சனி, 4 ஜனவரி, 2020

அய்யன் கோவில் வாசலிலே!

அய்யன் கோவில் வாசலிலே தினமும் பெண் குழந்தைகள்  மார்கழி மாதத்தில்  கோலம் போடுகிறார்கள். கோலம் போட்டது மகிழ்ச்சியை அளித்தது.     தினம் 5 மணிக்கு வந்து கோலம் போடுகிறார்கள். பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள்.

தங்கள் வீடுகளில் போடுவதுடன் கோவிலில் வந்து வேறு தினம் போடுகிறார்கள். கோவில் முழுவதும் ஒவ்வொரு சன்னதி முன்பும் போடுகிறார்கள். 
மார்கழியில் கோலமிட்டு சாணப்பிள்ளையாரில்  பூசணிப் பூ   
இன்று தான் கிடைத்தது பூசணிப் பூ அவர்களுக்கு


அவர்கள் போட்ட கோலங்கள் சில இங்கு பகிர்வாய்.

'நன்றாகப் போட்டு இருக்கிறீர்கள்" என்று பாராட்டினால் அவர்கள் வெட்கத்தோடு சிரித்து அதைத் தலையாட்டி அங்கீகரிக்கும்போது குழந்தைகளைப் பார்க்க அழகு.  தினம் என் முகம் பார்ப்பார்கள் கோலத்தைப்ப்ற்றி நான் என்ன சொல்கிறேன் என்று. தினம் அவர்களைப் பாராட்டுவேன். அவர்கள் அம்மாவும்  நல்ல சுறுசுறுப்பாய்க் கோவிலில் பணி செய்வார்கள். குழந்தைகளைப் பாராட்டும்போது மகிழ்ந்து போவார்கள்.
அக்கம்பக்கத்துப் பெண் குழந்தைகளுக்குக் கலர் போட உதவுகிறார்கள்.

அவர்களுக்கு இறைவன் நல்ல வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும்.நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே! நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றிபோற்றிஎன்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே!
                                                                          --- திருநாவுக்கரசர்.கோவிலில் இப்படிக் கூட்டுவது, கோலம் போடுவது, விளக்கிடுதல், பூ கட்டுதல் எல்லாம் பெரிய தொண்டு என்று சொல்வார்கள்  அதை இந்தக் குழந்தைகள் செய்கிறார்கள். வெளிவாசலில் உள்ள வெள்ளை எருக்கம்பூவைப்  பறித்து மாலையாகக் கட்டிப் பிள்ளையாருக்குப் போடுவார்கள்.

கோவிலில் பூஜை ஆகும் போது பெரிய மணிகளை ஒலிக்கச்செய்வார்கள்.
அப்புறம் பிரசாதம் கொடுக்க உதவுவார்கள்.


கோவிலுக்கு பேப்பர் போடும் வயதானவர் சைக்கிளை இப்படிக் கோலத்தின் மேல் அல்லது கோலத்துக்குப் பக்கம் நிறுத்தி விட்டு உள்ளே போய் பேப்பர் போடுவார் . சில நாள் படம் எடுக்க முடியாது.
புதுவருடப்பிறப்புக்குப் போட்ட கோலம்


மீன்களும் பூக்களும்

மண் தரையில் கலர் கோலம் போட்ட மறு நாள் அதை அழித்து விட்டு கோலம்போடுவது கடினமான வேலை. சாணம் தெளித்துக் கோலம் போட்டால் நன்றாக இருக்கும் இன்னும். மார்கழி மாதம் கோலம் போட மண் தரையை  சரிப் படுத்தி முதல் நாளே சாணம் வாங்கி வைத்து கொள்வது பற்றி எல்லாம் .
மார்கழி கோலங்கள் என்ற என் முதல் மார்கழிப்பதிவில்  எழுதிஇருக்கிறேன்.

//மார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள்! இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.//

இப்போது நான் என் வீட்டுவாசலில்  முதல் நாள் கோலத்தை   எளிதாகக் கூட்டி முறத்தில் அள்ளி விடுகிறேன்,  தண்ணீரைத் தெளித்துத் துடைத்துக் கோலம் போட்டு விடுகிறேன்.

தாமரையும் சங்கும் 
கிளிகள் 

வண்ணத்துப் பூச்சிகள்
மார்கழி முதல் நாள் - விளக்குக் கோலம் - தினமும் பார்டர் உண்டு.


இந்தப் பெண் குழந்தைகளுக்கு இறைவன் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

                                                                   வாழ்க வளமுடன்.

34 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அனைத்தும் அழகு சகோ
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

   நீக்கு
 3. எத்தனை முயற்சி எடுத்துப, போட்டிருக்கிறார்கள் இந்தக் கஉழந்தைகள். பூசணிப்பூ. மிக அழகு. வித விதமாகக் கோலங்கள் வண்ணங்கள். உங்கள் பாராட்டுகள் அவர்களை மகிழ்சசி கொடுக்கிறது! பாராட்டுகள் இன்னும் அதிகமாக அவர்களைச் செயல் பட வைக்கும். மார்கழி சிறக்கிறது. மதுரையில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   ஆமாம் அக்கா, அழகாய் வித வித விதமாய் கோலம் போடுகிறார்கள் அக்காவும், தங்கையும். அக்கா கோலம் போடுகிறார் தங்கையும் மற்ற பெண்களும் கலர் கொடுக்க உதவுகிறார்கள். இன்று மயில் கோலம் போட்டு இருந்தார்கள்.
   உங்கள் எல்லோர் பாராட்டையும் வாழ்த்துக்களையும் சொன்னேன். மகிழ்ந்து நன்றி சொன்னார்கள்.
   பாராட்டுக்கள் உற்சாகத்தை கொடுத்து மேலும் செயல்பட வைக்கும் என்பது உண்மைதான் அக்கா.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. அழகான அற்புதமான கோலங்கள்...

  இப்படிக் கோயில் வாசலில் செய்யும் பணிக்கு நாவுக்கரசர் அருளிய தேவாரம் மேற்கோள் அருமை....

  இளம் பிள்ளைகள் கோயில் பணியில் தம்மை இணைத்துக் கொள்வது மனதுக்கு இதம்...

  அடிப்படைப் புரிந்துணர்வு, அன்பு , அறம் - என எல்லாமே மேலோங்கும்..

  அனைவருக்கும் ஐயன் நல்லருள் புரிவாராக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   கோவிலில் திருபணிகளுக்கு நாவுக்கரசர் அருளிய தேவாரம் உத்வேகம் அல்லாவ!
   அதை பாராட்டியதற்கு நன்றி.

   கோலம் போடும் பெண் வங்கி பணிக்கு படித்துக் கொண்டு இருக்கிறார். அவரை வாழ்த்துங்கள் , தங்கை கல்லூரியில் படிக்கிறார் இருவருக்கும் இறைவன் எல்லா நலங்களும் கிடைக்க வாழ்த்துங்கள் .

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 5. எறும்பு முதலான சிற்றுயிர்களுக்கு
  நவீன ரசாயன வண்ணப் பொடிகள் ஊறு விளைவிப்பன...

  இந்த அளவுக்கு சிறப்பாகச் செய்பவர்கள் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

  ஐயன் அருள் உண்டு..
  என்றும் பயமில்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோலி பண்டிகைக்கு விற்கும் நல்ல வண்ணப்பொடியில் ஆற்று மணல் கலந்து விற்கிறார்கள். மதுரை கோவில் வாசலில் . எறும்புகள் கோலத்தில் உள்ள அரிசி மாவை மட்டும் எடுத்து செல்கிறது.
   உங்கள் நல்ல கருத்தை சொல்கிறேன்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. அருமையாய்க் கோலம் போடும் பெண்களின் வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக இருக்கட்டும்.சின்ன வயதில் இருந்தே கோயிலில் திருப்பணி செய்து பழகி விட்டால் பின்னர் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் தானாக வந்து விடும். குழந்தைகளுக்கு ஆசிகள். அவர்களிடம் சொல்லி விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களையும், உங்கள் ஆசிகளையும் சொன்னேன் இன்று குழந்தைகளிடம். அவர்கள் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள்.
   அவர்கள் அம்மா பெரிய பெண்ணுக்கு வங்கி பணி கிடைக்க வேண்டும் என்றார்கள்.
   வாழ்த்துங்கள். நீங்கள் சொல்வது போல் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் மனபலம் கிடைத்து விட்டால் வேறு ஒன்றும் வேண்டாம் அதை இறைவன் அருளட்டும்.

   உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 7. கோலங்கள் மிக நேர்த்தியாய் இருக்கின்றன.  கச்சிதமாய் இருக்கின்றன.  அந்தப் பெண்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது.  இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல் கோலங்கள் நேர்த்தியாக கச்சிதமாய் இருக்கிறது. இன்றைய கோலம் மயில் கோலம் அதையும் இணைத்து விட்டேன் நன்றாக இருப்பதால்.
   பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 8. அந்தக் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுத்த அவர்கள் பெற்றோருக்கும் பாராட்டுகள் போய்ச்சேர வேண்டும்.  அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னோடியாக கோவிலில் சேவை செய்கிறார்கள் என்பதும் சிறப்புதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுத்த பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள் போய் சேர வேண்டும் என்பதால் அவர்களுக்கு தினம் வாழ்த்து சொல்லி விடுவேன்.

