செவ்வாய், 6 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலக பதிவு -4


மிக்கி ஜெயண்ட் வீல்
வால்ட் டிஸ்னி
டிஸ்னி உருவாக்கிய கார்ட்டூன்
 கதாபாத்திரங்கள் அவரை வாழ வைத்தது .   
நம்மை மகிழ வைத்தது.


//நவம்பர் 18-ம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.
மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.
மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?//
நன்றி-- தி இந்து .
இரவு நேரம் வண்ணங்கள் மாறும் அழகு
நீரில் தெரியும் பிம்பமும் அழகு.





மைசூர் அரண்மனை     தசராவில் ஒளிவிளக்கால் அலங்காரம் செய்து இருப்பது போல் இருக்கிறது அல்லவா?



மயிர்கூச்செறியச்  செய்யும்  அதிவேகத்தில் செல்லும் சாகசப் பயணம் 




இரவு  இசை நடனம்







மின்விளக்கும் சந்திர ஒளியும்

நிலவொளி
                                        
  விளக்கு அலங்காரப் படம் எடுக்கிறாய் ஆச்சி 'என் பூட்ஸிலும் விளக்கு இருக்கு எடு ஆச்சி" என்று உடகார்ந்து கொண்டு கலரை மாற்றி மாற்றி போட்டுக் காட்டிப் படம் எடுக்கச் சொன்னான் பேரன்,  எடுத்தவுடன் மகிழ்ச்சி.
                                                      

      காலை முதல்  நடந்து நடந்து களைத்துப் போய் அமர்ந்து விட்டான்.                                                    இரவில் ஓளிரும் பூட்ஸ்.
                             
பலூனுக்குள்
 மிக்கி அடைபட்டு இருக்கிறது.
வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 4 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலகம் பகுதி -3


'கார் ' என்ற அனிமேஷன் படம் 2006-ல் வந்தது " ரேடியேட்டர் ஸ்பிரிங்க்ஸ்' என்ற திரைப்பட நகரை அதற்காக உருவாக்கினார்கள். அது போன்ற  மாடலில் ' ரேடியேட்டர் ஸ்பிரிங்க்ஸ்" என்ற இடத்தை இங்கு 
அமைத்துள்ளார்கள்.
கார் அழகாய்  கண்சிமிட்டிப் பேசுகிறது நம்மிடம்

மாலை நேரத்தில்
 மலை பொன் வண்ணத்தில் தக தக என்று ஜொலிக்கிறது.
Cars Land - இந்த இடத்தில்  கார்கள் எல்லாம் ரேஸ் கார்கள் போல வெகு வேகமாய் பாய்ந்து வருவதைப் பார்க்க பயம் கலந்த உணர்வு ஏற்படுகிறது. கலர் கலராக கார்கள் அழகாய் பளபளப்பாய் இருக்கிறது. செயற்கை மலைகள் அழகாய் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயற்கை அருவி எல்லாம் இருக்கிறது.
இரண்டு கார் சமவேகத்தில் வந்தது. காரில் இருந்தவர்கள்
உற்சாகக் குரல் கொடுத்தார்கள் பார்வையாளர்களைப் பார்த்து .







சிவலிங்கம் கீழ் இருக்கும் ஆவுடையார் போல் இருக்கிறது அல்லவா?


கள்ளிச்செடிகள் அழகுபடுத்துகிறது

மாலை வானமும், ஸ்தூபியும் 
 மரங்களும் லைட் அலங்காரமும்  பார்க்க அழகு
எவ்வளவு  மக்கள் கூட்டம் கண்டு  களிக்கிறது!





சல சல சத்தத்துடன் செயற்கை அருவி.


ஓநாய் போன்ற தோற்றம் தரும் மலை
இரவு வண்ண விளக்கால் நீர் கலர் கலராக மாறும்
அழகிய பாலமும் ஜெயண்ட்வீலும் பார்க்க அழகு
இரவு வாணவேடிக்கை  வண்ணநீரூற்றில்  டிஸ்னியின் கதை தெரியும் இடம்.
மாலை விளக்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இரவு விளக்கு ஓளியில்   டிஸ்னி உலகத்தை அடுத்த பதிவில் காணலாம்.
முந்திய பதிவுகளை   பார்க்கலாம்  டிஸ்னியின் கனவுலகம்
                                                               வாழ்க வளமுடன்.

சனி, 3 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலகம் பகுதி- 2


இதற்கு முந்திய பதிவு டிஸ்னியின் கனவுலகம்  பதிவின் தொடர்ச்சி இந்தப் பதிவு .
இந்த பூச்சிகள் உலகத்தைச் சுற்றிப்பார்க்க நிறைய வண்டிகள் இருக்கிறது.
அதில் பயணம் செய்து பூச்சிகள் உலகத்தில் உள்ளே போனால் பூச்சிகளின் வித விதமான சத்தங்கள் ஆங்காங்கே வைத்து இருந்தார்கள்.


என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life  அது போலவே காட்சி அமைப்புகள் இருந்தன்.




பெரிய ஆப்பிளைப் பூச்சிகள் கபளீகரம் செய்த காட்சி
பட்டுப்புழு வண்டியில் பயணம்
மகிழ்ச்சியான பட்டுப் புழு

விளக்குகள் எல்லாம் பொன்வண்டுகள் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது , 
இலைகளைவைத்துத் தைத்துக் கூடு கட்டி இருக்கும்   தோற்றத்தில் சுழலும்  ராட்டினம்.


இதிலும் பயணித்தோம்.




நாங்கள் பயணித்த "லேடி பக் "(lady bug) வண்டி.



பெரிய மரங்கள் , பெரிய பழங்கள்

செயற்கை மரமும் இயற்கை மரமும் வானமும்

போகும் இடம் -மேப் -கையில் வைத்து இருக்கிறான்


வானம் முட்டும் டயர்கள் 

கிறிஸ்துமஸ் மரம் - பழைய டயர்களில்
ரேஸ் காருடன் பேரன் 
கார்   சவாரி முன் போகும் பேரனுக்குக் கை அசைப்பு
காரும் காரும் மோதுவது போலவே போகும் . சீட்பெல்ட் அணிந்து  
 கொள்ள வேண்டும்.  எல்லோரும் சீட் பெல்ட் 
மாட்டிக்கொண்டார்களா என்று வந்து செக் செய்த பின்னே கார் சவாரி ஆரம்பிக்கும். 



போனபதிவில் போடமுடியாத காணொளி -சின்ன காணொளிதான் பார்க்கலாம்.
தொடரும் 
வாழ்க வளமுடன்.