செவ்வாய், 16 செப்டம்பர், 2014

விருது வரும் நேரம்

”THE VERSATILE BLOGGER AWARD ”

இந்த  விருதை மூன்று  அன்பு உள்ளங்கள் எனக்கு  அளித்து 

இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த விருதைச் சிலவருடங்களுக்கு முன் 

 தெய்வீக பதிவுகளை மணிராஜ் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் 

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்துபெற்றுக்கொண்டு 

இருக்கிறேன். வல்லி அக்கா என்று நான் அன்புடன் அழைக்கும் 

திருமதி. வல்லி சிம்ஹன்  அவர்கள்,  திருமதி . துளசி கோபால் அவர்கள்,


திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள், திருமதி. ராமலக்ஷ்மிஅவர்கள், திருமதி.

 ஹுஸைனம்மா அவர்கள், திருமதி. சித்ரா அவர்களுடன்  விருதைப் பகிர்ந்து 

கொண்டு இருக்கிறேன்.


அரட்டை என்று தன் தளத்திற்கு  பேர் வைத்து  நம்மை அவர் தளத்திற்கு 

அன்புடன்  அரட்டைக்கு  அழைக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்,

 பல்சுவை பதிவுகளை எழுதுவார் குறிப்பாக  நல்ல நகைச்சுவை எழுத்தாளர். 

இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கிறார். தன்பதிவுகளை மின்னூல் ஆக்கி

 இருக்கிறார்.திறமைவாய்ந்தவர் . உங்கள்எல்லோருக்கும் தெரியும் 

அவரை. அவர்கள் அளித்த இந்த விருதுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.



காலையில் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் விருது கொடுத்தார்கள்.

 தஞ்சையம்பதி  என்று வலைத்தளம் வைத்து இருக்கும் 

 திரு.துரைசெல்வராஜூ அவர்கள் மாலையில் இந்த விருதை எனக்கு 

அளித்தார்கள்.  தன் தளத்தில்   ஆன்மீகப் பதிவுகள் பதிந்து  வருவது 

 எல்லோருக்கும்தெரியும் தானே!  சார் எனக்கு அளித்த  விருதுக்கு நன்றி.

 வாழ்த்துக்கள்.



இருவருக்கும் நன்றிகள்! இந்த விருதைத் துவக்கி வைத்த திருமதி. ரஞ்சனி 

நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,  நன்றிகள்.



ஒரு சமயத்தில் நிறைய விருதுகள்  அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர்

 கொடுத்துக் கொண்டார்கள்.  எல்லாவற்றிலும் சாதனை படைக்கும் 

 திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார், விருதுகள் கொடுப்பதிலும் சாதனை 

படைத்தார். எனக்கு ஒரே  நேரத்தில் மூன்று விருதுகள் கொடுத்தார். அவற்றை

வலைத்தளமுகப்பின் ஓரத்தில் போட்டுகொண்டுள்ளேன், நன்றி சொல்லி.

 எல்லோர் கொடுத்த விருதுகளும் அதில் இடம்பெறுகிறது.



விருது கொடுப்பது நல்லதுதான். எழுதுவதில் தொய்வு ஏற்படும்போது 

 உற்சாகம் தந்து மீண்டும்எழுத வைக்கும்

திருமதி . ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் கொடுத்த விருது

 

திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கொடுத்த விருது
எனனைப் பற்றி  ஏழு விஷயங்கள்.:-

1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
    புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
   உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.

எனக்கு திருமதி. ராஜலக்ஷ்மி அவர்கள் கொடுத்த விருதை   இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


பன்முக திறமைகள் உடையவர்கள்:-

”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி. ஜலீலா அவர்கள் 

”அடிசில்” என்ற வலைத்தளத்தில் அம்மாவின் கைவண்ணம் என்று வைத்து இருக்கிறார், திருமதி சுந்தராமுத்து அவர்கள்.

”காகிதப்பூக்கள்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஏஞ்சலின்  அவர்கள் .

தோழி பூவிழி , “பூவிழி” என்ற வலைத்தளம்  வைத்து கவிதை, பொன்மொழி விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதியவர் மீண்டும் எழுத வரவேண்டும். ஒருவருடமாய் அவர்களிடமிருந்து பதிவுகள் இல்லை.
திரு. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் முகநூலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும்.

திருமதி. விஜி பார்த்திபன் அவர்கள், விஜிபார்த்தி என்ற வலைத்தளத்தில்  சமையல் குறிப்பு, கைவேலைகள், (பின்னல், தையல்கலை)நல்ல கட்டுரைகள் என்று எழுதுவார்.

அடுத்து எனக்கு  திரு. துரைசெல்வராஜூ அவர்கள்  கொடுத்த விருதை  இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பன்முக திறமைகள் உடையவர்கள்:-

முருகானந்தம் சுப்பிரமணியன்  அவர்கள் , தன் வலைப்பூவை ஆனந்த தாண்டவநடராஜமூர்த்திக்கு  அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ என்கிறார்.
ஆன்மீக யாத்திரை போக விரும்புவர்கள் இவரது வலைத்தளத்தைப் படித்துப் பயன்பெறலாம்.

கற்கை நன்றே, கபீரின் கனிமொழிகள் என்ற வலைத்தளங்கள் வைத்து அருமையான ஆன்மீக பதிவுகளை எழுதி வரும் கபீரன்பன் அவர்கள்

வடுவூர் குமார்  தன் மடவிளாகம் என்னும் வலைப்பூவில் அவர்கள்  பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். தன் தொழில் சார்ந்த பதிவுகளும் வரும் என்று எச்சரிக்கிறார்.

குறள் காட்டும் பாதை,  இன்றையபழமொழி,,  பயனுள்ள கட்டுரைகள் என்று  தன் அந்திமாலை என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.  இ.சொ.லிங்கதாசன் அவர்கள். 


”எல்லாப்புகழும் இறைவனுக்கே! ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி ஸாதிகா அவர்கள், பலவகையான பதிவுகளை எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.

இன்று காலை இரண்டு பேர் கொடுத்த இரண்டு விருதுகளுக்கு நன்றி சொல்லி பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது  ரூபன் அவர்கள் இரண்டு விருதுகளை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.  ரூபனின் எழுத்து படைப்புகள் என்று கவிதைகள் , கட்டுரைகள், கதைகள் எல்லாம் எழுதி வருகிறார். தன் தளத்தில் கவிதை போட்டிகள் எல்லாம் நடத்தி வருகிறார்.

அவர் கொடுத்த விருதை பெற்றுக் கொண்டேன் இத்தளத்தில்  பதித்து விட்டேன். ரூபன் அவர்களின் அன்புக்கு நன்றி. என் பதிவுகள் வலைச்சரத்தில் இடம்பெறும் போதெல்லாம் முதலில் வந்து  வாழ்த்து தெரிவித்துவிடுவார். அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

உடனே பதிவு போட்டு இருந்தால் நான் இந்த விருதை வாங்கியது தெரிந்து இருக்கும். மறுபடியும் கொடுத்து இருக்க மாட்டார்கள்.

ரூபன் அவர்களின் விருதுகளை  வலைத்தளத்தில் எழுதி வரும் அனைவரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.

                                        ரூபன் அவர்கள் கொடுத்த  இரண்டு விருதுகள்.





                                                        வாழ்க வளமுடன்

55 கருத்துகள்:

  1. நிறைய விருதுகள் பெற்றுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இப்போது வலையுலகம் கலகலப்பாக மாறிவிட்டது. பெருபாலான
    பதிவர்கள் விருதுகளை வாங்குவதிலும் விருதுகளை பகிர்ந்தளிப்பதிலும் மும்முரமாகி விட்டார்கள். THE VERSATILE BLOGGER AWARD பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்! விருதினை உங்களிடமிருந்து பகிர்ந்து கொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் இங்கு விருதா கோமதி அக்கா, மிக்க நன்றி, 2 வருடம் முன் அடிக்கடி எல்லாரும் விருது கொடுத்து கொண்டு இருந்தார்கள், அதோடு இப்ப தான் இந்த விருது கொடுப்பது ஆரம்பித்து உள்ளது , ரொம்ப சந்தோஷம் கோமதி அக்கா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அம்மா.

    இசையால் வசமாகாத இதயம் எது? தங்களின் எழுத்தால் வசமாகாத உள்ளங்கள் ஏது மிக அருமையாகபதிவுகளை எழுதுகின்றீர்கள் அம்மா தங்களின் ஒவ்வொரு படைப்புக்ளையும் நிதானமாக படிப்பவன்.நான்தங்களின் திறமைக்குநான் கொடுத்த விருதை விட ஏற்கனவே பலர்பல விருதுகளை அள்ளித்தந்தார்கள் என்பதை தங்களின் பதிவின் வழி அறிந்தேன்
    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.
    என்றென்றும் சிறந்து விளங்குக

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி அக்கா .கொஞ்சம் நாட்களாக எழுதுவதில் ஒரு lazy இருந்து வந்தது எனக்கு ..முகபுத்தகமும் ஒரு காரணம்தான் :) இப்போ விருதை பெற்றுகொண்டதும் ஒரு உற்சாகம் பற்றிகொண்டார்போலிருக்கு ..விரைவில் இதனை எனது பதிவில் வெளியிடுகிறேன் ..விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மேலும் பல விருதுகள் பெற்று சிறப்புற வேண்டும்.
    இனிய சுற்றுலாவில் மகிழ்ந்து அதனை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்..
    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் சகோதரி!

    எத்தனை பேரிடமிருந்து எத்தனை முறை விருதுகளை வாங்கியிருக்கின்றீர்கள்...
    அப்பப்பா!...:)

    அத்தனை பேருக்கும் ஏதோ ஒருவகையில் பிடித்த சகோதரியாய், அம்மாவாய், தோழியாய் இருந்திருக்கின்றீர்களே!...
    நினக்கவே பெருமையாக இருக்கின்றது!

    மேலும் பல விருதுகள் வந்து குவிந்திடவும் நீங்கள் வழங்கி விருதுகள் பெற்றவர்களுக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு

  8. பலரும் உங்களுக்கு விருது கொடுப்பதில் மகிழ்கிறார்கள் இத்துடன் என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன் கால் வலி தேவலாமா.?

    பதிலளிநீக்கு
  9. அடுத்தடுத்துப் பல விருதுகள் பெற்றிருக்கிறீர்கள், கோமதி. அத்தனை விருதுகளுக்கும் நீங்கள் நிச்சயம் தகுதியானவர். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  10. ஒரே நாளில் இரண்டு அன்பு உள்ளங்கள் எனக்கு விருது அளித்து இருக்கிறார்கள்./

    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் இனிய பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தி,தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன். வலையுலகம் கல் கலப்பாக இருப்பது மகிழ்ச்சி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. விருத பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  14. எல்லாப் பக்கங்களிலும் பரிசுமழை பொழிகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அன்புடையீர்,
    வணக்கம். அந்திமாலை என்னும் எங்கள் வலைப் பதிவை இவ்விடத்தில் நீங்கள் அறிமுகம் செய்தமையை இட்டு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள். இருப்பினும் ஒரு சிறிய திருத்தம். 'அந்திமாலை' என்னும் வலைப்பதிவை இயக்குவது அடியேனும், அடியேனின் மனைவியும் ஆவோம். 'சின்னத்தம்பி இராஜகோபால்' என்பவர் எமது இணையத்தின் நீண்ட நாள் வாசகர். இவ்வருட முற்பகுதியில் காலமாகி விட்டார். அவரது மரண அறிவித்தலையே எமது தளத்தின் இடது பக்கத்தில் காண்கிறீர்கள். இருப்பினும் எமது இணையத்தின் சேவையைப் பாராட்டிய தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
    "ஒன்றுபட்டு உயர்வோம்"
    அன்புடன்
    இ.சொ.லிங்கதாசன்
    ஆசிரியர்
    அந்திமாலை

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. Eniya vaalththukal for two prises.
    Vetha.Elanagathikam

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஜலீலா, வாழ்க வளமுடன்.ஆம், இரண்டு வருடங்களுக்கு முன் வித விதமான விருதுகள் கொடுத்தார்கள். நல்லது இப்படி வலையுலகம் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருந்தால் என்றும் நல்லது தான்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பால் கொடுக்கபட்ட விருது என்றும் மகிழ்ச்சி தரும்.

    இரண்டு வருடங்களுக்கு முன் THE VERSATILE BLOGGER AWARD வலையுலகத்தில் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டார்கள் மகிழ்ச்சியாக.

    வை.கோபாலகிருஷ்ணன் சார் அவருக்கு கிடைத்த வித விதமான விருதுகளை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார் என்ற தகவலை இங்கு பகிர்ந்தேன்.

    நன்றி ரூபன்.



    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.விருதை பெற்றுக் கொண்டதற்கு நன்றி.
    இனி அடிக்கடி பதிவுகள் வரும் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக நன்றி.
    எழுதவேண்டிய பயண அனுபவங்கள் நிறைய உள்ளன, உங்கள் வாழ்த்தால் அவை விரைவில் எழுதுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இந்த வலையுலகம் தன் பாசவலையால் எத்தனை அன்பு உள்ளங்களை பின்னி இணைத்து இருக்கிறது! வாழ்வில் மகிழ்ச்சி தரும் தருணங்கள் இவை.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ரூபனின் விருது அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தான்.
    நன்றி இளமதி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    அன்பால் கொடுக்கும் விருது சார் இது.
    (பன்முகதிறமை இருக்கா எனக்கு? )
    அன்பான விசாரிப்புக்கு நன்றி சார் நலமடைந்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் வலி உள்ளது. உங்கள் எல்லோர் வாழ்த்துக்களும் பூரண நலம்பெற உதவும் எனக்கு. வாழ்த்துக்களுக்கு
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.

    கொஞ்சம் சோம்பலாக இருந்த உள்ளத்தை உற்சாகம் கொள்ள செய்து விட்டீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். இரண்டு வருடங்களுக்கு முன் இதே விருதை நீங்கள் கொடுத்தீர்கள் எனக்கு.
    உங்கள் நல்வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அருணா செல்வம், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் தளமும் விருது பெற்று இருக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    இப்போது மழை வரும் காலம் தான்.
    இந்த பரிசு மழை வலைத்தளத்தில் நல்ல பதிவு என்ற பயிர் வளர பயன்படட்டும். எல்லோரும் இப்போது முகநூல், வாட்ஸ் அப் என்று அதில் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
    நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.

    பதிலளிநீக்கு
  28. அன்புடையீர், வணக்கம் வாழ்க வளமுடன். நீங்கள் என் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. சரியாக பார்க்காமல் குறிப்பிட்டு விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
    திரு.இ.சொ.லிங்கதாசன் என்று இப்போது திருத்தி விட்டேன்.
    உங்கள் இணைய சேவை மேலும் மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோமதிம்மா...

    பதிலளிநீக்கு
  32. என்னையும் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே.

    பதிலளிநீக்கு
  33. அக்கா, இரட்டை விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!! :-)

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் வடூவூர் குமார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

    திருமதி .ராஜ்லக்ஷ்மி பரமசிவம், திரு. துரைசெல்வராஜூ திரு. ரூபன் மூன்று பேர்களும் விருது கொடுத்து இருக்கிறார்கள். ஒரே நாளில் இரண்டு பேர், மறுநாள் ரூபன் இரண்டு விருது மொத்தம் நான்கு விருதுகள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அடிக்கடி இப்படி வாருங்கள் வலைப்பக்கம்.

    பதிலளிநீக்கு
  37. விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
    நான் எழுதுவது குறைந்து விட்டாலும் என்னை நினைவில் வைத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. விருதுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.
    நான் எழுதுவது குறைந்து விட்டாலும் என்னை நினைவில் வைத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.

    நீங்கள் மீண்டும் நிறைய எழுத வேண்டும் கபீரன்பன்.
    உங்கள் கபீரின் கனிமொழிகள் படிக்க ஆவல்.
    முடிந்த போது எழுதுங்கள்.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. உங்களுக்கு ஒரே விருது மழையாக இருக்கிறதே! நான் தான் லேட்டாக
    வந்திருக்கிறேன். முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மின் மடல் இன்று காலைப் பார்த்தேன். வீட்டில் விருந்தினர் வருகையால் என்னால் கணினி பக்கம் தலைக் காட்ட முடியவில்லை.

    எல்லோர் பதிவுகளும் இனி தான் படிக்க வேண்டும்.

    என்னைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது அனைத்திற்கும் நான் தகுதியானவளா தெரியவில்லை. ஆனால் அதற்கத் தகுதியுள்ளவளாக இனி இருக்க முயற்சிக்கிறேன் கோமதி.

    விருது உங்களுக்கு மழையாக பொழிந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் கோமதி. பாராட்டுக்கள் பல. இன்னும் பலப்பல விருதுகள் உங்களை வந்தடையும் என்பதில் சந்தேகமேயில்லை. கோமதி.
    வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  41. வணக்கம், ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் பன்முக திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை.
    ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சமையல்கலை தளம், குழந்தைகளுக்கு கதை , அரட்டை என்ற தளம் எத்தனை தளங்களை நீங்கள் திறம்பட நடத்தி செல்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.
    பத்திரிக்கையில் எழுத வேண்டும் என்ற உங்கள் கனவும் நனவாக வேண்டும். வாழ்த்துக்கள்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் காஞ்சனாராதகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  44. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பேஸ்புக் தகவல் பார்த்தா?
    மிகவும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  50. பல விருதுகள் பெற்று அதை அனைவருக்கும் வழங்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் கோமதி அம்மா.

    நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் அனைவருக்கும் சித்திக்க பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  51. வணக்கம், முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நவராத்திரி நல்வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
    நல்லோர் பிரார்த்தனை வீண் போவது இல்லை . பிரார்த்தனைக்கு நன்றி நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. //தூக்ககலக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி எழுதி போஸ்ட் பண்ணேன் .
    மன்னிச்சு மன்னிச்சு :) அக்கா என் தலையில் ஒரு செல்ல குட்டு
    குடுங்க .:) நல்ல வைர மோதிரம் அஞ்சு விரலிலும் போட்டுதான்
    குட்டணும் :) //
    i've updated my post akka

    பதிலளிநீக்கு
  53. அன்பு ஏஞ்சலின் வாழ்க வளமுடன்.
    சாரிடம் சொல்லி அஞ்சு விரலிலும் வைர மோதிரம் வாங்கி போட்டு செல்ல குட்டு குடுக்கிறேன்.
    பதிவில் அதை தெரிவித்தமைக்கு நன்றி.


    பதிலளிநீக்கு