அப்புறம் என்ன! அதைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன், என் காமிரா வழியாக அது போகும் இடம் எல்லாம் நானும் போனேன். இரட்டைவால் குருவி என்று சொல்லப்படும் கருங்குருவியும் அதன் பின்னேயே போய்க்கொண்டு இருந்தது.
இரட்டைவால் குருவி
செம்போத்துப் பறவை போகும் இடமெல்லாம் போய் கொண்டே இருந்த கருங்குருவி.
காகம் குரல் கொடுக்கிறது ஏன் வந்தாய் என்று கேட்டு
பெண் குயில்
பெண்குயில் , ஆண் குயில், (கீழ்க் கிளையில் இருக்கிறது ஆண் குயில்) இரண்டும் செம்போத்து போவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இரட்டைவால் குருவி
செம்போத்துப் பறவை போகும் இடமெல்லாம் போய் கொண்டே இருந்த கருங்குருவி.
காகம் குரல் கொடுக்கிறது ஏன் வந்தாய் என்று கேட்டு
பெண் குயில்
பெண்குயில் , ஆண் குயில், (கீழ்க் கிளையில் இருக்கிறது ஆண் குயில்) இரண்டும் செம்போத்து போவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
தவிட்டுக் குருவிகளும், அணில்களும் பெண், ஆண் குயில்களும், காகமும் சிறிது நேரம் பல்வேறு விதமாய் ஒலி எழுப்பி அதைப் பின் தொடர்ந்தன.
செம்போத்துப் பறவை யாரையும் சட்டை செய்யாமல் முடக்கத்தான் புதருக்குள் நுழைந்து தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விட்டது.
செம்போத்துப் பறவை யாரையும் சட்டை செய்யாமல் முடக்கத்தான் புதருக்குள் நுழைந்து தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விட்டது.
அதன் உணவு என்ன என்ன தேடுகிறது என்று விக்கிப்பீடியா போய்ப் பார்த்தேன்:-
செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம் என்று அழைக்கப்படுகிறது என்று அதில் போட்டிருந்தது.
// செம்பகம் பொதுவாகப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறு பாம்புகள் போன்ற சிறு முண்ணாணிகள் என்பவற்றை உட்கொள்வதாகும்.[11] மேலும் அது முட்டைகள், பறவைகள் அமைக்கும் கூடுகள், பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உட்கொள்ளக் கூடியன. தமிழ் நாட்டில் அவை பொதுவாக நத்தையுண்ணிகளாகவே காணப்படுகின்றன. அத்துடன் அவை நச்சுப் பழங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றன.[12][13] அவை நன்கு பழுத்த தாளிப் பனையின் பழங்களை உண்பதால் தாளிப் பனைப் பயிர்ச் செய்கைக்குப் பெரிதும் கேடு செய்கின்றன.[14] மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை. தரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காண முடியும்.//
நன்றி விக்கிப்பீடியா.
தத்திப் போகும் பறவையாம்
'குகுக் குகுக்' என்று வித்தியாசமான ஒலியை எழுப்புது
புதருக்குள் சிறிது நேரம் உள்ளே போய்விட்டுச் சிறிது நேரம் கழித்து வந்தது
நச்சுப் பூண்டுகளும் அதற்கு உணவாம்
குப்பைமேனிச் செடியும், முடக்கத்தானும் அதற்கு தேவைப்படுகிறது போலும்!
அழகான செம்பகப் பறவை எத்தனை வேலைகள் இருக்கும்போது பதிவிட அழைத்து வந்து விட்டது.
.சின்ன சின்ன எருக்கம் செடிகளும், வேப்பமரங்களும் , குட்டையான நிலவேம்பு மாதிரி ஒரு மரமும், கீழே நிறைய காட்டுக் கொடிகளும், முடக்கத்தான் கொடிகளும் படர்ந்து சின்ன கானகம் போல் காட்சி தரும் அந்த காலி மனை நிறைய சந்தோஷங்களை அள்ளித் தந்தது. மழை பெய்தால் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளுமையாக க்காட்சி அளிக்கும். பறவைகளுக்குச் சரணாலயம் - எனக்கு மகிழ்ச்சியைத் தரும் இடம். அணில்களின் விளையாட்டு, தவிட்டுக்குருவி, மைனாக்களின் குதுகல சண்டை, கிளிகளின் கீச்சிடும் ஓலி, குயில்களின் கீதம் என்று காலை முதல் மாலை வரை ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்கும். இவற்றைப் பிரிந்து போவது கஷ்டமாய் இருக்கிறது.
வாழ்க வளமுடன்!
---------------------------