மிக்கி ஜெயண்ட் வீல்

டிஸ்னி உருவாக்கிய கார்ட்டூன்
கதாபாத்திரங்கள் அவரை வாழ வைத்தது .
நம்மை மகிழ வைத்தது.
//நவம்பர் 18-ம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.
மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.
மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?//
நன்றி-- தி இந்து .
இரவு நேரம் வண்ணங்கள் மாறும் அழகு
நீரில் தெரியும் பிம்பமும் அழகு.
மைசூர் அரண்மனை தசராவில் ஒளிவிளக்கால் அலங்காரம் செய்து இருப்பது போல் இருக்கிறது அல்லவா?
மயிர்கூச்செறியச் செய்யும் அதிவேகத்தில் செல்லும் சாகசப் பயணம்
இரவு இசை நடனம்
மின்விளக்கும் சந்திர ஒளியும்
நிலவொளி
விளக்கு அலங்காரப் படம் எடுக்கிறாய் ஆச்சி 'என் பூட்ஸிலும் விளக்கு இருக்கு எடு ஆச்சி" என்று உடகார்ந்து கொண்டு கலரை மாற்றி மாற்றி போட்டுக் காட்டிப் படம் எடுக்கச் சொன்னான் பேரன், எடுத்தவுடன் மகிழ்ச்சி.
காலை முதல் நடந்து நடந்து களைத்துப் போய் அமர்ந்து விட்டான்.
பலூனுக்குள்
மிக்கி அடைபட்டு இருக்கிறது.
வாழ்க வளமுடன்.