புதன், 1 மார்ச், 2017

நார்த்தாமலை



                                                  விஜயாலய சோழீஸ்வரம்


நார்த்தாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோ மீட்டர்  தூரத்தில்  உள்ளது.
தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளது. 

31/12/2016 அன்று நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம். முதலில் சித்தன்னவாசல் தான் திட்டம். அதன்படி சித்தன்னவாசல் பார்த்து முடித்தோம். முன்பே சித்தன்னவாசல் பார்த்து இருந்தாலும் மகனுடன் மீண்டும் பயணத்திட்டம் வகுத்துப் போய் வந்தோம். சித்தன்னவாசல் பதிவு முன்பு எழுதி இருக்கிறேன்.


சித்தன்னவாசலில் குடவரைக் கோவிலைப் பார்த்துக்கொள்பவர், இந்த நார்த்தாமலையைப்பற்றிச் சொன்னார். அவர் தம்பிதான் அதைப் பார்த்துக் கொள்வதாய்ச் சொன்னார். மாலை இருட்டுவதற்குள் போய்ப் பார்த்து விடுங்கள் இல்லையென்றால்கீழே இறங்கி விடுவார் என்றார். 

நார்த்தா மலை  வரலாறு  நாங்கள் விக்கிப்பீடியாவில் தான் படித்து அறிந்து  கொண்டோம். விக்கிப்பீடியாவிற்கு நன்றி.

அன்னவாசலிருந்து வழி விசாரித்துக் கொண்டு போகும் போது நேரம் ஆகி விட்டது. ஆங்காங்கே ஆடு மாடு மேய்ப்பவர்கள்,  முள்செடியை விறகுக்கு வெட்டுபவர்கள் இருந்தார்கள் அவர்களிடம் கேட்டபோது  அவர்கள் தூரத்தில் தெரிந்த கோவிலைக்  காட்டி , மலைக்குப் போகும் வழியைக் காட்டினார்கள்.
                  
அவர்களுக்கு நன்றி சொல்லி  காமிரா, அலைபேசி, தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

நார்த்தாமலை 'குன்றுக்கூட்டம்' என்று அழைக்கப் படுகிறது.  9 மலைகள் இருக்கிறது. நாங்கள்  போனது மேல மலைக் கோவில் 

மேல மலை அடிவாரத்தில் உள்ளது ஒரு சிறு குளம். இங்கிருந்து மலைக்குப் போகும் பாதை   ஆரம்பிக்கிறது. மலை   ஏற ஆரம்பித்தோம் கொஞ்சம் கொஞ்சமாய் மலை  உயர்ந்து  கொண்டு இருந்தது.  மலை சமமாய் இல்லாமல் தாழ்ந்தும், உயர்ந்தும் இருந்தது. என் கணவர்  தரையைப் பார்த்து நட என்று எச்சரித்துக் கொண்டே வந்தார்கள் . சமதளத்திலேயே அடிக்கடி விழுந்து எழுந்து கொள்பவள் நான். இயற்கை அழகைக் காமிராவில் சிறைப்படுத்திக் கொண்டு வந்து கொண்டு இருப்பதால் இந்த எச்சரிக்கை.



தூரத்தில் தெரிந்த கோபுரக்காட்சி

வெட்டுப்பாறை 

இந்த சுனையின் பெயர் 'தலையருவி சிங்கம்'. இங்கு ஒரு பெரியவர் குளித்துக் கொண்டு இருந்தார்.  மூலிகைச்  சத்து நிறைந்த குளமாம்
மலையில் நடக்கும் பாதையைத் தவிர மீதி இடங்கள்  செங்குத்தாய்  உள்ளது ஏற இறங்க முடியாது.  வேல்   நட்டு இருப்பதைப் பார்த்ததும்  அதன் எதிரில் முருகன் இருப்பார் போலும் என்று நினைத்தேன்  ஆனால் பிள்ளையார் இருந்தார். அவரை வணங்கி விட்டு   மலை மேலே ஏற ஆரம்பித்தோம். எங்கள் எதிரில் ஒருவர் இறங்கி வந்து கொண்டு இருந்தார் . அவர்  மலைக் கோவிலுக்குப் பின்  உள்ள மசூதியைப் பார்த்து வந்தாராம்.


பிள்ளையார் கோவில் பக்கமிருந்து எடுத்த கீழ்ப் பகுதி அழகு.


பக்கத்துக் கிராமத்துச் சிறுவர், சிறுமிகள் இந்த  சுனை நீரில் குளித்து கும்மாளமிட்டனர் அதை மகன் வீடியோ எடுத்தான்.


இனி கொஞ்சம் மலையேற்றம் கடினம்.   மகன், மருமகள், பேரன் எல்லாம் முன்னே போய் விட்டார்கள்  நான் மலையேற்றத்திற்கு ஏற்ற மாதிரி காலணி அணிந்து கொள்ளாததால் கொஞ்சம் சிரமப் பட்டேன் என் பெண் என் செருப்புகளையும் கையில் உள்ள காமிரா, அலை பேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு  கொஞ்ச தூரம் இரண்டு கையை  ஊன்றி நடந்து வாருங்கள் என்று சொல்லி  மலை ஏற ஆரம்பித்து விட்டாள். நான் நான்கு காலால் நடக்க ஆரம்பித்தேன்!

மலைக் கோவில் தரிசனம் -  அடுத்த பதிவில்.

                                                           வாழ்க வளமுடன்!

29 கருத்துகள்:

  1. ஒன்பது மலைகள் ஏறவேண்டுமா? ஒரு மலை ஏற எவ்வளவு நேரம் பிடித்தது? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நார்த்தாமலை செல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது சகோதரியாரே.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நார்த்தா மலை ஒன்பது குன்றுகள் கூட்டம் என்று சொல்கிறார்கள்.
    நாங்கள் ஏறியது மேலமலை மட்டுமே .
    ஏறுவதற்கு அரை மணி நேரம் ஆனது.
    வரும் போது ஆடு மேய்க்கும் பெண் சொன்ன பாதையில் இறங்கியதால் சீக்கீரம் இறங்க்கி விட்டோம். ஆனால் மாலைச்சூரியன் அழகில் மலை தக தகப்பதை பார்த்து மெதுவாய் இறங்கினோம் இல்லையென்றால் கால் மணி நேரம் தான் ஆகும்.
    படங்களைப் ப்ற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

    உங்க்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அழகு. ஆனால் அந்த இடம் நிழலுக்கு வழியில்லாமல் மொட்டைப் பாறைகளாக இருக்கின்றன. எப்படி ஏறினீர்களோ!

      நீக்கு
  4. கொஞ்சம் உரையும் படமுமாக.
    நல்ல விவரணைக்குறிப்புகள்,
    நேரில் பார்த்தைப்போல,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் விமலன் நலமா? வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்க்களுக்கு மிகவும் பிடிக்கும், சென்று வாருங்க்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம் மறுவருகைக்கு, வாழ்க வளமுடன்.
    மாலை நேரம் என்பதால் வெயில் தெரியவில்லை, மார்கழி மாதம் என்பதால்
    வேர்க்கவில்லை. மேலே சுனைகள் இருப்பதாலும், மலையைச் சுற்றி காடுகள் இருப்பதாலும் நன்றாக இருந்தது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. படங்களுடன் உங்க அனுபவமும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. நார்த்தாமலை என்றதும் நார்த்தங்காய் ஊறுகாய் எனக்கு நினைவுக்கு வந்து விட்டது

    தாங்கள் காட்டியுள்ள படங்களில் இயற்கையின் அழகுகள் கொட்டிக்கிடக்கின்றன.

    பாறைகளின் அமைப்புகளும், அவற்றின் இடையே சுனை நீரும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அரை மணி நேரத்தில் அந்த ஒரு மலையின் உச்சியை அடைந்துவிடலாம் எனச் சொல்லி இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது.

    மேடு பள்ளங்களில் இரண்டு கால்களால் கஷ்டப்பட்டு நடந்துபோய் மிகவும் அழகான பதிவாகக் கொடுத்துவிட்டு, கடைசியில் நான்கு கால்கள் பாய்ச்சலுடன் ‘தொடரும்’ போட்டு முடித்துள்ளீர்கள். :)

    தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.
    என் அனுபவங்கள் அடுத்து போகிறவர்களுக்கு உதவும் இல்லையா?
    உங்கள் வ்ரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //தாங்கள் காட்டியுள்ள படங்களில் இயற்கையின் அழகுகள் கொட்டிக்கிடக்கின்றன.

    பாறைகளின் அமைப்புகளும், அவற்றின் இடையே சுனை நீரும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.//

    படங்களை ரசித்தமைக்கு நன்றி .

    //நான்கு கால்கள் பாய்ச்சலுடன் ‘தொடரும்’ போட்டு முடித்துள்ளீர்கள். :) //

    படங்களும் , செய்திகளும் நிறைய இருக்கிறது. ரசித்து படித்து கருத்து சொல்லும் உங்களுக்கு கஷ்டம் இல்லாமல் இருக்க தான் தொடர் பதிவு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நார்த்தாமலைக்கு நாங்கள் சென்றிருக்கிறோம். சீனு இதுகுறித்து படங்களுடன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

    http://www.seenuguru.com/2014/03/nadodi-express-nartha-malai.html

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.
    சீனு அவர்களின் பதிவை படித்தேன்.
    பழனியப்பா அவர்கள் வழி காட்டியாக வந்தது மிகவும் சிறப்பு.
    விஷ்யம் தெரிந்தவர்கள் வந்தால் எல்லா இடங்களையும் விடாமல் பார்த்து மகிழலாம்.
    புதுகோட்டை பழனியப்பா இனிதான் படிக்கனும்.

    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அனைத்தும் அருமை...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வ்ளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    தமிழ் மணத்தில் என்னால் இணைக்க முடியவில்லை.
    உங்களுக்கும் இந்த பதிவை இணைக்க முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப அழகான இடம்..

    நார்த்தாமலை அடிக்கடி நினைவுக்கு வரும் பெயர்...அப்பா அந்த இடங்களில் தான் EB அலுவலகத்தில்பணி செய்தால் சிறு வயதில் போனதாக நினைவு...

    இந்த முறை ஊருக்கு போகும் போது நாங்களும் பார்க்க முயற்சிக்கிறோம்...

    படங்களும் அழகு..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
    அருமையான இடம். பார்க்க விரும்புவார்கள் குழந்தைகள்.
    பேரன் நன்கு ரசித்தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இங்கிருந்துதானே தஞ்சை பெருவுடையார் கோவில் கட்ட கற்கள் எடுத்ததாகச் சொல்லுவார்கள்? படங்களும் பயணமும் எப்போதும்போல் அருமை.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் நெல்லத் தமிழன், வாழ்க வளமுடன்.

    //இங்கிருந்துதானே தஞ்சை பெருவுடையார் கோவில் கட்ட கற்கள் எடுத்ததாகச் சொல்லுவார்கள்? //

    ஆமாம், நானும் படித்தேன். சிலைகளும் இங்கிருந்து எடுத்து சென்றதாக சொல்கிறார்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. எப்போதோ சித்தன்ன வாசல் சென்ற நினைவு.நார்த்தாமலை என்னால் இனி போய்ப் பார்க்கமுடியும் என்று தோன்றவில்லை. வழக்கம்போல் பதிவ் படங்களுடன் அழகு.

    பதிலளிநீக்கு
  21. அழகான இடம். ஒவ்வொரு முறையும் இங்கே செல்ல வேண்டும் என நினைத்தாலும் இது வரை செல்ல வாய்ப்பு அமையவில்லை....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
    முன்பு சித்தன்ன வாசல் பதிவில் பார்த்து இருப்பதாய் சொன்னீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள்

    தொடர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. இயற்கை எழில் சூழ்ந்த இடம். மலையில் ஏறப் பாதை மட்டுமே, படிகள் இல்லை போலிருக்கிறதே. சிரமப் பட்டு ஏறியதோடு எங்களுக்காக அருமையான படங்களை எடுத்தும் பகிர்ந்திருக்கிறீர்கள். குடும்பத்தினர் கவலைப் படுவது சரியே. ஜாக்கிரதையாகவும் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    படிகள இல்லை, ஏறுவது கொஞ்ச்சம் சிரமம் தான்.
    ஏறிய பின் கோவில் இருக்கும் இடம் அத்தனை சிரமங்களையும் மறக்க செய்து விடுகிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அட்டகாசம். அற்புதமான பதிவு. புகைப்படங்கள் பிரமாதம். என்றாவது அவசியம் சென்று இவ்விடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாவ்! மிக மிக அருமையான இடம்....படங்கள்..பார்க்க வேண்டும்...லிஸ்டில் போட்டாயிற்று..

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோ/அக்கா

    பதிலளிநீக்கு