செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நம் அன்பு ஏஞ்சலுக்கு  வாழ்த்துக்கள்!


முன்பு கிறிஸ்தவ நட்புகளுக்கு புதுவருட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி மகிழ்வோம். இப்போது வாட்ஸப்பில் அழகிய படங்களுடன் கூடிய வாழ்த்தை அனுப்புகிறோம்.  போனில் வாழ்த்தை  சொல்லி விடுகிறோம். கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.


வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. அவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், மற்றும் வண்ணவிளக்குகள் வைத்து அலங்காரம் செய்கிறார்கள். நட்புகள் ஒன்று கூடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

மகன் இருக்கும் ஊருக்குச் சென்றபோது கிறிஸ்துமஸ் கடைகள், அண்டை வீடுகளில்  பார்த்த காட்சிகள் , மகன் வீட்டு அலங்காரம் இவை இங்கே காட்சியாய். 


வீடுகளில்கடைகளில்
                                                                     கடை வீதியில்.

மகன் வீட்டில்


                  பேரனின்  விளையாட்டு  சாமன்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா
எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்க வருகிறார்மகன் வீட்டு வாசலில்
                                                         

யேசு பிறப்புக் கதை  காட்சி அமைப்புக்கு  இந்த பாடல்

பி. சுசீலா அவர்கள் பாடியது மிகவும் நன்றாக இருக்கும் இந்த பாடல்.

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி துதி மனமே!

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் இந்தப் பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள், நடித்து இருக்கிறார்கள்.

மதுரையில் "பசுமை  நடை"யின் 100 வது நடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி தமிழ்ச்சங்கத்தில் நடந்த போது 100 நடையின் படங்கள் இந்த கிறிஸ்மஸ் மரத்தில் தொங்க விடப் பட்டது.

எங்கள் குடியிருப்பிலும் பல வீடுகளில் கிறிஸ்துமஸ் பஜனைகள் நடைபெற்றன.  சில வீடுகளின் பால்கனியில் அழகிய வண்ண விளக்குகள், நடசத்திரங்கள் , கிறிஸ்துமஸ் மரம் தெரிகிறது.

                                                    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்  !
                                                                   வாழ்க வளமுடன்.39 கருத்துகள்:

 1. ஒவ்வொரு படமும் தான் எத்தனை அழகு...

  காணொளியும் அருமை...

  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன்
  படங்கள், காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
  வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் யாவும் நன்றாய் இருந்தன.  பெத்தலையில் பிறந்தவனை பாடலைப் போலவே பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.   நான் கிறித்துவப் பள்ளியில்தான் பயின்றேன்.  எனவே இவை யாவும் பரிச்சயம்.  ஆனால் நண்பர்கள் யாருக்கும் வாழ்த்துமடல் அனுப்பியதாக நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   எனக்கும் நிறைய பழைய கிறிஸ்துவ பாடல்கள் பிடிக்கும்
   ஏசு ரட்சகர் பெயரை சொன்னால் எல்லாம் கிடைக்குமே! அவர் இயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் நடக்குமே ! என்ற எல்.ஆர். ஈஸ்வரி பாடல், "வரவேண்டும் எனது அரசே !" என்ற பி.லீலா பாடல் எல்லாம் ஏசுவே எனக்கு எல்லாம் ஏசுவே சுசீலா பாடல் பிடிக்கும். இன்னும் நிறைய பிடிக்கும்.

   என் பெற்றோர்களுக்கு ,சாருக்கு, எனக்கு , என் குழந்தைகளுக்கு எல்லாம் கிறித்துவ நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு வாழ்த்துமடல் வாங்கி இருக்கிறோம். மாயவரத்தில் வீட்டுக்கு அருகில் வாழ்த்துமடல் கடை உண்டு. கிறிஸ்துமஸ், புதுவருட வாழ்த்து, பொங்கல் வாழ்த்து எல்லாம் தேர்ந்து எடுப்போம்.

   நீக்கு
 4. நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. எல்லாம் ஏசுவே ஜிக்கி பாடிய பாடல் பிடிக்கும்.

   நீக்கு
 5. மிக அழகிய படங்கள் மா...

  கிறிஸ்துவ பள்ளியில் படித்ததால் எனக்கும் அந்த கொண்டாட்டங்களும் , அலங்காரங்களும் மிகவும் பிடிக்கும் ...


  தங்கள் மகன் வீட்டில் உள்ள அலங்காரங்களும் மிக சிறப்பு ..


  மகிழ்ச்சியை பரிமாறுவதில் என்றும் மகிழ்ச்சியே ..


  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   எங்கே உங்களை அஷ்டமி சப்பரம் பதிவில் காணோம்?

   நானும் கிறிஸ்துவ பள்ளியில் படித்து இருக்கிறேன்.

   நீங்களும் கிறிஸ்துவ பள்ளியில் படித்து இருப்பதும் உங்களுக்கு இந்த கொண்டாட்டம், அலங்காரம் எல்லாம் பிடிப்பது மகிழ்ச்சி.
   மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதில் மாயவரம் பக்கத்து வீட்டு நட்புகளை நினைத்து கொள்கிறேன்.

   இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனு.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. பயணத்தில் இருந்ததால் இன்னும் பல பதிவுகள் படிக்க உள்ளன ...அன்று கணினியை திறக்கவும் தங்கள் பதிவு வந்ததால் உடனே கருத்துரை இட்டேன் மா..

   நீக்கு
  3. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   நீங்கள் அஷ்டமி சப்பரம் படித்தது மகிழ்ச்சி.

   உங்கள் பயணத்தில் எடுத்த படங்கள் பார்த்தேன், எல்லாம் அழகு.

   நீக்கு
 6. படங்கள் வழக்கம் போல் அழகு
  அனைவருக்கும் கிரிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 7. படங்களெல்லாம் மிகவும் அழகு!
  மறந்து போன சுசீலாவின் பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். பள்ளியில் அந்தப்பாடலைப் படியதெல்லாம் நினைவிற்கு வருகிறது.
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன்
   படங்களை, பாடலை ரசித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
   கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 8. அழகிய கிரிஸ்மஸ் அலங்காரப் படங்கள். போன வருடமும் ஒரு போஸ்ட் போட்டனீங்கள் எல்லோ கோமதி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   போனவருடமும் பதிவு போட்டேன் அதிரா.
   அலங்கார படத்தை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 9. பேரனில் விளையாட்டுப் பொருட்களும் கிரிஸ்மஸ் தாத்தாவும் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 10. ஒரே பாடலை இருவர் பாடுகின்றனரோ? ரெண்டாவது பாட்டின் குரல்தான் சூப்பராக இருக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பி.சுசீலா பாடிய பாடல் நன்றாக இருக்கும் அதனால்தான் அதையும் பகிர்ந்தேன், உங்களுக்கும் அந்த பாடல் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   இன்னும் நிறைய இனிமையான பழைய கிறிஸ்மஸ் பாடல்கள் இருக்கிறது.

   நீக்கு
 11. பதில்கள்
  1. மகன் வீட்டு வெள்ளைக் கிறிஸ்மஸ் மரம் பழசாகி விட்டது அடுத்த வருடம் வேறு வாங்க வேண்டும் என்றான்.

   நீக்கு
 12. வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள். நம் நாடுகளில்தான், கிரிஸ்தவர்கள்தான் கிரிஸ்மஸ் கொண்டாடுவார்கள் எனும் நினைப்பு உண்டு. ஆனா இந்நாடுகளில் மதத்துக்கும் கிரிஸ்மஸ் க்கும் சம்பந்தமில்லை. பலருக்கு இங்கு மதமே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலையுலக நட்புகள் அனைவருக்கும் வாழ்த்து சொன்னது நன்றி.
   மதம் கடந்த அன்பு நல்லது தான். அவர் அவர் இறைவனை வணங்கி, மற்றவர்களை மதித்து நடந்து கொண்டால் போதும் அதிரா.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் கண்களை கவர்கிறது. கிறிஸ்துமஸ் தாத்தா தங்கள் பேரனின் விளையாட்டு சாமான்கள் சூழ காட்சி தருவது நன்றாக உள்ளது. கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார விளக்குகளுடன் அருமையாக உள்ளது.

  சுசீலா அவர்களின் பாட்டு நானும் கேட்டு ரசித்திருக்கிறேன். எனக்கும் மிகவும் பிடித்தமான பாட்டு. "எனையாளும் மேரி மாதா.." என்ற பாடலும் ரொம்ப நன்றாக இருக்கும். பசுமை நடையின் 100 படங்களை தாங்கிய படம், மற்ற அனைத்துப்படங்களும் நன்றாக உள்ளன.

  அனைவருக்கும் என்னுடைய அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்
   பதிவையும், படங்களையும், பாடல்களையும் ரசித்தமைக்கு நன்றி.
   "எனையாளும் மேரி மாதா.." பாடல் எனக்கும் பிடிக்கும்.
   எங்கள் பிள்ளைகள் படித்த பள்ளியில் சப்போஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். அதில் நான் பகிர்ந்த பாடல் வைப்பார்கள், எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்த பாடல் அதனால் இந்த பகிர்வு.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. எல்லாம் ஏசுவே, தந்தானைத் துதிப்போமே,
  தேனினிமையிலும் ஏசுவின் நாமம் எல்லாப் பாடல்களும் மனதில் ஓடுகின்றன.
  பள்ளி நாட்கள் குதூகலமாகக் கழிந்த மகிழ்ச்சி
  அத்தனையும் உங்கள் பதிவு கொண்டுவந்து
  கிரிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்து விட்டது.

  மகன் வீட்டின் நல் நாள் படங்களும், வண்ணங்களும்
  பரிசுகளும் அழகு.
  மனம் நிறை வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   நீங்கள் சொன்ன பாடல்களை இன்று கேட்டேன்.

   பள்ளி நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 15. நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

  படங்கள் அனைத்தும் அருமை. ஆம், எங்கும் நட்சத்திரங்களும் வண்ண விளக்குகளும் கிறுஸ்துமஸ் மரங்களுமாகக் காட்சி அளிக்கிறது பெங்களூரும். புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   நீங்கள் எடுத்த படங்களை முகநூலில் பார்த்தேன்.அழகிய படங்கள்.
   புதுவருடம் நல்ல வருடமாய் இருக்கட்டும் எல்லோருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிக்கா .
  //கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.//இங்கே நிறைய கார்ட் கடைகள் இன்னமும் இருக்குக்கா .விற்பனையும் அமோகம் .நான் நேற்றும் மூன்று ஹாண்ட்மேட் கார்ட்ஸ் செய்தேன் மூன்று முதியோருக்கு .படம் எடுக்காம விட்டுட்டேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

   முன்பு நீங்கள் செய்த வாழ்த்து அட்டைகளை பார்த்து இருக்கிறேன் ஏஞ்சல்.
   முதியோர்களுக்கு வாழ்த்துஅட்டை செய்து கொடுத்தது மகிழ்ச்சி தருகிறது.
   வாழ்த்துக்கள் ஏஞ்சல்.

   நீக்கு
 17. படங்கள் எல்லாம் அழகு .பேரனின் கிரியேட்டிவிட்டி ரசித்தேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரன் புது புதிதாக ஏதாவது கற்பனை செய்து படைத்து விளையாடுவான்.

   படங்களையும் பேரன்
   படைப்பாற்றலையும் ரசித்தமைக்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 18. படங்கள் எல்லாம் அழகு. உங்கள் மகனின் வீட்டிற்கு முன் இருக்கும் அலங்காரமும், 100வது பசுமை நடையின் கிறிஸ்துமஸ் மரமும் மிகவும் கவர்ந்தன. கிறிஸ்துமஸ் மரத்தில் இந்துக் கோவில்களின் படங்கள் மத ஒற்றுமையை பறை சாற்றுவது போல இருக்கிறது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   பசுமை நடையில் அவர்கள் அழைத்து சென்ற சரித்திர புகழ்பெற்ற இடங்கள் அடங்கிய 100 நடையுன் பகிர்வாய் படங்களை காட்சி படுத்தி இருந்தார்கள்.

   நீக்கு
 19. //கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.//  உண்மைதான். நான் கிறித்துமஸுக்கு வாழ்த்து அனுப்பியதில்லை, ஆனால் புது வருடத்திற்கும், பொங்கலுக்கும் தவறாமல் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்புவேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடம் வாழ்த்துக்கள் சேர்ந்த மாதிரி வரும் வாழ்த்து அட்டைகள் வாங்கி கிறிஸ்துமஸ் நண்பர்களுக்கு அனுப்புவோம்.

   பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகளில் தெய்வ படங்களை தேர்ந்து எடுத்து அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி அனுப்புவோம். குழந்தைகளின் நண்பர்களிடமிருந்து பிடித்த சினிமா நடிகர் நடிகைகள் உள்ள பொங்கல் வாழ்த்துக்கள் வரும்.

   சூரியன், வயல், மாடு, மற்றும் இயற்கை காட்சிகள் திருவள்ளுவர் படங்கள் அடங்கிய வாழ்த்துக்கள் தேடி தேடி எடுத்து அனுப்பி இருக்கிறோம்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு