நார்த்தாமலை முதல் பகுதி படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.
நார்த்தாமலையில் சிறிது தூரம் நடந்து பின், மலைஅடிவாரத்தில் சின்ன அல்லிக்குளத்தை அடைந்தோம். ஒரு அல்லி மொட்டு (?)அழகாய் எங்களைப் பார்த்து தலையாட்டி வரவேற்றது.
அல்லிசுனையை நம் காமிராவில் பிடித்துக்கொண்டு , சிறிது கீழ் நோக்கி இறக்கமாய் உள்ள வழித்தடத்தில் நடந்தோம். கவனமாய் இறங்க வேண்டும்.

தொல்லியல் துறையை சேர்ந்த இடம் இதை சேதப்படுத்தினால் தண்டனை என்ற அறிவுப்புப் பலகையைத் தாண்டிப் போனால் அழகான கோவில்கள் இருந்தன.
மகன், மருமகள் , பேரன்

நான் பத்திரமாய் வருகிறேனா என்று திரும்பி ஒரு பார்வை. (மேலே வந்தவுடன் காமிரா, மற்றும் செல்லை பேற்றுக் கொண்டேன். போட்டோ எடுத்துக் கொண்டு தரையைப் பார்க்காமல் வந்து விடுவாளோ என்று பயம் கலந்த பார்வை.)ஒரு இளைஞர் மட்டும் நல்ல உயர் ரக காமிராவில் மதில் மேல் நின்று படம் எடுத்துக் கொண்டு இந்தார். வேறு யாரும் எங்களைத் தவிர இல்லை. நாங்கள் சுற்றி வந்து பார்த்து கொண்டு இருக்கும் போது இளைஞரும் போய்விட்டார்.

நடுவில் விஜயாலய சோழீஸ்வர கோவிலும் அதைச் சுற்றி ஒரு ஆறு சிறு கோவில்களும் உள்ளன. நடுவில் இருக்கும் கோவிலில் மட்டும் சிவன் இருக்கிறார். மிக அழகாய் அலஙகாரம் செய்து இருந்தார்கள். பூட்டிய கம்பி கதவு வழியாகத்தான் பார்த்தோம். கம்பி வழியாக மகன் எடுத்துத் தந்த படம் ,
வாசலில் இருக்கும் துவாரக பாலகர்கள் சிலை அவ்வளவு அழகு. கலை நுணுக்கத்தோடு சிற்பி செதுக்கி இருந்தார்.எதிரில் உள்ள நந்தி, அழகான நான்கு கல்தூண்களுக்கு நடுவில் இருந்தார்.

