பாடுபடும் உழவர்கள்
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை" பாடல் நினைவுக்கு வருதா?
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருகூட்டி" பாடலும் நினைவுக்கு வருதா?
இன்றுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. உழவர் திருநாளை க்கொண்டாட நான் பயணத்தில் எடுத்த படங்களும் எங்கள் வீட்டு பொங்கல் விழா படங்களும் இந்தப் பதிவில் .
பொங்கலுக்கு இனிமையான கரும்பு
"சிறுவர்களின் வாயிலிலே செங்கரும்பு " பாடல்
தை பிறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
முன்பு தைப் பொங்கல் அன்று இப்பாட்டைக் கேட்டு மகிழ்வோம் .
எல்லோர் வாழ்விலும் நல்லதே நடக்க இறைவன் கருணை வேண்டும்.
சில வீடுகளில் வாசலில் கரும்பு கட்டி வைத்து இருந்தார்கள். கோவிலில் ஒவ்வொரு சன்னதி வாசலில் கரும்பைக் கட்டி வைத்து இருந்தார்கள். எங்கள் வீட்டில் பூஜை அறை வாசலில்.
தை மாதம் புது நெல்லு விவசாயி வீட்டுக்கு வரும்.
"நெற்றிவேர்வை சிந்தினோமே ! முத்து முத்தாக! அது நெல்மணியா விளைந்து இருக்கு கொத்துக் கொத்தாக" (ஏர் முனைக்கு என்று தொடங்கும் பாடலில் வரும் வரிதான்)
"அறுவடைக்குக் காத்து இருக்கும் நெல்லம்மா" என்ற பாடலும் நினைவுக்கு வருது
புத்தரிசி வாங்கி நம் வீட்டில்
முத்து முத்துப் பச்சரிசி பாடல்
சூரிய கடவுளுக்கு பூஜை - அவரின் தயவால் இவை கிடைத்தது - அவருக்கு நன்றி
முன்பு மாட்டுப் பொங்கலுக்கு போட்ட கோலம் (மாயவரம்)
முன்பு காணும் பொங்கல் அன்று போட்ட கோலங்கள் கீழே வருவது (மாயவரம் வீடு )
காணும் பொங்கல் அன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு இயற்கை காட்சிகள் காண கிளம்பி விட்டோம்.
மாயவரத்தில் பக்கத்து வீட்டுக் குழந்தை, அவளது பென்சில் டப்பாவில் உள்ள படத்தைக் கொடுத்து," இதைக் கோலமாக வரையுங்கள்" என்று கொடுத்தாள் அதைப் பார்த்து வரைந்த கோலம். பழைய நினைவுகள்
ஓடக்கரைக்குப் போகலாம்
நீர் நிலைகள் இருக்கும் இடத்திற்கு சித்ரான்னங்கள் கட்டிக் கொண்டு போய் உண்டு மகிழ்ந்து வருவோம். இந்த முறை எங்கும் போகவில்லை. சுற்றுலா தலங்கள் தோறும் கூட்டம். தொலைக்காட்சியில் காட்டினார்கள். பலத்த பாதுகாப்பு போட்டு இருக்கிறார்கள் கடற்கரைகளில்
இப்போது இருக்கும் வீட்டில் போட்ட கோலங்கள்
பொங்கல் விழா படம் காட்டி விட்டேன்.
நிறைய எழுதினால் இப்போது படிக்க நேரம் இல்லை யாருக்கும் . விடுமுறை தினம் என்பதால்.
வாழ்க வளமுடன்
படங்களும், சொல்லிய விளக்கப்பாடல்களும் அருமை சகோ.
பதிலளிநீக்குவாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபடங்களையும், பாடலையும் ரசித்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்களுக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள். முதல் படம் பாடுபடும் உழவர்களால், பச்சைப் பசேலென்ற வயல்கள் எனப்பார்க்கும் போது மனதுக்கு மிகவும் நன்றாக உள்ளது நம் ஜீவனுக்கு ஆதாரமாக இருக்கும் அவர்கள் உழைப்புதானே நமக்கு ஜீவாதாரம். அவர்களுக்கு இன்று நம் நன்றிகள்.
