Thursday, March 23, 2017

போகும் இடமெல்லாம்!


என்றைக்கும் இல்லாத வித்தியாசமான பறவையின் ஒலி கேட்டது. ஜன்னல் வழியே காடு மாதிரி முடக்கத்தான் கொடிகள் படர்ந்து கிடக்கும் பக்கத்து காலி மனையைப் பார்த்தேன். செம்போத்துப் பறவை, ஒடித்துப் போட்டு இருந்த ஒரு மரக்கிளையின் மீது அமர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தது.

Image may contain: plant and sky

Image may contain: plant and outdoor
அப்புறம் என்ன! அதைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன், என் காமிரா வழியாக அது போகும் இடம் எல்லாம் நானும் போனேன். இரட்டைவால் குருவி என்று சொல்லப்படும் கருங்குருவியும் அதன் பின்னேயே போய்க்கொண்டு இருந்தது.

இரட்டைவால் குருவி


        செம்போத்துப் பறவை  போகும் இடமெல்லாம் போய்  கொண்டே இருந்த கருங்குருவி.

                       காகம் குரல் கொடுக்கிறது ஏன் வந்தாய் என்று கேட்டு

                                                                         பெண் குயில்

பெண்குயில் , ஆண் குயில்,  (கீழ்க் கிளையில் இருக்கிறது ஆண் குயில்) இரண்டும்  செம்போத்து போவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தவிட்டுக் குருவிகளும், அணில்களும் பெண், ஆண் குயில்களும், காகமும் சிறிது நேரம் பல்வேறு விதமாய் ஒலி எழுப்பி அதைப் பின் தொடர்ந்தன.
செம்போத்துப் பறவை யாரையும் சட்டை செய்யாமல் முடக்கத்தான் புதருக்குள் நுழைந்து தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விட்டது.
அதன் உணவு என்ன என்ன தேடுகிறது என்று விக்கிப்பீடியா போய்ப் பார்த்தேன்:-
செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம் என்று அழைக்கப்படுகிறது என்று அதில் போட்டிருந்தது.
// செம்பகம் பொதுவாகப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறு பாம்புகள் போன்ற சிறு முண்ணாணிகள் என்பவற்றை உட்கொள்வதாகும்.[11] மேலும் அது முட்டைகள், பறவைகள் அமைக்கும் கூடுகள், பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உட்கொள்ளக் கூடியன. தமிழ் நாட்டில் அவை பொதுவாக நத்தையுண்ணிகளாகவே காணப்படுகின்றன. அத்துடன் அவை நச்சுப் பழங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றன.[12][13] அவை நன்கு பழுத்த தாளிப் பனையின் பழங்களை உண்பதால் தாளிப் பனைப் பயிர்ச் செய்கைக்குப் பெரிதும் கேடு செய்கின்றன.[14] மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை. தரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காண முடியும்.//
நன்றி விக்கிப்பீடியா.
தத்திப் போகும் பறவையாம் 'குகுக் குகுக்' என்று வித்தியாசமான ஒலியை எழுப்புது

புதருக்குள் சிறிது நேரம் உள்ளே போய்விட்டுச் சிறிது நேரம் கழித்து வந்ததுநச்சுப் பூண்டுகளும் அதற்கு உணவாம்
குப்பைமேனிச் செடியும், முடக்கத்தானும்  அதற்கு தேவைப்படுகிறது போலும்!

.
அழகான செம்பகப் பறவை எத்தனை வேலைகள் இருக்கும்போது பதிவிட அழைத்து வந்து விட்டது.


.சின்ன  சின்ன எருக்கம் செடிகளும், வேப்பமரங்களும் , குட்டையான நிலவேம்பு மாதிரி ஒரு மரமும், கீழே நிறைய காட்டுக் கொடிகளும், முடக்கத்தான் கொடிகளும் படர்ந்து சின்ன கானகம் போல் காட்சி தரும் அந்த காலி மனை நிறைய சந்தோஷங்களை அள்ளித் தந்தது. மழை பெய்தால் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளுமையாக க்காட்சி அளிக்கும். பறவைகளுக்குச் சரணாலயம் - எனக்கு  மகிழ்ச்சியைத் தரும் இடம். அணில்களின் விளையாட்டு, தவிட்டுக்குருவி, மைனாக்களின் குதுகல சண்டை, கிளிகளின் கீச்சிடும் ஓலி, குயில்களின் கீதம்  என்று காலை முதல் மாலை வரை ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்கும். இவற்றைப் பிரிந்து போவது கஷ்டமாய் இருக்கிறது. 


வாழ்க வளமுடன்!
---------------------------

31 comments:

'நெல்லைத் தமிழன் said...

"வால் நீண்ட கருங்குருவி இடமிருந்து வலம் போனால் கால் நடையாய்ப் போனவரும் கனக தண்டி ஏறுவரே" - இந்தக் கருங்குருவி உங்களுக்கு எந்தத் திசையில் போனது என்று பார்த்தீர்களா? புதிதாக ஏதாவது பெரிய பணவரவுக்கான முன்னோடியோ என்னவோ.

செம்போத்து - நானும் பார்த்துள்ளேன். 'திருத்தாய் செம்போத்தே' என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தில் வரும். இலக்கியத்தில் சுட்டிக்காட்டப்பட்டது இரண்டு பறவைகளும்.

Angelin said...

எத்தனை அழகு எத்தனை அழகு ..காண கண் கோடி வேண்டும் ..எல்லா பறவைகளும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் ..ரெட்டை வாழ் குருவியின் நிறம் பளபளவென இருக்கு ..குப்பைமேனிசெட்டிலாம் அருகி வரும் நாளில் அந்த இடம் அப்படியே இருப்பது மனதுக்கு மகிழ்வளிக்கிறது ..அங்கங்கே பிளாஸ்டிக் பேப்பர் மட்டும் உறுத்துகிறது ..நெகிழி இந்த செடிகளை வளர விடாதே :( நீர் இல்லைனா எப்படி இவைதடுப்பதால் நீர் நிலம் சேராதது .
நீங்க போகும் புதிய வீட்டிலும் இதைப்போல காட்சிகள் கிடைக்குமக்கா ..அன்பானவர்கள் இயற்கையை நேசிப்போர் செல்லும் இடமெல்லாம் நல்லதே நல்லவையே சுற்றி இருக்கும்

Ramani S said...

நாங்களும் உடன் பயணித்தோம்
பறவைகளுடன் முழுமையான விவரங்களுடன்
பகிர்ந்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...

KILLERGEE Devakottai said...

பொறுமையாக அதன் பின்னேயே சென்று படம் எடுத்து விளக்கம் தந்தமைக்கு நன்றி.

ஒருவேளை குருவி ரயிலில் உட்கார்ந்து இருந்தால் ? ரயிலில் போகவேண்டியது வந்திருக்குமோ ?

Anuradha Premkumar said...

ஒவ்வொரு படங்களும்...அதைப்பற்றிய விளக்கங்களும் ..சிறப்பு..

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களும் பதிவும் அருமை
சகோதரியாரே
நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும், பதிவும், பறவைகளும் சூப்பர் ! சுற்றுச்சூழல் பசுமையாகவும் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.

//வால் நீண்ட கருங்குருவி இடமிருந்து வலம் போனால் கால் நடையாய்ப் போனவரும் கனக தண்டி ஏறுவரே//

நான் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தேன். கருங்குருவி எந்ததிசையில் போனது என்று தெரியாது, அது செம்போத்து போன பாதையில் போய் கொண்டு இருந்தது அதனால் செம்போத்துக்கு எத்திசையில் பறந்து போனதோ !
நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான்.

இலக்கியத்தில் இந்த பற்வைகள் இடம் பெற்றதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
தேவதையின் வாழ்த்தில் பற்வைகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
இரட்டைவால் குருவியின் உடல் பள்பளப்பாய் தான் இருக்கும்.
மூலிகை செடிகளைப் ப்ற்றி தெரிந்தவர்களுக்கு அந்த மனையில் நிறைய மூலிகை செடிகள் கிடைக்கும். பக்கத்து குடியிருப்பிலிருந்து குப்பைகளை மாடியிலிருந்து போடுவார்கள்.
நெகிழி பைகளால் தீமை என்று எவ்வளவு எடுத்து சொன்னாலும் கேட்பார்கள் ஒரு சிலரே!
போகும் குடியிருப்பில் வீடுகள்தான் சுற்றிலும்,ஆனால் பற்வைகள் இருக்கிறது, ஊர்க்குருவி, புறா தவிட்டுக்குருவி எல்லாம் பார்த்தேன். கிடைத்தவரை மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்க்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
என் காமிரா மட்டும் தான் ஜன்னல்வழியாக பயண்ம் செய்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
விடுமுறையில் ரசித்த காட்சிகளை உங்கள் தளத்தில்
எதிர்பார்க்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
சுற்றுச்சூழல் பசுமையாக இருந்தால் மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Avargal Unmaigal said...

படங்களும் பதிவும் அருமை

middleclassmadhavi said...

Padangalum thagavalgalum arumai.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ said...

செம்போத்து எனும் செண்பகம் இருக்கும் இடத்தில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது..

எங்கள் வீட்டருகிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன அவை.. அப்போதெல்லாம் படமெடுக்கும் வசதி ஏதும் இல்லை.. இப்போது அந்த சூழலுக்கு மனம் ஏங்குகின்றது..

மாஞ்சோலைக் குயில் தானோ!.. என்றொரு பாட்டு..

மாஞ்சோலைக்கு குயில் வருகின்றதோ இல்லையோ -
கண்டிப்பாக செம்போத்து வந்து உறவாடிக் கிடக்கும்..

இயற்கையோடு இயைந்த வாழ்வு - தற்காலத்தில் எல்லாருக்கும் கிடைப்பதில்லை..

வாழ்க நலம்..

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் விஷப்பூச்சிகளை உணவாக உட் கொள்ளுமாம்.
இயற்கை சூழல் குறைந்து வருவதால் இவற்றை பார்க்க முடியவில்லை.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

priyasaki said...

அத்தனையும் அழகான படங்கள் அக்கா. நீங்களும் பொறுமையா படம் எடுத்திருக்கீங்க. பறவைகளின் ஒலிகள்,அணில்களின் கீச்ச்,கீச்ச் என மிக இனிமையாக இருக்கும்.கொஞ்சநாள் அனுபவித்தை வைத்து, இங்குள்ளவர்களின் கீத மழையில் இப்போ நனைகிறேன். வெயிலின் வரவு வர எல்லாரும் வருகிறார்கள். நன்றி அக்கா.

கோமதி அரசு said...

வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
அங்கு வசந்தம் வந்து விட்டது அல்லவா ? அதனால் பறவைகள் கீதம் இசைக்க வந்து விடும். மகிழ்ச்சியாக குளிர் வரை ரசித்திருங்கள். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கீத மஞ்சரி said...

இயற்கையான சூழல்.. அமைதியான மக்கள்.. பறவைகளைத் தாய்போல் கவனிக்கும் குணம்.. போதாதா பறவைகள் உங்களைத் தேடிவர.. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. நேரில் பார்த்த உணர்வு.. நன்றி கோமதி மேடம்.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அழகான பதிவு கோமதிக்கா!! ரசித்து வாசித்தேன் படங்களும் அழகு! இத்தனையும் ஆர்வமுடன் எடுத்து இங்கு எங்களுடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! பறவைகள் சத்தமே நமக்கு நல்ல உடல்நலத் தெரப்பி! செம்போத்து முன்பு நிறைய கண்டதுண்டு இப்போது இருப்பது அடுத்தடுத்து குடியிருப்புகள் தோட்டங்கள் இல்லையே ..நடைப்பயிற்சி போகும் இடத்தில் நிறைய மரங்கள். ஆனால் இதுவரை செம்போத்துவைக் அங்கு கண்டது இல்லை. நிறைய பாம்புகள் உண்டு. பூச்சிகளும் இருக்கின்றன. அதிலிருந்தே தெரிகிறது இங்கு செம்போத்து வருவதில்லை என்று. அதிருக்கும் இடத்தில் பூச்சிகள் இருக்காது.

அருமையான பதிவு தங்களின் ரசனையும் வியக்க வைக்கிறது! மிக்க நன்றி அக்கா!!!

கீதா

ராமலக்ஷ்மி said...

தகவல்களும் படங்களும் அருமை.

Thenammai Lakshmanan said...

செம்போத்து போஸ்ட் பாத்து நாளாச்சே. அடுத்த போஸ்ட்ஸ் காணோம் பிசியாயிட்டீங்களா :)

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
இயற்கையான சூழலை விட்டு வேறு குடியிருப்புக்கு வந்து விட்டேன், காங்கீரிட் காடு தான் நாலாபக்கமும். இங்கும் குருவி, கிளி, தவிட்டுக்குருவி, மைனா, புறா, காகம் வருகிறது. வீட்டை செட் செய்யும் போது அப்படியே பற்வைகளை படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .
உங்கள் உற்சாகம் தரும் பிண்ணூட்டத்திற்கு நன்றி கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பற்வைகள் சத்தம் உடல், மனத்துக்கு இதம் நீங்கள் சொல்வது போல்.
பற்வைகளை அதிகம் நேசிப்பேன் அவைகளை கவனித்துக் கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது, கவலை மறந்து இருக்கலாம்.
உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.
பின்னூட்டத்திற்கு தாமதமாக பதில் அளிக்கிறேன் மன்னிக்கவும்.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்.
வீடு மாற்றம் காரணத்தால் பதிவுகள் புதிதாக போடவில்லை.
விசாரிப்புக்கு நன்றி.

Geetha Sambasivam said...

செம்போத்தும் குயில் ஜாதியைச் சேர்ந்தது தான். அதுவும் இனிமையாகக் கூவும் என்றாலும் அதிக உயரத்தில் பறக்காது. எங்கள் குடியிருப்பு வளாகத்தின் அருகிலுள்ள தோப்புக்கு தினம் வரும். குக் குக் என்றும் கூவும், கோகி, கோகி என்றும் கூவும்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
அதிக உயரத்தில் பறக்காது என்பது உண்மை.
நீங்கள் சொல்வது போல்தான் சத்தம் கொடுக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.