அழகிய நந்தி மண்டபம்
நடன மாது சிலை
நார்த்தாமலையில் சிறிது தூரம் நடந்து பின், மலைஅடிவாரத்தில் சின்ன அல்லிக்குளத்தை அடைந்தோம். ஒரு அல்லி மொட்டு (?)அழகாய் எங்களைப் பார்த்து தலையாட்டி வரவேற்றது.
தொல்லியல் துறையை சேர்ந்த இடம் இதை சேதப்படுத்தினால் தண்டனை என்ற அறிவுப்புப் பலகையைத் தாண்டிப் போனால் அழகான கோவில்கள் இருந்தன.
மகன், மருமகள் , பேரன்
நான் பத்திரமாய் வருகிறேனா என்று திரும்பி ஒரு பார்வை. (மேலே வந்தவுடன் காமிரா, மற்றும் செல்லை பேற்றுக் கொண்டேன். போட்டோ எடுத்துக் கொண்டு தரையைப் பார்க்காமல் வந்து விடுவாளோ என்று பயம் கலந்த பார்வை.)ஒரு இளைஞர் மட்டும் நல்ல உயர் ரக காமிராவில் மதில் மேல் நின்று படம் எடுத்துக் கொண்டு இந்தார். வேறு யாரும் எங்களைத் தவிர இல்லை. நாங்கள் சுற்றி வந்து பார்த்து கொண்டு இருக்கும் போது இளைஞரும் போய்விட்டார்.
நடுவில் விஜயாலய சோழீஸ்வர கோவிலும் அதைச் சுற்றி ஒரு ஆறு சிறு கோவில்களும் உள்ளன. நடுவில் இருக்கும் கோவிலில் மட்டும் சிவன் இருக்கிறார். மிக அழகாய் அலஙகாரம் செய்து இருந்தார்கள். பூட்டிய கம்பி கதவு வழியாகத்தான் பார்த்தோம். கம்பி வழியாக மகன் எடுத்துத் தந்த படம் ,
வாசலில் இருக்கும் துவாரக பாலகர்கள் சிலை அவ்வளவு அழகு. கலை நுணுக்கத்தோடு சிற்பி செதுக்கி இருந்தார்.எதிரில் உள்ள நந்தி, அழகான நான்கு கல்தூண்களுக்கு நடுவில் இருந்தார்.
மாலைச் சூரிய ஒளியில் மஞ்சள் வண்ணம் காட்டும் கலசமில்லாக் கோவில்
உள்ளே சாமி சிலை இல்லை
கோவிலின் பின் பகுதியில் என்றும் பசுமை மாறாக் காடுகள்
மலைக்கு அடிப்பாகத்தில் குகை மாதிரி தெரிவது முதல் படத்தில் காட்டிய அல்லி வரவேற்கும் சுனை,
கோவிலைச் சுற்றி உள்ள மதில் கற்கள், கோவிலில் உள்ள சிலைகள் எல்லாம் தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், புதுக்கோட்டையை சுற்றிக் கட்டப் பட்ட கோவில்களுக்கும் கற்கள் இங்கிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
நந்திக்குப் பின்புறம் இரண்டு குடைவரைக் கோவில்கள் உள்ளன. இவை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமணக் குகையாக இருந்தனவாம். 12ஆம் நூற்றாண்டில் விஷ்ணு கோவிலாக மாறிய விவரங்கள் அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்!
---------------
கோவிலும் அதன் சுற்றுப்புறமும் சூழலும் மிக அமைதியான இடத்தில இருக்கு .மலை மேலமைந்ததால் மிக அழகா இருக்கு.அழகான அல்லிக்குளம் அந்த அல்லி வணக்கம் சொல்லுற மாதிரி இருக்கு
பதிலளிநீக்கு.பகிர்வுக்கு நன்றிகள்
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅமைதியான இடம் தான் ஏஞ்சல்.
அதனால் தான் சமணர்கள் இந்த இடத்தை தேடி போய் இருந்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மூலம் நானும் நார்த்தா மலை சென்ற உணர்வு. அடுத்த பயணத்திலாவது இங்கே சென்று வர வாய்ப்பு கிடைக்கவேண்டும்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . உங்கள் காமிராவில் இன்னும் அழகாய் படங்கள் எடுக்கலாம். நேரம் இல்லை அதனால் அவசரமாய் பார்த்தோம். ஒருநாள் முழுக்க இந்த இடம் பார்க்க நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு படமும் மிகவும் அருமை... உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் அம்மா...
பதிலளிநீக்குஅனைத்துப் படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை.
பதிலளிநீக்குவிஜயாலய சோழீஸ்வர கோயில் என்பதை, விஜய + ஆலய + சோழி + ஈஸ்வரர் + கோயில் எனப்பிரித்துப் பிரித்துச் சொல்லிப்பார்த்தேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்க்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//விஜயாலய சோழீஸ்வர கோயில் என்பதை, விஜய + ஆலய + சோழி + ஈஸ்வரர் + கோயில் எனப்பிரித்துப் பிரித்துச் சொல்லிப்பார்த்தேன். //
ஓ!
உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
படங்கள் அழகு. கோவில் படம் ரொம்ப அழகு.
பதிலளிநீக்கு//கவனமாய் இறங்க வேண்டும்.//
ஆம். 2002 இல் திருப்பதி மலையிலிருந்து இறங்கும் பொது பிசகிய இடது முழங்கால் இன்று வரை பிரச்னை தருகிறது. ஆர்வக்கோளாறில் போட்டி வைத்துக் கொண்டு தடதடவென இறங்கியதால் விளைவு.
கலசமில்லாத கோவில் என்றால் கும்பாபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள். பள்ளிப்படையாக இருக்குமோ?
தம +1 (இன்று வேகமாக விழுந்து விட்டது!)
படங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகவனமாய் இறங்க வில்லையென்றால் நம்மை குப்புற தள்ளிவிடு, அதுதான் இந்த எச்சரிக்கை.
முழங்கால் பிரச்னைக்கு சிறு வைத்திய குறிப்பு:_
நாட்டு மருந்து கடையில் எட்டி விதை என்று கிடைக்கும் ( பவளமல்லி விதை போல் இருக்கும் ஆனால் இளம் மஞ்சள் கலரில் இருக்கும்) அதை எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்து உரைத்து இரவு படுக்கும் போது தேய்த்து விட்டு படுததால் விரைவில் குணமாகும்.
//கலசமில்லாத கோவில் என்றால் கும்பாபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள். பள்ளிப்படையாக இருக்குமோ?//
இல்லை கோவிலாக வழிபாடுகள் நடந்து உள்ளது. காலத்தாலும், மனிதர்களாலும் இந்த நிலை.
விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
கருவறை மீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இது அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இது கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
கோவில் விமானத்தைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள் இருந்தன எனப்படுகிறது. இவற்றில் ஆறு ஆலயங்கள் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளன. ஆனால், இவற்றில் தெய்வங்கள் வழிபாட்டிற்கு இல்லை.
விக்கிப்பீடியாவில் படித்த செய்தி.
தமிழ்மணம் இப்படித்தான் வேலை செய்கிறது அதன் மனம் போல்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தள்ளிவிடும் என்று படிக்கவும் ம் விட்டு போய் இருக்கிறது ஸ்ரீராம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான பகிர்வு. சிற்பங்கள் அழகு. தொடருகிறோம்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் mohamed althaf , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு நன்றி.
படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன கோயில் ரொமப்வே அழகாக இருக்கிறது...
பதிலளிநீக்குவெயில் காலத்தில் செல்ல முடியாது என்று தோன்றுகிறது ஆனால் சுற்று முழுவதும் அமைதியும் ரம்மியமும் கலந்து கட்டி இருப்பது போல் தோன்றுகிறது..அல்லிச் சுனை அழகு!!!
தொடர்கிறோம்