"தை பிறந்தா வழி பிறக்கும்" அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அதுபோல "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை"என்ற பாடலும் நன்றாக இருக்கும். இரண்டையும் இந்த பதிவில் அலங்கரித்தமைக்கு உங்களுக்கும் நன்றிகள்.
தங்கள் வீட்டுப் பொங்கல் படங்கள் நன்றாக உள்ளன. பூஜையறையையும், தெய்வங்களையும், புதுப் பொங்கல் பானைகளையும், பொங்கலையும் நமஸ்கரித்து கொண்டேன். சூரிய நாராயணர் அனைவருக்கும் நல்ல வளங்களையும், நலன்களையும் அள்ளித்தர நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கோலங்கள் அனைத்தும் மிக அருமையாக மிகப்பொறுமையாக போட்டுள்ளீர்கள்.மாட்டுப்பொங்கலுக்கு போட்ட கோலம் மிகவும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.
அந்த காலத்தில் சென்னையிலிருக்கும் போது பள்ளிகளுக்கு சேர்ந்தாற் போல நான்கு நாட்கள் விடுமுறை வரும். காணும் பொங்கலுக்கு குழந்தைகளை ஆங்காங்கே கூட்டமிருப்பினும், வெளியில் அழைத்துச் செல்வோம். இப்போது இங்கு சங்கராந்தி அன்று மட்டுந்தான் விடுமுறை. பாக்கி நாட்கள் எல்லாம் விடுமுறை கிடையாது.
பதிவில் தரப்பட்டுள்ள அழகான விஷயங்களை படித்து ரசித்தேன். அனைத்துப் பகிர்வினுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//நம் ஜீவனுக்கு ஆதாரமாக இருக்கும் அவர்கள் உழைப்புதானே நமக்கு ஜீவாதாரம். அவர்களுக்கு இன்று நம் நன்றிகள்.//
அருமையாக சொன்னீர்கள்.
//"தை பிறந்தா வழி பிறக்கும்" ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை"என்ற பாடலும் நன்றாக இருக்கும். //
ஆமாம் , காலத்தை வென்ற பாடல்கள்.
//புதுப் பொங்கல் பானைகளையும், பொங்கலையும் நமஸ்கரித்து கொண்டேன்.//
புதுப் பொங்கல் பானை இல்லை கமலா அம்மா என் கல்யாணத்திற்கு கொடுத்தது புது பானை இல்லை.
வருஷம் பல ஆனாலும் நல்ல வெங்கலம் என்பதால் பளிச் என்று இருக்கிறது.
//சூரிய நாராயணர் அனைவருக்கும் நல்ல வளங்களையும், நலன்களையும் அள்ளித்தர நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
ஆமாம் அனுவும் சொன்னார்கள் ஒரு நாள் தான் விடுமுறை என்று.
கோலங்களையும், பதிவையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
சின்ன உருளியை எப்போதாவது தான் எடுப்பேன். இன்னொரு உருளியும் இருக்கிறது அதுவும் அப்படியே புதுசாக இருக்கும். பொங்கல் சமயம் பட்டும் தான் எடுப்பேன்.
எல்லாப்படங்களும் அருமை. முக்கியமாக மாயவரத்தில் போட்ட மாட்டுப்பொங்கல் மாடு! கோலங்கள் இந்த வருடம் போட்டவையும் அழகு. பூஜை அறையும் சூரிய பூஜைப் படங்களும் நன்றாக வந்துள்ளன. பொங்கல் வெண்கலப்பானையில் தான் நானும் பண்ணுவேன். ஆனால் இங்கே வெண்கலப்பானை இல்லை. :( ஆகவே குக்கர் பொங்கல் தான். தாமதமான பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்
நீக்குமாட்டுப் பொங்கல் கோலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் பொங்கல் பதிவில் உங்கள் பொங்கல் பானையை பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
வெண்கலபானை இருந்தாலும் சிலர் குக்கர்தான். பழமையை விட முடியாமல் பானையில் பொங்கல் வைத்து விட்டு அதை செலவு செய்ய கஷ்டமாய் இருக்கிறது.
