புதன், 23 பிப்ரவரி, 2022

பழமையும், புதுமையும்


கல் உருளியில் பூக்கள், இலையால் அலங்காரம்.


"Heritage Madurai " மதுரை கோச்சடையில் பாரம்பரிய முறையில்
உணவும், தங்கும் வசதியும் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்.

ஆலமரம் சூழ்ந்த அழகிய பழமையான உணவு விடுதி.
"ஹெரிடேஜ் மதுரை" ஒரு அழகான விடுதி. மதுரையை சுற்றி பார்க்க வருபவர்கள் பழமை, புதுமை இரண்டையும் விரும்புபவர்களாக இருந்தால் இந்த விடுதியில் தங்கி மதுரை ஊரை சுற்றி பார்க்கிறார்கள்.

இந்த 5 நட்சத்திர பாரம்பரிய ரிசார்ட் மதுரையில் நல்ல போக்குவரத்து வசதி உள்ள இடத்தில் இருக்கிறது.

பழமையும், நவீன வசதிகளும் , இயற்கை அழகும் நிறைந்த இடம். இந்த கொரோனா காலத்தில் வயிற்றை கெடுக்காத உணவும், கூட்டம் இல்லாத இடமும் விரும்புபவர்களுக்கு இந்த விடுதி பிடிக்கும்.

முன்பே உணவு மேஜையை பதிவு செய்து கொண்டு நண்பர்கள், உறவினர்களுடன் பேசி மகிழ்ந்து உணவு அருந்த விரும்புவர்களுக்கு நல்ல உணவு விடுதி. தங்கும் விடுதியும் நன்றாக இருக்கிறது.

மகனின் நண்பர் குடும்பத்துடன் வந்து இருந்த போது இங்கு எல்லோரையும் அழைத்து சென்றான் மகன்.

அங்கு பார்த்த காட்சிகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

கிறிஸ்துமஸ் , மற்றும் புதுவருட அலங்காரங்கள் 


வரவேற்பு  அறை (பழமை)

பழைய நார் பின்னிய சாய்வு நாற்காலி. இப்போது பிளாஸ்டிக் ஒயரில் பின்னப்பட்டு சீர் செய்யப்பட்டு இருக்கிறது.

வரவேற்பு அறை (புதுமை)

காட்சிக்கு வைத்து இருக்கும் பழைய பொருட்கள்.

ரயில் கூஜா, புட்டு குழாய், டிபன் கேரியர், மற்றும் இடியாப்ப கட்டை(சேவை கட்டை)ஆப்ப சட்டி, குழிபணியார சட்டி, பால் தூக்கு, பாய்லர் ஆகியவற்றை காட்சி வைத்து இருக்கிறார்கள்.

கிறிஸ்த்துமஸ் விழாவிற்கு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது விடுதி.

பரிசு பொருட்களுடன் கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ்   குடில்

மிக அழகாக செய்து இருக்கிறார்கள் குடில்
வரவேற்பு அறை

அழகிய சுற்று பகுதி
நீச்சல் குளத்தை கோவில் திருக்குளம் போல் அமைத்து இருக்கிறார்கள். சிலர் திருமலை கோயில் திருக்குளம் போல என்று சொல்கிறார்கள்.
மரங்களில் அரிக்கேன் விளக்கு தொங்கவிடப்பட்டு இருக்கிறது.
இரண்டாவது உலக போரில்  பயன்படுத்தபட்ட  "தேடல் ஒளி  விளக்கு" ஆலமரத்தின் எதிரில் இருக்கிறது .ஆலமரம் , நடுவில் பனை மரம் , நாகர் சிலை

கல் இருக்கை

சாப்பாட்டு அறை சுவற்றில் இப்படி பழமையை  பறைசாற்றும் ஓவியங்கள் வரைய பட்டு இருக்கிறது.  குதிரை மேல் காவல் தெய்வம் அய்யனார்.


பழைய உடைந்த கற் தூணின்  மேல் அணில்.

மேலும் இங்கு பார்த்த பரந்து விரிந்து போகும்  ஆலமரத்தின் விழுதுகள் வித விதமாக காட்சி கொடுத்தது ,அவற்றை  அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன். வாழ்க வளமுடன்

   //படங்கள் மிக அழகு//
   நன்றி.

   நீக்கு
 2. சாப்பாடு நல்லா இருந்ததா?

  நீச்சல்குளம் ரம்யமா இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சாப்பாடு நல்லா இருந்ததா?//

   சாப்பாடு நன்றாக இருந்தது. நம்மால் தான் அனைத்து அயிட்டங்களையும் சாப்பிட முடியாது.உப்பு, புளிப்பு, காரம் அளவாய் இருந்தது. அசைவ உணவும் உண்டு.நாம் நமக்கு எது வேண்டும் என்று முன்பே சொல்லிவிட வேன்டும்.

   நீச்சல் குளம் அழகுதான், தங்கும் அறைகளிலும் நீச்சல் குளங்கள் இருக்கிறது. இந்த ஓட்டலின் காணொளி பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது.
   அடுத்த பதிவில் அது இடம் பெறும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன! பாய்லர் இன்னும் சில இடங்களில் உபயோகத்தில் இருக்கின்றது. குழாய்ப்புட்டு செய்யும் அலுமினிய பாத்திரம் இப்போதும் உபயோகத்தில் இருக்கின்றது. நிறைய இடங்களில் அதுவும் நகருக்கு வெளியே பாரம்பரிய ஸ்டைலில் இப்படி பல ரிசார்ட்டுகள் பிரபலமாயிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   //படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன!//

   நன்றி.

   பாய்லர் இன்னும் சில இடங்களில் உபயோகத்தில் இருக்கின்றது.//

   இங்கு சில டீ கடைகளில் இருக்கிறது, வீடுகளில் பயன்பாடு குறைந்து விட்டது.
   அலுமினிய குழாய்புட்டு குழாயில் புட்டு செய்து விற்பவர்களும் மதுரையில் இருக்கிறார்கள்.

   நிறைய பழைய வீடுகளை ரிசார்ட்டுகளாக மாற்றி வருகிறார்கள். மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் விருந்தினர் மாளிகை தான் இந்த ரிசார்ட்.

   அழகர் கோவில் அருகிலும் ஒரு ரிசார்ட் இருக்கிறது, அதற்கும் போய் வந்தோம்.
   அங்கிருந்து அழகிய இயற்கை காட்சிகளை பார்க்கலாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. மிகவும் அழகான படங்கள்.
  கோச்சடை என்பது திருநெல்வேலி சாலையிலா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //மிகவும் அழகான படங்கள்.//

   நன்றி.

   கோச்சடை மதுரையின் மைய பகுதி . திருநெல்வேலி சாலைதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   அருமையான இடம் தான், நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு போக வேண்டி இருந்ததால் நிறைய சுற்றிப்பார்க்க வில்லை . இந்த ஓட்டலை பற்றி ஒரு பெண் சொல்லும் வீடியோ பார்த்தேன், தங்கௌம் அறைகள், மற்றும் மண்பானை செய்ய சொல்லி கொடுக்கும் இடம், ஆயுர்வேத சிகிட்சை செய்யும் இடம் எல்லாம் இருக்கிறது. மற்றும் நிறைய அழகான இடங்கள் உள்ளது.

   உங்கல் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. நீச்சல் குளம் அருமையான அமைப்பு. கோயில் குளம் போலவே! மற்றப்படங்களும் குறிப்பாய் உடைந்த கல்தூணின் மேல் உள்ள அணிலும் நன்றாக வந்திருக்கின்றன. ஓட்டலின் வரவேற்பு அறையின் பழமையும்/புதுமையும் இரண்டுமே நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   //நீச்சல் குளம் அருமையான அமைப்பு.//

   நீச்சல் குளம்தான் இங்கு மிகவும் சிறப்பு.
   அணிலார் உங்களையும் கவர்ந்து விட்டார்.
   அதை பார்த்தவுடன் அணில் கொடுக்கும் சத்தமும் காதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
   மிக அருமையான ஓவியம்.

   படங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. கோமதிக்கா படங்கள் அட்டகாசம். அப்படியே கவர்ந்து இழுக்கிறது!! பழமையும் புதுமையும்!!

  ஓவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா படங்கள் அட்டகாசம். அப்படியே கவர்ந்து இழுக்கிறது!! பழமையும் புதுமையும்!!//

   உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.


   நீக்கு
 8. முதல்படமே ஆஹா! போட வைக்கிறது. அடுத்தாப்ல வரவேற்பு அறை செமையா இருக்கு. ஈசிசேர் ...

  அந்த பழைய பொருட்கள் ல பால் கேன், புட்டுக் குழல் இன்னமும் இருக்கிறது. கேரளத்தில் எங்கள் ஊரில் இன்னமும் பயன்பாடு இருக்கிறது.இடியாப்ப அச்சும் கூட மரத்திலானது இருக்கிறது என்னிடமும் மரத்தினாலான சிலோனில் வாங்கி என் பாட்டி அம்மா பயன்படுத்தியது என்னிடம் இருக்கிறது இடியாப்ப ஓமப்பொடி அச்சு என்று....60 வருடப் பழமை!!! படத்தில் உள்ளது ரொம்ப அழகாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /முதல்படமே ஆஹா! போட வைக்கிறது. அடுத்தாப்ல வரவேற்பு அறை செமையா இருக்கு. ஈசிசேர் .//

   கல உருளி எனக்கும் மிகவும் பிடித்து விட்டது கீதா .

   பழைய பொருட்கள் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது.
   தெரியாதவர்களுக்கு காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள்.
   சிலோனில் இடியாப்பம் மிகவும் பிரபலம். எல்லா ஓட்டல்களிலும் இடியாப்பம் கிடைக்கும். சிவப்பு அரிசி இடியாப்பம், வெள்ளை அரிசி இடிபாப்பம். எங்கள் அம்மா வீட்டிலும் இடியாப்பம், ஓமப்பொடி அச்சு பழமையானது இருக்கிறது .

   நீக்கு
 9. கிறிஸ்துமஸ் விழா அலங்காரம் நேர்த்தி என்றால் சுற்றுப் பகுதி எல்லாம் பிரம்மாண்டம் ஏதோ கோயிலில் பிரதட்சினம் செய்யும் பிராகாரம் போல இருக்கிறது!

  நீச்சல் குளம் அட்டகாசம்....கோயில் திருக்குளம் போல ஆமாம் ரொம்ப அழகு வித்தியாசமான சிந்தனையுடனான ஆர்க்கிடெக்ட்!!

  கல் இருக்கை எல்லாம் மனதைக் கவர்கிறது கோமதிக்கா

  படங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சுற்றுப் பகுதி எல்லாம் பிரம்மாண்டம் ஏதோ கோயிலில் பிரதட்சினம் செய்யும் பிராகாரம் போல இருக்கிறது//

   நடந்து போய் பார்க்க முடியாதவர்களுக்கு சைக்கிள், பேட்டரி கார் எல்லாம் இருக்கிறது.
   நாங்கள் உணவு அருந்தும் இடம் மட்டும் அதன் பக்கத்தில் மட்டும் தான் பார்த்தோம். அடுத்த பதிவில் இந்த இடத்தை முழுமையாக பார்க்க காணொளி சேர்க்கிறேன்.

   நீச்சல் குளம் எல்லோரையும் கவரும்.
   கல் இருக்கையும் ஆலம் விழுதுகளும் மனதை கவர்ந்தது உண்மை.
   படங்களை ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 10. மதுரையில் இப்படி ஒரு இடமா?  கோச்சடை எப்போதோ ஒருமுறை சென்றிருக்கிறேன்!  சுற்றுலாப் பயணிகள் மதுரையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இந்த இடத்தை தெரிவு செய்வதில் தயக்கம் கொள்வதில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ருராம், வாழ்க வளமுடன்
   மதுரையில் இப்படி ஒரு இடமா? //

   மதுரையில் இப்படி இடம் இருப்பது மகனால்தான் தெரிகிறது. போன முறை வந்த போது பசுமலையில் இப்படி ஒரு ஓட்டல் கூட்டி போனான்.
   இந்த முறை இந்த ஓட்டல் அப்புறம் அழகர் கோயில் பக்கம் இருக்கும் ஒரு ஓட்டல் அழைத்து போனான்.

   சுற்றுலா பயணிகள் இப்போது கூகுளில் தேடி கருத்து கணிப்புகளை படித்து தேர்ந்து எடுக்கிறார்கள்.

   அப்படித்தான் மகனும், மகனின் நண்பரும் தேர்வு செய்தார்கள் .

   நீக்கு
 11. படங்கள் யாவும் அருமை.  நீச்சல்குளம் அழகு.   பரந்து விரிந்த நீண்ட ஆலமரங்கள் வெகுஅழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. இன்னும் இரண்டு கமெண்ட்ஸ் போட்டதாக நினைவு.  அதைக் காணோமே அக்கா...

  பதிலளிநீக்கு
 13. அந்தக் கால வரவேற்பு அறை, சாய்வு நாற்காலிகள், நடைவழித் தாழ்வாரம் இதெல்லாம் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி..

  அது தான் வாழ்க்கை என்று தோன்றியது..

  அழகான பதிவுகளுடன் பதிவு..
  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //அந்தக் கால வரவேற்பு அறை, சாய்வு நாற்காலிகள், நடைவழித் தாழ்வாரம் இதெல்லாம் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி..//

   ஆமாம் , மகிழ்ச்சியாக இருந்தது எங்ககளுக்கும்.


   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. அழகான இடமாகத் தெரிகிறது. பகிர்ந்து கொண்ட படங்களும் அழகு. அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   அழகான இடம் தான்.

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 15. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.

  மதுரைக்கு உடனே வரவேண்டும் என்ற ஆசையைக் கிளறி விடுகிறது
  படங்கள்.
  கோச்சடை சத்ர்ன் ரோட்வேஸ் இருக்கும் இடம். அங்கே
  விருந்தினர் விடுதி கூட இருந்தது.

  நீங்கள் கொடுத்திருக்கும் படங்கள் மிக மிக ரம்யம்.

  குளமும், மரங்களும், வராந்தாக்களும்
  மனசை மிக இலகுவாக்கும்.
  மதுரையில் குற்றாலக் காற்று வீசும்போது செல்ல
  வேண்டிய இடம்.

  இத்தனை அழகாகக் கட்டி இருக்கிறார்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //மதுரைக்கு உடனே வரவேண்டும் என்ற ஆசையைக் கிளறி விடுகிறது
   படங்கள்.//

   வாங்க வாங்க

   கோச்சடை சத்ர்ன் ரோட்வேஸ் இருக்கும் இடம். அங்கே
   விருந்தினர் விடுதி கூட இருந்தது.//

   விருந்தினர் மாளிகைதான் இப்போது விடுதியாகி இருக்கிறது.


   //குளமும், மரங்களும், வராந்தாக்களும்
   மனசை மிக இலகுவாக்கும்.
   மதுரையில் குற்றாலக் காற்று வீசும்போது செல்ல
   வேண்டிய இடம்.///

   ஆமாம், அக்கா.


   //இத்தனை அழகாகக் கட்டி இருக்கிறார்களே.//

   நம் நாட்டில்தான் கட்டிட கலையில் சிறப்பான ஆட்கள் இருக்கிறார்களே!
   நீக்கு
 16. அயல் நாட்டவரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம்
  வசதிகளைச் செய்திருக்கிறார்கள். அதுவும் மதுரை கோயில் நகரம்.
  உங்கள் பதிவிலேயே மூன்று விடுதிகள்
  வந்திருக்கின்றன.
  இங்கு தங்கி மதுரையைச் சுற்றி வரலாம்.

  எத்தனை அழகான ஊர்!!!

  இந்த விடுதியின் நீச்சல் குளம் தான் எவ்வளவு அழகு. அருமையான இடத்திற்கு சென்று வந்திருக்கிறீர்கள். பிரம்பு சாய் நாற்காலிகள் மிகப் பிடித்தது. கல்லுரலும் தான்.
  அதில் மலர் இலை அலங்காரம்.
  நன்றி கோமதிமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அயல் நாட்டவரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம்
   வசதிகளைச் செய்திருக்கிறார்கள். அதுவும் மதுரை கோயில் நகரம்.
   உங்கள் பதிவிலேயே மூன்று விடுதிகள்
   வந்திருக்கின்றன.//

   போன முறை வந்த போது பசுமலைக்கு அழைத்து போனான் மகன், இந்த முறை கோச்சடை, அழகர் கோவில் அருகில் உள்ளது என்று . முன்பு குமகோணம் அருகில் ஒரு அழகான தங்கும் விடுதி போனோம்.

   ஊர் அழகான ஊர் தான் . கோவில்கள் எங்கும் போக முடியவில்லை, அதனால் இயற்கை சூழ்ந்த இடங்களை ரசித்து வந்தோம்.

   அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 17. அழகான இடமாக உள்ளது.படங்களும் எடுத்து சொல்கின்றன.

  இப்பொழுது அநேகரும் சுற்றுலா விடுதிகளில் தங்கி வருவதால் வசதிகள் செய்து வைத்துள்ளார்கள். நம்நாட்டிலும் உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //அழகான இடமாக உள்ளது.படங்களும் எடுத்து சொல்கின்றன.//

   ஆமாம், அழகான இடம், அமைதியான இடம்.

   //நம்நாட்டிலும் உள்ளன//

   உங்கள் நாட்டில் அனுராதபுரத்தில் இப்படி சுற்றுலா விடுதியில் தங்கினோம், மிக அருமையான இடம்.

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு