இதற்கு முந்திய பதிவு டிஸ்னியின் கனவுலகம் பதிவின் தொடர்ச்சி இந்தப் பதிவு .
இந்த பூச்சிகள் உலகத்தைச் சுற்றிப்பார்க்க நிறைய வண்டிகள் இருக்கிறது.
அதில் பயணம் செய்து பூச்சிகள் உலகத்தில் உள்ளே போனால் பூச்சிகளின் வித விதமான சத்தங்கள் ஆங்காங்கே வைத்து இருந்தார்கள்.
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன் படம்- ’Bug's life அது போலவே காட்சி அமைப்புகள் இருந்தன்.
பெரிய ஆப்பிளைப் பூச்சிகள் கபளீகரம் செய்த காட்சி
பட்டுப்புழு வண்டியில் பயணம்
மகிழ்ச்சியான பட்டுப் புழு
விளக்குகள் எல்லாம் பொன்வண்டுகள் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது ,
இலைகளைவைத்துத் தைத்துக் கூடு கட்டி இருக்கும் தோற்றத்தில் சுழலும் ராட்டினம்.
இதிலும் பயணித்தோம்.
நாங்கள் பயணித்த "லேடி பக் "(lady bug) வண்டி.
பெரிய மரங்கள் , பெரிய பழங்கள்
செயற்கை மரமும் இயற்கை மரமும் வானமும்
போகும் இடம் -மேப் -கையில் வைத்து இருக்கிறான்
வானம் முட்டும் டயர்கள்
கிறிஸ்துமஸ் மரம் - பழைய டயர்களில்
ரேஸ் காருடன் பேரன்
கார் சவாரி முன் போகும் பேரனுக்குக் கை அசைப்பு
காரும் காரும் மோதுவது போலவே போகும் . சீட்பெல்ட் அணிந்து
கொள்ள வேண்டும். எல்லோரும் சீட் பெல்ட்
மாட்டிக்கொண்டார்களா என்று வந்து செக் செய்த பின்னே கார் சவாரி ஆரம்பிக்கும்.
போனபதிவில் போடமுடியாத காணொளி -சின்ன காணொளிதான் பார்க்கலாம்.
தொடரும்
வாழ்க வளமுடன்.