வீட்டு வேலை செய்பவர் நாங்கள் இரண்டு பேர். அப்புறம் கொஞ்சம் கோவில் வாசலில் உள்ள மாட்டுக்கு, காக்காவிற்கு போட்டு காலி செய்தோம்.
உங்கள் கருத்துக்கும், பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி.
முன்பு எனது இரண்டு பதிவில் எழுதிய பாடல்கள் அனைத்தும் நினைவில் வந்தன...
பதிலளிநீக்குகோலங்கள் அழகு...
உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...!
என்றும் இனிய உழவர் தின வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருந்தது.
பழைய சினிமாக்களில் விவசாயம், அதை சார்ந்த பாடல்கள் இருந்தன.
//உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...!//
ஆமாம், அதுதான் வேண்டும்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தை பிறந்தால் வழி பிறக்கும்... நல்ல பாடல் மா...
பதிலளிநீக்குநீங்கள் சேர்த்திருக்கும் படங்கள் அழகு. பழைய கோலங்கள், புதிய கோலங்கள் என அனைத்துமே அழகு.
சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுவது ஒரு வகையில் மகிழ்ச்சியே.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குதை பிறந்தால் வழி பிறக்கும் பாடல் எல்லா கலத்தவருக்கும் பிடித்த பாடல்தான்.
சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுவது மகிழ்ச்சிதான் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் யாவும் மிக அழகு! இங்கிருந்து கொண்டு [ துபாயில் ] இந்த மாதிரி படங்களை மட்டுமே ரசிக்க முடியும். இங்கும் பொங்கல் கொண்டாடினோம். ஆனாலும் மாக்கோலமும் ஊரெங்கும் திருவிழா கோலங்களும் நம் ஊரில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇங்கே கிராமங்களில் குடிசை வீடுகளிலும் பொங்களுக்கு புது மண் மெழிகி அழகாய் மாக்கோலம் வீட்டை சுற்றி போடுவார்கள். முள் படலுக்குள் இருக்கும் வீட்டு வாசல் முன் சாணம் தெளித்து மிக பெரிய கோலம் போட்டு பொங்கல் வைப்பார்கள். பார்க்கவே மிக அழகாய் இருக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு ஊரெங்கும் நீங்கள் சொல்வது போல் திருவிழாதான்.பெண்கள் தலையில் சிவந்தி பூ , கையில் மருதாணி, குழந்தைகள் கையில் கரும்பு பார்க்கவே மகிழ்ச்சி. மாட்டுப் பொங்கல் அன்று வண்டிகளில் குழந்தைகள் பொங்கலோ! பொங்கல் என்று உற்சாக குரல் கொடுத்துக் கொண்டு போவார்கள் வீதி முழுவதும். ரேக்ளா ரேஸ் நடக்கும் பூம்புகாரில்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
காணும்பொங்கலான நேற்று ஒவ்வொரு ஊரிலும் சுற்றுலா இடங்கள் களைகட்டி இருக்கும். நாங்கள் எங்கும் வெளியில்செல்லவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குகாணும் பொங்கல் அன்று நம்மைவிட மூத்தவர்களை கண்டு வணங்கி வருவோம்.
உறவினர் நண்பர்களை சந்திக்கும் தினமாக அவர்களுடன் வெளியில் சென்று மகிழும் நாளாக இருந்தது.
இப்போது வீட்டில் நிம்மதியாக குடும்பத்தினர் எல்லோரும் பேசி களிக்கும் நாளாகவும் மாறி வருகிறது.
பொங்கல் கோலங்களும், பொங்கல் கொண்டாட்டங்களும் அருமை. இனிமையான பாடல்கள். இப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் தினங்களைக் குறித்து பாடல்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன். போதுமான அளவு முன்பே பாடி விட்டார்கள்போலும்!
