Wednesday, September 24, 2014

தேவி கொலுவிருக்கும் வீடு


இந்தப் படம் சுமார் 58 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு காலண்டரில் இருந்ததாம். என் அத்தை வீட்டில் பெருங்காயம் வாங்கியபோது அதற்கு அந்தக் காலண்டரைக் கொடுத்தார்களாம்.. அதை அத்தை வீட்டில் பிரேம் செய்து வைத்து இருந்தார்கள். அதை இப்போது நகல் எடுத்துக் கொண்டோம். 

பெருங்காயக் கம்பெனி பெயர்

வரைந்த ஓவியர் பெயர்(ராஜம் )

அந்தக் காலத்தில் வியாபாரத்தில் கூட இறைபக்தியை வளர்த்து இருக்கிறார்கள்.

அத்தை அவர்கள் பின்னிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதி

இந்த முறை கொலு இல்லை . அதனால் படங்கள் மட்டுமே!


2006 ஆம் வருடம் எடுத்த படம்


  2005ஆம் ஆண்டு நவராத்திரி கொலு அம்மன் அலங்காரம் ஒருபுறம்.          குழந்தைகளின் கைவண்ணம் ஒருபுறம்.

 நவராத்திரி என்றால் குழந்தைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துவரச் செய்வோம். வீட்டை அழகுபடுத்தி, வாசலில் விதவிதமாய் அழகிய கோலங்கள் போட்டு  ஒன்பது நாளும் உறவினர், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக உறவாடி மகிழ்வோம்.

ஒன்பது நாளும்  மூன்று தேவிகளை வழிபட, பாடல்கள் பாடலாம் அல்லது பாடல்களைக் கேசட்டுகள் அல்லது சிடி போட்டுக் கேட்கலாம்.

நம் தேசியகவி அவர்களின் நவராத்திரி பாட்டு கேட்போம்:-

                  நவராத்திரி பாட்டு

உஜ்ஜயினீ நித்யகல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி    (உஜ்ஜயினீ)
உஜ்ஜய் காரண் சங்கர தேவீ
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா                   (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)
ஸ்த்ய் யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

                                     பாரசக்தி    (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலா நீ நிறைந்தாய்
ஆதார முன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே.

                                       வாணி

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

                                        
                                       ஸ்ரீ தேவி

பொன்னரசி , நாரணனார்தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற்றாளே சரண் புகுநது வாழ்வோமே.

                                               பார்வதி

மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையிலுயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தரணிமிசை வாழ்வோமே .

நவராத்திரி நாயகியான அம்பிக்கைக்கு ‘சர்வக்ருக ரூபிணி’ என்ற பெயரும் உண்டு சந்திரன், சூரியன் போன்ற நவக்ரகங்களும் அம்பிகையின் உருவம் என்பதால் நவக்கிரக வழிபாடு மூலமும் அம்பிகையை வழி  படலாம். 

தேவிபாகவத்தைக் கேட்பதாலும் , பாராயணம் செய்வதாலும் ஐஸ்வர்யம், ஆயுள், ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, சுகம், விருப்பங்கள் நிறைவேறுதல், துயரம் நீங்குதல் ஆகிய நற்பயன்கள் கிடைக்கும். அதிலும் நவராத்திரி நேரத்தில் தேவி பாகவதம் படிப்பது விசேஷம்.

ஞான சக்தியான சரஸ்வதி, க்ரியாசக்தியான லட்சுமி, இச்சா சக்தியான மகாகாளி   மூவரையும் வணங்கி நலம் பெறுவோம்.

அன்னை, அருள் வடிவானவள். நவராத்திரி நாளில் வழிபட்டு அன்னையின் அருள் பெறுவோம்!

                                                             வாழ்க வளமுடன்!
                                                                       --------------

41 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக அருமையான அபூர்வமான படங்களுடன் கூடிய அழகிய பதிவு.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

நவராத்திரி படங்களும் பாடல்களுமாக களைகட்டிருக்கிறது..பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

படங்கள், அலங்காரங்கள் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!

அதிலும் வீணையோடு நிற்கும் வெள்ளைக்கமலக் கலைமகள் சூப்பர்!

நவராத்ரி விழாவுக்கான இனிய நல்வாழ்த்து(க்)கள்.

நம்ம வீட்டில் இந்த முறை மகள் வச்ச கொலு!

Geetha Sambasivam said...

முதல் படம் இன்னொரு உறவினர் விட்டிலும் பார்த்திருக்கேன். எங்க வீட்டுக் கொலுவை முன்னால் துளசி படம் எடுத்தது தான். நாங்க எடுக்கலை. அந்த பொம்மைகளும் இப்போ இல்லை. :( கொஞ்சமாக பொம்மைகளை வைத்துக் கொண்டிருக்கிறேன். மற்றதை தானம் செய்தாச்சு. இருக்கும் பொம்மைகளை ஒரு மேஜையில் வைச்சிருக்கேன். முடிஞ்சா படம் எடுக்கணும். :))))

கரந்தை ஜெயக்குமார் said...

நலவராத்திரி வாழ்த்துக்கள் சகோதரியாரே

துளசி கோபால் said...

பதிவர் வீட்டுக்கொலு:-)

நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் குறிப்பிட்ட படம், இங்கே.

http://thulasidhalam.blogspot.com/2009/09/blog-post_28.html

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிகோபால், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மகள் வைத்த கொலு உங்கள் தளத்தில் பார்க்க வேண்டும்.

உற்சாகமாய் மறுமுறை வந்து பதிவர் வீட்டு கொலுவை பார்க்க ”சுட்டி” கொடுத்தமைக்கு நன்றி.
கீதாவின் பின்னூட்டத்தால் பதிவர் வீட்டு கொலு பார்க்க எல்லோருக்கும் வாய்ப்பு.
நன்றி துளசி.

கோமதி அரசு said...

வண்க்கம் கீதா, வாழ்க வளமுடன். உங்கள் வீட்டு கொலுவை துள்சிதளம் மூலம் பார்த்து விட்டேன்.

நீங்களும் மீண்டும் பார்க்கலாம்.
குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வைக்கும் பண்டிகை இது. நாம் இருவர் என்று இருப்பது கொஞ்சம் மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது. ஆனால் கஷ்டப்பட்டு வைத்து விட்டால் மகிழ்ச்சியும், உற்சாகமும் வந்து தொற்றிக் கொண்டு பலத்தை கொடுத்து விடுகிறது. இறைவன் அருளால் அடுத்தவருடம் கொலு நன்றாக வைக்க வேண்டும்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

துளசி பதிவர் வீட்டு கொலு மிக அருமை. உங்கள் பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

இந்த முறை கொலு இல்லை என்றாலும் மனமில்லாமல் பழைய படங்களைப் போட்டு ஆறுதல் அடைந்திருக்கிறீர்கள். படங்கள் அழகு.

துரை செல்வராஜூ said...

கண்கவரும் படங்களுடன் இனிய தோத்திரப் பாடலையும் பதிவில் கண்டு மகிழ்ச்சி..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..

ராமலக்ஷ்மி said...

வழிபாடுதானே முக்கியம். அழகான ஆரம்பம். நவராத்திரி நல்வாழ்த்துகள். பழைய படங்களும் பகிர்வும் அருமை.

G.M Balasubramaniam said...

1967-68 என்று நினைக்கிறேன், திருச்சியில் குடியிருப்பில் இருந்த சமயம். அநேக வீடுகளில் கொலு வைப்பார்கள் பெண்களை வரவழைத்து வெற்றிலைப் பாக்குடன் பிரசாதமும் த்ருவார்கள் எங்கள் வீட்டில் கொலு வைக்கஎன் மனைவி ஆசைப்பட சென்னை சென்றிருந்தபோது குறளகம் சென்று பொம்மைகள் பலவாங்கி நாங்களும் கொலு வைக்கத் துவங்கினோம். தொடர்ந்து வருடாவருடம் கொலு வைத்திருந்தோம் கடந்த இரு வருடங்களாக செய்ய முடிய வில்லை.நிறையவே மிஸ் செய்கிறோம். இப்பொழுதெல்லாம் கொலு வைப்பதே ஒரு எக்சிபிஷனாகவும் கலைத் திறமையை வெளிப்படுத்துவதாகவும்ஆகிவிட்டது. பல நினைவுகளை மீட்டெடுத்தபதிவுக்கு வாழ்த்துக்கள்.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான முப்பெரும் தேவியர் படம்! எங்கள் வீட்டிலும் இராஜ ராஜேஸ்வரி படம் ஒன்று இருக்கிறது. அதுவும் இதுமாதிரி ஏதோ கம்பெனி விளம்பரத்தில் கொடுத்த படம்தான் ப்ரேம் செய்து வைத்துள்ளோம்! கொலுப் படங்கள் அழகு! நன்றி!

Thenammai Lakshmanan said...

அருமையான நவராத்திரி பதிவு கோமதி மேம். ஸ்லோகங்கள் நிறைவாக இருந்தன.

இளமதி said...

உண்மையில் உங்கள் வீடு தேவி கொலுவிருக்கும் வீடுதான் சகோதரி!

மனம் நிறைக்கும் அழகிய முன்னைய கொலுப் படங்கள், தேவியரின் திவ்விய தோற்றம், அருமையான பாடல்கள் என ஒரு நவராத்திரி விஷேசத்திற்குச் சென்று வந்த உணர்வு எனக்குக் கிடைத்தது உங்களின் பதிவினால்!..

மிக அருமை! நல் வாழ்த்துக்கள் சகோதரி!

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
கொலு வைக்கும் இடத்தைப் பார்த்ததும் கஷ்டமாய் இருக்கிறது கொலு வைக்காமல் அதௌதான் அந்த இடத்தில் படங்களை வைத்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ, வாழக்வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
இந்த முறை கொலு வைக்க வில்லை என்றாலும் நீங்கள் சொல்வது போல் வழிபாடு நடக்கிறது.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

எங்களுக்கும் கொலு வைக்காதது ஏதோ இழந்தது போல் தான் இருக்கிறது.
போன முறை மகன் வீட்டில். அதை நினைத்துக் கொண்டு அடுத்தவருடம் அம்மன் அருளால் வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறோம்.
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். நலமா?

பழைய படம் காலண்டர்தான்.
உங்கள் வீட்டிலும் இருக்கிறதா? மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேன்ம்மை, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நவராத்திரி சமயம் எல்லா இல்லங்களும் தேவி கொலு இருக்கும் வீடுதான்.
உங்கள் அழகான மனநிறைந்த இனிய கருத்துக்கு நன்றி இளமதி.நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

rajalakshmi paramasivam said...

பழைய படங்க எப்பவுமே அழகு தான். படங்களுடன் களை(லை) கட்டுகிறது பதிவு.
வாழ்த்துக்கள் கோமதி!

தி.தமிழ் இளங்கோ said...

பட்ட்ணம் பொடி விளம்பரம் என்றாலும் , 50 வருடங்களுக்கு முன்னர் சிவகாசி ஆர்ட் பேப்பரில் போட்ட தெய்வீகப் படங்கள்தான். பழைய நினைவுகளோடு வலம் வரும் பழைய பொக்கிஷங்கள்.

தங்கள் வீட்டு 2005 & 2006 கொலு படங்கள். .பார்க்க எளிமை. தங்களுக்கு எனது உளம் நிறைந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!

நேற்றே உங்கள் பதிவை படித்து விட்டேன். இன்றுதான் நிறைய பேருக்கு எழுத முடிகிறது.

Tha.ma.2

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
இதற்கு முந்திய பதிவுக்கு வரவில்லை என்றதால் ஊரில் இல்லை என்று நினைத்தேன்.

களை(லை) கட்டுகிறது//
ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் அந்தக் (!967)காலத்தில் நாங்கள் சிவகாசியில் இருந்த போது நீங்கள் சொல்வது போல் தெய்வீக படங்கள் நிறைய கிடைக்கும் அதை என்ன செய்வது என்றே தெரியாது. அனைத்தும் மிக அழகாய் இருக்கும். என் அம்மா நிறைய சேர்த்து வைத்து இருந்தார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தமிழ்மண வாக்கு அளித்தமைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

நவராத்திரி நல்வாழ்த்துகள். படங்கள் அழகு.

கோமதி அரசு said...

வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Muruganandan M.K. said...

மிக அருமை
அபூர்வமான படங்கள்
வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

வணக்கம் டாக்டர் ஐயா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

சே. குமார் said...

அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு அம்மா.

Angelin said...

காலண்டர் படம் மிக இயல்பா நாம் அடிக்கடி பார்க்கும் நபர்கள் போல இருக்கிறார்கள் தெய்வங்கள் .
சிறந்த பொக்கிஷம் அக்கா ,..அத்தை அவர்கள் செய்துள்ள நீடில் வொர்க் அருமை .
..

Muruganandam Subramanian said...

அருமை அருமை . அன்னை அருள் அனைவருக்கும் கிட்ட பிரார்த்திக்கின்றேன்

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

காலண்டர் படம், அத்தையின் கைவேலை இவற்றை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் முருகானந்தம் சுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், மனமார்ந்த பிராத்தனைகளுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பொக்கிஷமாய் ஒரு படம்....

நவராத்திரி சிறப்பு பகிர்வு மிக அருமை கோமதிம்மா..