மதுரையில் டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில், காலம் மாறும்போது நம் உணவு உண்ணும் முறை மாறியதை வருடங்கள் போட்டுப் படம் வரைந்து பிரேம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள்.
எளிமையாக இருந்த உணவு பரிமாறும் முறை, இப்போது ஆடம்பரமாய் மாறி விட்டது. நாளை என்ன, எப்படி இருக்கும் உணவுப் பழக்கம் என்ற கேள்வியை வேறு முன் வைக்கிறது.
கீழே அமர்ந்து சம்மணம் இட்டு உணவு உண்ணும் முறை இப்போது ஓட்டல், கல்யாண கூடங்கள் எங்கும் இல்லை. ஏன்? வீடுகளிலும் இல்லை. எல்லாம் மேஜை, நாற்காலி தான். வாழ்க்கை முறை மாறி விட்டது. நகர்ந்து போய் எடுக்ககூட வேண்டாம் என்று சுழலும் மேஜை எல்லாம் வந்து விட்டது.
இந்த ஓட்டலில் 1975ல் உணவு, மேஜைச்சாப்பாடாக மாறியது என்று சொல்கிறது. உண்மைதான் என்று நினைக்கிறேன். என் சகோதரிக்கு 1969ல், கீழே அமர்ந்துதான் விருந்து உண்ணல். எனக்கு 1973 பிப்ரவரி 7 ல் திருமணம் நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது.
மின்சாரம் இல்லை போலும் விசிறியைக் கொண்டு வீசும் இளம்பெண். கண்ணாடிக் கூட்டுக்குள் விளக்கு
மின்விசிறி, மேஜை, நாற்காலி சாப்பாடு
குளிர்சாதன வசதி சொகுசு இருக்கைகள்
குடும்பத்தினர்களுக்கு மட்டும் வசதியான தனி அறை
தாங்களே தங்களுக்கு விருப்பமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி.
அடுத்து என்ன மாற்றம் வரும்? சொல்லுங்களேன்.
கால்களை தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் முதல் படத்தில் காட்டியது போல் கீழே அமர்ந்து சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள்.
நல்ல கருத்துக்கள் சுவர்களை அலங்கரித்தன.
விழுந்தாலும் எழுந்து முயற்சி செய்ததால் கிடைக்கும் வெற்றி வாழ்க்கையில் உயர்வு தரும் . விட்டுக் கொடுத்தலும் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தானே!.
ஓட்டலில் உள்ளே வந்து விட்டு சாப்பிடாமல் போனால் எப்படி?
வடை, கேசரி, பூரி உருளைக்கிழங்கு
அடுத்து, தோசை வேண்டும் என்றால் அதற்கு சாம்பார் வேண்டும் அல்லவா?
மூன்று வகை சட்னி, மிளகாய்ப் பொடி
அப்புறம் மதுரையின் சிறப்புப் பானம்
-------------------------------------------------------------