பதிலளிநீக்குபழைய மாதிரி பாடல்கள் சினிமாக்களில் இடம் பெறுவது இல்லைதான்.
நீக்குநீங்கள் சொல்வது போல் அனைத்தையும் முன்பே பாடி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
நம் வீடுகளிலும் இப்போது பழைய உற்சாகம் இல்லை. எங்கள் வீட்டு பொங்கலை என் பிள்ளைகள் ஸ்கைப்பில் பார்த்தார்கள். அவர்கள் வீட்டுப் பொங்கலை நாங்கள் ஸ்கைப்பில் பார்த்து ரசித்து பாராட்டி வாழ்த்தினோம்.
இந்த வசதி கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி வணங்கி கொள்கிறோம்.
பொங்கல் கோலங்கள், பொங்கல் கொண்டாட்ங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உழவர் தினப் பதிவாக வந்திருக்கும்
பதிலளிநீக்குஅழகிய பாடல்கள்.
மாயவரத்துக் கோலங்கள்.
இன்றையக் கோலங்கள் அனைத்துமே கச்சிதம். அதுவும் மாடு வண்ணத்தில் மிளிருகிறது.
"வளர்ந்து விட்டப் பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா
தலை வளஞ்சு சும்மா பார்க்கிறேயே தரையின் பக்கமா//
இது போலப் பாடல்களை இனிக் கேட்க முடியுமா.
நான் வீடியோவை புகுத்தினால் எழுத்தை மறுக்கிறது
ப்ளாகர்.
இதுவும் கடந்து போகும்.
குழந்தைகள் நலனோடு இருக்கட்டும்.ஸ்கைப்பிலாவது பார்க்க முடிகிறதே.
நீங்களும் கணவரோடும் வளம்,நலம் கிடைக்க நல் வாழ்வு
பெருக இருக்க வேண்டும். நன்றி மா.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குமாயவரம் கோலங்கள் பழைய நினைப்புதான் (அருமையான வசந்த காலம்)
//"வளர்ந்து விட்டப் பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா
தலை வளஞ்சு சும்மா பார்க்கிறேயே தரையின் பக்கமா////
மிக அருமையான பாடல். குடும்பம், பாசம், விவசாயம் , அன்பு எல்லாம் மிளிரும் அந்தக்கால படங்களில், பாடல்களில்.
வீடியோ போட்டால் எழுத்தை ஏன் மறுக்கிறது?
திண்டுக்கல் தனபாலனிடம் கேட்டுப் பாருங்கள் அக்கா.
ஸ்கைப்பிலாவது பார்க்க முடிகிறதே என்று ஆறுதல் அடைந்து கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
>>> சூரிய கடவுளுக்கு பூஜை - அவரின் தயவால் இவை கிடைத்தது - அவருக்கு நன்றி...<<<
பதிலளிநீக்குஇப்படி மனமாரச் சொல்வதைக் கூட எதிர்த்துக் கொண்டு இன்று சில பேர்...
அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு பலபேர்...
எப்படியோ அவர்களுக்கும் உணவு கிடைக்கின்றது என்ற அளவில் அவர்களுக்கு சரி...
எனக்கெல்லாம் மனசு கேட்கவில்லை...
இன்று தமிழகத்தின் கிராமங்களில் கூட 90 % காளை மாடுகள் கிடையாது..
விவசாயத்துக்கு ஆள் கிடைப்பதும் அரிதாகிப் போனது..
எல்லாம் பாழாய்ப் போன அரசியல்...
இனிவரும் வருடங்களிலாவது நல்லன பெருகட்டும்..
வாழ்க நலம் எல்லாம்!...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், கிராமங்களில் இப்போது காளை மாடு உழவு இல்லை, எல்லாம் எந்திரமயமாகி விட்டது. நான் கடையநல்லூர் பக்கம் உழவு மாடு உழுவதை படம் எடுத்தேன்.
விவசாயம் இனி வரும் காலங்களில் செழித்து இருக்க இறைவன் அருளவேண்டும்.
விவசாய நிலங்கள் எல்லாம் இப்போது வீட்டுமனைகள் ஆகி கொண்டு வருகிறது.
விவாசயம் செய்ய தண்ணீர் இல்லை.
வரும் காலத்தில் நல்லது பெருகட்டும்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
இனிய பாடல்களும் அழகான படங்களும் நேர்த்தியான பதிவு...
பதிலளிநீக்குஉழவைக் குறித்த பழைய பாடல்கள் காலத்தால் அழியாதவை...
தமிழகத்து விவசாயிகள் நுண்ணறிவில் தேர்ந்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை..
உழவைக் குறித்த பழமொழிகளும் இலக்கியப் பாடல்களும் பின்னாளில் திரைப்பாடல்களும் ஏராளம்... ஆயினும் தற்காலத்தில் உழவைப் போற்றி புதிய பாடல்கள் எதும் வராதது குறைதான்...
இப்படி பழைய அனுபவங்களில் ஆழ்ந்து மகிழ்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை...
வாழ்க நலம்...
//இனிய பாடல்களும் அழகான படங்களும் நேர்த்தியான பதிவு...//
நீக்குபதிவை பாராட்டியதற்கு நன்றி.
//உழவைக் குறித்த பழைய பாடல்கள் காலத்தால் அழியாதவை...//
ஆமாம், காலத்தால் அழியா பாடல்கள்.
விவசாயிகள் நுண்ணறிவில் தேர்ந்தவர்களாக இருந்து இருக்கிறார்கள். இன்றும் நிறைய பேர் சிறந்த முறையில் விவசாயம் செய்து பரிசுகள் பெறுவதை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆர்வமும், வசதியும் வாய்ப்பும் இருந்தால் மேலும் நன்றாக செய்வார்கள்.
பழைய பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்.
உங்கள் அருமையான கருத்துகளுக்கு நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
உழவர்களின் வாழ்வு செழிக்கட்டும். பொங்கல் கொண்டாட்டப் படங்களும் அழகான கோலங்களும் பாடல் பகிர்வுகளும் மிக அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஉழவர்களின் வாழ்வு செழித்தால் நாடு நலம் பெறும்.
பதிவையும் பாடலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை" பாடல் நினைவுக்கு வருதா?
பதிலளிநீக்குமணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருகூட்டி" பாடலும் நினைவுக்கு வருதா?//
இரண்டுமே அருமையான பாடல்களே..
தென்னந்தோப்பு வாழைத்தோட்டம் கரும்புத்தோட்டம் அத்தனையும் அழகு.. பச்சையாக இருந்தாலே அழகுதான்..
பாடல்களும் இனிமை, கண்ணுக்கு அழகான பசுமை தோட்டங்களும் அழகுதான்.
நீக்குஇந்த பசுமை எப்போதும் இருக்க அருள் புரியவேண்டும் இறைவன்.
இயற்கையை போற்றி பாதுகாப்பது எல்லோருக்கும் நல்லது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் தானாம்ம்.. பாடம் அழகு.
பதிலளிநீக்குஆஹா உங்கள் சுவாமி அறையும் கரும்பும் அழகு... பொங்கல் ஆயத்தமாகிவிட்டதன் அறிகுறி:)..
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வீட்டில் பொங்கல் ஆச்சா? பால் பொங்கியதா?
பொங்கல் ஆயத்தமாகி விட்டதன் அறிகுறிதான்.
ஆஹா பொங்கல் பானைகள் புதுசோ கோமதி அக்கா, மிக அழகு. அது சரி இவ்ளோ பெரிய பானையில பொங்கியிருக்கிறீங்களே.. என்ன பண்ணுவீங்க? அயலாட்களுக்குக் குடுப்பீங்களோ..
பதிலளிநீக்குஅடுப்புக் கரையில் விளக்கும் படமும், பொங்கல் என்பதற்காக வைச்சீங்களோ இல்ல எப்பவும் இப்படி வைத்திருப்பீங்களோ.. ஆஆஆஆஆஅ நிறையக் கேள்வி கேட்டு விட்டேனோ?:))
பெரிய பானையில் பொங்கி இந்த முறை கஷ்டபட்டு விட்டேன்.
நீக்குவாங்க ஆள் இல்லை.
அக்கம் பக்கத்தில் கொடுத்து வாங்குவார் இல்லை.
நம் வீட்டில் பணி செய்பவருக்கு, காக்கா, புறாவுக்கு, மாட்டுக்கு கொடுத்து காலி செய்தேன். அடுத்த முறை சின்ன பானையில் வைக்க வேண்டும்.
பொங்கல் என்பதால். வாசலில் சூரியன் வரும் போது பால பொங்க வேண்டும் வைகறையில் வைப்போம் .இப்போது வீட்டுக்குள் என்பதால் சூரியனை அடுப்பு மேடையில் வைத்து இருக்கிறேன்.
மஞ்சள், பிள்ளையார், நாழியில் நெல், அல்லது அரிசி, சூரியனாக மண்ணில் செய்தது நிறைகுடம் தண்ணீர் எல்லாம் பொங்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
///மஞ்சள், பிள்ளையார், நாழியில் நெல், அல்லது அரிசி, சூரியனாக மண்ணில் செய்தது நிறைகுடம் தண்ணீர் எல்லாம் பொங்கும் இடத்தில் வைக்க வேண்டும்.///
நீக்குஓ கிச்சினில் பொங்குவதால் நான் இப்படி செய்வதில்லை, அடுத்தமுறை செய்கிறேன் கோமதி அக்கா.
அதிரா, மீண்டும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீக்குஉங்கள் பொங்கல் படங்கள் பதிவு எப்போது?
கோலங்கள் அழகு, பசு காலைத் தூக்கியிருப்பது நன்றாக வந்திருக்கு... அது ஓடை ஆ இல்ல ஆறோ அழகாக இருக்கு. இப்போது போட்ட கோலங்களும் அழகு.. பொங்கல் பொங்கல் என அதுவும் வந்து முடிஞ்சு போச்ச்:)).. காலம் கடகடவென ஓடுது....
பதிலளிநீக்குகால கட கட என்று ஓடுது ! ஓட வேண்டும்.
நீக்குமார்கழி இப்போதுதான் பிறந்த மாதிரி இருக்கிறது. தைமகள் வந்து விட்டாள்.
கோலங்களை ரசித்தமைக்கு நன்றி.
பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அழகான கோலங்கள் மற்றும் படங்கள். பொங்கல் முடிந்து விட்டதே என்று என்ன வைக்கின்றன உங்கள் பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குபண்டிகையை நல்ல படியாக முடித்து விட்டோம் அப்படி என்ன வைக்கிறது இப்போது எங்களை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பொங்கலும் கோலங்களும் மிகுந்த அழகு.
பதிலளிநீக்குவணக்க மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பொங்கலும் கோலங்களும் வெகு அழகு. அதிலும் ஜல்லிக்கட்டு மாடு சூப்பர். :)
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்
நீக்குகோலங்கள் அழைத்து வந்து விட்டதா உங்களை!
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிறந்த பதிவு. இன்று தான் பார்த்தேன். இன்னும் வலைப்பதிவில் தொடர்ந்தும் எழுதி வருவது மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குPlease visit: https://sigaramclick.blogspot.com/
வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
நீக்குஇன்னும் எழுதி கொண்டு இருப்பது ஆச்சிரியமா?
ஏதோ முடிந்த போது எழுதுகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் தளத்தை பார்க்கிறேன்.
படங்கள் அருமை. பொங்கும் பொங்கலும் அருமை.
பதிலளிநீக்குஆனாலும் கிராமத்துப் பொங்கல் நினைவுகளிலேயே தங்கிவிட்டது.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குகிராமத்துப் பொங்கலை மறக்க முடியுமா?
படங்களை ரசித்தமைக்கும் , உங்கள் கருத்துக்கும் நன்றி.