்பீர்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.


      நீக்கு
  14. திருநாங்கூர் 11கருட சேவை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. உங்கள் பதிவு அந்த குறையை ஓரளவுக்கு தீர்த்தது. நன்றி. படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      திருவெண்காடு, மாயவரத்தில் இருந்ததால் இந்த பாக்கியம் கிடைத்தது.
      உங்களுக்கும் திருநாங்கூர் 11 கருட சேவை பார்க்கும் பாக்கியத்தை தருவார் பெருமாள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.. பக்தியமான பதிவு.. நான் அந்தப் பக்கம் எல்லாம் போனதில்லை..

    இந்த வருடம் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றால் தஞ்சை மாநகரில் வைகாசி திரு ஓணத்தை அனுசரித்து 22 கருட சேவை நடைபெறும்..

    அவனருளால் தரிசிக்கலாம்..

    ஓம் ஹரி ஓம்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நான் அந்தப் பக்கம் எல்லாம் போனதில்லை..//

      தமிழ் நாட்டுக்கு வந்து விட்டீர்கள், முடிந்த போது போய் தரிசனம் செய்து வாருங்கள்.


      //இந்த வருடம் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றால் தஞ்சை மாநகரில் வைகாசி திரு ஓணத்தை அனுசரித்து 22 கருட சேவை நடைபெறும்..

      அவனருளால் தரிசிக்கலாம்..//

      அவனருளால் கண்டிப்பாய் தரிசிக்கலாம். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.


      நீக்கு
  16. மிக அழகான தரிசனம் அன்பு கோமதி.
    வாழ்க வளமுடன்.

    இத்தனை புகைப்படங்களையும் பார்த்துப் பார்த்து மகிழ்கிறேன்.
    நீங்களும் சாரும் சென்று வந்து போட்ட பதிவும் நினைவில்

    இன்று கருடன்+பெருமாள் தரிசனம் கிடைத்தது அதிசய ஆச்சரியம்.

    இது போல நல்ல பதிவுகள் மீட்டெடுத்துப் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      சார் முதல் படத்தில் இருக்கிறார்கள்.

      //இன்று கருடன்+பெருமாள் தரிசனம் கிடைத்தது அதிசய ஆச்சரியம்.//

      நல்லது அக்கா, மகிழ்ச்சி.

      இது போல நல்ல பதிவுகள் மீட்டெடுத்துப் போடுங்கள்.//

      பகிர நினைத்து இருக்கும் பதிவுகள் நிறைய இருக்கிறது. பிள்ளைகள் அழைத்து சென்ற இடங்கள், சார் அழைத்து சென்றது என்று.

      போடுகிறேன் அக்கா, மெதுவா ஒவ்வொன்றாக.

      உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி அகா.

      நீக்கு
  17. இந்த கருட சேவை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். தரிசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. உங்கள் மூலம் தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. கருடசேவை படங்கள் மனம் நிறைந்து நிற்கின்றன .

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    கருட சேவையை தரிசனம் செய்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு