வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி









வந்தார் விநாயகர்  தந்தார் அருளை  பழைய பதிவை  வாசிக்க வில்லை என்றால் வாசிக்கலாம்.

//இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது.  ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை  மண்பிள்ளையார் சிலை  நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான்.  அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள்.  மகன் போன முறை  செய்த  பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.//

இன்று எங்கள் வீட்டுக்கு மண் பிள்ளையார் வருவாரா என்று சந்தேகமாய் இருந்தது . நேற்று  வண்ணப் பிள்ளையார்கள் தான் விற்றார்கள். இன்று காலை போய் பார்த்த போது  களிமண் பிள்ளையார் செய்பவர் கடை போட்டு இருந்தார், ஆனால் அவரைச் சுற்றிக் கூட்டம் என்று வந்து விட்டார்கள். இந்த முறை மஞ்சள் பிள்ளையார் மற்றும் நம் வீட்டில் இருக்கும் நிறைய பிள்ளையார்களை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி விடலாம் என்று முடிவு செய்தாலும் , எதற்கும் போய்ப் பார்த்து வருகிறேன், கூட்டம் இல்லையென்றால் வாங்கி
வருகிறேன் என்று போனார்கள் கடைக்கு. அவர் அருளாலே அவர் தாள் வணங்க 
வந்து விட்டார் வீட்டுக்கு .

இவர்கள் வாங்கும் போது இன்னொருவருக்கு செய்து முடித்து விட்டு சார் உங்களுக்கு வேண்டுமா? செய்யவா  ?என்று கேட்டு செய்து கொடுத்து இருக்கிறார்.
அப்புறம் கூட்டம் நிறைய வந்து விட்டதாம். அச்சு வைத்து தான் செய்கிறார்.  ஆனாலும் கூட்டத்திற்கு செய்வது கஷ்டம் தான். .





விநாயகர் சிலைகளைக் கரைக்கும் வழக்கம் ஏன் ஏற்பட்டு இருக்கும் என்பதைப் பற்றிப்
 படித்த செய்தி:-

//ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்று மணலை அடித்து கொண்டு போய் இருக்கும். அதனால் நீர் நிலத்தில் நிற்காமல் கடலை சென்று அடையும். ஆனால் களிமண்ணில் நீர் இறங்கும். களிமண்ணில் உள்ள இடத்தில் நீர் கீழே இறங்கும்.அதனால்  விநாயகரை  நீர் நிலைகளில் கரைக்க செய்தார்கள். ஈரக்களிமண்   நீரோடுசீக்கீரம் கரைந்து  நீரின் வேகத்தோடு சென்று விடும். காய்ந்த களிமண்  அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில்   வரும் நீரானது   பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும். //

நன்றி- தினமலர்.

ஆனால் இப்போது ஆற்றில் மணலும் இல்லை, நீரும் இல்லை. இருக்கும் நீர்நிலைகளில்  விநாயகரை எப்படிக் கரைப்பது? நான் வீட்டில் வாளியில் கரைத்து என் தொட்டிச் செடிகளுக்கு விட்டு விடுவேன். இப்போது  தொட்டி சின்னது இரண்டு தான் இருக்கிரது அதனால் மரம் செடி இருக்கும் இடத்தில் கொண்டு விட வேண்டும். அதனால் சின்னப் பிள்ளையார் தான் வாங்கினோம்.

சேலம் மாணவிகள் செய்த மாதிரியும் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கலாம்.
சேலம் மாணவிகள் 6000  விதைப்பந்து விநாயகர்களை செய்து சாதனை செய்து இருக்கிறார்கள். அவற்றை இன்று மரம் இல்லாத இடங்களில்  போடப் போகிறார்கள். பெரியவிநாயகர் சிலைகளைச் செய்து அவை கரைக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப் படுவதற்குப் பதிலாக இப்படி செய்வது நல்லது.  

  விதைப்பந்து விநாயகர்கள் எல்லாம்  மரங்களாய் வளர்ந்து  வளர்ந்து நல்ல மழையைக் கொடுக்க வேண்டும். 

அந்த குழந்தைகளைப் பாராட்டுவோம். வேந்தர் தொலைக்காட்சியில் விதைப்பந்து விழாவைக் காட்டினார்கள். குழந்தைகள் விதைப் பந்து விநாயகருக்கு கொழுக்கட்டைகளையும் செய்து வணங்கினார்கள். 

அவர்கள் அனைவருக்கும்  விநாயகர் அருள் கண்டிப்பாய் கிடைக்கும்.தன்னலம் பார்க்காமல் பொதுநலத்திற்கு உழைக்கும் குழந்தைகள் வாழ்க!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

 அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும்பவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், அவர்  எல்லோருக்கும் நலமே அருள வேண்டும்.


                                                            வாழ்க வளமுடன்.

25 கருத்துகள்:

  1. தங்கள் குடும்பத்தினருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    சேலம் மாணவிகளின் செயல் பாராட்டுக்குறியது.

    ஆற்றில் கரைப்பது ஏன் என்று நானும் முன்பொரு பதிவு இட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. மேலே விநாயகர் சிலை உருவாவது ரொம்ப நல்லா வந்திருக்கு. நல்ல திறமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. வெளிநாட்டில் ஸாரின் கைவண்ணப் பிள்ளையார் ஜோர். நாங்களும் இங்கு 70 ரூபாய் கொடுத்து புதிய களிமண் சிம்பிள் பிள்ளையார் வாங்கினோம். நமது ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. நாம்தான் காரணங்களை விட்டு விட்டு காரியங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!

    இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வியக்கிறோம்.! அருமை அழகு!!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    விநாயகர் சிலை எவ்வளவு அழகாகச் செய்கிறார் அண்ணா..!!! ரொம்ப அழகா அருமையா வடிவத்தோடு மிக மிக அருமை! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கரைப்பதின் காரணமும் அறிந்துகொண்டோம். சேலம் மாணவிகள் நல்லா செய்திருக்காங்களே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வியக்கிறோம்.! அருமை அழகு!!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    கீதா: விநாயகர் சிலை எவ்வளவு அழகாகச் செய்கிறார் அண்ணா..!!! ரொம்ப அழகா அருமையா வடிவத்தோடு மிக மிக அருமை! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கரைப்பதின் காரணமும் அறிந்துகொண்டோம். சேலம் மாணவிகள் நல்லா செய்திருக்காங்களே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மா....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன் .

    //சேலம் மாணவிகளின் செயல் பாராட்டுக்குறியது.

    ஆற்றில் கரைப்பது ஏன் என்று நானும் முன்பொரு பதிவு இட்டேன்.//

    பாராட்டுக்குறியவர்கள்தான்.
    ஓ ! லிங்க் கொடுத்து இருக்கலாம், படிக்கவில்லை என்றால் படிப்பேன்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    இங்கு சின்னதாய் 50 ரூபாய்க்கு விநாயகர் வாங்கி வந்தார்கள் சார்.

    // நமது ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. நாம்தான் காரணங்களை விட்டு விட்டு காரியங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!

    இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.//

    ஆமாம், காராணம் இல்லாமல் காரியம் இல்லை.
    ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு காராணத்திற்குதான்.
    புரிந்து கொண்டு கொண்டாடினால் எல்லாம் ந்லமே!

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
    துளசிதரன் உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    வணக்கம் கீதா, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    சேலம் மாணவிகள் சாதனை செய்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  14. https://killergee.blogspot.com/2015/09/blog-post_29.html

    பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?

    பதிலளிநீக்கு
  15. அருமையான விழிப்புணர்வு பதிவு தேவகோட்டை ஜி.
    படித்து கருத்து சொல்லி விட்டேன்.
    சுட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. காலத்துக்கு ஏற்றபடி மாறிக் கொள்ளலாம் சேலம் பெண்கள் பாராட்டுக்குர்யவர்கள்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொலவது சரியே ! காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.
    சேலம் பெண்கள் பாராட்டுக்குரியவர்கள் .
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. படிப்படியாக உருவான பிள்ளையாரைப் பார்த்து மகிழ்ந்தோம். அருளைப் பெற்றோம். sir நேர்த்தியாகச் செய்திருக்கிறார். சேலம் மாணவியருக்குப் பாராட்டுகள். விதைப் பந்து விநாயகர்கள் பெங்களூரிலும் இந்த வருடம் விற்பனையில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    விதைப்பந்து விநாயகர் பெங்களூரில் விற்பனையில் இருந்ததா?
    கேட்கவே மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  20. சேலம் மாணவிகள் செய்தது எனக்கு இப்போத் தான் தெரியும். தொலைக்காட்சி பார்ப்பதே அரிது. அதிலும் வேந்தர் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை. என்றாலும் மாணவிகளின் அரிய தொண்டு பாராட்டுக்குரியது. எங்க வீட்டிலும் களிமண் பிள்ளையார் மாமனார் முன்னாலெல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பின்னாட்களில் வாங்கத் தான் வாங்கினோம். இங்கே திருச்சி வந்ததில் இருந்து வீட்டுப் பிள்ளையார் விக்ரஹம் தான் போதும் எனக் கணவர் சொல்லி விட்டார். எனக்கு மட்டும் களிமண் பிள்ளையார் வாங்கலியேனு வருத்தமா இருக்கும். இந்த வருஷம் பண்டிகையும் இல்லை! :( சும்மாப் பிள்ளையாருக்குப் பழங்களையும், தேங்காயையும் காட்டியாச்சு! :)

    தாமதமான விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். உங்கள் கணவர் செய்ததை ஏற்கெனவே படிச்ச நினவு இருக்கு. அருமையான கைவேலை! பொறுமையும் கூட!

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    வேந்தர் டி,வியில் இரவு 7மணிக்கு நிகழ்ச்சிகள் கோவில் விழாக்கள் காட்டுவார்கள். நன்றாக இருக்கும். களிமண் பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் நாங்க்களும் இந்த முறை பிள்ளையார் விக்ரஹத்திற்கு பூஜை செய்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் இம்முறையும் களிமண் பிள்ளையார் வந்து விட்டார்.
    பிள்ளையார் இன்னும் இருக்கிறார், அதனால் வாழ்த்தலாம்.
    ஏற்கனவே கொஞ்சம் படம் போட்டு இருக்கிறேன் அமெரிக்கா விநாயகர் சதுர்த்தி.
    படி படியாக பிள்ளையார் உருவாகும் காட்சி இப்போதுதான் போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  23. ஐயா வின் கைவண்ணத்தில் பிள்ளையார் அழகாக மிளிர்கிறார்...

    ரொம்ப அழகு ...

    பதிலளிநீக்கு