இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் தெரு நாய் நான்கு குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை போட்டோ எடுக்கச் சென்ற போது அழகான காட்சி கிடைத்தது , தன் நாக்கால் தன் குட்டிகளை நாவால் நக்கி அன்பு பாராட்டும் தாய்மை!
கண்களை மூடி உருகும் தாய்மை
அம்மாவைத் தொடரும் குட்டிகள்
வீதியில் செல்ல முயலும் குட்டியைத் தன் வாயால் கவ்வி பாதுகாப்பாய் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லல்
நேற்று போட்டோ எடுக்க நாய் குட்டிகள் இருக்கும் சாலைஎதிர்புறத்திற்கு போய் நின்று கொண்டு எடுத்தேன். ஒரு நாய்க்குட்டி சாலையைக் கடந்து என்னிடம் வந்து நின்றது, அப்போது திடீரென்று சாலைக்கு நடுவில் நடக்க ஆரம்பித்தது குட்டி. இரண்டு பக்கமும் கார், ஆட்டோ வந்து விட நான் பதறி இரண்டு பக்கமும் கை காட்டி நிறுத்தி குட்டியைத் தூக்கி அதன் அம்மா அருகில் விட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது.. காரோட்டி வந்தவரும், ஆட்டோ ஓட்டி வந்தவரும் சிரித்துக் கொண்டு கை அசைத்துச் சென்றார்கள். நாயும் தன் குட்டியை தூக்கிவிட்டாளே என்று என்னைக் குதறாமல் விட்டது. உடனே தாய் நாய் வீதியில் சென்ற குட்டியை முதலில் சாக்கடையின் கீழ்ப்பகுதிக்குப் பாதுகாப்பாய் கொண்டு விட்டு வந்தது. அப்புறம் ஒவ்வொரு குட்டியாய் கொண்டு வைத்து விட்டது(மழை நீர் மட்டும் போகும் சாக்கடை- அதனால் அதில் தண்ணீர் இல்லை) மேலே வரப் பார்த்த குட்டிகளை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டது. என் கணவரிடம் வந்து சொன்ன போது நாய் உன்னை சும்மா விட்டது பெரிய விஷயம் என்றார்கள். தாய் நாய்க்குத் தெரிந்து இருக்கும், நான் குட்டியை காப்பாற்றத்தான் தூக்கினேன் என்று.
வெவ்வேறு ஊர்களில் எடுத்த படங்கள். கீழே வருவது :-
எல்லோரும் சமத்தாய் பால் குடித்துவிட்டு விளையாடப் போவீர்களாம்
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு பசிக்குது
போனமாதம் நடைபெற்ற ’தாய்மை’ என்ற தலைப்பில் போட்டோ கேட்ட தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு அனுப்ப பட்ட படம் ஆல்பத்தில் இடம்பெற்று மகிழ செய்தது
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு பசிக்குது
சகல ஜீவராசிகளுக்கும் தாய்மை உணர்வு உண்டு தானே!
அன்பை அனைத்து ஜீவராசிகளும் ஒவ்வொரு வழியில் வெளிப்படுத்துகிறது. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வாழ்வோம்.
வாழ்க வளமுடன்!
-----------------