   //அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னோடியாக கோவிலில் சேவை செய்கிறார்கள் என்பதும் சிறப்புதானே?//

   ஆமாம் ஸ்ரீராம். அதுதான் சிறப்பு.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. இளம் பெண்கள் கோலம் போடுகிறார்கள் என்பதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்! அவர்களுக்கு அந்த வழி காட்டிய அவர்கள் பெற்றோர்களுக்கும் பாராட்டை தெரிவிக்க வேண்டும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   குழந்தைகள் (இளம் பெண்கள்) கோலம் போடுவது சந்தோஷமாக இருக்கிறது தான்.அவர்கள் பெற்றோர்களுக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் சொல்ல வேண்டும் தான். சொல்லி விடுகிறேன்.

   நீக்கு
 10. கோலங்கள் திருத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன. இளம் பெண்கள் கோலம் போடுகிறார்கள் என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன். அந்த குழந்தைகளுக்கு நல் வழி காட்டியிருக்கும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் அழகாவும், திருத்தமாகவும் போடுவதுதான் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் வயதை ஒத்த குழந்தைகள் கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கும் போது அலைபேசி இல்லாமல் அவர்கள் கை கோவில் பணி செய்வது மகிழ்ச்சியாக இருந்தது அதனால்தான் இந்த பதிவே.

   பெற்றோர்களுக்கு வாழ்த்தை சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 11. அத்தனை கோலங்களும் அழகு.

  கோயில் வாயிலில் தினம் கோலம் இடும் பெண்களுக்கு எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   கோலத்தை ரசித்து பாராட்டி, வாழ்த்துக்கள் சொன்னதை சொல்லி விடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. கோலம் போடுதல் அவர்களின் கலைத் திறனை வெளிக் கொண்ர்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்
   அவர்களின் கலைத்திறன் தெரிகிறதுதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. அறியாத செய்தியாக இருக்கிறதே?.. கோயிலுக்கு பேப்பர் போடுவார்களா?.. நியூஸ் பேப்பரா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
   //நியூஸ் பேப்பரா?..//
   ஆமாம் சார்.

   கோவிலில் குருக்கள் தினமலர் பேப்பர் வாங்குவார் வாடிக்கையாக.
   அக்கம் பக்கத்தில் இருக்கும் அன்பர்கள் கோவில் திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்து போவார்கள்.
   உங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 15. குழந்தைகளின் ஆத்மார்த்தமான இறைப் பணி பாராட்டுக்குரியது. அவர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு அவர்களின் திறமையை படம் எடுத்து வெளிக் கொணர்ந்த தங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   ஆமாம், ராமலக்ஷ்மி குழந்தைகளின் ஆதமார்த்தமான இறைப் பணி பாராட்டுக்குரியது.
   மாயவரத்தில் புனூகீஸ்வரன் கோவிலில் உழவரபணி வைத்து நடத்துபவர் விழா நடக்கும் கோவில்களில் முன்பே போய் கோவிலை சுத்தம் செய்வது, விளக்கு மற்றும் உலா வரும் வாகனங்களை சுத்தம் செய்வது என்று மிக சிறப்பாக பணி ஆற்றுவார்கள்.

   அது போல் இந்த குழந்தைகளும் கோவிலில் சிறப்பாக எல்லா பணியும் செய்கிறார்கள்.
   அவர்கள் படிக்கும் குழந்தைகள் . அதனால்தான் எனக்கு மிகவும் பிடித்தது.
   இன்று வைகுண்ட ஏகாதசிக்கும் அழகான கோலம் போட்டு இருந்தார்கள். பரமபத வாசலுக்கு, முன் வாசலுக்கு என்று அழகான கோலங்கள் தேர்வு அருமை.

   உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 16. எத்தனை அழகா இருக்கு அத்தனை கோலங்களும். அந்த் பெண்குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறையருள் கிடைக்கட்டும். உங்க கோலமும் அழகு அக்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
   குழந்தைகள் போட்ட கோலங்கள் எல்லாம் அழகுதான்.
   என் கோலத்தையும் ரசித்தமைக்கு நன்றி அம்மு.
   நீங்கள் சொல்வது போல் இறை அருளால் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. அனைத்து கோலங்களும் மிக அழகு மா ...

  கடைசி க்கு முன் உள்ள மயில் கோலம் வித்தியாசமாக , அழகாக இருந்தது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   ஆமாம், அந்த மயில் கோலம் வித்தியாசமாக அழகாய் இருந்தது .
   கோலங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு