மாடக்குள ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடக்குள ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும்

மாடக்குள அய்யனார் கோவில்  பிள்ளையார், துணைவிகளுடன் அய்யனார் , முருகன்

ஆடிப்பெருக்கு அன்று காலை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் போனோம். பூக்கார அம்மாவிடம் இந்த  ஊரில் ஆடிப்பெருக்கு சமயம் ஆற்றுக்குப்  போகமாட்டீர்களா என்று கேட்டேன் இங்கு பழக்கம் இல்லை  என்றார் .மாடக்குள கண்மாயில் தண்ணீர் இருக்கா என்று கேட்டேன் இல்லைம்மா ஆனால்  மாடக்குள அய்யனாரைப்  பார்த்து வாருங்கள் அம்மா இன்று நன்றாக இருக்கும் அலங்காரம். கோவிலில் கூட்டம் இருக்கும் என்றார். வெகு நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து இருந்த கோயில்.