செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நடந்தாய் வாழி காவேரி


இன்று காவிரி இருக்கும் நிலை!
காவிரியில் ஆடிப்பெருக்குக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னும் மயிலாடுதுறையில்
ஆடிப்பெருக்கு அன்று மாலை 6 மணிக்கு இப்படி தோற்றமளிக்கிறது!

இன்று காலை அகத்தியர் படத்தில் வந்த நடந்தாய் வாழி காவேரி என்ற பாடல் டீ.வீ யில் கேட்டேன். ‘ இன்று ஆடி பெருக்கு அல்ல்வா அதனால் காவேரி பாடல்கள் வைக்கிறார்கள் நாம் போன வருடம் ஆடிப் பெருக்குப் பற்றி எழுதினோம் அல்லவா’ என்று நினைவு வந்தது.

நம் ஊருக்கு தண்ணீர் வரவில்லையே ஆத்துக்கு போய் சாமி கும்பிடுபவர்கள் என்ன செய்தார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.

அகத்தியர் படப் பாடல்: /அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தாய்!
அழகு தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்!
நடந்த வழி யெல்லாம் நலம் பயத்தாய்!
நங்கையர் உன்னை வணங்கவும்,
அழகு கொஞ்சும் சோலைகள் விளங்கவும்
.... .... .... ....


நாடெங்குமே செழிக்க நன்மை யெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி./

இப்படி அந்த காலத்தில் காவேரி அகன்ற காவேரியாய்= அவள் நடந்து வந்த பாதையெல்லாம்
எல்லோருக்கும் எல்லா வளங்களையும் அள்ளி வழங்கினாள் என்று தெரிகிறது.ஆனால்
இன்று சுருங்கி ,வற்ண்டு காவேரி கடலில் கலப்பதும் இல்லை.

நம்பிக்கைதான் வாழ்க்கை. மறுபடியும் காவேரி நடந்து வர வேண்டும்,நாடு செழிக்க வேண்டும்.எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும். அதற்கு காவேரித் தாய் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

ஆடிக் காற்றில் அம்மியும் அசையும் என்பார்கள்.இப்போது காற்று மருந்துக்குகூட இல்லாமல் வெப்ப சலனமாய் உள்ளது.அங்கு அங்கு மழை பெய்கிறது.இங்கு மழையே இல்லை.
சீனா,பாகிஸ்தானில் வெள்ளம்.ஒரு இடத்தில் தண்ணீரால் கஷ்டம்,ஒரு இடத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டம். இயற்கையின் திருவிளையாடல் புரியவில்லை.

இயற்கையைப் போற்றுவோம்.

/ ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்./

”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும்
காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”

22 கருத்துகள்:

 1. போன வருடம் நான் ஊரிலிருந்த சமயத்தில் கொஞ்சமாய் தண்ணீர் - சாக்கடையுடன் - ஓடி வந்துகொண்டிருந்தது அந்த சிச்சுவேஷன் கூட இல்லியா இந்த வருடம் சுத்தம்! :)

  ஆடி பதினெட்டு காவிரி நீர் நிறைய நிறைய காண்பது எப்போதோ ?

  பதிலளிநீக்கு
 2. நேத்து தான் காவேரி ல தண்ணீர் ரெண்டு கறையும் தொடர மாதிரி ஓடுதுன்னு சொன்னாங்க...

  பதிலளிநீக்கு
 3. அடப்பாவமே இத்தனை காஞ்சு கிடக்கே.. சுடச்சுட படமா..?

  பதிலளிநீக்கு
 4. :(

  //நம்பிக்கைதான் வாழ்க்கை. மறுபடியும் காவேரி நடந்து வர வேண்டும்,நாடு செழிக்க வேண்டும்.எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும். அதற்கு காவேரித் தாய் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
  //

  :) நானும் வேண்டிக்கிறேன்ம்மா

  பதிலளிநீக்கு
 5. தண்ணி இல்லாட்டி ஆடி வந்தாலும் ஒண்ணுதான் ஆடாம வந்தாலும் ஒண்ணுதானே கோமா அம்மா

  பதிலளிநீக்கு
 6. எக்காலம் எப்படி இருந்தாலும் ஆடிக்குக் காவிரி வருவாளே. மனிதர்கள் கையில் மாட்டினால் அவள்தான் என்ன செய்வாள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தாயும் அணையில் கட்டுண்ட்டாளோ:(

  பதிலளிநீக்கு
 7. ஓடி உருண்டு வரும் காவிரி இல்லாமல், "ஆடி பெருக்கு" நினைத்துக் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கிறது.

  இந்த நாளில் நான் பெற்ற மகிழ்ச்சியான நேரங்களை அசைபோடும் விதமாக, எனது வலைப் பதிவில் எழுதியுள்ளேன்.
  லிங்க் http://madhavan73.blogspot.com/2010/08/18.html

  பதிலளிநீக்கு
 8. ஆயில்யன், நிச்சியம் ஒரு நாள் ஆடி பதினெட்டுக்கு காவேரி நீர் நிறைய நிறைய காண்போம்.

  பதிலளிநீக்கு
 9. மங்கை,சில இடங்களில் ஓடுகிறாள் போலும்.

  பதிலளிநீக்கு
 10. ஆம் முத்துலெட்சுமி,சுடச்சுட படம் தான்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி ஆதவன், உங்கள் பிராத்தனைக்கு.

  கூட்டு பிராத்தனைக்கு நல்ல பலன் உண்டு.

  நிச்சியம் காவேரி பழைய நிலை அடைவாள்.நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 12. வறண்ட காவேரியைப் பார்க்க மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்கூட திருப்பராய்துறையில் அகண்ட காவேரியில் முங்கிக் குளித்த அனுபவம் கிடைக்குமா, வரும் காலங்களில், இல்லை அதையும் கூறு போட்டு குடியிருப்புகளாக ஆக்கி விடுவார்களோ?

  பதிலளிநீக்கு
 13. பூமி காய்ந்து கிடப்பதால் ஆடி பெருக்கு கும்பிட என்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டாலும் இங்கு வர காலதாமதம் ஆகிறது. வரண்ட பூமியின் தாகத்திற்கே பற்றாது நீர் அப்புறம் அல்லவா வழிபாடு செய்ய நீர் கிடைக்கும்.

  காலம் மாறும். காவிரி தாய் வருவாள் வல்லி அக்கா.

  பதிலளிநீக்கு
 14. வாங்க வெங்கட் நாகராஜ்,காவேரியில் முங்கி குளித்த நினைவுகள் வந்து விட்டதா? மகிழ்ச்சி.

  மக்கள் மனது வைத்தால் மறுபடியும் பழைய கால்ம் வரும்.

  ஏரி,குளம்,விளை நிலங்களில் வீட்டு மனை மலிவாக அல்லது சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்து கொண்டால் நீர் வளம் பெருகும்.

  உங்களுக்கும் முங்கி குளிக்கும் அனுபவம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 15. தமிழின் முதல் மகளிர் திரட்டி.
  மகளிர் கடல்
  அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தாமிரபரணி இருபக்கமும் கரை தொட்டு ஓடுகிறாள்மா.

  பதிலளிநீக்கு
 17. தாமிரபரணி இரு பக்கமும் கரை தொட்டு ஓடுவது அறிந்து மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 18. ஓடி வரும் காவிரி இல்லாமல் கஷ்டமாய் தான் உள்ளது மாதவன். உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. சின்ன அம்மிணி தண்ணி வந்தாலும் வரவில்லை என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் கலசத்தில் ஆடி வந்து விடுவாள்.

  வருவாள் ஒரு நாள் சல சல என்று.

  பதிலளிநீக்கு
 20. மயிலாடுதுறைக்கு வர வேண்டிய தண்ணீர் எல்லாம் பாகிஸ்தானுக்கு போய் விட்டது போல.

  பதிலளிநீக்கு
 21. கார்பன் கூட்டாளி, தங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வறண்ட காவிரியை பார்க்கையில் நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது....

  சிறு வயதில், காவிரிக்கரையில், நுரை பொங்க நீர் ஓடும் போது, ஆடி 18 அன்று, கையில் சிறு சப்பரம் பிடித்து, காவிரியில் விளையாடி, கட்டு சாதம் உண்டது நினைவுக்கு வந்தது...

  காவிரி மீண்டும் வரும் என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு