புதன், 15 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி --2                    திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-2
                                    யமுனோத்ரி
                    (சார்தம் யாத்திரையில் முதல் தலம் )         

10.05.12 அன்று காலை 6 மணிக்கு ஹரித்துவாரிலிருந்து சிறு பேருந்தில் புறப்பட்டோம். முதலில் டேராடூனில் இருந்து 10.கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர் என்ற கோயிலுக்குச் சென்றோம்.
இந்தக்கோயிலில் இரண்டு பெரிய ஸ்படிகம் மாதிரி லிங்கமும்,  கருங்கல் ஆவுடையாரும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள். பக்கத்தில் அரசமரத்தை சுற்றி சின்ன சிவலிங்கம், நந்தி இன்னும் சிலதெய்வங்கள் இருந்தன. அதற்கு நாம்  அங்கு வாளியில் சிறு செப்பு செம்புகள் இருக்கும் அதில் நீர் எடுத்து நாமே அபிஷேகம் செய்யலாம். 

அங்கு கோயிலுக்கு உள்ளேயே நிறைய கடைகளும் இருக்கின்றன.. எங்கள் வழிகாட்டி, கடைகளுக்கு போகவேண்டாம் சாமி தரிசனம் முடிந்தவுடன் பஸ்ஸுக்கு வந்துவிடுங்கள் நேரமாகிவிட்டது என்று சொன்னதால் யாரும் கடைக்குப் போகவில்லை. கடைக்காரர்கள் எங்களைக் கூவிக் கூவி அழைத்து ஏமாந்து போனார்கள்.
கோவிலை விட்டு வெளியே வரும் போது  பிரசாதம்  தருகிறார்கள். அதை எச்சரிக்கையாக சாப்பிடவேண்டும். இல்லையென்றால் அங்குள்ள குரங்குகள் அவற்றை பிடுங்கிச்சென்று விடும். 

முசோரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி உள்ளது.


கெம்ப்டி நீர்வீழ்ச்சி


கெம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கடைகள் உள்ளன. இந்நீர் வீழ்ச்சி சமீபத்தில் வந்த ஒரு தமிழ்த்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகச் சொன்னார்கள் . அங்கு நிறைய கடைகள் இருக்கின்றன. சாப்பாடு சாப்பிட நம்மை அழைக்கிறார்கள்

டேராடூன், முசோரி, கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி, பார்கோட் முதலிய இடங்களைக் கடந்து ராணாசட்டி என்ற இடத்தை அடைந்தோம். இரவு 7 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தோம்.ஒரே நாளில் நீண்ட பயணம் இங்கு தான். குளிர் கொஞ்சம் இருந்தது. ஹரித்துவாரில் எல்லாம் நல்ல வெயில் இருந்தது
அன்றிரவு ராணா சட்டி என்ற இடத்தில் தங்கினோம்
               


தூரத்தில் யமுனோத்ரி மலைத்தொடர்கள்


11.05.12 வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ராணாசட்டியிலிருநது புறப்பட்டோம். பெரும்பான்மையான உடைமைகளை ராணாசட்டி விடுதியிலேயே வைத்துவிட்டு குறைவான பொருட்களுடன், கம்பளி ஆடை முதலியவற்றுடன் புறப்பட்டோம்,அனுமன் சட்டி அடைந்து அங்கிருந்து ஜான்கி சட்டி சென்றோம், பஸ்ஸில். முன்பெல்லாம் அனுமன்சட்டி வரை மட்டுமே பஸ் வரும். இப்போது ஜான்கிசட்டி வரை பஸ் வருகிறது.  அதன்பிறகு 6 கி.மீ நடந்து மலையேற வேண்டும். 

ஜான்கிசட்டியில் சின்ன பஸ்ஸ்டாண்டு உள்ளது. அங்கு சென்ற உடன் டோலிக்காரர்கள்,பால்கிக்காரர்கள், குதிரைக்காரர்கள் மொய்த்துவிடுகிறார்கள்.

நாங்கள் செல்ல டோலி ஏற்பாடு செய்தோம்.

கடினமான பாதை. குறுகலான பாதை. அதில் மூன்று குதிரையில் உள்ள ஆட்களை ஒரு குதிரைக்காரர் தான்  அழைத்துச்செல்கிறார். இவ்வாறு குதிரையில் செல்பவர்கள், ஒரு ஆள் தூக்கி போகும் பால்கியில் செல்பவர்கள், நான்கு பேர் ஒரு ஆளை தூக்கி செல்லும் டோலியில் செல்பவர்கள், இவர்கள் தவிர நடந்து போகிறவர்கள்( ஏறுகிறவர்கள், இறங்குபவர்கள்) என்று பயங்கர நெருக்கடி உண்டு.  அதனால் நாங்கள் நடக்கிற ஆசையை விட்டு விட்டோம்.. 

டோலியில் ஒரு நபருக்கு ரூ3000+வரி500, பின்னர் அவர்களுக்கு கானாபீனா செலவு(சாப்பாடு, டீ,குளிர்பானம்) இது தவிர டிப்ஸ் நூற்றுக்கணக்கில். மனிதனை மனிதன்  சுமந்து  போவது மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. ஆனால்  அவர்கள் இந்த சீஸனில் சம்பாதித்தால் தான் உண்டு.பனிக் காலத்தில் எந்த வேலையும் கிடையாதாம். அவர்களுக்கு பணம் கொடுக்கும் சிறு நிம்மதியுடன் டோலியில்  போனோம். 

சாப்பாடு சாப்பிடும் கடையில் நம்மை இறக்கி விட்டு அவர்கள் 
சாப்பிட்டு, சிகிரெட் குடித்து பாக்கு போட்டு சிரித்து பேசி கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் நம்மை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

டோலியில் நாங்கள் சென்ற அனுபவத்தை நீங்களும் காணுங்கள்

டோலிப்பயணம் கடினமாகவே இருந்தது. இருந்தாலும் குதிரைப்பயணத்தை விடச்சிரமம் குறைவு என்று கூறலாம். டோலியிலும் எச்சரிக்கையாகவே செல்ல வேண்டும். இல்லையென்றால் மேலேயும் பக்கத்திலேயும் உள்ள பாறைகள் தலையைப் பதம் பார்த்துவிடும். டோலியில் போகும் போது இயற்கை காட்சிகளை ரசிக்க முடிகிறது.
டோலி தூக்கி செல்பவர்கள் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு 
காலை தூக்கித் தூக்கி வைத்து நடப்பது ஒரு தாள லயத்தோடு இருக்கிறது. டோலியின் மீது அமர்ந்தவர்களுக்கு ராஜகளை வந்துவிடுகிறது.
டோலி தூக்குபவர்கள் ஓய்வு எடுக்கிறார்கள்
மாதாஜி வசதியாக அமர்ந்து இருக்கிறீர்களா? பயப்படாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.என் கணவர் பின்னால் சற்றுத் தொலைவில் வேறொரு டோலியில் வந்தார்கள்.அதனால் நான் ,’சார் வரும் வரை மெதுவாக போங்கள்’ என்று அவர்களிடம் சொல்வேன். பார்த்து பத்திரமாய் அழைத்துச் சென்றார்கள்.
காலை நேரத்தில் போக்குவரத்து குறைவு..   பின்னர் டிராபிக் ஜாம்.   குதிரைகள், டோலிகள், பால்கிகள்(கூடைகள்) ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்கின்றன,  ஏழரை மணிக்குப் புறப்பட்ட டோலி 9 மணிக்கு யமுனோத்திரி சென்றடைந்தது. கோயிலுக்கு முன்னதாகவே கொஞ்ச தூரத்தில் டோலி நிறுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும்.
எங்களின் யமுனோத்ரி கோயில் வழிபாட்டை அடுத்த பதிவில் காணலாம்.
                                                   (தொடரும்)
                                ----

29 கருத்துகள்:

 1. நல்ல விரிவான தகவல்கள் தரிசனமும் நன்றே அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன் .தொடருங்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 2. படமும், பதிவும் அருமை...
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
  தொடர வாழ்த்துக்கள்... (TM 1)

  பதிலளிநீக்கு
 3. புனிதப்பயணக்கட்டுரையை மிகவும் அருமையாகவே எழுதிக்கொண்டு இருகிறீர்கள். படங்களும் மிகவும் அழகாகவே உள்ளன. தொடருங்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 4. அருமையான பயணம்.. சிறப்ப்பான படங்களுடனான பகிர்வுக்கு ம்னம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. விளக்கங்கள் நல்லா இருக்கு நானும் வைஷ்னவி யாத்ராபோகும்போது குதிரையில் போனேன் . உடம்பு பூரா வலி எடுத்துடுச்சு அதுக்கு டோலி சவாரி பரவால்லே. நீங்க கண்டு ரசித்ததை நாங்களும் உங்க கூடவே வந்து ரசிக்கிரோம்.

  பதிலளிநீக்கு
 6. படங்களும் பயண அனுபவமும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. வாங்க இந்திரா, உங்கள் முதல் வருகைக்கு முதலில் நன்றி.
  நல்ல தரிசன்ம் கிடைத்தது.
  தொடர் வருகைக்கு நன்றி இந்திரா.

  பதிலளிநீக்கு
 8. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் , தமிழ்மணஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க பழனி கந்தசாமி சார், நீங்கள் தொடர்வது மகிழ்ச்சி.
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க இராஜராஜேஸ்வரி,உங்கள் மனம் நிறைந்த பாரட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்கு நடந்தே போனோம். அப்போது சிறுவயது.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க லக்ஷ்மி அக்கா, நாங்கள் வைஷ்ணவி தேதி கோவிலுக்கு நடந்தே போனோம். அப்போது சிறுவயது.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சசிக்கலா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. மிகவும் கடினமான பயணம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். குதிரையில் எல்லாம் போவது முதுகு வலிக்குத்தான் வழி. டோலி வீடியோ நன்றாக இருந்தது. நன்றி ஏதோ உங்களோட வருகிற உணர்வு வந்தது.

  பதிலளிநீக்கு
 16. நாங்களும் டோலியில் பயணிப்பதைப் போல இருந்தது
  அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு


 17. வாங்க ரமணி சார்,டோலி வீடியோ என் கணவர் எடுத்தார்கள்.
  உங்கள் தொடர் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.
  தமிழமண ஓட்டுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. படங்களும் தகவல்களும் அருமையான பகிர்வு. நேரிலே மலைகளின் அழகு மிக இரம்மியமானதாக இருந்திருக்கும். சிலவருடங்கள் முன் ஷ்ராவணபெலகுலா சென்றிருந்த போது டோலிகள் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்கான சேவை என்றுதான் அவர்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 19. உங்கள் புனிதயாத்திரையின் மூலம் நாங்களும் பல இடங்களை தர்சித்து மகிழ்கின்றோம்.

  இவை எல்லாம் எங்களுக்கு தர்சிக்கக் கிடைக்குமா என்பது சந்தேகம்.
  மிக்க நன்றி.

  தொடர்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 20. வாங்க ராமலக்ஷ்மி, நேரில் மலைகள் எல்லாம் ரம்மியம் தான்.

  ஷ்ராவணபெலகுலா சென்றிருந்த போது டோலிகள் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்கான சேவை என்றுதான் அவர்களும் இதில் ஈடுபடுகிறார்கள். //

  அங்கு டோலி வசதி உள்ளதா அங்கும் போகவேண்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. இவை எல்லாம் எங்களுக்கு தர்சிக்கக் கிடைக்குமா என்பது சந்தேகம்.//

  மாதேவி, நீங்களும் பார்க்கலாம்
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 22. இனிய பயணம். யமுனோத்ரி சென்ற அனுபவங்களை அழகான படங்களுடன் விளக்கிச் செல்வது அழகு. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. //என் கணவர் பின்னால் சற்றுத் தொலைவில் வேறொரு டோலியில் வந்தார்கள்.அதனால் நான் ,’சார் வரும் வரை மெதுவாக போங்கள்’ என்று அவர்களிடம் சொல்வேன்.//

  டோலி அனுபவம் த்ரில்லோ த்ரில்!
  இத்தனை இக்கட்டுகளையும் தாண்டியதான அந்த 'தரிசன' மஹா
  உணர்விருக்கிறதே, அதான் அற்புதம்!

  பதிலளிநீக்கு
 24. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
  //தரிசன' மஹா
  உணர்விருக்கிறதே, அதான் அற்புதம்!//

  நீங்கள் சொன்னது போல் தரிசன உணர்வு அற்புதம் தான் சார்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க கார்த்திகேயன், வாழ்கவளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு