செவ்வாய், 31 டிசம்பர், 2019

சின்னச் சின்ன கோலங்கள்

இந்த ஆண்டில் (2019)நான் போட்ட  மார்கழிக் கோலங்கள்


பெரிய கார்த்திகை அன்று போட்டது

எதிரில் வீடு  நடக்கப் பாதை வேண்டும் அதனால்  சின்னச் சின்னதாக  அது மட்டும் அல்ல என்னால் இப்போது சின்னதாகத் தான் போட முடியும் பெரிய கோலங்கள் போட்ட காலங்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
மாயவரத்தில் திண்ணையில் மாடி ஏறும் இடத்தில் பெரிய கோலங்களைச் சின்னதாக போடுவேன். 15 புள்ளி வரை உள்ள கோலங்கள் போடலாம்.


இந்த முறை கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் எளிதான கோலம் மட்டுமே போடுவது என்று  போட்டு வருகிறேன். எவ்வளவோ கோல சேமிப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல் இணையத்தில் சின்னச் சின்ன கோலங்கள் என்று போட்டு இருப்பதைப் பார்த்துத் தினம் போட்டு வருகிறேன்.

அதை இங்கே பகிர்வாய்.


இந்த ஆண்டு  இறைவன் அருளால் நல்ல படியாக  விடை பெறுகிறது. வரும் ஆண்டை இறைவன் அருளால் வரவேற்போம் புது வருடத்தை.
எல்லோருக்கும்  உடல்நலத்தையும்,  மனபலத்தையும் தர இறைவனை வேண்டுகிறேன்.                                                   வாழ்க வளமுடன்

44 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ புதிய வருடம் அனைவருக்கும் நலம் தரட்டும்.

  நான்கு படங்களும் இல்லை என்பதற்கான குறிகளை காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
  நீங்கள் முதலில் வந்து சொன்னதற்கு நன்றி.
  இப்போது மீண்டும் படங்கள் போட்டு இருக்கிறேன், பாருங்கள்.
  புதிய வருடம் அனைவருக்கும் நலம் தரட்டும் என்ற வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. எங்கு கோலங்களைப் பார்த்தாலும் கும்பகோணத்தில் எங்கள் வீட்டிலிருந்து (சம்பிரதி வைத்தியநாதன் தெரு) கோல அழகை ரசித்த காட்சிகளே நினைவிற்கு வருகிறது. பொதுவாக கோலம் என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பொறுமையாக ரசித்துப் பார்ப்பேன். இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   நாம் சிறு வயதில் ஒவ்வொரு வீட்டு கோலத்தையும் காண உலா வருவோம்,அது மனதில் நீங்காத நினைவுகள். உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. கோலங்கள் அனைத்துமே அழகு.

  புத்தாண்டிற்கான வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா...

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 5. அனைத்தும் அழகு... பதிவை மனைவிற்கு அனுப்பி விட்டேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   பதிவை ரசித்து பதிவை மனைவிக்கு அனுப்பி விட்டது மகிழ்ச்சி.
   நன்றி.

   நீக்கு
 6. கோலங்கள் அட்டஹாசமாக இருக்கிறது.

  ரொம்பப் பெரிதாக கோலங்கள் போடும்போது அதன் அழகு குறைந்துவிடுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   கோலங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.
   பெரிதாக மிக அழகாய் ரசிக்கும் படி போடுபவர்களும் இருக்கிறார்கள்.

   நீக்கு
 7. தெருவில் நல்ல கோலங்கள் இருந்தால் நான் ரசித்துப் பார்ப்பேன்.

  அதைக் கவனியாமல் கோலத்தின் மீது மிதித்துக்கொண்டு யார் சென்றாலும் எனக்குக் கோபம் வரும். கலையையும் உழைப்பையும் ரசிக்கத் தெரியாதவர்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் உங்களை போல் நல்ல கோலங்களை ரசித்து பார்ப்பேன். போட்டுகொண்டு இருந்தால் பாராட்டுவேன். இங்கு ஐய்னார் கோவிலில் காலையில் தினம் சில குழந்தைகள் அழகான வண்ணக்கோலங்கள் பெரிதாக போடுகிறார்கள். அவர்களை பாராட்டுவேன். அவர்கள் வெட்கத்தோடு சிரிப்பதே அழகு.
   தினம் என்னை பார்ப்பார்கள் நான் அவர்கள் கோலத்தை ரசித்து பார்க்கிறேனா என்று பார்ப்பார்கள். வண்ணம் தேர்ந்து எடுத்து போடுவது ஒரு கலைதான். உழைப்பும் அதில் இருக்கிறது.

   உங்கள் பெண்ணும் அழகாய் கோலங்கள் போடுவார்கள் இல்லையா?

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 8. இது கோலங்கள் சீசன் இல்லையா?.. அத்தனை கோலங்களும் அழகோ அழகு.

  பெரிய கார்த்திகை கோலமோ, பளிச்சென்று இருக்கிறது.

  புத்தாண்டு வாழ்த்துக்கள், கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
   பெரிய கார்த்திகை கோலம் தான் சார்.
   கோலங்களை பாராட்டியதற்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

   நீக்கு
 9. வாவ்வ்வ் கோமதி அக்கா, கல்ர்ஃபுல்லாக மிக அழகிய கோலங்கள். விஷேட தினங்களுக்காகப் போட்ட கோலங்களோ இவை?. எனக்கும் கோலம் போட விருப்பம், எங்கள் வெளி வாசல் முற்றம் சீமெண்ட் கற்கள்தான், ஆனா மழை அதிகம் என்பதால், போட்டதும் கரைச்சுப் போடுமே.. பார்ப்போம் அடுத்த சமரில ஒருநாள் முயற்சிக்கும் ஆசை வந்திருக்குது, உங்களோட கோலங்கள் பார்த்த பின்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   மார்கழி மாதம் முழுவதும் விஷேசம் தான் அதிரா. கோலம் போட்டு காவி கொடுக்க வேண்டும் 30 நாளும்.

   அப்புறம் தை மாதம் பொங்கல் கோலம் வீடு முழுவதும்.

   மார்கழி 15 நாட்கள் ஆகி விட்டது இடையில் இரண்டு நாள் போடவில்லை. அத்தை திதி, அமாவாசை என்று இரண்டு நாள் போடவில்லை.

   மார்கழி 30 நாளும் கோலம் போட்டு சாணி பிள்ளையார் பிடித்து வைத்து பரங்கி பூ வைப்போம் இல்லையா அதுதான். இந்த மாதம் போடுங்கள் வீட்டுக்குள் அழகாய் வரைய வருமே! உங்களுக்கு.

   நீக்கு
 10. இலங்கையில் ஒரு தடவை, மாக்கோலம் வீட்டுக்குள் போட்டேன், அது மாவைக் கரைச்சுப் போட்டேன், அதனால நீண்ட நாட்கள் இருந்தது, வந்துபோனோர் எல்லாம் வாழ்த்தினார்கள் ஹா ஹா ஹா.. அதுதான் நான் போட்ட முதலும் கடசியுமான கோலம்.. அதன் பின் போட்டதில்லை.

  தைப்பொங்களுக்கு அப்பாதான் முற்றத்தில் கோலம்போட்டு பானை வைக்க ரெடி பண்ணுவார், அந்த மாவில சில பூக்கள் குட்டியாகப் போடுவதுண்டு நாமும்.. அவ்ளோதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நாள் எல்லாம் மாக்கோலம் உண்டு. கார்த்திகை மாதம் மாக்கோலம் போட்டு கதவில் மாவால் கை அச்சு அடிப்போம். நிலை வாசலில் மாவால் மூன்று பட்டை போட்டு குங்குமம் வைப்போம் வீடு மூழுவது எல்லா கதவிலும் நிலையிலும்.
   காரணம் கார்த்திகை, மார்கழி மாதங்கள் கொஞ்சம் சரியில்லா மாதம் இறைவன் அருள் நம்மை காக்கும் என்றும் கருத்து உண்டு. இன்னொரு காரணம் கார்த்திகை மார்கழியில் மழை, குளிர் இருப்பதால் எறும்புகள் வீடுகளில் தான் குடி இருக்கும் அதற்கு உணவு என்று சொல்வோரும் உண்டு.

   தை பொங்கலுக்கு வெண்கலபானையில் மாவால் கீழே தடவியும் கோலம் வரைந்து வைப்பது கரி பிடித்தால் எளிதாக கழுவி வைப்பதற்குஎன்றும் சொல்வார்கள். சாஸ்திரங்கள் எல்லாம் காரண காரியத்தோடுதான்.

   சாணி பிள்ளையாரை காலை 11 மணிக்கு எடுத்து தட்டி வைத்து விடுவார்கள். அதில் பொங்கலுக்கு , நான்காம் நாள் நடக்கும் சிறுவீட்டு பொங்களுக்கு அடுப்பு எரிக்க பயன்படுத்துவார்கள்.

   பொங்கல் அன்று வைக்கும் 9, 11 என்று ஒற்றை படியில் வைக்கும் சாணி பிள்ளையாரையும் எத்தனை பிள்ளையாரோ அத்தனை இலை துண்டில் பழம், வெல்லம்,தேங்காய், சர்க்கரைபொங்கல், வெண்பொங்கல் வைத்து குழந்தைகள் அதை சுற்றி வந்து கும்மி அடித்து சிறு வீட்டு முன் வைத்து விளையாடி பின் நீர்நிலையில் கரைப்பார்கள்.

   நீக்கு
 11. உங்கள் கோலங்கள் மிக நேர்த்தியாக அழகாக வந்திருக்குது.

  இவது செட் படத்தில், கீழே நம் இடப்பக்க மூலையில் இருப்பது.. மயில் தோகைபோன்றது, மிகவும் அழகாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் கலர் பல வருடம் ஆச்சு. புதிதாக வாங்கவில்லை . இருக்கும் கலரை காலி செய்து கொண்டு வாங்க வேண்டும்.
   கோலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   முன்பு கோலங்களை பகிர கேட்டீர்கள். என் பழைய மார்கழி பதிவுகளில் கொஞ்சம் பெரிய கோலங்கள் போட்டு இருப்பேன்.

   நீக்கு
 12. 2019 நைட் முழிச்சிருந்து எல்லோரையும் வாழ்த்தியது, நேற்றுப்போல இருக்கு.. அதுக்குள் அடுத்த வருடம்.. எப்படி ஓடிவிட்டது பாருங்கோ.. எனக்கு கவலையாக இருக்குது.. கடகடவெனக் காலம் ஓடி வயசாகுதே என்று.. ஹா ஹா ஹா ஆனாலும் என்ன பண்ணுவது.. காலத்தை நிறுத்த முடியாது.. நாம் தான் கவலைப்பட்டிடாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து களிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //2019 நைட் முழிச்சிருந்து எல்லோரையும் வாழ்த்தியது, நேற்றுப்போல இருக்கு.. அதுக்குள் அடுத்த வருடம்.. எப்படி ஓடிவிட்டது பாருங்கோ.//

   காலம் வேகமாய் ஓடுவது நல்லது பொழுதை தள்ளுவதே கஷ்டம் என்று இருந்தால்தான் கவலை படனும். மனதுக்கு என்று வயது ஆவதில்லை அதுவும் அதிராவுக்கு வயசாகாது.

   கவலை படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து களிப்போம் நீங்கள் சொல்வது போல்.நடப்பது எல்லாம் இறைவன் விருப்பம் என்று இருப்போம்.

   நீக்கு
 13. இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா. நீங்களும் மாமாவும் நலமோடும் மகிழ்வோடும், இன்னும் பல சுற்றுலாக்கள் சென்று, பிள்ளைகளோடும் பேரக் குழந்தைகளோடும் மகிழ்ந்திருக்க என் வாழ்த்துக்கள்...வாழ்க வளமோடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி அதிரா.
   உங்கள் அன்பான வாழ்த்தால் மனம் கசிந்து விழியோரம் கண்ணீர் துளிகள்.
   உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  தாங்கள் இந்த ஆண்டு மார்கழியில் போட்ட கோலங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. பெரிதான கோலங்கள் தெருவில் போடலாம். அதையும் போகிற 2,3,4 சக்கர வண்டிகள், நடமாடும் பாதசாரிகள் போட்ட அரைமணிக்குள்ளாகவே கலைத்து விடும் அபாயம் உண்டு. ஆனால், ஜன சந்தடி அவ்வளவாக இல்லாத கிராம பகுதிகளில் ஓரளவு மாலை வரை தாக்குப் பிடிக்கும். இதற்கு இந்த மாதிரி குட்டி வாசலில் சின்ன கோலங்கள் போட்டு நாள் முழுவதும் வைத்திருந்து பார்த்து மகிழலாம்.

  நீங்கள் போட்ட கோலங்கள் அத்தனையும் பளிச்சென்று மிகவும் அழகாக உள்ளது. முக்கியமாக தீபக் கோலங்கள், மலர் கோலங்கள், வாத்துக் கோலம் அனைத்தும் அருமையாக போட்டுள்ளீர்கள். உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  மன, உடல் நலத்தை இப்புத்தாண்டு அனைவருக்கும். பாரபட்சமின்றி தரவேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   நீங்கள் சொன்னது போல் கிராமத்தில் பெரிய வாசல் உள்ள வீடு சாணம் தெளித்து பெரிய கோலம் போட்டு சுற்றி பார்டர் கோலம் போட்டு மிகவும் அழகாய் பூசணி பூ வைத்து இருப்பார்கள்.

   இங்கு மதுரையில் குறுகிய தெருவில் சிலர் அழகான கலர் கோலம் போட்டு இருப்பார்கள் கொஞ்ச நேரத்தில் அழிய போகுது அதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு கோலம் போட்டு இருக்கிறார்களே ! என்று நினைப்பேன்.

   இங்கு "பார்வையாளர் இல்லாத விளையாட்டு திடல்" மாதிரி இருக்கிறது யாரும் பார்ப்பார் இல்லை. நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.

   கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.

   உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

   நீக்கு
 15. அத்தனை கோலங்களும் அழகோ அழகு! கார்த்திகைக்கோலம் சிறப்பு. உங்களுக்கெல்லாம் புத்தாண்டு பிறந்து விட்டது. எங்களுக்கு இனிமேல் தான் பிறக்கணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணகம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.
   இப்போது உங்களுக்கு புத்தாண்டு பிறந்து இருக்கும்.
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் அக்கா...     கோலங்களை ரசித்தேன்.  டைல்ஸ் தளத்தில் கோலம் போடுவது ஒரு கலை.   இழைகள் அழகாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   கோலங்களை ரசித்து கோல இழைகளைப் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 17. உங்களுக்கும் ஸாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோமதி அக்கா...

  பதிலளிநீக்கு
 18. வண்ண வண்ணக் கோலங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு..

  வளங்களுடன் செழிக்கட்டும் புத்தாண்டு - நல்ல
  மனங்களுடன் தழைக்கட்டும் புத்தாண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   கவிதையாக வாழ்த்து அருமை.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   பழைய பதிவுகளுக்கு வர முடியவில்லையா? வேலை அதிகமோ!

   நீக்கு
  2. மாத வருடாந்திரக் கணக்குகளை நிறைவு செய்யும் வேலை....

   சென்ற பதிவில் கருத்துரைத்த ஞாபகம்...

   சமையல் கூடத்தின் சாவியையும் சரக்கறையின் சாவியையும் தனித்தனியே வைத்திருந்தேன்..

   திங்களன்று சரக்கறையின் சாவியை எனது அறையிலேயே மறந்து வைத்து விட்டேன்..

   8:30 மணியளவில் தான் மாற்றுச் சாவி கிடைத்தது.. அதற்கு மேலும் ஒரு மாற்றுச் சாவி செய்வதற்கு அலைச்சல்...

   எனது இணைய இணைப்புக்கு பணம் கட்ட வேண்டும்..

   20 + 40 கி.மீ.. அலைச்சல்.. மிகவும் களைத்து விட்டேன்..

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  3. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   மார்கழி பதிவுக்கு வந்தீர்கள் அப்புறம் இரண்டு பதிவு வரவில்லை அது தான் கேட்டேன்.
   உங்கள் வேலைகள் மும்முரத்தில் வரவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

   பக்கத்தில் தங்கும் இடம் கிடைக்காதா?
   உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
   நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 19. அழகான கோலங்கள் அக்கா.சூப்பரா போட்டிருக்கிறிங்க. ஊரில போட்டதோடு சரி. எனக்கும் இந்த கலர்பொடி கோலங்கள் போட ஆசை இங்கு போடுவது கஷ்டம். உங்க கோலங்கள் அழகோ அழகு.
  உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  கவின் குட்டிக்கு சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
   ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
   அங்கு போட முடியாதா?
   கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.
   உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மு.
   கவின் குட்டிக்கு சொல்லி விடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 20. கோலங்கள் அசத்தல். அப்பார்ட்மெண்டுக்கு ஏற்றபடி சிறியதாக, அழகாக போட்டிருக்கிறீர்கள். இவற்றை step by step ஆக படம் எடுத்து தனியாக ஒரு பதிவு போடுங்கள். கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.
   எல்லோருக்கும் தெரிந்த கோலங்கள் தான்.
   யூடியூப்பில் எல்லாம் இருக்கிறது .
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 21. கிளிக் கோலம் பார்த்து திருமதிப் பக்கங்களுக்கு வந்தேன் முதன் முதலாக. அந்த நினைவு வந்தது.

  அத்தனை கோலங்களும் மிக நேர்த்தி. அழகு. பாராட்டுகள்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  கிளிக்கோலம் பார்த்து வந்தது நினைவு இருக்கிறது ராமலக்ஷ்மி.

  கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு